Friday, January 5, 2024

ஸ்ரீ மகாவிஷ்ணுவின் அம்சமாகஸ்ரீ ராமர் அயோத்தியில் அவதரிக்க போகிறார்



ஸ்ரீ மகாவிஷ்ணுவின் அம்சமாக
ஸ்ரீ ராமர் அயோத்தியில் அவதரிக்க போகிறார் என அறிந்த தேவர்கள் அவருக்கு உதவி புரிய,
பிரம்மதேவர் ஜாம்பாவானை தனது கொட்டாவியில் இருந்து படைத்தார்.

வானவர்களினால் வானரர்கள் படைக்கப்பட்டனர்.  

வாயு பகவான் மூலம் 
ஸ்ரீ சிவபெருமானின் அம்சமாக 
ஸ்ரீ ஆஞ்சநேயர் பிறந்தார். 

இந்திரன் வாலியை உருவாக்கினார்.

சூரியன் சுக்கிரீவனை பிறப்பித்தார்.

பிரகஸ்பதி தாராவை பெற்றெடுத்தார்.

குபேரன் கந்தமாதனை பெற்றெடுத்தார்.

விஸ்வகர்மா நளனை பெற்றெடுத்தார்.

அக்னி தேவன் நீலாவை பெற்றெடுத்தார். 

அஸ்வினி குமாரர்கள்
மைந்தா, த்விவிதாவை பெற்றெடுத்தனர். 

வருணன் சுஷேணனை பிறப்பித்தார்.

பர்ஜன்யா ஷரபனை பெற்றார்.

ரிஷாவத் மலையில் பலர் தங்கினர்.

அந்த காலத்தில் 
பாண்டியர்கள் இலங்கை ஒட்டிய பகுதியை 
லெமூரியா கண்டத்தினை ஆட்சி செய்து கொண்டு இருந்தனர்...

ஸ்ரீ சனீஸ்வரபகவான் தசரதருக்கு கொடுத்த வரம்...

சனி கிரகம் ரோகினி சுற்று  பாதையில் வரும் பன்னிரெண்டு ஆண்டுகள் பூமியில் வறட்சி ஏற்பட்டு அதீத கஷ்டங்களை தருவார் என வானிலையாளர்கள்
தசரதரிடம் சொல்கின்றனர்.

தசரதர் தனது தேரில் ஏறி
பல இன்னல்களுக்கு பிறகு அவரை சந்தித்து வரம் பெற்றார்.

அது முதல் சனீஸ்வரபகவான் ரோகினி சுற்றுப்பாதையில்
வருவதில்லையாம்,
இது பத்ம புராணத்தில் உள்ளது.

தசரதர் கொடுத்த வரம்..

இந்திரன் மற்றும் தேவர்களோடு சண்டையிட்டார் அசுரன் ஷம்பரா.

அந்த போரில் வெற்றி கண்டு இந்திரனை இந்திர சபையில் இருந்து விரட்டினார்.

இந்திரன் தசரதனிடம் தஞ்சமடைந்து உதவி கேட்டார்.

இந்திரன் மற்றும் சில மன்னர்கள் தங்கள் படைகளோடு ஷம்பரனை போருக்கு அழைத்து போர் புரிந்தனர். 

கைகேயியை துணைக்கு அழைத்து சென்றார் தசரதர்.

கைகேயி மாபெரும் வீராங்கனை..
அவளை எதிர்த்து சண்டையிட்ட மாபெரும் வீரர்களையும்  எளிதில் வென்று விடுவார்.

சிறுவயதில் தனது அரண்மனை தோட்டத்தில் தனது சகோதரர்களுடன் விளையாடிக்கொண்டு இருந்த போது பெருத்த காட்டுப்பூனை ஒன்று வந்து அவர்களை துன்பப்படுத்தியது.

கைகேயின் சகோதரர்கள் பயந்து ஓடிய வண்ணம் இருந்தனர்.

கைகேயி தான் வைத்திருந்த சிறிய கத்தியினால் 
அதனை குத்திக் கிழித்து கொன்றார்.

தசரதன் ஷம்பராவோடு கடுமையாக சண்டையிட்டார்.

ஒரே நேரத்தில் பத்து தேரில் பத்து ஷம்பராக்கள் தோன்றி சண்டையிட்டனர்.

போரில் பலத்த காயமடைந்த தசரதன் மயக்கம் அடைந்தார்.

தசரதனை அந்த போர்களத்தில் இருந்து வெளியே 
தேரில் கொண்டு வந்து கஷாயங்களை கொடுத்து அவரது உடல் நலத்தை காத்தார் கைகேயி.

மீண்டும்  ஷம்பராவோடு போருக்கு  வந்தார் தசரதன். 

தசரதனின் தேரின் கடையானி பகுதியை தாக்கினார் ஷம்புரா. 

கடையானி என்பது தேரின் சக்கரத்திற்கும் அடுத்து பொருத்தப்பட்ட பகுதி.

தேரின் சக்கரத்தை பழுது பார்க்க அதனை தனியாக கழற்றவும், 
தேர் ஓடும் போது சக்கரம் தனியாக  கழண்டு வராமல் இருக்கவும் உருவாக்கபட்ட அமைப்பு.

கடையானி இல்லாத தேர் கவிழ்ந்து விட கூடிய நிலையை கண்ட கைகேயி தனது விரலில் ஒன்றை கடையாணியாக வைத்து தேரை காத்தார்.   

கடும் போரில் ஷம்பரா கொல்லப்பட்டார்.

தனது 
உயிரை, 
தேரை 
காப்பாற்றிய கைகேயிக்கு இரண்டு வரங்களை தருவதாக சொன்னார் தசரதர்.

கைகேயி 
கணவன் மனைவிக்குள் வரங்கள் அவசியமற்றது, வேண்டாம் என்றார்.

தசரதன் வலுகட்டாயமாக வரங்களை கேட்டு பெற்றுக்கொள்ள வலியுறுத்தினார்.

உங்கள் வரம் இரண்டும் அப்படியே இருக்கட்டும், 
தேவைப்படும் போது கேட்கிறேன் என்றார். 

வரத்தையும் மறந்தார். 

கைகேயி சிறந்த தாயாக விளங்கினார்.

தான் பெற்ற பிள்ளை மேல் வைத்த அன்பை போல அவர் பெறாத பிள்ளைகள் மேலும் அன்பு செலுத்தினார்.

தசரதன் கைகேயியை திருமணம் செய்தவுடன் அந்த நாளைய  முறைப்படி அவரோடு அவரது தோழிகளை அழைத்து வந்திருந்தார்.
அவர்களில் 
தனது சகோதரியான மந்தாரையையும் அழைத்து வந்திருந்தார். 

அவரிடம் தனது வீரத்தை பற்றி சொல்லும் போது தான் தசரதரிடம் இருந்து பெற்ற வரங்களை சொன்னார். 
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா. இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

திருவாரூர் சூட்சுமபுரீஸ்வரர் சிறுகுடி...

அருள்மிகு சூட்சுமபுரீஸ்வரர் திருக்கோயில், சிறுகுடி,  சரபோஜிராஜபுரம் அஞ்சல், வழி பூந்தோட்டம், குடவாசல் வட்டம், திருவாரூர் மாவட்டம் –  609 503...