கைவிடப்பட்ட பாண்டிய காலத்து கோயில்
திருவண்ணாமலை மாவட்டம் கூவனூர் அகஸ்தீஸ்வரர் கற்பகாம்பாள் ஆலயம்.
இந்த ஆலயம் சென்னை கோவை NH 47 கள்ளக்குறிச்சி தாண்டியவுடன் தியாகதுருகம் வழியே திருவண்ணாமலை செல்லும் வழியில் அண்ணாமலையார் கோவிலுக்கு ஒரு 15 கிலோமீட்டர் முன்னாள் இந்த ஆலயம் கூவனூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது.
இந்த கோவில் அறநிலைத்துறையின் கீழ் வருகிறது. நான் வழி கேட்டு சென்றவுடன் ஊரில் யாரோ தகவல் சொல்ல ஒரு சைக்கிள் எடுத்துக்கொண்டு வேகவேகமாக ஒரு நபர் வந்து அந்த கோவிலை திறந்தார். உள்ளே சென்று பார்த்தால் 2000 வருடங்கள் பழமையான சிவன் கோவில் அவ்வளவு அற்புதமான தாயார் கற்பகாம்பிகை.
வௌவால் வாழும் பாழடைந்த கட்டணமாக காட்சி தரும் ஆலயம். ஒரு நாள் தீபம் ஏற்றுவதற்கு கூட அங்கு எண்ணெய் இல்லை. பூஜைக்கு இல்லை.
23 வருடங்கள் ஆகிறது அந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.
இந்த கோவிலின் விசேஷம் என்னவென்றால் நந்தியம் தேவர் அப்பாவை பார்த்து உட்காராமல் ஊரை பார்த்து அமர்ந்திருக்கிறார் ஏன் என்று கேட்டோம் அந்த காலத்தில் வேடுவர்கள் அந்த ஊர் பெண்களை திருமணம் ஆவதற்கு முன்பு ஒரு இரவு கூட்டி சென்று வைத்துவிட்டு அடுத்த நாள் காலை விடுவார்களாம் ஆதலால் பெண்களின் திருமணம் நடைபெராமல் பெண் குலத்திற்கு பெரிய இழுக்கு ஏற்பட்டு இருக்கிறது அதை சிவபெருமானுடன் முறையிட்டு ஊர் மக்கள் வேண்டிக் கொண்ட பொழுது இனிமேல் இந்த ஊர் மக்களை காக்க வேண்டியது நந்தி பகவான் பொறுப்பு என்று நந்தி ஊரை காவல் காக்கும் விதமாக ஊரை பார்த்து அமர்ந்திருக்கிறார் என்று கூறினார்கள் அவ்வளவு விசேஷமான கோவில்.
ஒரு அறை இருந்தது அந்த அறையில் உள்ளே உற்சவருக்கான திருவண்ணாமலையில் என்னென்ன இருக்குமோ அவ்வளவும் அந்த பாழ் அடைந்த ஒரு அறையில் போட்டு பூட்டி வைத்து இருக்கிறார்கள் ஆங்காங்கே செடி முளைத்து பராமரிப்பின்றி இருந்தது.
இந்து சமய அறநிலையத் துறை கூட கவனிக்காதது வேதனை.
ஆனால் இந்த கோவிலுக்கு சொந்தமாக கிட்டத்தட்ட பல கோடி மதிப்பு உள்ள பூமி 40 ஏக்கர் அந்த கிராமத்தில் உள்ளது அந்த விவசாயம் வரும் பணம் மட்டும் இந்த கோவிலுக்கு கிடைக்கும் என்றால் நன்றாக இந்த கோவிலை பராமரிக்கலாம் என்று ஊர் மக்கள் கூறுகிறார்கள்
ஓம் நமசிவாய
No comments:
Post a Comment