1.சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழையான, பிரம்மதேவர் பூஜித்து சாபவிமோசனம் பெற்ற தலமான,தர்மபாலன் என்னும் மன்னனின் வெண்குஷ்டம் நீக்கிய தலமான புதுச்சேரி மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சிவத் தலமான
#வில்லியனூர் என்ற #வில்வநல்லூர்
#திருக்காமீஸ்வரர் (காமேஸ்வரர்,மிரமீஸ்வரர்,வில்வனேசர்)
#கோகிலாம்பிகை (குயிலம்மை,முத்தம்மை)
திருக்கோயில்
2.காசிக்கு நிகரான தலமான,
மிகப்புகழ் பெற்ற
சங்கராபரணி (வராகநதி) ஆற்றங்கரையில் அமைந்துள்ள
#திருக்காஞ்சி
#கங்கைவராகநதீஸ்வரர் திருக்கோயில்
3. சூரியனும் பிரம்மாவும் வழிபட்ட தலமான, சங்கராபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள மிகப்புகழ் பெற்ற தலமான வில்லியனூர் ஒதியம்பட்டில் உள்ள
#திருக்காசி (திருக்காஞ்சி)
#காசி_விஸ்வநாதர் #விசாலாட்சி_அம்மன் திருக்கோவில்
4.1000 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த வைணவத் தலமான,
#வில்லியனூர் #தென்கலை_வரதராஜப்_பெருமாள்
#பெருந்தேவி_தாயார் திருக்கோயில்
5.18 சித்தர்களில் ஒருவரான, இங்குள்ள கோவணேஸ்வரரை வணங்கி தவமிருந்து முக்தி பெற்ற இடமான வில்லியனூர் அருகில் உள்ள
#கோரக்கர்_காடு என்ற கோர்க்காடு
#கோரக்கர்_சித்தர் சமாதி பீடம்
6. 18 ஆம் நூற்றாண்டில் பல அற்புதங்களைச் செய்து வானத்தில் பறந்த சித்தரான, வில்லியனூர்
சுல்தான்பேட்டையில் உள்ள
சித்தர்
#ஶ்ரீராம_பரதேசி_சுவாமிகள் ஜீவசமாதி பீடம்
7. தேங்காய் கொண்டு பலரின் குறைகளைக் தீர்த்து, எந்நேரமும் தியானத்தில் அமர்ந்த ஜீவசமாதியான சித்தரான வில்லியனூர் அருகில் உள்ள
#தேங்காய்_சித்தர் ஜீவசமாதி பீடம்
8. வண்ணார் குலத்தில் பிறந்து பல சித்து வேலைகள் புரிந்த சித்தரான வில்லியனூர் ஒதியம்பட்டில் உள்ள
#வண்ணார_பரதேசி_சுவாமிகள் ஜீவசமாதி
9.புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மிகப் பிரசித்திப்பெற்ற,
மணல் குளத்தில் தோன்றிய விநாயகரான,
தொள்ளைக்காது சித்தர்,மகாகவி பாரதியார், அரவிந்தர் அன்னையால் வணங்கப்பெற்று புகழ்பெற்ற தலமான
மணல் குளத்து விநாயகர் என்று அழைக்கப்படும், விநாயகப் பெருமானுக்கு திருக்கல்யாணம் நடைபெறும் தலமான புதுச்சேரி கடற்கரைக்கு அருகில் உள்ள
#மணக்குள_விநாயகர் திருக்கோயில்
10. சோழர்கள் காலத்தில்
#வேதபுரி என்று அழைக்கப்பட்டு , தற்போதைய ஜென்மராட்கனி மாதா கோயில் இருக்குமிடத்தில் சுயம்பு லிங்கமாக இருந்து பின்பு
வரலாற்றில் முஸ்லிம் மற்றும் பிரெஞ்சு படையெடுப்புகளால் அழிக்கப்பட்டு, பிறகு திவான் கந்தப்ப முதலியார் மற்றும் பலரின் முயற்சியால் உருவாக்கப்பட்ட தற்போது
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மகாத்மா காந்தி வீதியில் உள்ள இராமலிங்க சுவாமிகளால் பாடல் பெற்ற தலமான
#வேதபுரி
#வேதபுரீஸ்வரர்
#திரிபுரசுந்தரி_அம்மன் திருக்கோயில்
11.பிற்கால சோழர்கள் மற்றும் பாண்டியர்களால் கட்டப்பட்ட மிகப் புகழ்பெற்ற வைணவத் தலமான
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மகாத்மா காந்தி சாலையில் உள்ள
#வரதராஜப்_பெருமாள்
#பெருந்தேவி_தாயார் திருக்கோயில்
12. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள வெள்ளாழர் வீதியில் அமைந்துள்ள
#நந்திகேஸ்வரர் திருக்கோயில் மற்றும் #நாடு_சண்முக_வேலாயு_சுவாமிகள் ஜீவசமாதி பீடம்
13. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள வில்லியனூரில் உள்ள
#ஏகாம்பரநாத_மகேஸ்வரர்
#ஏலவார்குழலி_அம்மன் திருக்கோயில் மற்றும்
#மெய்ஞான_மாமுனிவ_ஞானதேசிகர் ஜீவசமாதி பீடம்
திருஞானசம்பந்தர் அருளிய
#திருவடுகூர் என்ற (திருவாண்டார் கோயில் )
தேவாரப் பதிகம்:
சுடுகூ ரெரிமாலை யணிவர் சுடர்வேலர்
கொடுகூர் மழுவாளொன் றுடையார் விடையூர்வர்
கடுகூர் பசிகாமங் கவலை பிணியில்லார்
வடுகூர் புனல்சூழ்ந்த வடுகூ ரடிகளே.
பாலுந் நறுநெய்யுந் தயிரும் பயின்றாடி
ஏலுஞ் சுடுநீறும் என்பும் ஒளிமல்கக்
கோலம் பொழிற்சோலைக் கூடி மடஅன்னம்
ஆலும் வடுகூரில் ஆடும் மடிகளே.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment