Friday, December 22, 2023

வைகுண்ட ஏகாதசி ஏன் வருஷா வருஷம் வருகிறது? அந்த தினம் எதற்கு சொர்க்கவாசலை திறக்கிறார்கள்



அந்த ரங்கம் ஆனந்த ரங்கம் 
அதுவே ஸ்ரீரங்கம்

வைகுண்ட ஏகாதசி ஏன் வருஷா வருஷம் வருகிறது? 

அந்த தினம் எதற்கு சொர்க்கவாசலை திறக்கிறார்கள் 

ஏன் முதலில் நம்பெருமான் செல்கிறார் பின்னர் நம்மையும் அதே வழியில் அழைத்துச்செல்கிறார்? 

எந்தை தளிர் புரையும் திருவடி என் தலை மேலவே 
என்று சொல்லி திருமங்கையாழ்வார் பகவானுடைய தரிசனம் பெற்றதைப் பேசும் திருநெடுந்தாண்டகம் என்னும் பிரபந்தம் பெருமாள் முன்பாக முதலில் சேவிக்கப்படுகிறது 

ஒரு நூலுக்கு முன்னுரை இருப்பது போல ஏகாதசி உதசவத்திற்கு இந்த திருநெடுந்தாண்டகம் உள்ளது

இந்த உற்சவத்தில் முக்கியமான அரையர்சேவை பகல் நாட்களில் நடக்கும்போது பகல்பத்து என்கிறார்கள் 

இந்த பகல்பத்துஉற்சவத்தில் அரங்கன் காலையில் சந்நிதியை விட்டுப் புறப்பட்டு கிழக்கில் உள்ள அர்ஜுனன் மண்டபத்திற்கு எழுந்தருளி ராத்திரி எட்டுமணீக்கு திரும்ப மூலஸ்தானம் வருகிறார்

மோகினி அலங்காரம்  வைகுண்ட ஏகாதசிக்கு முதல்நாள்/

இராப்பத்து உத்சவத்தில் ஆயிரங்கால் மண்டபத்தின் மையத்தில், திருமாமணி மண்டபத்தில் பரம்பதத்தில் பெருமாள் எழுந்தருளி இருக்கும் வைகுண்டத்து திருமாமணி மண்டதின்படி 
கட்டப்பட்டுள்ளதால் 
அதே பெயர் இதற்கும்

இந்தப்பத்துநாட்கள் அரையர் சேவை ராத்திரியில் நடக்கப்படுவதால்
 இது இராப்பத்து என்றாகிறது.

தவிர, வைகுண்டம் செல்லும் மார்க்கத்தைப் பற்றியே பேசும் திருவாய்மொழியில் ஒருபாசுரமாகிய
"சூழ்விசும்பணிமுகில் "
எனும் பத்து பாசுரங்களின் தாத்பர்யங்கள் இந்த நாட்களில் நாடகம் போலக் காட்டப்படுகின்றன. 

பரமபதத்திற்கு செல்லும்  நபராக  ரங்கநாதனே நடிக்கிறார்.

வைகுண்ட ஏகாதசித் திருநாளில் கர்ப்பக்ரஹத்திலிருந்து புறப்படுமுன்பாக 
ஆர்யபடாள்வாசல் நாழிகை கேட்டான் வாசல் முதலானது மூடப்படும்.

அறிவெனும் தான் கொளுவி ஐம்புலனும் தம்மில் செறிவென்னும் திண்கதவம் செம்மி மறையென்னும் நன் கோதி நன்குணர்வார் காண்பரே நாள்தோறும் பைங்கோத வண்ணன்படி 

என்ற பாசுரப்படி
 இந்தக்கதவுகள் 
மூடப்படுகின்றன. 

பகவானை சிந்தித்து அவனருளைப் பெற இச்சிக்கும்  மனிதம்  தன் இந்திரியங்களால் இழுக்கப்பட்டு கண் காது மூக்கு துவாரங்கள் வழியாக வெளிச்செல்வதை தடுக்க முதலில் அவைகளைமூடவேண்டும் என்பதை குறிக்கிறது.

பெருமாள் புறப்படும் முன்பாக கர்ப்பக்ருஹத்தில் வேத பாராயணமும் திருவாய் மொழியும் தொடங்கப்படுகின்றன 

அதனபின் ரத்ன அங்கி சார்த்திக்கொண்டு பெருமாள் புறப்படுவார்
 அப்போது சந்நிதி வாசல் திறக்கப்படும் 

சிம்ம கதி (ஆண்டாளின் மாரிமலை முழஞ்சில் பாட்டில் வருமே அதேதான்) பிறகு ஒய்யார நடையிட்டு பரம்பதவாசல் செல்லும்வழியில் 
சில நெறிமுறைகளை நடத்தியபடி செல்வார் 

இதையெல்லாம் நம்மாழ்வார் பாடல்களில் காணலாம்.

பரமபதவாசலுக்கு வந்ததும் வடக்கு முகமாய் நின்று வாசல் கதவுகளை திறக்கும்படி நியமித்தவுடன் அவை திறக்கப்படும்

 சொர்க்கவாசல் என்பது இதுதான்.

சொர்க்கப்படி மிதித்து வெளியே வந்ததும் இந்தவாசலுக்குப் பக்கதில் விரஜா நதியின் ஸ்தானத்தில் சந்திரபுஷ்க்ரணி இருக்கிறது. 

நதிக்கரை மணல் கொண்டதுதானே? 

ஸ்ரீரங்கத்திலும் சந்திர புஷ்கரணி யைக்கடந்தால் நீங்கள் மணல் வெளியில் தான் கால் பதிக்கவேண்டும்

சொர்க்கப்படி தாண்டியதும் 
உடனே வரும் நாலுகால் மண்டபத்தில் 
வேதவிண்ணப்ப்பமாகி 
பெருமாள் இந்தவாசலுக்குப் போனவுடன் அதுவரை சார்த்தி இருந்த போர்வை களையப்பட்டு புதுமாலைகள் சம்ர்ப்பிக்கப்படுகிறது. 

பரமபதத்திற்குப் பக்கத்திலுள்ள விரஜா நதியை அடைந்து அதில் ஸ்னானம் செய்து முக்தனுக்கு பழைய சரீரம் போய் புதுசரீரம் ஏற்படும் தத்துவத்தை இது உணர்த்துகிறது.

ஏகாதசி தினம் ரத்ன அங்கியோடு பெருமாள் பரமபதவாசல் நுழைந்து செல்வதால் , விரஜா நதியில் மூழ்கி எழுந்த ஒருவன் பரிசுத்தமான ஒளி கொண்ட முகத்தோடுவருகிறான் ,

’ ஒளிக்கொண்ட சோதியமாய் உடன் கூடுவது என்றுகொலோ’ 

என்று ஆழ்வார் அருளியபடி விரஜைக்கு அப்புறமுள்ள முகதர்களோடு கூடுவது காட்டப்படுகிறது 

ஆதிகாலத்தில் பரமபதவாசலுக்குவெளியே ஆழ்வார்கள் நின்றுகொண்டிருந்ததாய் சொல்லப்படுகிறது .

ஆயிரங்கால் மண்டபத்தின் திருமாமணி மண்டபத்தில் அண்ணல் அமர்ந்ததும் 

அவர் எதிரில் ஆழ்வார்கள் வீற்றிருப்பது

 மாமணிமண்டபத்து அந்தமில் பேரின்பத்து அடியரோடு இருந்தமை என்கிறபடி

 முக்தன்(முக்திஅடைந்தவன்) பரமபதத்தில் உள்ள திருமாமணி மண்டபதை அடைந்து 

அங்குள்ள நித்ய முக்தர் மத்தியில் ஆனந்தமாய் இருப்பதைக் காட்டுகிறது

ஆக ,அரங்கன் ’வைகுண்டம்’ என்றதலைப்பில் நடத்தும் நாடகம் தான் இந்தவைகுண்ட ஏகாதசி. ! 

இறைவன் நமக்கு உய்ய வழிக்காட்ட முன்னின்று செல்கிறான் நாமும்

 ’உணர்ந்து உணர்ந்து இழிந்து அகன்று 
உயர்ந்து உருவியந்த இந்நிலைமை உணர்ந்து உணர்ந்து உணரிலும் இறைநிலை
 உணர்வு அரிது உயிர்காள் ’

என்ற திருவாய் மொழிக்கு ஏற்ப அவனை அறிந்து உணர்வோம், உன்னதம் அடைவோம்!

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இளங்கோவன் 
நெல்லிக்குப்பம் 

No comments:

Post a Comment

Followers

சங்கர நாராயணன் மேலராஜவீதி தஞ்சாவூர்..

அருள்மிகு சங்கர நாராயண சுவாமி திருக்கோயில் மேலராஜவீதி தஞ்சாவூர் மாவட்டம் இறைவன் :- சங்கர நாராயணர் இறைவி :- பாலாம்பிகா தாயார்   த...