Friday, February 23, 2024

நடராஜர் தலங்களும் திரு நடனமும்

    *நடராஜர் தலங்களும் திரு நடனமும்*.
                  
  சிவலோகத்து *ஐந்து தொழில் புரியும் *பஞ்ச கிருத்திய நடராஜர்*  அன்பர்களுக்காகப் பலவிதத்  திருநடனக் காட்சி அருளிய திருத் தலங்கள் .
        *1* . *_சிதம்பரம்_ –  ஆனந்த நடராஜர், மாணிக்கக் கூத்தர், அம்மைக் கூத்தர்*   
         
 *2** .*_மதுரை_    ----  சுந்தரக் கூத்தர்*    

*3* .  *_திருநெல்_ _வேலி_ ---  செல்வ நடராஜர்*  

*4* .  *_திருக்_ _குற்றாலம்_ – சித்திரக் கூத்தன்* 

 *5* *_திருவாலங்காடு_ ---  ஊர்த்துவத் தாண்டவர்* 

  *6*    *_திரு_* *_உத்தர கோச_* *_மங்கை_  ----  மரகத நடராஜர்* 

*7* .    *_தாருகாவனம்_  --- ஞானக் கூத்தர்*   

  *8* .  *_திரு விடை வாய்_* ------ *சந்தியா தாண்டவர்*.    
                  .                 
  *9* . _*திருவாரூர்*_*--------ஆயிரம் புஜங்க லலித நடராஜர்*                                      

 *10* .*கொள்ளிக்காடு_  ----– திரு மேனியின் *மேல் பாதி பெண்ணாகும் இருபால் அர்த நாரி அம்மை யப்ப நடராஜர்.*   
         
  *11* .    *_திருவாய்மூர்_ ---- அம்மை நடராஜர்*      
                       
*12* . *_திரு நல்லம்_* (கோனேரி ராஜ புரம்)  --- *சுயம்பு நடராஜர்*

  *13* .   *செப்பறை*, 
_*திருப் பனையூர்*_ ----- *அழகிய கூத்தர்* 

   *14* .  _*கும்ப கோணம்*  *நாகேஸ்வரன்* *கோயில்* ,  *நல்லூர் பெரிய ஆண்டவர்*_ *_கோயில்_* ---- *சதுரத்  தாண்டவர்*.       
                                
   *15 . _திருவெண் காடு_* ----- *அற்புதக் கூத்தர்.*    
      
*16 .    _திரு இடைச் சுரம்_  ------- அதிசயக் கூத்தர்*.                               .                     

*17*  .  _*பேரூர் பட்டீஸ்வரம்*_ . *ஆனந்த நடராஜர்*                                  

*18      _திருவாதவூர்_*, *_இராமேஸ்வரம்_ , திருவதிகை,    திரு  வடுகூர் ------  அருள் கூத்தர்.*                 .                    
  
*19   _திரு நீடூர்_ ---- கான நிருத்தர்*                               
 
*20 . _திருத்_  _தலையாலங்காடு_  -----  வரத நடராஜர்    மகுடக் கூத்தர்*.                              

*21.*   _*தீர்த்தன கிரி*_    ( திருத்தினை நகர் )    -------    *இசைக்   கூத்தர்* 
                                 
*22* . *திருப் பனையூர், புறவார் பனங்காட்டூர்  ------  ஒரு காதில் தோடு அணியும் அர்த நாரி  அம்மை யப்ப நடராஜர்.*                 .  

இவ்வாறு இன்னும்   பல  தலங்கள்.                               

⚜️         *அம்மை குலாத் தில்லை ஆண்டானை*   (திருவாசகம்)                     

✡️          *பெண்ணுமாய் ஆணுமாகிப் போதியா நிற்கும் தில்லைப் பொது நடம் போற்றி போற்றி*       

🌷       *தனிக் கூத்து என்றும் நடிப்பானை* (சேக்கிழார்)  

  என *இறைவனும் இறைவியுமாய்    தாயுமானவனாய்  இருபால்  அம்மை யப்பனாய்*   உள்ள *ஐந்தொழில் நடராஜர் தனிப் பெரும் கடவுள்* .   
 
*பெண் என்று சுட்டி அறியப்படும் உயிரினமான உமையவள்*  பல தலங்களிலும்  சிவ பூஜையும் தவமும் செய்தே நடராஜரின் தரிசனம் பெற்றதைத் திருமுறைகளும் தல வரலாறும் காட்டுகின்றன.  

*நடராஜரின் திருக் கரத்தில் இருப்பது  ஊழி முடிவில் அனைத்து உலகங்களையும் அரி அயன் அம்பாள் உட்பட அனைவரையும் சாம்பலாக்கும்  பிரளய  கால அக்கினி.  ஒரு சிறு பொறியே எல்லோரையும் சாம்பலாக்கும்*.   

தானே பெண்ணாக *இறைவியாக உள்ள முழுமுதல் தூய  சிவ லோக நாயகனுடன் பிறப்பு வளர்ப்பு உள்ள மும்மல உமையவள்*  சேர்ந்து  இருக்க முடியாது.   ஆட முடியாது.   அக்கினியால் எரிந்து சாம்பல் ஆவாள். 

*பக்தையாகத்  திரு நடனத்தைக் கண்டு களிக்க மட்டுமே முடியும். 
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் (பிரம்மபுரீஸ்வரர்) திருச்சி....

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற தேவாரப் பாடல் பெற்ற சோழநாட்டு தலங்களில் ஒன்றான,  சுந்தரமூர்த்தி நாயனார்  பொன் பொர...