Sunday, December 24, 2023

பாவங்களையும் போக்கி அருள்கிறார் ஸ்ரீபாபநாசநாதர்.



தன்னை நாடி வரும் அனைவரின் பாவங்களையும் போக்கி அருள்கிறார் ஸ்ரீபாபநாசநாதர். அம்பாளின் திருநாமம் உலகம்மை நாயகி. நெல்லை மாவட்டத்தில் அம்பாசமுத்திரம் அருகில் உள்ளது பாபநாசம் திருத்தலம். ஆயிரம் வருடப் பழைமை வாய்ந்த ஆலயம்.சித்திரை மாதப்பிறப்பன்று அவருக்கு தனது திருமண கோலத்தை காட்டியருளினார். கருவறைக்கு பின்புறம் பிரகாரத்தில் கல்யாண சுந்தரராக அம்பாளுடன் ரிஷபத்தின் மீது அமர்ந்த கோலத்தில் சிவன் இருக்கிறார். அருகிலேயே அகத்தியரும் அவர் மனைவி, லோபாமுத்திரையும் வணங்கிய கோலத்தில் உள்ளனர்.

தாமிரபரணி ஆறு மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் பொதிகை மலையில் இருந்து உருவாகி பான தீர்த்தம், கல்யாண தீர்த்தம், அகத்திய தீர்த்தம் முதலிய புண்ணிய தீர்த்தங்களை கடந்து பாபநாசம் என்ற சிவ ஸ்தலத்தில் வழியாக வருகிறது.
அகத்தியர் இறைவனின் திருமண கோலத்தைக் காண விரும்பி இறைவனை வேண்டினார். அவரது விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் அகத்தியருக்கும் லோவ முத்திரைக்கும் சிவபெருமான் தேவியுடன் ரிஷப வாகனத்தில் பொதிகைமலைச்சாரலில் இருக்கும் பாபநாசத்திலேயே திருமண கோலத்தில் காட்சி தந்ததாக புராணங்கள் கூறுகின்றன.

இந்திரனின் (பிரம்மஹத்தி தோஷம்) பாவத்தை நீக்கிய சிவன் என்பதால் இவரை பாபநாசநாதர் என்கின்றனர். இத்தலத்திற்கு இந்திரகீழ க்ஷேத்திரம் என்ற பெயரும் எனப் போற்றுகிறது புராணம்.நவகைலாயங்களில் முதல் தலமான பாபநாசம் முதல் கிரகமான சூரியனுக்குரியதானது. சூரிய தலம் என்றும் சூரிய கைலாயம் என்றும் போற்றப்படுகிறது இந்தத் தலத்து லிங்கத்திற்கு முக்கிளா லிங்கம் என்ற பெயரும் உண்டு. கருவறையில் ருத்ராட்ச வடிவிலும், பிரகாரத்தில் முக்கிளா மரத்தின் கீழும் பாபநாசர் இருக்கிறார். ரிக், யஜுர், சாமம் ஆகிய மூன்று வேதங்களே கிளா மரமாக மாறி இறைவனுக்கு நிழல் தந்தும், அதர்வண வேதம் ஆகாயமாக இருந்தும் இவரை வழிபட்டது. எனவே சிவனுக்கு இந்தப் பெயர் அமைந்ததாம்.

நடராஜர் தனிச்சன்னதியில் ஆனந்ததாண்டவ கோலத்தில் இருக்கிறார். இவரை, “புனுகு சபாபதி’ என்கின்றனர். கிரக ரீதியாகவோ, 
ஜாதக ரீதியாகவோ குழந்தைகளுக்கு தோஷம் இருந்தால் அவர்களை இறைவனுக்கு தத்து கொடுத்து வாங்க உகந்த ஸ்தலம் இது. உலகம்மைக்கு 
அபிஷேகிக்கப்படும் மஞ்சள் தீர்த்தத்தை சிறிது அருந்தினால், திருமண, புத்திர பாக்கியங்கள் கிடைக்கும், பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பார்கள். 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்

No comments:

Post a Comment

Followers

96 வகையான ஷண்ணவதி ஹோமங்களின் ரகசியம்...

96 வகையான ஷண்ணவதி ஹோமங்களின் ரகசியம் (1)சமித்துவகைகள் _13  (2)ஹோமதிரவியம் _45 (3) ரஸவர்க்கம்.           _8 (4) பழவர்க்கம்.      ...