திருவாசகம் படித்தால் 21தலைமுறைகளுக்கு நரகம் கிடையாது.
சரி, முதலில் சிவபெருமானை வணங்கினால் என்ன கிடைக்கும்?
கேள்வியே தவறானது ! அறியாமையால் கேட்பது . எவ்வாறு ?
நீங்கள் இந்த உலகில் வருவதற்கு முன்னமே, உங்களுக்கு தேவயானவற்றையெல்லாம் படைத்து, வளர்த்து, நீங்கள் அனுபவிக்க கருணை கூர்ந்து அருளியவனிடம் கேட்டு பெறுதல் என்பது தாயிடம் அன்பை கேட்டு வாங்குவதற்கு சமம்.
உனக்கு நல் வாழ்வை அருளி,
மாயை தோற்றுவித்து,
உணர்த்தி ,
ஆட்கொண்டு,
சிவகதி அருளும், அருளாளனிடம்
கேட்டு பெறுவது.
நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள்.
இருப்பினும் சிவனடியார்களிடம் , உனக்கு என்ன கிடைத்தது?? சிவ வழிபாட்டில் என்று கேட்க்கும்
அறியார்க்கு பதிலாக இது, அடியேன் சொல்லியதல்ல இது,
இறைவனை, நாவில் தழும்பேறுமாறு பாடி , ஆடி மகிழ வேண்டும் என்று கூறிய மாணிக்கவாசக பெருமானாரின் பதில்
ஒரு வரிக்குள் ஓராயிரம் சொல்லி தெளிவு படுத்தும் பெருமான் , எம் மாணிக்கவாசக பெருமான்.
ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னமே தெளிவுபடுத்தியிருக்கிறார்.
திருவாசகம் - போற்றித்திருஅகவல்.
மூவேழ் சுற்றம் முரணுறு நரகிடை
ஆழாமே அருள் அரசே போற்றி!
தோழா போற்றி! துணைவா போற்றி!
#பொருள்
முரணுறு நரகம் - மாறுபட்ட நரகங்கள் , அவரவர் தீவினைக்கேற்ப .
மூவேழ் சுற்றம் -மூன்று வழியில் ஏழு சுற்றம்
தந்தை வழி , தாய் வழி , மனைவி வழி ஆகிய மூன்று உறவு வழிகளிலும் , ஒவ்வொன்றிலும் ஏழு தலைமுறையாக மொத்தம் இருபத்தியொரு தலைமுறைகளுக்கு நரகக்குழியில் வீழாமல் காப்பாற்றி அருளும் அரசன், எந்தை சிவபெருமான்.
வேறேதும் வேண்டுவதோ இந்த அடியார்க்கு ?
தோழா போற்றி!
இறைவனிடம் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. உள்ளிருந்து உணர்த்துபவன் , உள்ளிருந்து சரியான பாதையை உணர்த்துவான், அண்பர்க்கு அன்பன்.
துணைவா போற்றி!
உனது பெயர், சொந்தம், செல்வம், மக்கள், மனைவி எதுவும் உன்னுடன் வர போவதில்லை. ஆனால் மெய்யடியார் இவ்வுலக வாழ்வை நீத்து செல்லும் பொழுது, சிவபுரத்தில் வானோர்களை ( பிரம்மன், இந்திரன், தேவர்கள் ) பண்ணித்து வரவேற்று திருவடி நிழல் அருள்வான் ஈசன்.
சிவ பெருமானிடம் நீங்கள் கேட்டு பெற வேண்டியது எதுவும் இல்லை.
தனது அடியாரின் இருபத்தோரு தலைமுறையினர் நரகத்தே சென்று அழுந்தாமல் அருளும் அரசே போற்றி.
மெய்யடியாராய் இருக்க துணிவோம்
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்
No comments:
Post a Comment