Friday, December 1, 2023

சதுரங்க வல்லபநாதர் கோயில்

சதுரங்க வல்லபநாதர் கோயில்

தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் 103ஆவது சிவதலமாகத் திகழ்வது “பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோயில்” ஆகும்.
இத்தலம் திருநாவுக்கரசர் பாடல் பெற்ற தலமாகும். தேவாரப் பதிகத்தில் இத்தல இறைவனைத் திருநாவுக்கரசர் “ஆவின் மேவிய ஐந்தமர்ந்து ஆடுவான் தூவெண்ணீறு துதைந்த செம்மேனியான் மேவனூல் விரிவெண்ணியின் தென்கரைப் பூவனூர் புகுவார் வினை போகுமே” என்று இத்தலத்தைப் போற்றிப் பாடியுள்ளார்.

திருநெல்வேலி நெல்லையப்பருக்கும் இந்த பூவனூர் சதுரங்க வல்லப நாதருக்கும் ஒரு தொடர்பு உண்டு. அதுமட்டுமல்ல, ஏன் இந்த ஆலய இறைவனுக்கு சதுரங்க வல்லப நாதர் என்ற பெயர் வந்தது என்பது பற்றியும் காணலாம்.



தல வரலாறு
வசுதேவன் என்ற மன்னன் அத்தனை பொன் பொருள் பதவி இருந்தும் குழந்தை வரம் இல்லாமல் தவித்து வந்தான். ஒவ்வொரு சிவாலயமாக சென்று மனமுருகி வேண்டினான். தன் மனைவியுடன் திருநெல்வேலி நெல்லையப்பரை வணங்கினான். இவர்களின் வேண்டுதலை ஏற்ற நெல்லையப்பர், பார்வதியை வசுதேவனின் மகளாகப் பிறக்கும் படியும், பராசக்தியின் அம்சமாகிய சாமுண்டியை குழந்தைக்கு செவிலித்தாயாக இருக்கும்படியும் அருளினார்.

ஒரு முறை வசுதேவன் தன் மனைவியுடன் தாமிரபரணி நதியில் நீராடி கொண்டிருக்கும்போது, அங்கு ஒரு தாமரையில் சங்கு வடிவில் அம்பிகை தோன்றினாள். வசுதேவ மன்னன் அந்த சங்கை எடுத்த உடன் அது குழந்தையாக மாறியது. மன்னனும் ராணியும் மகிழ்ந்து இறைவனுக்கு நன்றி கூறி, அக்குழந்தைக்கு ராஜேஸ்வரி என்ற பெயரிட்டு வளர்த்தனர்.

சதுரங்க வல்லபநாதர் கோயில்
பொன்னியின் செல்வன் : திருமழபாடி வைத்தியநாதசாமி கோயிலின் சிறப்புகள் என்ன?
இறைவன் அருளியபடி, சப்தமாதர்களில் ஒருவரான சாமுண்டீஸ்வரி , அந்த குழந்தைக்கு வளர்ப்பு தாயாக இருந்தாள். குழந்தை சகல கலைகளையும் கற்றுத் தேர்ந்தது. அன்பும் அழகும் அறிவுமிக்க குழந்தையாக வளர்ந்தாள் ராஜேஸ்வரி. குறிப்பாக சதுரங்க விளையாட்டில் தன்னை வெல்பவர் யாருமில்லாதபடி திகழ்ந்தாள்.

காலங்கள் ஆக, ராஜேஸ்வரிக்கு மணமுடிக்கும் நேரம் வந்தது. வசுதேவ மன்னர், யார் தன் மகளை சதுரங்க விளையாட்டில் ஜெயிக்கிறார்களோ, அவர்களுக்கே மணம் முடித்து தருவதாக அறிவித்தார். இறைவன் சித்தர் வேடத்தில் வந்து சதுரங்க போட்டியில் கலந்து கொள்வதாகக் கூறினார். மன்னனும் சம்மதிக்க, சதுரங்க போட்டி நடந்தது.

போட்டியில் சித்தர் வேடத்தில் வந்த சிவபெருமானே வென்றார். சதுரங்க போட்டியில் வென்ற இறைவன், உண்மையான வடிவத்துடன் அனைவருக்கும் தரிசனம் தந்தார். மணம் மகிழ்ந்து இறைவனே ராஜேஸ்வரியை மணமுடித்தார். தம்பதி சமேதராய் இன்றும் அனைவருக்கும் அருள் பாலித்து வருகிறார் பூவனூர் சதுரங்க வல்லப நாதர். மன்னரின் வேண்டுகோளுக்கிணங்க.. அன்னை ராஜேஸ்வரியும், வளர்ப்புத்தாய் சாமுண்டீஸ்வரியும் தனித்தனி சன்னதிகொண்டு இந்த ஆலயத்தில் அருள் பாலித்து வருகின்றனர்.

சதுரங்க வல்லபநாதர் கோயில்
திருநெல்வேலி முதல் திருவனந்தபுரம் வரை - வியப்பளிக்கும் 8 இந்தியக் கோவில்கள்
ஆலய சிறப்புகள்
சுகப்பிரம்ம ரிஷி மலர்வனம் வைத்து வழிபட்டார் என்றும் சொல்லப்படுகிறது.இத்தல இறைவனுக்கு புஷ்பவன நாதர் என்ற பெயரும் உண்டு.

கிருஷ்ண குஷ்டஹரம்' தீர்த்தம், என்ற தீர்த்தம் இந்த ஆலயத்தில் உள்ளது. கருங்குஷ்டம் போக்கும் தன்மையுடையது இந்த தீர்த்தம்.

சிறப்பு வாய்ந்த சாமுண்டீஸ்வரி சன்னதியில். விஷக்கடிக்கு, எலிக்கடிக்கு இங்குத்தரப்படும் வேரைக்கட்டிக் கொண்டு இவ்வம்பிகையை வழிபட்டு மக்கள் குணமடைகின்றனர்

விஷ்ணு, பிரம்மா, இந்திரன், விநாயகர், முருகன், அகத்தியர் சுகமுனிவர் ஆகியோர் பூஜை செய்து வழிபட்ட திருத்தலம் இது.

ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சதுரங்க வல்லப நாதரைப் பிரார்த்தனை செய்து வழிபடக் குணமாகிறது என்பது நம்பிக்கை

பணம் கொடுக்கல், வாங்குவதில் பிரச்சனை ஏற்பட்டால் விரைவில் அது சரியாக, திருமணத்தடை நீங்குவதற்கு, குழந்தை பாக்கியம் ஆகியவற்றைக் குறைவின்றி அருள்கிறாள் சாமுண்டீஸ்வரி

இந்த திருத்தலத்தில்தான் அகத்தியர் போகருக்கு விஷக்கடி நிவர்த்திக்கான மூலிகை வைத்திய முறைகளைப் போதித்தார் என்று கூறப்படுகிறது.


சதுரங்கப்போட்டியும் சதுரங்க வல்லப நாதரும்
சதுரங்க விளையாட்டு தமிழகத்தில் தோன்றியது என்பது பலருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் சதுரங்க வல்லப நாதரின் ஆலயமோ, புராணக் கதைகளோ பலருக்கும் சென்று சேரவில்லை. பாடல் பெற்ற தலங்களுக்கு யாத்திரை செல்வோர் நிச்சயம் இந்த ஆலயத்திற்கு வருகை புரிவது வழக்கம்.

திருநாவுக்கரசர் இவ்வாலய இறைவனைப் போற்றி புகழ்ந்து நெகிழ்ந்து மனமுருகி பாடிய பாடல்களை இன்றளவும் மக்கள் பாடி, ஈசனை வழிபட்டு அருள் பெறுகின்றனர்.

ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்ட நிறுவனர் திருவடிக்குடில் சுவாமிகள் சமீபத்தில் ஒரு வேண்டுகோள் ஒன்றையும் வைத்துள்ளார் சர்வதேச சதுரங்க போட்டிகள் தமிழகத்தில் நடைபெற உள்ள நிலையில், பாடல்பெற்ற, புராண வரலாறு கொண்ட இத்தலத்தைப் பற்றி மக்கள் அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். தமிழக அரசும் பூவனூர் சதுரங்க வல்லப நாதருக்கு சிறப்புப் பூஜைகள் நடத்தித் தொடங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

சதுரங்க வல்லபநாதர் கோயில்
ஐராதீஸ்வரர் கோவில் : 'காட்சிப்பிழை சிற்பம்' 900 ஆண்டுகளுக்கு முன் சோழர்கள் கட்டிய அதிசயம்
கீழடி ஆய்வில் சதுரங்கம்
ஜூலை 28ம் தேதி 2022ல் மாமல்லபுரத்தில் சர்வதேச ஒலிம்பியாட் சதுரங்க போட்டி நடைபெற உள்ளது. மிகவும் தொன்மையான இந்த செஸ் விளையாட்டு பற்றி கீழடி ஆய்விலும் சில தகவல்கள் கிடைத்துள்ளன. கீழடி அகழ்வாராய்ச்சியில் சூளையில் சுடப்பட்ட சதுரங்க ஆட்ட காய்கள் கிடைத்துள்ளன.

இது போன்ற சுடுமண் ஆட்டக்காய்கள் திருக்காம்புலியூர், காஞ்சிபுரம், போவோம்பட்டி, திருக்கோவிலூர் போன்ற ஊர்களில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளிலும் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

எங்கே உள்ளது

நீடாமங்கலம் - மன்னார்குடி செல்லும் பேருந்தில் ஏறிப் பூவனூர் நிறுத்தத்தில் இறங்கி, பாமணி ஆற்றுப் பாலத்தைக் கடந்து சிறிது தூரம் சென்றால் பூவனூர் சதுரங்க வல்லப நாதர் ஆலயத்தை அடையலாம்.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது இரா இளங்கோவன் நெல்லிக்குப்பம்.

No comments:

Post a Comment

Followers

திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் (பிரம்மபுரீஸ்வரர்) திருச்சி....

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற தேவாரப் பாடல் பெற்ற சோழநாட்டு தலங்களில் ஒன்றான,  சுந்தரமூர்த்தி நாயனார்  பொன் பொர...