Friday, December 22, 2023

குழந்தை பாக்கியம் வேண்டுவோர் கைலாசநாதர் திருக்கோயில். காரைக்கால் - 609602.

சுந்தராம்பாள்  உடனுறை கயிலாசநாதர் திருக்கோயில். காரைக்கால் - 609602
*இது காரைக்கால் நகரில் உள்ள பெரிய, மிகப் பழமையான கோயிலாகும்.  

*இக்கோயில் 8 ஆம் நூற்றாண்டில் பல்லவர்களால் புனரமைக்கப்பட்டது. 
 
*இக்கோயிலுக்கு எதிரே காரைக்கால் அம்மையார் கோயில் அமைந்துள்ளது 

*ஆண்டுதோறும் நடைபெறும்     "மாங்கனி திருவிழா" கைலாசநாதர் கோயில் மற்றும் காரைக்கால் அம்மையார் கோயில் ஆகிய இரண்டுடனும் தொடர்புடையது.  

*மாங்கனித் திருவிழாவின் முக்கிய மூர்த்தியான பிட்சாடனமூர்த்தி கைலாசநாதர் கோயிலில் உள்ளார்.   

*கைலாசநாதர் கோயிலில் தேர் திருவிழா ஆண்டுதோறும்  கொண்டாடப்படுகிறது.        

*காரைக்கால் அம்மையார் வரலாறு (சுருக்கமாக). 

காரைக்காலில் புனிதவதி என்ற பெயர்கொண்டு சிவபக்தியுடன் திகழ்ந்த பெண்மணி ஒருவர் தமது கணவர் கொடுத்தனுப்பிய இரு மாங்கனிகளில் ஒன்றை முதியவராக வந்த சிவபெருமானின் பசிக்கு உணவாக அளித்துவிட்டார். ஒரு கனியை உண்ட கணவன் மற்றோரு கனியையும் கேட்டபோது, புனிதவதியார் பக்தியுடன் சிவபெருமானிடம் வேண்டி இறைவன் அளித்த மாங்கனியை கணவனுக்கு அளித்தார். இக்கனியின் சுவை மிக அற்புதமாக இருக்கிறதே என்று கணவன் வினவ, புனிதவதி நடந்ததைக் கூறினார். 

கணவனின் ஐயத்தைப் போக்க இறைவனிடம் வேண்டி மற்றுமோர் மாங்கனியைப் பெற, அது கண்டு திகைத்த கணவன் இறைத்தன்மை கொண்ட இப்பெண்ணுடன் இனி வாழமுடியாது என்று முடிவு செய்து வேறு ஊருக்கு சென்று அங்கு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு ஒரு பெண்குழந்தைக்குத் தகப்பனும் ஆனான். அக்குழந்தைக்கு "புனிதவதி" என்ற பெயரையே சூட்டினான்.  

*கணவனின் இருப்பிடம் அறிந்த புனிதவதி தனது தந்தையுடன் அங்கு செல்ல, அவரது கணவனோ தனது மனைவி, மகளுடன் அவரின் கால்களில் விழுந்து வணங்கினான். இதனால் வேதனையுற்ற புனிதவதியார் இறைவனை வேண்டி வணங்கி தமது இளமைத் தோற்றத்தை துறந்தார்.                பேயுரு கொண்டு கயிலை மலை நோக்கி புறப்பட்டார். 

*புனிதமான கயிலை மலையில் தனது கால்களால் நடக்க அஞ்சி  கைகளைக்கொண்டு தலையால் சென்றார். இவ்வன்பினைக் கண்ட சிவபெருமான் பார்வதிதேவியிடம் 
"இவள் நம்மைப் போற்றும் அம்மை" என்று கூறினார்.  

*சிவபெருமானால் அம்மை என்று அழைக்கப்பட்ட பெருமைக்குரியவர் காரைக்கால் அம்மையார். 

*இறைவனின் திருவடிகளில் அப்பா எனக் கூறி ஆனந்தக் கண்ணீர் விட்டு அமர்ந்தவர், தாம் எப்போதும் ஈசனின் திருவடிகளைப் பற்றியே இருக்க வேண்டும் என வேண்டி அருள்பெற்றார். 

*தாம் திருநடனம் புரியும்  சன்னிதியில் காரைக்கால் அம்மையார் அமரும்படி சிவபெருமான் பதவி வழங்கியுள்ளார். 

*காரைக்கால் அம்மையார் மூன்று பெண் நாயன்மார்களில் ஒருவரும், மூத்தவருமாவார்.    

*63 நாயகன் மார்களில் இவர் மட்டுமே அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். தாய்மைக்குத் தந்த சிறப்பாக இதைக் கருதலாம். 

*ஆண்டுக்கு ஒரு முறை சுந்தராம்பாள் உடனுறைக் கயிலாசநாதர் கோவிலில் இருந்து அம்மையார் கோவிலுக்கு  இறைவன் அருள்மிகு பிக்ஷாடனர் வரும்போது அன்பின் வெளிப்பாடாக, பக்தர்கள் மாங்கனிகளை வீசி வழிபடுவார்கள். 

*குழந்தை பாக்கியம் வேண்டுவோர் இம்மாங்கனிகளை பிரசாதமாக எடுத்துச் சென்று உண்டு மழலைச் செல்வத்தை பெருகிறார்கள். 

  ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா. இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

சங்கர நாராயணன் மேலராஜவீதி தஞ்சாவூர்..

அருள்மிகு சங்கர நாராயண சுவாமி திருக்கோயில் மேலராஜவீதி தஞ்சாவூர் மாவட்டம் இறைவன் :- சங்கர நாராயணர் இறைவி :- பாலாம்பிகா தாயார்   த...