Thursday, January 18, 2024

அருள்மிகு ஶ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் விடையபுரம்,




*அருள்மிகு ஶ்ரீ  மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் விடையபுரம், கண்கொடுத்த வனிதம் அஞ்சல், கமலாபுரம் வழி, குடவாசல் தாலுகா, திருவாரூர்*

🙏🏻தென்னாடுடைய  சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி போற்றி🙏🏻


தென்னிந்திய  கட்டடக்கலையில் கட்டப்பட்டுள்ள இந்த சிவாலயம் 400 ஆண்டுகள் முதல் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவத்தலமாகும் , திருக்கோவில் முழுக்க முழுக்க பெருமான் சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது .



🛕மூலவர் சுந்தரேஸ்வரர்



🛕உற்சவர் சோமாஸ்கந்தர்


🛕அம்மன்/தாயார் : மீனாட்சி


🛕தல விருட்சம் நந்தியாவட்டை



🛕தீர்த்தம் : கிணறு தீர்த்தம்


🛕ஊர் : விடையபுரம்


🛕மாவட்டம் : திருவாரூர்


🛕மாநிலம் : தமிழ்நாடு


🛕திருவிழா: பவுர்ணமி, பிரதோஷம், சிவராத்திரி, நவராத்திரி உற்சவம், பங்குனி உத்திரம், திருவாதிரை ஆகிய தினங்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது..



🛕தல சிறப்பு:
வலது பக்கம் கழுத்தை சாய்த்தப்படி நந்தி அமைந்துள்ளது சிறப்பு.



🛕பொது தகவல்:
கோயிலின் நுழைவாயிலில் ராஜகோபுரம் அமைந்துள்ளது. 


🛕சிவன் கிழக்குப்பக்கம் அமர்ந்துள்ளார். 


🛕சிவனை பார்த்த வகையில் பலி பீடத்திற்கு முன் வலது பக்கம் கழுத்தை சாய்த்தப்படி நந்தி அமைந்துள்ளது. கோயிலில் பிற தெய்வங்கள் தனித்தினி சன்னிதிகளில் அருள்பாலிக்கின்றனர்



🛕பிரார்த்தனை
திருமணத்தடை விலக, புத்திரபாக்கியம் கிடைக்க, நாணமார்க்கம் கிடைக்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.



🛕தாலிக்கயிறு, வளையல், மஞ்சல், புத்தாடை அம்மனுக்கு படைத்தும் சுமங்கலிக்கு கொடுத்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.



🛕 ஸ்தலபெருமை:
இக்கோயில் ஏழு பிரகாரமாக இருந்துள்ளது. காலப்போக்கில் சிதலமடைந்தது. அப்பகுதியினர் பராமரித்து 1916 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தினர். 


🛕தொடர்ந்து 12 ஆண்டுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடந்து வருகிறது. 1941 ஆம் ஆண்டு காஞ்சிபெரியவா நடை பாதையாக வந்து மூன்று நாள் தங்கி சிவனை வணங்கியுள்ளார். 



🛕நாணமார்க்கத்திற்கு சிறப்பானது என காஞ்சி பெரியவா தெரிவித்துள்ளார். 


🛕மூலவர் ஆவுடையார் முதல் லிங்கம் வரை ஆறே முக்கால் அடி உயரமும், அம்மன் ஐந்தே முக்கால் அடி உயரத்தில் அருள் பாலிக்கிறார்கள்.



🛕முற்காலத்தில் இங்கு வந்த சுமங்கலிப்பெண்கள், மங்கலம் பூரிக்கும் படியாய் விடம் பிரசாத வெற்றிலை வைத்து பெரியோர்களிடத்தில் ஆசி பெறுவதற்கு. தெருக்களில் வீடுதோறும் ஆயிரக்கணக்கில் வெற்றிலை பாக்கு மங்களச்சுருள்கள் மூங்கில் கூடைகளிலும், தட்டுகளில், தாமரை இலைகளில் எப்போதும் வைக்கப்பட்டிருந்ததால் பின் நாளில் விடையபுரமாகியுள்ளது.



🛕தல வரலாறு:
திருவாரூர் அருகே உள்ள கல்யாணமகாதேவி தலத்தின் கல்யாண மீனாட்சியின் ஆதிமூலத்தோற்றம் விடயபுரம். இங்கு மீனாட்சியை தரிசித்து, கல்யாணமகாதேவி சிவதலத்தில் கல்யாண மீனாட்சியை வழிபடுவது தொன்று தொட்டு வரும் சக்திவாய்ந்த வழிபாடு ஐதீகமாகும். 


🛕இத்தலத்தில் அருள்பாலிக்கும் மீனாட்சி தேவி, சர்வ மீனாம்பிகை தேவியர்க்கும் மூத்த அம்பிகையாய்ச் சதுர்கோடி யுகங்களிலும் துலங்கி அருள் பாலித்துள்ளார்.



🛕ராதை, பார்வதி, திருமகள், சரஸ்வதி, சாவித்ரி, ஆகிய பஞ்சமாதேவி வழிபாடுமுற்காலத்தில் இருந்துள்ளது. 


🛕பாண்டவர்கள் நதிக்கரை தலமான இப்பகுதியில் கிருஷ்ண பரமாத்மா ராதையுடன் தோன்றி, அருகில் உள்ள ராதா நல்லூர் தலத்தில் நவராத்திரி பூஜையை கொண்டாடி, ராதா கல்யாணத்தின் பல வைபவங்களையும் நிகழ்த்தியுள்ளார்.



🛕கிருஷ்ணர் தோன்றிய நந்தன தமிழ் வருடத்தை நவராத்திரிக்கான விசேஷத்தலமாக விடயபுரம் சிவ,விஷ்ணு பூமி சிறப்பிடம் பெறுகிறது.



🛕 இங்கு ஒன்பதுநாட்கள் தங்கி நவராத்திரிப் பூஜைகள் செய்வதால், வரம், வளங்களை வார்த்துப் பல தலைமுறைகளையும் கடைத்தேற்றி சந்ததிகளையும் நன்கு தழைக்க வைக்கும் சிறப்பிற்குரியது.



🛕சிறப்பம்சம் வலது பக்கம் கழுத்தை சாய்த்தப்படி நந்தி அமைந்துள்ளது சிறப்பு.



🛕திருக்கோவில் முகவரி:

அருள்மிகு ஶ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் விடையபுரம், கண்கொடுத்த வனிதம் அஞ்சல், கமலாபுரம் வழி, குடவாசல் தாலுகா, திருவாரூர்-610102 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம்

No comments:

Post a Comment

Followers

சிவனின் ஈசான்ய முகத்திலிருந்து தோன்றியவர் அகோர மூர்த்தி திருவெண்காடு..

அகோர மூர்த்தி : திருவெண்காடு தலத்தை தவிர்த்து வேறு எங்கும் கண்டு விட முடியாது. ஆலயத்தின் தனிச்சிறப்புக்கு உரியவர் அகோர மூர்த்தி....