Tuesday, December 26, 2023

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் தென்பெண்ணை ஆறு ஆராத்தி விழா.

தென்பெண்ணை ஆறு தென்னிந்தியாவின் முக்கியமான ஆறுகளில் ஒன்று. கர்நாடக மாநிலம் சிக்கபள்ளாபூர் மாவட்டத்தில் உள்ள நந்தி மலையில் (நந்தி துர்க்கம்) பெண்ணை ஆறாக பிறந்து, 430 கிமீ தூரத்தில் பாய்ந்து, இறுதியில் தமிழ்நாட்டின் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

தமிழக ஆறுகள்
தென்பெண்ணை ஆறு, கர்நாடகா மாநிலத்தில் 112 கிமீ நீளத்திலும், தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் 180 கிமீ நீளத்திலும், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் 34 கிமீ நீளத்திற்கும், விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் 106 கிமீ நீளத்திற்குப் பாய்ந்து, இறுதியில் தமிழ்நாட்டின் கடலூர் அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
இதன் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் சுமார் 14,449 சதுர கி.மீ2 ஆகும். மார்கண்ட நதி, பாம்பாறு, வன்னியாறு, கல்லாறு, கெடிலம் ஆறு இதன் முக்கிய துணையாறுகளாகும்.*ஆரத்தி விழா பினாகினி என்னும் தென்பெண்ணை ஆற்றில் கங்கா ஆரத்தி விழா*

 *கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் விஸ்வநாதபுரத்தில் எழுந்தருளியுள்ள விஸ்வநாதபுரீஸ்வரருக்கு* அபிஷேக ஆராதனை செய்து கும்ப கலசம் கொண்டு சிவ வாத்திய முழங்க வீதி வழியாக சென்று தென்பெண்ணை ஆற்றில் கங்கா ஆரத்தி செய்யப்பட்டது
 இயற்கை சீற்றம் தற்பொழுது  தமிழகத்தின் தலைநகரம் தென் மாவட்ட பகுதிகளை ஆட்டி படைத்து கொண்டுள்ள இத்தருணத்தில் நமது கடலூர் மாவட்டத்தில் *பெரும்சீற்றும் (இன்று சுனாமி தினம்) ஏற்படாத சுபிச்சமான மழை பொழிய* சரியான வேண்டுதலுக்கு ஏற்ற இடமாக கருதி தென்பெண்ணை ஆற்றில் ஆரத்தி விழா செய்யப்பட்டது

 பொதிகை மலையில் தவத்தில் அமர்ந்திருக்கும் நந்தி தேவர் வெப்பம் தாலாது அன்னை பொன்னியம்மன் இடம் வேண்டுதல் வைக்க அன்னை அய்யன் சிவபெருமானிடம் கூறி நந்தி தேவரின் வெப்பத்தை போக்கும் மாரு கேட்டுக் கொள்ள அதன் பொருட்டு அய்யனின் ஜடாமுடியில் அமர்ந்திருக்கும் கங்கை பெருக்கெடுத்து சிவனுடைய பினாகினி என்னும் அம்பின் வழியாக நந்தி தேவர் தலையில் தீர்த்தம் விழா தீர்த்தமே நதியாக வெளிப்பட்டு பல மாவட்டங்களை கடந்து  வழியில் பல தீர்த்தங்களை உள்ளடக்கி *ராம லக்ஷ்மண தீர்த்தம் காசிப முனிவர் தீர்த்தம் கண்ணனார் தீர்த்தம் கபிலர் தீர்த்தம் சூரிய தீர்த்தம் எமன் தீர்த்தம்* என பல தீர்த்தங்களை உள்ளடக்கிய தென்பெண்ணை ஆறு கடலூர் மாவட்டம் வங்கக்கடலில் கலக்கின்றபடியால் இந்நதியில் நமது வேண்டுதலை பஞ்சபூதங்களின் சீற்றம் தாக்காத வண்ணம்   மார்கழி பௌர்ணமி நாளில் சிறப்பாக ஆரத்தி எடுக்கப்பட்டது

 இந்நிகழ்ச்சியினை *தமிழ் முதல் தேதி வழிபாட்டு குழுவும்*

 *புண்ணியர் பேரவை ஆன்மீக அறக்கட்டளை* ஆன்மீக அன்பர்களும்

 *விஸ்வநாதபுரம் கிராம மக்களும்*

 ஏற்பாடு செய்து அதற்கு துணையாக திருக்கண்டீஸ்வரம் *நடன பாதீஸ்வரர் ஆலய அர்ச்சகர் சேனாபதி குருக்கள்* வழிகாட்டுதலில் மிகச் சிறப்பாக இன்று நடைபெற்றது. 

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்

No comments:

Post a Comment

Followers

மார்பு நோய்களை களையும் மணப்பாறை அகத்தீஸ்வரர்

மார்பு 🥢நோய்களை களையும் மணப்பாறை அகத்தீஸ்வரர் ஆலயம் மணப்பாறை ஸ்ரீவடிவுடைநாயகி உடனாகிய ஸ்ரீஅகத்தீஸ்வரர் ஆலயம் பெண்களின் மார்பு ச...