Wednesday, November 22, 2023

சுவாமி ஐயப்பன் இருமுடி : அறிவியல் ரகசியம்

ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா🙏🙏🙏...... 
          
சில நுட்பமான விரதக்கட்டுபாடுகள் சபரிமலைக்கே பொருந்தும் பல விசயங்களை நாம் இழந்தவற்றையும் நினைவு கூறவிரும்புகிறேன்.

1.இருமுடி : அறிவியல் 

அடிப்படையில் மிக நீண்ட யாத்திரை போகும் சமயம்  உபயோக பொருட்களை ஒருபக்கமாக ஏற்றினால் மலையேறும் சமயம் பக்தர்களுக்கு  மலையேறுவது கடினமாகிவிடும். அதே நிலையில் சுமையை இருபங்காக்கி தலையில் ஏற்றிவிட்டால் சிரமம் பெரிதாக தெரியாது. ஆன்மீக அடிபடையில் இருவினைகளை சுமந்து மலையேறுகிறோம் தற்போது நாம் இருமுடியை வெறும் குறியீடாகவே பயன்படுத்துகிறோம் பின் முடியில் நமக்கு தேவையான பொருட்களை பெயருக்கு கூட வைப்பதில்லை. கிளம்பிய இடத்திலிருந்து தரிசனத்திற்கு முன்பு நம் தேவைக்காக பின் முடி பல முறை அவிழ்க்கப்பட்டதாகவே நம் முன்னோர் சபரிமலை யாத்திரை சென்றார்கள் தற்போது பின் முடி தரிசனத்திற்கு முன்பு ஒருமுறை கூட அவிழ்க்கப்படாத நிலையில் தான் தற்போது நாம் தரிசனமே செய்துவருகிறோம்.

2.பம்பா அன்னதானம் மற்றும் கரிமலை உச்சி அன்னதானம் : 
அந்த காலத்தில் அரிசிக்கு கூட கஷ்டப்பட்ட காலம் இருந்தது அதனால் யாத்திரை செல்லும் சில  பக்தர்கள் வசதிபடைத்தவர்கள் நிறைய அரிசியை பின்முடியில் கட்டி வருவார்கள் இவர்கள் கரிமலை உச்சியில் கொண்டு வந்த பாத்திரத்தில் பின் முடி அரிசியை கொட்டி கஞ்சி காய்ச்சுவார்கள் அந்த வழியே வரும் அரிசி கொண்டு வரமுடியாத பக்தர்கள் இவர்களிடம் கூச்சமில்லாமல் பசிக்கு உணவு கேட்பார்கள் அவர்களும் கட்டாயம் வருகிற பக்தர்களுக்கு தம் குடிக்கும் கஞ்சியை பகிர்ந்து கொடுப்பார்கள் இந்த ஒற்றுமையெல்லாம் காலம் மாற மாற எங்கே போனது என கூட தெரியவில்லை தற்போது குழுவாக பயணிக்கும் சுவாமிமார்கள் வடையில் உப்பு இல்லை அப்பளத்தில் ஓட்டை உள்ளது போன்ற அல்ப விசயத்திற்கு கூட சண்டை சர்ச்சரவுகள் செய்வதை கண்கூடாக காண முடிகிறது.

3.எருமேலியில் 41 நாள் விரத பக்தர்கள் வேட்டை சாஷ்தா பிரகாரத்தில் பேட்டை துள்ளல் சமயம் அருள்வந்து ஆடிய காலம் எல்லாம் மாறிப்போய் தற்போது எருமேலி ஊர் பஸ்ஸில் பயணிக்கும் யுவதிகளை கண்டு கூச்சலிடுமளவுக்கு சில பக்தர்களுக்கு தைரியம் வந்திருக்கிறது.

4.இருமுடி தலையேறிய பிறகு வீட்டைகூட திரும்பி பார்க்காமல் கிளம்பிய காலம் மாறி தற்போது பொது சபைகளில் இருமுடி கட்டுவதால் அங்கே இருமுடிக்கு பிறகு விரதம்விட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது சரி முடிந்தபிறகு எதுவும் கூறாமல் தான் உறவினர்களும் செல்ல வேண்டும் நாமும் கிளம்பவேண்டும். தற்போது டாடா காட்டுவதும் கிளம்பும் வரை கூட இருப்பதும், பத்திரமாக போய் வாருங்கள் எனும் உபதேசங்களும் நடைபெறுகிறது இவை அத்தனையும் ஆச்சார மீறல்களே.

5.வீட்டில் நாம் ஏற்றிச்செல்லும் விளக்கின் அசைவுகளை வைத்தே நாம் அங்கே எப்படி இருப்போம் என நம் இல்லத்தார்கள் கண்ட காலம் தற்போது கேலியாக தெரிவது விஞ்ஞான வளர்ச்சியாக இருக்கலாம் ஆனால் அன்று நம்பினார்கள் நடந்தது. 
சபரிமலை என்பது நம்பிக்கைகான இடமே தவிர ஆராய்ச்சி மய்யம் கிடையாது. இன்று வீட்டை விட்டு கிளம்பியதிலிருந்து வீடு திரும்பும் வரை வீட்டிற்கு அழைப்பு மேல் அழைப்பு செய்து அவர்கள் அனுபவத்தை கூறுவது அர்த்தமற்ற சபரிமலை யாத்திரை ஆகும் இன்று வீட்டில் ஏற்றப்படும் விளக்கு வெற்று அடையாளமாக நிற்பதே மிச்சம். 

இப்படியாக பல நுட்பங்கள் நிறைந்தது தான் நமது வழிபாடு இந்த நுட்பங்களே நமது அடையாளங்கள் இதை தொலைத்து விட்டால்  நமக்கான அடையாளங்களே தொலைந்து விடும் .

இன்று கோடிக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வருகிறார்கள் ஆனால் வெகுசிலரே பூர்வீகமாக சபரிமலைக்கு பயணப்படுபவர்கள் இந்த பூர்வீக மக்கள் பழமையை மறப்பதால் விஞ்ஞான சொகுசு கேட்பதாலுமே பழைய ஆச்சாரங்கள் அத்தனையும் காணாமல் போகிறது. பூர்வீகமாக சபரிமலை வழிபாடு செய்பவர்கள் பலர் தமக்கு தெரிந்த விசயங்களை கூற விரும்புவதில்லை விளைவு  அவர்கள் தலைமுறையோடு அந்த ஆச்சாரம் போய்விடுகிறது. அவர்களை நாம் குறை கூறவும் முடியாது இன்றைய காலத்தில் ஆச்சாரம் தெரிந்தவர்கள் அறிவுரை கூறினால் நீங்கள் எத்தனையாவது மாலை, உங்கள் வயது என்ன, நீங்கள் கூறி நான் கேட்கவா எனும் அகங்காரம் நம்மில் பலருக்கு நிறைந்துவிட்டதால் தான் ஆச்சாரம் தெரிந்தவர்கள் கூட புதியவர்களுக்கு கூற தயங்குகிறார்கள். நமது அகங்காரமும் பதினெட்டு படிகளில் ஒன்று தான் அதை மிதித்து மேலே ஏற பிறர் தயவும் பகவான் அருளும் தேவை இந்த அகங்காரம் எனும் படி பெரிதாக வளரவிட்டோம் என்றால் அத்தனை எளிதாக தத்வமஸியை காண முடியாது என்பதை பக்தர்கள் உணர்ந்துகொள்ளவும்.

இதை யாரையும் குறை சொல்ல ஏற்படுத்திய பதிவு அல்ல ஒரு பக்தன் என்ற அடிப்படையில்  சக பக்தனுக்கான வேண்டுகோளாகவே இதை சமர்பிக்கிறேன்.

(இதில் ஏதாவது தவறு இருந்தால் மன்னித்துக் கொள்ளவும்.)

சுவாமியே சரணம் ஐயப்பா🙏
🙏🙏🙏🙏🙏 🙏🙏

No comments:

Post a Comment

Followers

இந்தியாவில் அமைந்துள்ள புகழ்பெற்ற 51 மகாசக்தி பீடங்கள்..

இந்தியாவில் அமைந்துள்ள புகழ்பெற்ற 51 மகாசக்தி பீடங்கள்..._ இந்த சக்தி பீடங்கள் இந்தியாவில் எங்கெங்கு அமைந்துள்ளன என்று பார்க்கலா...