_செல்வம் கொழிக்க செய்யும் ஸ்ரீ சொர்ண பைரவர்திருவடிகளே சரணம்.
தனம் தரும் வயிரவன் தளரடி பணிந்திடின் தளர்வுகள் தீர்ந்து விடும்
மனம் திறந்து அவன் பதம் மலரிட்டு வாழ்த்திடின் மகிழ்வுகள் வந்து விடும்
சினம் தவிர்த்து அன்னையின் சின்மயப்புன்னகை சிந்தையில் ஏற்றவனே
தனக்கில்லையீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்
வாழ்வினில் வளந்தர வையகம் நடந்தான் வாரியே வழங்கிடுவான்
தாழ்வுகள் தீர்ந்திட தளர்வுகள் மறைந்திட தானென வந்திடுவான்
காழ்ப்புகள் தீர்த்தான் கானகம் நின்றான் காவலாய் வந்திடுவான்
தனக்கில்லையீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்
முழுநிலவதனில் முறையோடு பூசைகள் முடித்திட அருளிடுவான்
உழுவதவன் விதைப்பான் உடமைகள் காப்பான் உயர்வுறச் செய்திடுவான்
முழுமலர்த் தாமரை மாலையை செபித்து முடியினில் சூடிடுவான்
தனக்கிலை யீடு யாருமே என்பான் தன மழை பெய்திடுவான்
நான்மறை ஓதுவார் நடுவினில் இருப்பான் நான்முகன் நானென்பான்
தேனினில் பழத்தைச் சேர்த்தவன் ருசிப்பான் தேவைகள் நிறைத்திடுவான்
வான்மழை எனவே வளங்களைப் பொழிவான் வாழ்ந்திட வாழ்த்திடுவான்
தனக்கில்லையீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்
பூதங்கள் யாவும் தனக்குள்ளே வைப்பான் பூரணன் யாவும் தனக்குள்ளே வைப்பான்
நாதங்கள் ஒலிக்கும் நால்வகை மணிகளை நாணினில் பூட்டிடுவான்
காதங்கள் கடந்து கட்டிடும் மாயம் யாவையும் போக்கிடுவான்
தனக்கில்லையீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்
பொழில்களில் மணப்பான் பூசைகள் ஏற்பான் பொற்குடம் ஏந்திடுவான்
கழல்களில் தண்டை கைகளில் மணியணிகலனாய் இருந்திடுவான்
நிழல்தரும் கற்பகம் நினைத்திடப் பொழுந்திடும் நின்மலன் நானென்பான்
தனக்கில்லை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்
சதுர்முகன் ஆணவத்தலையினைக் கொய்தான் சத்தோடு சித்தானான்
புதரினில் பாம்பைத் தலையினில் வைத்தான் புண்ணியம் செய்யென்றான்
பதரினைக் குவித்து செம்பினை எரித்தான் பசும்பொன் இதுவென்றான்
தனக்கில்லை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்
ஜெய ஜெய வடுகநாதனே சரணம்வந்தருள்செய்திடுவாய்
ஜெய ஜெய சேத்திர பாலனே சரணம்ஜெயங்களைத்தந்திடுவாய்
ஜெய ஜெய வயிரவா செகம் புகழ் தேவா செல்வங்களைத் தந்திடுவாய்
தனக்கில்லை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்.
சொர்ண பைரவர் போற்றி – 33 (ஸ்ரீ துர்க்கை சித்தர்)
1. ஓம் ஸ்ரீம் தனவயிரவா போற்றி
2. ஓம் ஸ்ரீம் தத்துவ தேவா போற்றி
3. ஓம் ஸ்ரீம் தயாளா போற்றி
4. ஓம் ஸ்ரீம் தனநாதா போற்றி
5. ஓம் ஸ்ரீம் தனத்தேவா போற்றி
6. ஓம் ஸ்ரீம் குலதேவா போற்றி
7. ஓம் ஸ்ரீம் குருநாதா போற்றி
8. ஓம் ஸ்ரீம் குண்டலினி தேவா போற்றி
9. ஓம் ஸ்ரீம் குபேரா போற்றி
10. ஓம் ஸ்ரீம் குணக்குன்றே போற்றி
11. ஓம் ஸ்ரீம் வயிரவா போற்றி
12. ஓம் ஸ்ரீம் வளந்தருவாய் போற்றி
13. ஓம் ஸ்ரீம் வற்றாத தனமே போற்றி
14. ஓம் ஸ்ரீம் வனத்துறை வாழ்வே போற்றி
15. ஓம் ஸ்ரீம் திருவுடைச் செல்வா போற்றி
16. ஓம் ஸ்ரீம் தினந்தினங்காப்பாய் போற்றி
17. ஓம் ஸ்ரீம் திருமண தேவா போற்றி
18. ஓம் ஸ்ரீம் திருவருள்திரண்டாய் போற்றி
19. ஓம் ஸ்ரீம் திருவடி காட்டுவாய் போற்றி
20. ஓம் ஸ்ரீம் சித்தர்கள் வாழ்வே போற்றி
21. ஓம் ஸ்ரீம் சித்தருக்குச் சித்தா போற்றி
22. ஓம் ஸ்ரீம் சித்திகள் எட்டே போற்றி
23. ஓம் ஸ்ரீம் சித்தாந்த வடிவே போற்றி
24. ஓம் ஸ்ரீம் சித்திகள் முடித்தாய் போற்றி
25. ஓம் ஸ்ரீம் முழுநிலவானாய் போற்றி
26. ஓம் ஸ்ரீம் முனிவர்கள் மருந்தே போற்றி
27. ஓம் ஸ்ரீம் முழு தனம் தருவாய் போற்றி
28. ஓம் ஸ்ரீம் முடியாதன முடிப்பாய் போற்றி
29. ஓம் ஸ்ரீம் முகிழ் நகை வயிரவா போற்றி
30. ஓம் ஸ்ரீம்இரும்பைப்பொன்னாக்கினாய்போற்றி
31. ஓம் ஸ்ரீம்இருந்தருள்செய்ய வந்தாய்போற்றி
32. ஓம் ஸ்ரீம் இலுப்பைக்குடி வயிரவா போற்றி
33. ஓம் ஸ்ரீம் சொர்ண வயிரவா போற்றி போற்றி போற்றி.
ஆக்கம்: உபாசனா குலபதி ஸ்ரீ துர்க்கை சித்தர்
மேற்கண்ட சொர்ண பைரவர் அஷ்டகத்தை சொர்ண பைரவர் சந்நிதியில் தினமும் 1 முறை பாராயணம் செய்து வரவும். அவ்வாறு செய்து வந்தால் என்றும் பணத்திற்கு குறைவிருக்காது.
தினமும் ஆலயம் சென்று பாராயணம் செய்ய இயலாதவர்கள் ஒவ்வொரு செவ்வாய் கிழமையன்றும் சொர்ண பைரவர் சந்நிதியில் 1 முறை செபித்த பின்பு வீட்டிற்கு வந்து சொர்ண பைரவர் படத்தின் முன்பாக 8 முறை பாராயணம் செய்து வரவும்.
தினமும் ஆலயம் சென்று பாராயணம் செய்ய இயலாதவர்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமை ராகுகால வேளையில் சொர்ண பைரவர் சந்நிதியில் 1 முறை செபித்த பின்பு வீட்டிற்கு வந்து சொர்ண பைரவர் படத்தின் முன்பாக 8 முறை பாராயணம் செய்து வரவும்.
மேற்கண்ட முறையில் செய்ய இயலாதவர்கள் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் சொர்ண பைரவர் சந்நிதியில் 1 முறை செபித்த பின்பு வீட்டிற்கு வந்து சொர்ண பைரவர் படத்தின் முன்பாக 8 முறை பாராயணம் செய்து வரவும்.
மேற்கண்ட முறையில் செய்ய இயலாதவர்கள் ஒவ்வொரு தேய்பிறை சஷ்டியன்று சொர்ண பைரவர் சந்நிதியில் 1 முறை செபித்த பின்பு வீட்டிற்கு வந்து சொர்ண பைரவர் படத்தின் முன்பாக 8 முறை பாராயணம் செய்து வரவும்.
மேற்கண்ட முறையில் செய்ய இயலாதவர்கள் ஒவ்வொரு பௌர்ணமியன்றும் சொர்ண பைரவர் சந்நிதியில் 1 முறை செபித்த பின்பு வீட்டிற்கு வந்து சொர்ண பைரவர் படத்தின் முன்பாக 8 முறை பாராயணம் செய்து வரவும்.
எங்கு செபித்தாலும் இரண்டு இலுப்பை எண்ணெய் விளக்குகள் மட்டுமே போதுமானது. வேறு எதுவும் தேவையில்லை. வசதி படைத்தவர்கள் அவல் பாயசம், வெற்றிலைப்பாக்கு, வாழைப்பழம், பானகம், செவ்வரளி பூ, மரிக்கொழுந்து இவற்றை வைத்தும் வழிபடலாம்.
நீங்கள் சொர்ண பைரவரை வழிபடுவதை வெளியில் காட்டிக்கொள்ளவோ அல்லது சொல்லவோ வேண்டாம். அவ்வாறு யாரிடமேனும் வெளிப்படுத்திக்கொண்டால் வழிபாடு தடைபடும் என்பதை நினைவில் கொள்ளவும்.
தினமும் வழிபடுபவர்கள் மிகுந்த புண்ணியசாலிகளே...!
மேற்கண்ட அஷ்டகத்தை மேற்கண்ட முறைகளில் பாராயணம் செய்ய இயலாதவர்கள், மேற்கண்ட நாட்களில் அல்லது தினமும் 108 முறை “ஓம் ஹ்ரீம் மஹா பைரவா நமஹா.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது இரா .இளங்கோவன் நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment