Friday, December 1, 2023

இறைவன் மத்திலீஸ்வரர்தாயார் பிருஹந்நாயகி செஞ்சி



ஸ்ரீ பிரஹன்நாயகி உடனுறை மத்தளேசுவரர் கோயில்
சிகாரி பல்லவேஸ்வரம் 
மேலச்சேரி
செஞ்சி. 
இறைவன்   மத்திலீஸ்வரர்
தாயார்    பிருஹந்நாயகி

ஏழாம் நூற்றாண்டை சேர்ந்த கோவில். 

மேற்கு பார்த்த குடவரைக்கோவில்.
கண்டிப்பாக காண வேண்டிய அற்புத தலங்களுள் ஒன்று. 

இந்த குடைவரை கோவில் சிகாரி பல்லவேஸ்வரம் என அழைக்கப்படுகிறது. 

கருவறையில் தாய்ப் பாறையிலான இலிங்கத் திருமேனியும் கூரையில் தாமரையும் அமைந்திருப்பது விசேசமான ஒன்று.

கிராம மக்களின் ஒத்துழைப்போடு
மிக மிக மோசமான இடிபாடுகளுடன் 
இருந்த கோவிலை மிக அழகாக
பழமை மாறாது
புணரமைப்பு செய்து
கும்பாபிஷேகம் நடத்தி முடித்துள்ளனர் .

மத்திலீசுவரர் 

ஆவுடையார் ஜகதி, உருள் குமுதம், கம்பு, பாதங்களுடன் ஆன கண்டம், கம்பு, பட்டிகை என பாதபந்த தாங்குதள அமைப்புடன்  திகழ்கிறது. 

லிங்க பாணம் அதன் மீது அமைந்துள்ளது. 

கூரையில் செதுக்கப்பட்டுள்ள ஒரு தாமரை சிதைந்துள்ளது. 

லிங்கம் தாய்ப் பாறையிலிருந்தே வெட்டப்பட்டுள்ளது. தாய்ப் பாறை லிங்கமும் கூரைத் தாமரையும் தமிழகத்தில் சித்தன்னவாசல் குடைவரை தவிர வேறு எங்கும் இல்லாதது, என்கின்றனர் வரலாறு ஆய்வாளர்கள்.

சித்தன்னவாசலில் தாய்ப்பாறை லிங்கம் தரைமட்டமாக்கப்பட்டு சுவடுகளே எஞ்சியுள்ளன .

பிருஹந்நாயகி

வடக்கு சுவரில் பாறையைக் குடைந்து பிருஹந்நாயகி அம்மன் புடைப்பு சிற்பமாக பிற்காலத்தில் வெட்டப்பட்டுள்ளது.

வலது கையில் தாமரை ஏந்தி இடது கையை நெகிழ்  கரமாக (டோல  ஹஸ்தம்) தொங்கவிட்டுள்ளாள். 

கிரீட மகுடம் தரித்து கழுத்தணிகள், தோள்  மாலை, தோள் வளை, கை வளை, குரங்கு செறி, சிலம்பு, கால் வளை ஆகியன அணிந்து, கணுக்கால் வரையான ஆடை உடுத்துள்ள அழகிய உருவம் கொண்டு  அருள்பாலிக்கின்றார். 
விநாயகர் 

விநாயகர்  & முருகன்

விநாயகர் செதுக்கப்பட்டுள்ள கற் பலகை ஒன்று குடைவரை முகப்பிற்கு முன்பு தெற்கு சுவரில் பொருத்தப்பட்டுள்ளது.

கருவறைக்கு இருபுறமும் மேடைகள்.உள்ளன.
 தென்புற மேடையில் வள்ளி, தெய்வானை உடனான முருகர் அருள்பாலிக்கிறார். 

பெருமாளின் பாதமும் ஓர் சிறிய  யானையும் உள்ளது. 

நந்தி 

சோழர் கால நந்தியின் கழுத்தில் கயிற்று மாலை, இரு சதங்கை மாலைகள்  உள்ளன.,  கீழ் சதங்கை  மாலையிலிருந்து ஒரு வளைந்த தந்தம் தொங்குகிறது. 

நந்திக்கு முன் ஒரு லிங்கம்  செதுக்கப்பட்டிருப்பது மிகவும் தனித்தன்மை உடையது. 

இரு திருமுன்கள்

இரு திருமுன்கள் நந்தியின் பின்னால் குடைவரையை நோக்கியவாறு மீளுருவாக்கம் செய்யப்பட்டுள்ளன.  

அதில் விநாயகரும்
முருகனும் கிழக்கு நோக்கிய வணக்கம் அருள்பாலிக்கின்றனர்.

நீராழி மண்டபம்

குடைவரைக்கு எதிரிலுள்ள எரிக் கரையில் ஒரு நாற்கால் நீராழி மண்டபம் உள்ளது. 

எளிய தாங்குதளம். 3 சதுரம் 2 கட்டு தூண்கள். வெட்டுப் போதிகை, உத்திரம், வாஜனம், வலபி, வளைந்திறங்கும் கபோதம், கூரை வரை கல் கட்டுமானம். 

அதன்மேல் செங்கல் சுதைக் கட்டுமானம் - மாடங்களால்அமைந்த வேதிகை, வேசர (வட்ட வடிவ) கிரீவம், சிகரம்

முருகன் கோவில்

குடவரை கோவிலின் மேல் மலை உச்சியில் தனி முருகன் கோவில் இருக்கிறது.

மேற்கு நோக்கிய முருகன் வள்ளி தெய்வானையுடன் அருள்பாலிக்கிறார். 

கோவில் வரலாறு 

பல்லவ மன்னர்கள் தமிழகத்தை ஆட்சி செய் வதற்கு முன்பு வரை தமிழகத்தில் கட்டப்பட்ட கோவில்கள் செங்கல், மரம், உலோகம், சுண் ணாம்பு கலவைகளால் கட்டப்பட்டன. பல்லவ மன்னர்களின் காலத் தில் முதன் முறையாக பாறைகளை குடைந்து குடைவரை கோவில்களை அமைத்தனர்.

கல்வெட்டு 

இக்கோயிலின் வடக்குப் பகுதி தூண் ஒன்றில் வடமொழிச் சாசனம் பல்லவ கிரந்த எழுத்தில் எழுதப்பட்டுள்ளது.  

சர்வநாதனான அரசர் சந்திராதித்யர்  சிம்ஹபுரத்தில் ஸ்ரீ சிகாரி  பல்லவேசுவரம் எனும் இறையகத்தை எழுப்பினார்."   சந்திராதித்யர் பல்லவ குடும்பத்தை சேர்ந்த சிற்றரரசர் ஆக இருந்திருக்கலாம்.

இக்கோயிலின் அமைப்பு முதலாம் மகேந்திர வர்மன் காலத்து அமைப்பை போன்றிருக்கிறது. இதனால் இக்கோயில் கி.பி.7ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாக கருதப்படுகிறது”.

இத் தலத்தில் 
உள்ள குடைவரை கோவிலில் துவார பாலகர்கள் இல்லை.  

இங்கே உள்ள குடைவரை கோவில்
செஞ்சி அருகே உள்ள தளவானூர், மண்டகப்பட்டு குடைவரை கோவில்களுக்கு முந்தைய காலத்தை சேர்ந்தவையாக இருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

குடைவரை அமைப்பு 

குடைவரை மேற்கு நோக்கியது. நான்கு தூண்கள் கொண்ட ஓரே ஒரு வரிசைத் தூண்களும் பின் சுவர் கருவறையும் கொண்ட எளிய குடைவரை. நடுவில் இரு முழுத் தூண்கள்.  பக்கத்தில் சுவரை ஒட்டி அரைத் தூண்கள். எல்லாத்  தூண்களும் முழுதும் சதுரமானவை. தூண்களின் மீது விரிகோண போதிகை. அதன் மீது உத்திரம். மேலே சற்றே வெளிநீட்டி இருக்கும் மெல்லிய போதிகை. அதன் மீது கபோதம். இந்த உறுப்புகள் அனைத்தும் எந்த சிற்ப செதுக்கலும் அற்றவை.

சுவருக்கும் தூண் வரிசைக்கும்  இடையே உள்ள இடம் அர்த்த மண்டபமாக இருக்கிறது. 

மிகவும் சக்தி வாய்ந்த சிவன்
வேண்டுவதையும் வேண்டாததையும்
நன்மைகள் பல அளிக்கிறார்.

ஒன்பதாவது தலைமுறையாக இந்த கோவிலில் பூஜைகள் செய்து வரும் செவலபுரை கிராமத்தை சேர்ந்த அ.சிவநாதகுருக்கள் குருக்கள் மட்டும்
மேலச்சேரியை சேர்ந்த குப்பன் என் பவரின் உதவியோடு நித்ய பூஜைகளை செய்து வருகிறார். 

கோவிலை பார்க்க தொடர்பு கொள்ள
அ.சிவநாதகுருக்கள்
பரம்பரை அறங்காவலர் & அர்ச்சகர்
9486911701
9952609193

கும்பகோணத்தில் இருந்து  km.

கும்பகோணத்தில் இருந்து விழுப்புரம்  செஞ்சி வந்து
செஞ்சி – செவலப்புரை சாலையில் 5ஆவது கி.மீ.இல் இருக்கிறது. மேலச்சேரி.

மெயின்சாலையில்
இடதுபுறம் உள்ள ஒரு மேல் நிலைத் தண்ணீர் தொட்டிக்கு அடுத்து இடப்புறம் பிரியும் ஒரு மண் சாலையில்  ஒரு ஏரியைச் சுற்றிக் கொண்டு சுமார் 1/2 கிமீ சென்றால் ஒரு சிறு பாறையின் மீது தெரியும் முருகர் கோயில். அங்கே பிரியும் காங்கிரீட் சாலையில் மலையைச் சுற்றிக்கொண்டு பின்னால் போனால் 'சிகாரி பல்லவேசுவரம்'

.ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா .இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் (பிரம்மபுரீஸ்வரர்) திருச்சி....

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற தேவாரப் பாடல் பெற்ற சோழநாட்டு தலங்களில் ஒன்றான,  சுந்தரமூர்த்தி நாயனார்  பொன் பொர...