Thursday, November 2, 2023

திருவேடகம் ஏடகநாதேஸ்வரர் ஆலயம்.

சிவாயநம
நமசிவாய

திருவேடகம் ஏடகநாதேஸ்வரர் ஆலயம்.

எல்லாம்வல்ல எம்பெருமான் ஈசன் திருவருளால் உலகசிவனடியார்கள்  திருக்கூட்ட சிவனடியார்களுடன் 
திருவேடகம் ஏடகநாதர் சுவாமி ஆலயதரிசனம்

மதுரை மாவட்டம் மதுரையில்  இருந்து சோழவந்தான் செல்லும் வழியாக 17 கி.மீ தூரத்தில் உள்ள சுமார் 1000-2000 வருடங்களுக்கு மேல்  மிக பழமை வாய்ந்த,
பாண்டிநாட்டு தலங்களில் 4 வது தலமாகவும்
தேவாரபாடல் பெற்ற 276 தலங்களில் 194 வது தலமாகவும் விளங்குகிறது திருவேடகம் சிவாலயம்.

மதுரையின் வடக்கே வைகை நதிக்கரை ஓரத்தில் அமைந்துள்ள அற்புதமான தலம் திருவேடகம். இங்கே வைகை நதி வடக்கிலிருந்து தெற்காக ஓடுவதால் காசிக்கு நிகராக இந்த இந்த ஆலயம் பார்க்கப்படுகிறது. இங்கு யார் ஒருவர் ஒரு நாள் முழுவதும் இந்த ஆலயத்தில் தங்கியிருந்து முழுமனதுடன் பூஜை, புனஸ்காரம், அர்ச்சனைகள் செய்து வழிபடுகிறார்களோ, அவருக்கு ஆயுள் முழுவதும் காசியில் வாழ்ந்த புண்ணியம் கிடைக்கும் என நம்பப்படுகிறது. இந்த அற்புதமான ஆலயத்தில் பிரம்மா, வியாசர், பராசரர் ஆகியோர் இறைவனை வழிபட்டுள்ளனர். இந்த ஆலயத்தில் உள்ள பைரவர் சன்னதியும் மிகவும் விசேஷமானது.

மதுரையை அரசாண்ட கூன்பாண்டியன் சமண சமயத்தைச் சார்ந்தவன். இவனது மனைவி மங்கையர்க்கரசி தீவிர சிவபக்தை. அதோடு அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராக திகழ்பவள். சைவ சமயத்தை காப்பதற்காகத் தொடுத்த போரில் பங்கேற்க திருஞானசம்பந்தர் மதுரைக்கு வந்தார். அப்போது வெப்ப நோயால் பாதிக்கப்பட்டிருந்த கூன்பாண்டியனுக்கு திருநீறு பூசி நோய் தீர்த்து உதவினார்.

இதனால் அங்கிருந்த சமணர்கள் ஆத்திரமுற்றனர். சம்பந்தருடன் அனல் வாதம், மற்றும் புனல் வாதத்தில் ஈடுபட்டனர். சமணர்கள் தங்களின் ஏட்டை தீயில் இட்ட போது அது எரிந்து சாம்பலானது.
ஆனால் சம்பந்தர் திருநள்ளாற்றுப் பதிகத்தை எழுதி அதை தீயிலிட்ட போது அது எரிந்து சாம்பலாகாமல் பச்சையாகவே இருந்தது.

பின்னர் புனல் வாதம் புரிந்தனர். சமணர்கள் எழுதிய ஏட்டை வைகை ஆற்றில் விட்டனர். அது ஆற்றுடன் சென்றுவிட்டது. ஆனால் திருஞானசம்பந்தர் ‘வாழ்க அந்தணர்’ என்று தொடங்கக்கூடிய பதிகத்தை எழுதி ஆற்றில் விட்டார். அது நீர் போகும் திசைக்கு எதிர்த்து செல்லத் தொடங்கியது.

கூன்பாண்டியனின் அமைச்சர்களில் ஒருவரான குலச்சிறையார் என்பவர் குதிரையில் நீரோட்டத்தை எதிர்த்து ஏடு செல்வதைப் பின்தொடர்ந்து சென்றார். அந்த ஏடு கடைசியாக ஓரிடத்தில் வைகை ஆற்றின் கரை ஒதுங்கியது.
பாண்டிய மன்னன் ஏடு ஒதுங்கிய இடத்தில் ஒரு சிவலிங்கம் இருப்பதை கண்டு வியந்தான். அந்த இடத்திலேயே ஒரு ஆலயத்தை எழுப்பினான். அதுவே திருவேடம் என்ற பாடல் பெற்ற திருத்தலம்.

இப்படி பல சிறப்புகளை கொண்ட திருஞானசம்பந்தரால் பதிகம் பாடப்பட்ட  இந்த அற்புதமான
சிவாலயத்தை தரிசிக்கும் பாக்கியத்தை எம்பெருமான் ஈசன்  அடியேனுக்கு அளித்தார்.

மேலும் அடியார்பெருமக்கள் அனைவரும் இங்கு வந்து இந்த ஈசனை வழிபட்டு இவரின் திருவருளை பெற இறைவனிடம் விண்ணப்பம் செய்கிறோம்.

என்றும்
உங்கள்
சிவனுக்கு இனியவன்.
உலக சிவனடியார்கள் திருக்கூட்டம்.
 7708484945.

திருச்சிற்றம்பலம்.

No comments:

Post a Comment

Followers

ஐயப்பனுக்கு திருமணம் நடைபெறும் ஒரே கோவில் இது தான்.

கடவுளின் தேசமான இயற்கை எழில் கொஞ்சும்  கேரள மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஐயப்பனின் அறுபடை வீடுகளில் ஒன்றான , ஐயப்பன் திருமண...