Monday, January 22, 2024

ஸ்ரீ ராமர் அவதாரத்திற்கு காரணமாகிய திருச்சோற்றுத்துறை பெருமான்

ஸ்ரீ ராமர் அவதாரத்திற்கு காரணமாகிய திருச்சோற்றுத்துறை பெருமான்
இன்று அனைத்து ஆன்மீக உள்ளங்களும் ஆவலுடன் காத்திருந்த தருணமாகிய அயோத்தி ஸ்ரீ ராமர் திருக்கோயில் மீண்டும் நிர்மாணம் செய்து பாரத பிரதமர் திரு நரேந்திர மோதி அவர்களால் பிராண பிரதிஷ்டை நடைபெற உள்ளது.

மனிதர்களிலே உத்தமனாக வாழ்ந்த புருஷோத்தமன் ஸ்ரீராமன் அவதாரத்திற்கு காரணமாக விளங்கியது திருச்சோற்றுத்துறை பெருமான் என்பது இங்கு பலருக்கும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

கிபி 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருவாவடுதுறை ஆதீனத்தின் 17வது குருமகா சந்நிதானமாக விளங்கிய ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாசாரியார் சுவாமிகள் அருளிச் செய்த திருச்சோற்றத்துறை தல புராணத்திலே துலா மாத சருக்கத்தில் இத்தகு அறிய விஷயம் காண கிடைத்துள்ளது.

அதிலே தசரதன் துலா மாத முப்பது நாளும் காவிரியில் நீராடி வழிபட்டதன் பயனாக ஸ்ரீராமபிராண் அவதரிக்கப் போகும் செய்தியினை தசரதனுக்கு சுவாமியே திருவாய் மலர்ந்து வரமாக அளித்த தகவல் இங்கு காணக் கிடைக்கின்றது.

திருச்சோற்றுத்துறை தல புராணத்தின் 238 வது பாடல்:

துலைமாதம் வருவைந்தாறு மிப்பொன்னி நதிமூழ்கு சுகமாயன் உன்றன் மகனாம் நிலைமேவு வாயந்த மகன்வீர ரொவெந்து நிசிபோ லிராவண னைமுன் அலையாத படைதம்பி மகனாகு மிவர்தம்மை யடுகின்ற வண்மை தருவோம் அலையா வசிட்டன் சொல்மனுவைச் செபித்தெம்மை வழிபாடு செய்தி யெனவே. 

பொ-ரை:- ஐப்பசி மாதம் முப்பது நாளும் இந்தப் பொன்னி ஆற்றில் நீராடிய பயனால் மாயனாகிய திருமால் உனக்கு(தசரதன்) மகனாக வந்து பிறக்கும் தன்மையை அடைவாயாக. அந்த மகன் இரவு போன்ற இராவணனையும் அவனுடைய படையையும் அவன் தம்பியாகிய கும்பகர்ணனையும் அவன் மகனாகிய இந்திரசித்தையும் கொல்லும் வலிமையைத் தருவோம். மனம் அலையாத வசிட்டன் சொன்னபடி மீண்டும் ஐந்தெழுத்தை ஓதி எம்மை வழிபாடு செய்வாயாக' என்று திருச்சோற்றுத்துறை ஈசன் கூறினார்.
ஜெய் ஸ்ரீ ராம்

No comments:

Post a Comment

Followers

இந்தியாவில் அமைந்துள்ள புகழ்பெற்ற 51 மகாசக்தி பீடங்கள்..

இந்தியாவில் அமைந்துள்ள புகழ்பெற்ற 51 மகாசக்தி பீடங்கள்..._ இந்த சக்தி பீடங்கள் இந்தியாவில் எங்கெங்கு அமைந்துள்ளன என்று பார்க்கலா...