Monday, November 20, 2023

அருட்பா இல்லைமருட்பா,கண்கட்டு வித்தை வள்ளலார் சென்ற நீதிமன்றம்

வள்ளலார் சென்ற கோர்ட்...

இலங்கை தமிழ் அறிஞர் ஆறுமுக நாவலர்.
இவர் வள்ளலாரின் 
"அருட்பா" வை 
அது போலியானது.

அருட்பா இல்லை
மருட்பா,
கண்கட்டு வித்தை காட்டுபவரின் பாடல்கள் அவை
என அதனை எதிர்த்து
அந்த பாடல் தடை செய்யப்பட வேண்டும் என மஞ்சக்குப்பம் நீதிமன்றத்தில் வழக்கை தொடுத்தார்.

1869 ம் வருடம் ஆனி மாதம் 
சிதம்பரத்தில் ஒரு பொது கூட்டம் நடைபெற்றது.
அதில் ஆறுமுக நாவலர், வள்ளலார் கலந்து கொண்டனர்.

சிதம்பரம் வாழ் தீட்சிதர்களுக்கு
ஆறுமுக நாவலரை பிடிக்காது.

அந்த கூட்டத்தில் ஆறுமுக நாவலரை அடிக்க முற்பட்டனராம்
அவர் 
மஞ்சக்குப்பத்தில் கோர்ட்டில் தனது பழைய வழக்கோடு இதனையும் கிரிமினல் வழக்காக சேர்த்து விசாரிக்க கோரினார்.

வழக்கு விசாரணைக்கு வந்தது.

வள்ளலாரை அவரது சீடர்கள் கட்டாயப்படுத்தி கோர்ட்டிற்க்கு அழைத்து வந்தனர்.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தமிழகத்தின் முதல் தமிழ் 
தமிழர் நீதிபதி
ஸர்.T.முத்துசாமி அய்யர் 
அவர்கள் இந்த வழக்கை விசாரிக்கிறார்.

நீதிபதி 
முதலில் நாவலரை அழைக்கிறார்.

நாவலரும், அவரது கூட்டமும் வந்து அமர்கின்றனர்.

பின்னர் சிதம்பரம் ராமலிங்கம்பிள்ளை என கூப்பிட சொல்கிறார்.

டவாலி கூப்பிட்டவுடன்,

கூப்பிய கைகளோடு
வெள்ளை ஆடையில்
கோர்ட்டுக்குள் நுழைய 
காலடி எடுத்து வைத்த போது,
நாவலரும் அவரை சேர்ந்தோர்களும் எழுந்து நின்று வணங்குகின்றனர்.

பின்னர்
நீதிபதி அனிச்சையாக எழுந்து நின்று வணங்குகிறார். 

அந்த கோர்ட்டில் இருந்த அனைவரும் எழுந்து நின்று கை கூப்பி வணங்குகின்றனர்.

வழக்கு தொடுத்தவர் 
வணங்கியதால் அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டது.

அப்பா
நான் வேண்டுதல் கேட்டு அருள்புரிதல் வேண்டும்!
என்று பாடினார்.

அப்பா யார்?
அப்பா இருந்தா அம்மா இருக்கனுமே!
அந்த அம்மா யார்?

No comments:

Post a Comment

Followers

பூரட்டாதி நட்சத்திரம் சிவன் ரங்கநாதபுரம் திருவானேஷ்வர்

கால பைரவர் பூரட்டாதி நட்சத்திர நாளில் ஏழு கிழமைகளைப் படைத்து, அதை ஏழு யானைகள் மீது வைத்து, காலச்கரத்தை படைத்து அருளிய தலம் அருள்மிகு திருவான...