Thursday, November 2, 2023

அது_என்ன_108_திவ்ய_தேசங்கள்...?

#அது_என்ன_108_திவ்ய_தேசங்கள்...???

ஒரு முறை பிரம்மா வைகுண்டத்தில் இருக்கும் பெருமாளிடம், 
*""வைகுண்டம் தவிர வேறு எங்கெல்லாம் நீர் இருக்கிறீர்?''* என்று கேட்க, *""ஸதம்வோ அம்ப தாமானி ஸப்தச்ச''* என்று வேதவாக்கியத்தின் மூலம் உணர்த்தினார். *#ஸதம்_என்றால்_நூறு. #ஸப்த_என்றால்_ஏழுஆக_பெருமாள்_இருக்கும்_இடங்கள்_107_#பெருமாள்_நித்யவாசம்_செய்யும்_வைகுண்டத்தை_சேர்த்தால் 108.* 

இந்த திவ்யதேசங்களை எல்லாம்ஆழ்வார்கள் *#மங்களாசாசனம்* செய்துள்ளனர். 

நாலு வரிகளில் 108 திவ்யதேசங்கள் : --
ஸ்ரீ பிள்ளைப்பெருமாள் அய்யங்கார் 108 திவ்யதேசக் கணக்கை நான்கு வரிகளில் கீழ்காணும் பாடல் மூலம் தருகிறார்;

*“ஈரிருபதாஞ்சோழம் ஈரொன்பதாம் பாண்டி*
*ஓர் பதின்மூன்றாம் மலைநாடு;* *ஓரிரண்டாம் - சீர்நாடு*
*ஆரோடீரெட்டுத் தொண்டை;* *அவ்வட* *நாடாறிரண்டு*
*கூறு* *திருநாடொன்றாக் கொள்”*

அதாவது,

சோழ நாட்டில் 40, பாண்டிய நாட்டில் 18, மலை நாட்டில் 13, நடுநாட்டில் 2, தொண்டை நாட்டில் 22, வடநாட்டில் 12, திருநாடு (ஸ்ரீவைகுந்தம்) 1 ஆக மொத்தம் 108 திவ்யதேசங்கள்* எனக் குறிப்பிடுகிறார்.

திவ்ய தேசங்களில் இறைவன் திருக்கோலம்

திவ்ய தேசங்களில் இறைவன் திருக்கோலம் கீழ்க்காணும் எண்ணிக்கையில் இருக்கின்றன.

*1. கிடந்த திருக்கோலம்* - 27 திவ்ய தேசங்கள்
*2. இருந்த திருக்கோலம்* - 21 திவ்ய தேசங்கள்
*3. நின்ற திருக்கோலம்* - 60 திவ்ய தேசங்கள்.

இறைவன் திருக்கோல திசைகள்

திவ்யதேசங்களில் *இறைவன் திருக்கோலம் பார்க்கும் திசைகள்* கீழ்க்காணும் எண்ணிக்கையில் இருக்கின்றன.

1. கிழக்கு திசை நோக்கி - 79 திவ்ய தேசங்கள்
2. மேற்கு திசை நோக்கி - 19 திவ்ய தேசங்கள்
3. வடக்கு திசை நோக்கி - 3 திவ்ய தேசங்கள்
4. தெற்கு திசை நோக்கி - 7 திவ்ய தேசங்கள்.

*"வைகுண்டத்தில் ஓடும் விரஜா நதியே காவிரி. வைகுண்டமே ஸ்ரீரங்கம். வாசுதேவனே அரங்கன்.*
*பிரணவமே விமானம்.* *விமானத்தின் நான்கு கலசங்களே வேதங்கள்.* *உள்ளே பள்ளி கொண்டிருக்கும் அரங்கனே பிரணவத்தால் விவரிக்கப் படும் பரம்பொருள்''* என்றெல்லாம் ஆழ்வார்களால் பாடப்பெற்ற ஆலயங்களைத் திவ்யதேசங்கள் என்று புகழ்வர். *திவ்யதேசங்கள் 108* என்கிறோம்.

திவ்யதேசங்கள் பட்டியல் : --
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

இந்தப் பட்டியலில் 108 திவ்யதேசங்கள் பட்டியலில் முதலில் *திருத்தலத்தின் பெயரும்,* அடைப்புக்குறிக்குள் அத்திருத்தலத்தில் இருக்கும் *பெருமாள் மற்றும் அவரது தேவியின் பெயரும்* இடம் பெற்றுள்ளது. அதற்கடுத்து அந்தத் தலமிருக்கும் மாநிலம் அடைப்புக் குறிக்குள் ஊர்/மாவட்டம் குறிப்பிடப்பட்டுள்ளது.

*1. ஸ்ரீரங்கம்* (ஸ்ரீரங்கநாதர் - ஸ்ரீரங்கநாயகி) - தமிழ்நாடு (திருச்சி)

*2. திருஉறையூர்* (அழகிய மணவாளன்-வாஸலக்ஷ்மி) தமிழ்நாடு (திருச்சி)

*3. தஞ்சை* (நீலமேகம் - செங்கமலவல்லி) - தமிழ்நாடு (தஞ்சாவூர்)

*4. சுந்தர்ராஜப்பெருமாள்* (வடிவழகியநம்பி - அழகியவல்லி) தமிழ்நாடு (திருச்சி)

*5. உத்தமர் கோயில்* (புருஷோத்தமன் - பூர்ணவல்லி) - தமிழ்நாடு (திருச்சி)

*6. திருவெள்ளரை* (புண்டரீகாக்ஷன் - பங்கயச் செல்வி) - தமிழ்நாடு (திருச்சி)

*7. புள்ளபூதங்குடி* (வல்வில் ராமன் - பொற்றாமறையாள்) - தமிழ்நாடு (கும்பகோணம்)

*8. கோயிலடி* (அப்பக்குடத்தான் - இந்திராதேவி(கமலவல்லி)) - தமிழ்நாடு (திருச்சி)

*9. ஆதனூர்* (ஆண்டளக்குமய்யன் - ஸ்ரீரங்கநாயகி) - தமிழ்நாடு (கும்பகோணம்)

*10. தேரழுந்தூர்* (ஆமருவியப்பன் - செங்கமலவல்லி) - தமிழ்நாடு (மயிலாடுதுறை)

*11. சிறு புலியூர்* (அருமாகடல் - திருமாமகள்) - தமிழ்நாடு (சீர்காழி)

*12. திருச்சேரை* (சாரநாதன் - சாரநாயகி) - தமிழ்நாடு (கும்பகோணம்)

*13. தலைச்சங்காடு* (நாண்மிதியப்பெருமாள் - தலைச்சங்கநாச்சியார்) - தமிழ்நாடு (சீர்காழி)

*14. கும்பகோணம்* (சாரங்கபாணி, ஆராவமுதன் - கோமளவல்லி) - தமிழ்நாடு (குடந்தை)

*15. கண்டியூர்* (ஹரசாபவிமோசனர் - கமலவல்லி) - தமிழ்நாடு (தஞ்சாவூர்)

*16. ஒப்பிலியப்பன்* (ஒப்பிலியிப்பன் - பூமிதேவி) - தமிழ்நாடு (குமப்கோணம்)

*17. திருக்கண்ணபுரம்* (சௌரிராஜன் - கண்ணபுரநாயகி) - தமிழ்நாடு (சீர்காழி)

*18. திருவாலி,திருநகரி* (வயலாளி மணவாளன் – அம்ருதகடவல்லி, வேதராஜன் - அமிர்தவல்லி) - தமிழ்நாடு (சீர்காழி)

*19. நாகப்பட்டினம்* (சௌந்தர்யராஜன் - சௌந்தர்யவல்லி) - தமிழ்நாடு (நாகப்பட்டினம்)

*20. நாச்சியார்கோயில்* (நறையூர்நம்பி - நம்பிக்கை நாச்சியார்) - தமிழ்நாடு (குமபகோணம்)

*21. நாதன் கோயில்* (ஜகந்நாதர் - செண்பகவல்லி) - தமிழ்நாடு (கும்பகோணம்)

*22. மாயவரம்* (பரிமளரங்கநாதர் - புண்டரீகவல்லி) - தமிழ்நாடு (மயிலாடுதுறை)

*23. சிதம்பரம்* (கோவிந்தராஜர் - புண்டரீகவல்லி) - தமிழ்நாடு (சீர்காழி)

*24. சீர்காழி* (தாடாளன் - லோகநாயகி) - தமிழ்நாடு (சீர்காழி)

*25. திருக்கூடலூர்* (கூடலூர்-ஆடுதுறை) (ஜகத்ரட்சகன் - பத்மாசநவல்லி)- தமிழ்நாடு (கும்பகோணம்)

*26. திருக்கண்ணங்குடி* (லோகநாதன் - லோகநாயகி) - தமிழ்நாடு (சீர்காழி)

*27. திருக்கண்ணமங்கை* (பக்தவத்சலன் - அபிசேகவல்லி) - தமிழ்நாடு (கும்பகோணம்)

*28. கபிஸ்தலம்* (கஜேந்த்ரவரதர் - ரமாமணிவல்லி) - தமிழ்நாடு (கும்பகோணம்) 

*29. திருவெள்ளியங்குடி* (கோலவில்லி ராமர் - மரகதவல்லி) - தமிழ்நாடு (கும்பகோணம்)

*30. மணிமாடக் கோயில்* (சாச்வததீபநாராயணர் - புண்டரீகவல்லி) - தமிழ்நாடு (சீர்காழி)

*31. வைகுந்த விண்ணகரம்* (வைகுண்டநாதர் - வைகுண்டவல்லி) - தமிழ்நாடு (சீர்காழி)

*32. அரிமேய விண்ணகரம்* (குடமாடுகூத்தர் - அம்ருதகடவல்லி) - தமிழ்நாடு (சீர்காழி)

*33. தேவனார் தொகை* (தேவநாயகர் - ஸமுத்ரதநயா) - தமிழ்நாடு (சீர்காழி)

*34. வண்புருடோத்தமம்* (புருஷோத்தமர் - புருஷோத்தமநாயகி) - தமிழ்நாடு (சீர்காழி)

*35. செம்பொன் செய்கோயில்* (செம்பொன்னரங்கர் - சவேதபுஷ்பவல்லி) - தமிழ்நாடு (சீர்காழி)

*36. திருத்தெற்றியம்பலம்* (செங்கண்மால் - செங்கமலவல்லி) தமிழ்நாடு (சீர்காழி)

*37. திருமணிக்கூடம்* (மணிக்கூடநாயகன் - திருமகள் நாச்சியார்) - தமிழ்நாடு (சீர்காழி)

38. *திருக்காவளம்பாடி* (கோபாலக்ருஷ்ணன் - செங்கமலநாச்சியார்)- தமிழ்நாடு (சீர்காழி)

*39. திருவெள்ளக்குளம்* (ஸ்ரீநிவாஸன் - பத்மாவதி) - தமிழ்நாடு (சீர்காழி)

*40. திருபார்த்தன் பள்ளி* (தாமரைநாயகி - தாமரையாள் கேள்வன்) - தமிழ்நாடு (சீர்காழி)

*41. திருமாலிருஞ்சோலை* (அழகர் - சுந்தரவல்லி) - தமிழ்நாடு (மதுரை)

*42. திருக்கோட்டியூர்* (சௌம்யநாராயணர் - மஹாலக்ஷ்மி) - தமிழ்நாடு (மதுரை)

*43. திருமெய்யம்* (சத்யகிரிநாதன் - உஜ்ஜீவன நாச்சியார்) - தமிழ்நாடு (மதுரை)

*44. திருப்புல்லாணி* (கல்யாணஜகந்நாதர் - கல்யாணவல்லி)- தமிழ்நாடு (மதுரை)

*45. திருத்தண்கால்* (தண்காலப்பன் - அன்னநாயகி) - தமிழ்நாடு (மதுரை)

*46. திருமோகூர்* (காளமேகம் - மோஹனவல்லி) - தமிழ்நாடு (மதுரை)

*47. கூடல் அழகர்* கோயில் (கூடலழகர் - மதுரவல்லி) - தமிழ்நாடு (மதுரை)

*48. ஸ்ரீவில்லிபுத்தூர்* (வடபத்ரசாயி - ஆண்டாள்) - தமிழ்நாடு (ஸ்ரீவில்லிபுத்தூர்)

*49. திருக்குருகூர்* (நவதிருப்பதி) (ஆதிநாதர் - ஆதிநாதவல்லி) - தமிழ்நாடு (திருநெல்வேலி)

*50. தொலைவில்லிமங்கலம்* (இரட்டைத் திருப்பதி, நவதிருப்பதி) (அரவிந்தலோசநர் - விசாலக்ருஷ்ணாக்ஷி) - தமிழ்நாடு (திருநெல்வேலி)

*51. வானமாமலை* (நவதிருப்பதி) (தோத்தாத்ரி நாதர் - ஸ்ரீவரமங்கை) - தமிழ்நாடு (திருநெல்வேலி)

*52. திருப்புளிங்குடி* (நவதிருப்பதி) (காய்ச்சினவேந்தன் - மலர்மகள்) - தமிழ்நாடு (திருநெல்வேலி)

*53. திருப்பேரை* (நவதிருப்பதி) (மகரநெடுங்குழைக்காதர் - குழைக்காதுவல்லி நாச்சியார்) - தமிழ்நாடு (திருநெல்வேலி)

*54. ஸ்ரீவைகுண்டம்* (நவதிருப்பதி) (கள்ளப்பிரான் - வைகுந்தவல்லி) - தமிழ்நாடு (திருநெல்வேலி)

*55. திருவரகுணமங்கை*(நத்தம்)(நவதிருப்பதி) (விஜயாஸனர் - வரகுணவல்லி) - தமிழ்நாடு (திருநெல்வேலி)

*56. திருக்குளந்தை* (நவதிருப்பதி) (மாயக்கூத்தர் - குளந்ததைவல்லி (அலமேலுமங்கை)) - தமிழ்நாடு (திருநெல்வேலி)

*57. திருக்குறுங்குடி* (வைஷ்ணவ நம்பி - குறுங்குடிவல்லி) - தமிழ்நாடு (திருநெல்வேலி)

*58. திருக்கோளூர்* (நவதிருப்பதி) (வைத்தமாநிதி - கோளூர்வல்லி) - தமிழ்நாடு (திருநெல்வேலி)

*59. திருவனந்தபுரம்* (அனந்தபத்மநாபன் - ஸ்ரீஹரிலக்ஷ்மி) - கேரளம் (கோவளம்)

*60. திருவண்பரிசாரம்* (திருப்பதிசாரம்) (திருக்குறளப்பன் - கமலவல்லி)- தமிழ்நாடு (கன்னியாகுமரி)

*61. திருக்காட்கரை* (காட்கரையப்பன் - வாத்ஸல்யவல்லி) - கேரளா (கோட்டயம்)

*62. திருமூழிக்களம்* (திருமூழிக்களத்தான் - மதுரவேணி) - கேரளா (கோட்டயம்)

*63. திருப்புலியூர்* (மாயப்பிரான் - பொற்கொடிநாச்சியார்) - கேரளா (கோட்டயம்)

*64. திருச்செங்குன்றுர்* (இமையவரப்பன் - செங்கமலவல்லி) - கேரளா (கோட்டயம்)

*65. திருநாவாய்* (நாராயணன் - மலர்மங்கை நாச்சியார்) - கேரளா (திருச்சூர்)

*66. திருவல்லவாழ்* (கோலப்பிரான் - செல்வத்திருக்கொழுந்து) - கேரளா (கோட்டயம்)

*67. திருவண்வண்டுர்* (பாம்பணையப்பன் - கமலவல்லி) - கேரளா (கோட்டயம்)

*68. திருவட்டாறு* (ஆதிகேசவன் - மரகதவல்லி) - தமிழ்நாடு (கன்னியாகுமரி)

*69. திருவித்துவக்கோடு* (உய்யவந்த பெருமாள் - வித்துவக்கோட்டுவல்லி) - கேரளா (திருச்சூர்)

*70. திருக்கடித்தானம்* (அற்புதநாராயணன் - கற்பகவல்லி நாச்சியார்) - கேரளா (கோட்டயம்)

*71. திருவாரன்விளை* (திருக்குறளப்பன் - பத்மாசனி) - கேரளா (கோட்டயம்)

*72. திருவஹீந்திபுரம்* (தேவநாதன் - ஹேமாப்ஜவல்லி) - தமிழ்நாடு (கடலூர்)

*73. திருக்கோவலுர்* (திரிவிக்ரமன் - பூங்கோவல்நாச்சியார்) - தமிழ்நாடு (கடலூர்)

*74. திருக்கச்சி* (வரதராஜன் - பெருந்தேவி) - தமிழ்நாடு (காஞ்சிபுரம்)

*75. அஷ்டபுஜகரம்* (ஆதிகேசவன் - அலர்மேல்மங்கை) - தமிழ்நாடு (காஞ்சிபுரம்)

*76. விளக்கொளி* பெருமாள் (தூப்புல்) (தீபப்ரகாசர் - மரகதவல்லி) - தமிழ்நாடு (காஞ்சிபுரம்)

*77. திருவேளுக்கை* (முகுந்தநாயகன் - வேளுக்கைவல்லி) - தமிழ்நாடு (காஞ்சிபுரம்)

*78. திருப்பாடகம்* (பாண்டவ தூதர் - ருக்மணி,சத்யபாமா) - தமிழ்நாடு (காஞ்சிபுரம்)

*79. திருநீரகம்* (ஜகதீசப்பெருமாள் - நிலமங்கைவல்லி)- தமிழ்நாடு (காஞ்சிபுரம்)

*80. நிலாத்திங்கள்* (நிலாத்திங்கள்துண்டத்தான் - நேரொருவரில்லாவல்லி) - தமிழ்நாடு (காஞ்சிபுரம்)

*81. திரு ஊரகம்* (உலகளந்தபெருமாள் - அம்ருதவல்லி) - தமிழ்நாடு (காஞ்சிபுரம்)

*82. திருவெக்கா* (யதோத்தகாரி - கோமளவல்லி) - தமிழ்நாடு (காஞ்சிபுரம்)

*83. திருக்காரகம்* (கருணாகரர் - பத்மாமணி) - தமிழ்நாடு (காஞ்சிபுரம்)

*84. திருக்கார்வானம்* (கள்வர்பெருமாள் - கமலவல்லி) - தமிழ்நாடு (காஞ்சிபுரம்)

*85. திருக்கள்வனூர்* (ஆதிவராஹர் - அஞ்சிலைவல்லி)- தமிழ்நாடு (காஞ்சிபுரம்)

*86. திருப்பவளவண்* (பவளவண்ணப்பெருமாள் - பவளவல்லிநாச்சியார்)- தமிழ்நாடு (காஞ்சிபுரம்)

*87. பரமேச்சுரவிண்ணகர்* (பரமபதநாதன் - வைகுந்தவல்லி) - தமிழ்நாடு (காஞ்சிபுரம்)

*88. திருப்புட்குழி* (விஜயராகவன் - மரகதவல்லி)- தமிழ்நாடு (காஞ்சிபுரம்)

*89. திருநின்றவூர்* (பத்தவத்ஸலர் - ஸுதாவல்லி) - தமிழ்நாடு (சென்னை)

*90. திரு எவ்வுள்* (வைத்ய வீரராகவர் - கனகவல்லி) - தமிழ்நாடு (சென்னை)

*91. திருநீர்மலை* (நீர்வண்ணபெருமாள் - அணிமாமலர்மங்கை) - தமிழ்நாடு (சென்னை)

*92. திருவிடவெந்தை* (நித்யகல்யாணர் - கோமளவல்லி) - தமிழ்நாடு (சென்னை)

*93. திருக்கடல்மல்லை* (ஸ்தலசயனப்பெருமாள் - நிலமங்கை நாச்சியார்) - தமிழ்நாடு (சென்னை)

*94. திருவல்லிக்கேணி* (பார்த்தசாரதி - ருக்மணி)- தமிழ்நாடு (சென்னை)

*95. திருக்கடிகை* (சோளிங்கர்) (யோகநரசிம்மர் - அம்ருதவல்லி) - தமிழ்நாடு (சென்னை)

*96. திருவேங்கடம்* (திருவேங்கடமுடையான் - அலர்மேல்மங்கை) - ஆந்திரப் பிரதேசம்

*97. அகோபிலம்* (சிங்கவேள்குன்றம்) (லட்சுமிநரஸிம்ஹன் - செஞ்சுலக்ஷ்மி) - ஆந்திரப் பிரதேசம்

*98. திருவயோத்தி* (சக்ரவர்த்திதிருமகன் - சீதாபிராட்டி) - உத்தரப்பிரதேசம்

*99. நைமிசாரண்யம்* (தேவராஜன் - ஹரிலக்ஷ்மி) - உத்தரப்பிரதேசம்

*100. சாளக்கிராமம்* (ஸ்ரீமூர்த்தி - ஸ்ரீதேவி) - நேபாளம்

*101. பத்ரிகாச்ரமம்* (பத்ரீநாராயணனன் - அரவிந்தவல்லி) - உத்தராஞ்சல்

*102. தேவப்ரயாகை* (நீலமேகம் - புண்டரீகவல்லி) - உத்தராஞ்சல்

*103. திருப்ரிதி* (பரமபுருஷன் - பரிமளவல்லி) - உத்தராஞ்சல்

*104. திரு த்வாரகை* (கல்யாணநாராயணன் - கல்யாணநாச்சியார்) - குஜராத்

*105. வடமதுரை* (கோவர்தனகிரிதாரி - சத்யபாமா) - டெல்லி

*106. திருவாய்ப்பாடி* (நவமோஹன க்ருஷ்ணன் - ருக்மணி,சத்யபாமா) - டெல்லி

*107. திருப்பாற்கடல்* (க்ஷீராப்திநாதன் - கடலமகள் நாச்சியார்) - புவியில் இல்லை

*108. பரமபதம்* (பரமபதநாதன் - பெரியபிராட்டியார்) - நாதன் திருவடி

கோவிந்தா  ஹரி கோவிந்தா🌹🙏 ஹனுமன் ஆர் கே சாமி🌹🙏

No comments:

Post a Comment

Followers

புராதனவனேஸ்வரர் பட்டுக்கோட்டை தஞ்சாவூர்...

அருள்மிகு புராதனவனேஸ்வரர் திருக்கோயில் பட்டுக்கோட்டை தஞ்சாவூர் மாவட்டம்.       இறைவன் :- புராதனவனேஸ்வரர் இறைவி :- பெரியநாயகி அம்...