சனீஸ்வரன் தொல்லையை நீக்கும் ஸ்ரீ காலபைரவர் சனி பாதிப்பு நீங்க ஸ்ரீ பைரவர் வழிபாடு!
ஸ்ரீ பைரவரை வணங்கினால் சனிஸ்வரன் தொல்லையில் இருந்து விடுபடலாம் ஏழரைச் சனி என்பது அனுபவங்களின் தொகுப்பே. அக்காலத்தில் நல்லவர் யார் கெட்டவர் யார் என்று நீங்கள் தெரிந்து கொள்ளும்படி உங்கள் கண்களை திறக்கிறார் சனி. அந்த அனுபவங்களை ஏற்றுக் கொண்டு, அதன் துணை கொண்டு அதன்பின் வரும் வாழ்க்கையை ஜெயிப்பதற்கே அதனை சனி தருகிறார். ஸ்ரீ பைரவரை வணங்கினால் சனிஸ்வரன் தொல்லையில் இருந்து விடுபடலாம்
சனிதோஷம் போக்கும் கால பைரவர்… கடன்பிரச்சினை தீர்க்கும் கால பைரவர் வழிபாடு
சனியினால் ஏற்படும் சங்கடங்கள் தீரவும், தோஷங்கள் நீங்கவும் சனிபகவானின் குருவான பைரவரை வணங்கலாம்.
பைரவர் வழிபாடு: எதிரிகளுக்குப் பயம் தந்து தன்னை அண்டியவர்களின் பாபத்தை நீக்கி அருள் செய்வதால் இவருக்குப் பைரவர் என்று பெயர் வந்தது. படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களையும் செய்வதால் இவர் பைரவர் என்று அழைக்கப்படுகிறார். படைத்தல், காத்தல், அழித்தல் அதாவது ஒடுக்குதல் ஆகிய முக்கிய இறையருள் தொழில்களை செய்து பல லட்ச உயிர்களையும் காப்பதால் அவருக்கு திரிசூலம் அதிகார ஆயுதமாக அளிக்கப்பட்டது. படைத்தல் தொழிலை உடுக்கையும், காத்தல் தொழிலை கையில் உள்ள கபாலமும், அழித்தல் தொழிலை உடலில் பூசிய விபூதியும் குறிக்கும்.
சிவனின் அம்சம்: ஒவ்வொரு சிவன் கோவிலிலும் வடகிழக்குப் பகுதியில் தனிச்சந்நிதியில் காலபைரவர் எழுந்தருளி இருப்பார். சில கோவில்களில் சூரியன், பைரவர், சனி பகவான் என்ற வரிசையில் காட்சி தருவதும் உண்டு. சிவபெருமான் வீரச்செயல்களைச் செய்யும் காலங்களில் ஏற்கும் திருவுருவங்களை பைரவர் திருக்கோலம் என்று புராணம் சொல்லும். பைரவர் பாம்பைப் பூணுலாகக் கொண்டு, சந்திரனை சிரசில் வைத்து, சூலம், மழு, பாசம், தண்டம் ஏந்தி காட்சி தருவார். பைரவருக்கு ராகு காலத்தில் பூஜை செய்வது சிறப்பிக்கப்படுகிறது.
சனி தோஷம் நீங்கும்: ஏழரைச் சனி என்பது அனுபவங்களின் தொகுப்பே. அக்காலத்தில் நல்லவர் யார் கெட்டவர் யார் என்று நீங்கள் தெரிந்து கொள்ளும்படி உங்கள் கண்களை திறக்கிறார் சனி. அந்த அனுபவங்களை ஏற்றுக் கொண்டு, அதன் துணை கொண்டு அதன்பின் வரும் வாழ்க்கையை ஜெயிப்பதற்கே அதனை சனி தருகிறார். ஸ்ரீ பைரவரை வணங்கினால் சனிஸ்வரன் தொல்லையில் இருந்து விடுபடலாம்🌺🌺🌺 🙏🙏
No comments:
Post a Comment