குன்று தோறும் குமரக்கடவுள் குடி கொண்டுள்ளதைப் போல உலகில் உள்ள புகழ்பெற்ற முருகப்பெருமான் குடிகொண்டுள்ள தலங்களில் ஒன்றான
#மலேசியா நாட்டில் உள்ள புகழ்பெற்ற
கந்த கோட்டமான
#பினாங்கு
#தண்ணீர்மலை (அருவிமலைக்கோயில்)
#பாலதண்டாயுதபாணி திருக்கோயில் வரலாறு:
தமிழ்நாட்டில் எப்படி முருகனுக்கு அறுபடை வீடுகள் உள்ளதோ அதுபோல மலேசியாவில் பத்துமலை, கல்லுமலை, தண்ணீர்மலை முருகன் கோவில்கள் சிறப்புற்று விளங்குகின்றன. பத்துமலை முருகன் கோவில் பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கும். மிக உயர்ந்த சிலையுடன் உள்ள அந்த முருகனை பற்றி தெரியாதோர் இருக்க முடியாது.
ஆனால் மலேசியாவில் உள்ள தண்ணீர்மலை முருகன் என்ற இந்த முருகனை பற்றி அறிந்தவர் குறைவு. மலேசியாவில் 13 மாநிலங்களில் ஒரு மாநிலம் பினாங்கு தீவு. இதன் தலைநகரம் ஜார்ஜ் டவுன் இந்த நகரத்தில்தான் இந்த முருகன் கோவில் உள்ளது.
தமிழர்களின் கோயில்கள், அயல்நாடுகளிலும் விரிந்து பரந்துள்ளன. தமிழர்கள் தாங்கள் குடியேறிய இடங்களில் எல்லாம் தங்களின் விருப்பமான தெய்வங்களுக்கு ஆலயம் எழுப்பி வழிபடத் தொடங்கினர். அந்த வகையில், மலேசிய நாட்டின் புகழ்பெற்ற ஆலயமாகத் திகழ்வது, பினாங்கு மாநிலத்தில் உள்ள, தண்ணீர்மலை முருகன் திருக்கோயில் ஆகும்.
அருள்மிகு பாலதண்டாயுதபாணி கோவில், "அருவி மலை கோயில்" அல்லது "தண்ணீர் மலை கோயில்" என உள்ளூர் மக்களால் அறியப்படும் ஜார்ஜ் டவுன், பினாங்கில் அமைந்துள்ள ஒரு கோவில் வளாகம். இந்த கோவிலின் முக்கிய கடவுள் முருகன். பக்தர்கள் கோயிலை அடைய 513 படிக்கட்டுகள் ஏற வேண்டும். இது பத்து மலைக்கு அடுத்த படியாக, மலேசியாவில் இந்து பண்டிகையான தைப்பூசத்திக்கு பிரசித்தி பெற்ற கோவில் ஆகும்.
21.6 மீ உயரம் கொண்ட கோபுரம் (பிரதான கோபுரம்) கொண்ட இந்த மலை உச்சியில் உள்ள கோயில் இந்தியாவிற்கு வெளியே உள்ள மிகப்பெரிய முருகன் கோவிலாக விளங்குகிறது.
#பினாங்கு தீவு:
மலேசிய நாட்டின் பதின்மூன்று மாநிலங்களில் ஒன்றாக விளங்குவது பினாங்கு தீவு ஆகும். மாலாக்கா நீரிணையில் அமைந்த நிலப்பகுதி, 305 சதுர கி.மீ. பரப்புள்ளது. இங்கு 7 லட்சம் பேர் வசிக்கின்றனர். தமிழர்கள் அதிகம் வாழும் மாநிலமாக பினாங்கு திகழ்கின்றது. இதன் தலைநகரம் ஜார்ஜ் டவுன். இங்குதான் தண்ணீர்மலை முருகன் ஆலயம் உள்ளது.
இயற்கை வளம் கொண்ட இந்த தீவில், தண்ணீர்மலை முருகன், பினாங்கு மலை, தேசிய பூங்கா, கேக் லோக் சி புத்தர் ஆலயம், செபராங் பிறை, ஜார்ஜ் டவுன் என பல்வேறு சுற்றுலாத் தலங்கள் அமைந்துள்ளன.
#தமிழர்கள் குடியேற்றம்:
ஒன்பதாம் நூற்றாண்டில் சோழர்காலம் முதல் தமிழர்களின் வரலாறு தொடங்குகிறது. கங்கை கொண்டான், கடாரம் கொண்டான் என புகழப்படும் சோழமன்னன் புலி கொடி நாட்டி வென்ற கடாரம் என்ற ஊர், பினாங்குத்தீவின் அருகேயுள்ள, கிடா என்ற மாநிலத்தில் அமைந்துள்ளது.
கி.பி. 1786 -இல் ஆங்கிலேயர் ஆட்சியில் தமிழர் குடியேற்றம் தொடங்கியது. 1802 -இல் தமிழகத்துப் போர்க் கைதிகள் இத்தீவை வளமாக்கும் விதமாக கப்பலில் நாடு கடத்தப்பட்டு தீவின் முன்னேற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்டனர். நிதி நிறுவனங்கள் அமைத்து நிதி நிர்வாகம் மேற்கொண்ட நகரத்தார் அதிகம் வாழும் பகுதியாகவும் பினாங்கு விளங்குகின்றது. பிறகும் ஏராளமான தமிழர்கள் கப்பல் மூலம் குடியமர்த்தப்பட்டனர். மருதுபாண்டியனின் மகன் துரைசாமி, பினாங்கு தீவிற்கு கடத்தப்பட்டதை வரலாறு கூறுகிறது.
#வரலாறு:
புதிதாக கட்டி முடிக்கப்பட்ட அருள்மிகு பாலதண்டாயுதபாணி கோவிலின் பிரமாண்ட கும்பாபிஷேகம் 29 ஜூன் 2012 அன்று நடைபெற்றது.
1 கோடி ரிங்கிட் செலவில் கட்டப்பட்ட இந்த கோவில் இந்தியாவிற்கு வெளியே உள்ள மிகப்பெரிய முருகன் கோவில் என்று கூறப்படுகிறது.
#கோவிலின் காலவரிசை :
1800- தற்போதைய பினாங்கு தாவரவியல் பூங்காவிற்குள் பெரிய நீர்வீழ்ச்சியின் அடிவாரத்தில் அமைந்துள்ள திண்ணை தைப்பூச விழாவின் மையப் புள்ளியாக மாறியது
1856 - கேப்டன் சார்லஸ் ஹென்றி கஸாலெட் வரைந்த ஓவியத்தின் மூலம் அருவியின் அடிவாரத்தில் உள்ள கோவிலின் ஆரம்பகால பார்வை, இதனால் கோவில் இருந்ததை நிரூபித்தது.
1892 - நீர்வீழ்ச்சி நீர்த்தேக்கம் கட்டப்பட்டது
1905 - முகமதியன் மற்றும் இந்து நன்கொடை வாரியம் அமைக்கப்பட்டது
1913 - நீர்வீழ்ச்சி கோவிலில் நீர் வழங்கல் மாசுபடுவதைத் தடுக்க, நீர்வீழ்ச்சி கோவிலை அகற்றுவதற்கான திட்டங்கள் உள்ளன. 13 நவம்பர் 1913 அன்று அறிவிக்கப்பட்டது (சிங்கப்பூர் ஃப்ரீ பிரஸ் மற்றும் மெர்கன்டைல் விளம்பரதாரர்)
1914 - 10 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு புதிய நிலம், 2 கம்பிகள், 28 துருவங்கள் லோட் 5 முகீம் XVI என அழைக்கப்பட்டது, அப்போதைய "முகமதியன் மற்றும் இந்து எண்டோவ்மென்ட்ஸ் போர்டு" 7,500 ஸ்ட்ரெய்ட் டாலர்கள் விற்ற நோக்கத்திற்காக வாங்கப்பட்டது. ஒரு புதிய இந்து கோவிலின் 9 மே 1914 அன்று அறிக்கை செய்யப்பட்டது (மலாயா ட்ரிப்யூன்).
1915 - தைப்பூசம் முதல் முறையாக பிப்ரவரி 1915 இல் நீர்வீழ்ச்சி கோவிலுக்கு பதிலாக ஹில்டாப் கோவிலில் கொண்டாடப்பட்டது. 7 ஜூன் 1915 அன்று அறிக்கை செய்யப்பட்டது (மலாயா ட்ரிப்யூன்)
1985 - பழைய மலை உச்சியில் கோவில் புனரமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் 28 ஜனவரி 1985 அன்று நடத்தப்பட்டது.
2006 - பழைய இடத்திற்கு 30 மீட்டர் மேலே புதிய தளத்தில் நியூ ஹில்டாப் கோவிலில் வேலை தொடங்கியது
2012 - புதிய ஹில்டாப் கோயில் மகா கும்பாபிஷேகம் 29 ஜூன் 2012 அன்று நடத்தப்பட்டது. 2013 ம் ஆண்டு தைப்பூச விழா முதன்முறையாக நியூ ஹில்டாப் கோவிலில் நடைபெற்றது.
#தங்கத் தேர்:
8 பிப்ரவரி 2017 அன்று தைப்பூசத்தை முன்னிட்டு ஒரு ஆர்எம் 3 மில் தங்கத் தேர் தெருக்களில் இறங்கியது. 4.3 மீ உயரமும் 4 மீ அகலமும் கொண்ட 1.6 டன் தங்கத் தேர் முன் கலசத்தை (கோபுரம்) அலங்கரிக்கும் பல சிலைகளுடன் இரண்டு தங்கக் குதிரைகளைக் கொண்டுள்ளது. முருகப்பெருமானின் வேல் (ஈட்டி) தாங்கிய தேர் பக்தர்களால் இழுக்கப்படும் ரப்பர் சக்கரங்களில் நகரும். தேரின் உள் சட்டகம் காரைக்குடியில் தயாரிக்கப்பட்டு பினாங்குக்கு அனுப்பப்பட்டது.
தங்கத் தேரின் பயணம் குயின் தெருவில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் இருந்து ஜலான் கெபுன் பங்காவில் உள்ள அருள்மிகு ஸ்ரீ விநாயகர் கோவில் வரை இருக்கும். தேர் ஸ்ரீ விநாயகர் கோவிலில் இரண்டு நாட்கள், தைப்பூச தினத்தன்று மற்றும் தைப்பூச நாளில் வைக்கப்படும்.
குயின் ஸ்ட்ரீட் மகா மாரியம்மன் கோவிலில் 0.9 மீட்டர் உயரமுள்ள தங்க வெல்லுக்கு 18 நாள் பூஜை (சிறப்பு பிரார்த்தனை) அமர்வு நடத்தப்படும். இது முருகனின் தாயான சிவனின் துணைவியான பராசக்தியால் வேல் உருவாக்கப்பட்டது என்ற கதையை சித்தரிக்கிறது. தை மாதத்தில் (பௌர்ணமி) பௌர்ணமி நாளில் (பௌர்ணமி) பூச நட்சத்திரத்தின் போது முருகப்பெருமானிடம் ஒப்படைக்கப்பட்ட ஒரு அழிக்கமுடியாத வேலியில் பராசக்தி 18 வடிவங்களில் தோன்றியது. கடவுளின் தாயின் ஆசியைப் பெற்ற பிறகு, தைப்பூசத்தன்று தங்க ரதத்தில் முருகனுக்கு முருகன் அனுப்பப்படுவார்
தங்க ரதம் தைப்பூசத்துக்கான முதல் சோதனை ஓட்டத்தை 2 பிப்ரவரி 2017 அன்று ஜார்ஜ் டவுன் வழியாக சுமார் 2 மணி நேரத்தில் வெற்றிகரமாக நிறைவு செய்தது. தேர் 3 சென்றது கோவிலுக்குத் திரும்புவதற்கு முன் ஜலான் கெபுன் புங்கா, லோரோங் ஏர் டெர்ஜூன், ஜலான் துங்கு அப்துல் ரஹ்மான், ஜலான் மெக்கலிஸ்டர், ஜலான் ரெசிடென்சி மற்றும் ஜலான் உத்தமா.
#தண்ணீர்மலை முருகன்:
தமிழகத்தில் முருகப்பெருமானுக்கு ஆறுபடைவீடுகள் அமைந்துள்ளதைப் போன்று, மலேசிய நாட்டிற்கு மூன்று படைவீடுகள் புகழ்பெற்றவையாக விளங்குகின்றன. அவை: பத்துமலை, தண்ணீர்மலை, கல்லுமலை ஆகும். பினாங்கு தண்ணீர்மலை முருகன்ஆலயத்தில் தைப்பூச விழாக் காலத்தில், தமிழர்கள் மட்டுமன்றி மலேயர்களும், சீனர்களும் அதிக அளவில் கலந்து கொண்டு வழிபாடு செய்வது குறிப்பிடத்தக்கது.
தண்காவில் வண்டுமது தானுண் பினாங்கில்
தண்ணிமலை ஆண்டவர்க்குத் தைப்பூசம் - எண்ணி
நகரத்தார் கொண்டாடும் நல்லவிழா வன்று
நகரமெலாஞ் சேருமலை நாடி.
தென்னாட்டுப் பழனி மலையில் கோவில்கொண்ட பால தண்டாயுதபாணிதான் பாய்மரக் கப்பலேறி, பழம்புகழ் பினாங்கு நகர் வந்து பசுமை மிக்க தண்ணீர்மலையிலே பாலதண்டாயுதபாணியாக நின்ற நிலையில் அனைவரையும் ஆசீர்வதித்து அருள் தந்து, பொருள் தந்து வாழ வைக்கிறார் என்பது நமது மூதாதையர்களின் ஒருமித்த கருத்தாகும்.
"தீஞ்சுவைத்தேன் பூமலரும் தெளிவான பினாங்கு நகர் தேடியவன் வந்து விட்டான்
திருக்கோவில் கொண்டபடி மலையடியில் சிலையானான் தென்னாட்டு தண்டபாணி"
... என்ற கவியரசு கண்ணதாசனின் கவிதை இதற்குச் சான்றாகும்.
மூவேந்தர்களுக்கு பிறகு நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் சமூகம் திருக்கோவில்களை பாதுகாப்பதிலும் அதைப் பேணி முறையாக நடத்தி வரவும், ஆலயங்கள் அமைப்பதிலும், புதிப்பிப்பதிலும் இன்று வரை எடுத்துக்காட்டாக விளங்கி வந்திருக்கின்றனர்.
கோவில் வழியாக குலத்தை அமைத்துக்கொண்டு, செந்தமிழையும், சிவ நெறியையும் வளர்த்தார்கள் என்று நகரத்தார் சமூகத்தை பற்றி, அமரர் குன்றக்குடி அடிகளார் அவர்கள் மலேசியா வந்திருந்த சமயம் பேசிய பல கூட்டங்களில் பெருமையாகக் குறிப்பிட்டார்கள்.
பாரதத் தமிழ் மண்ணில் ஆட்சி செலுத்திய சோழப் பேரரசு ஒன்பதாம் நூற்றாண்டில் அலை கடலுக்கப்பாலும் சென்று மலேசியாவில் கடாரம் வரை தமிழ்க் கலையை வளர்த்த பெருமையை வரலாறு வழி நாம் அறிவோம். அந்த மரபை ஒட்டி நாட்டுக்கோட்டை நகரத்தார்களும் இன்றைக்கு சுமார் 185 ஆண்டுகளுக்கு முன்பு 1810ல் மலாக்கா நகருக்கு குடியேறினார்கள் என்றும், இந்த நாட்டின் முதலாவது இந்து ஆலயமான 350 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட பொய்யாத விநாயகர் கோயிலை அவர்கள் போற்றி வழிபட்டு வர்த்தகம் செய்து வந்தனர் என்றும் சரித்திரம் வாயிலாக நாம் அறிய முடிகிறது.
பினாங்கில் கி.பி. 1818-ஆம் ஆண்டு ஆரம்பத்தில் தொழில் துவங்கிய நகரத்தார்கள், ஆறுபடை நாயகனான அருள்பொங்கும் தண்டாயுதபாணிக்கு, 9-8-1850ல் பினாங்கு வீதியில் 138, எண் கொண்ட கோவில் வீட்டில் தண்டாயுதபாணியின் தங்க உற்சவ மூர்த்தியை நிறுவி வழிபட்டு வந்தனர். இது மிகவும் ஆற்றல் மிக்க அருட்த்தெய்வமாகக் கருதப்படுகிறது.
அதன் பின்னர் பினாங்கு வாட்டர்பால் ரோட்டில் 5 ஏக்கர் பரப்பளவு உள்ள நிலம் ஒன்றை 1854ல் வாங்கி 12-12-1857ல் தண்ணீர்மலை தண்டாயுதபாணி ஆலயம் அமைத்து குடமுழுக்கு செய்ததாக வரலாற்றுச் சான்றுகளின் வழி அறிகிறோம்.
மேற்கண்ட இடத்தில் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிக்கு ஆகம முறைப்படி அழகிய திருக்கோயில் கட்டுவதற்குரிய வரை படத்தை வரைந்தனுப்புமாறு பினாங்கு நாட்டுக்கோட்டை நகரத்தார்கள், நாட்டுக்கோட்டைச் செட்டியார்களின் வேதாந்தத் திருமடமான கோவிலூர் ஆதீனத் தலைவராக விளங்கிய ஞானப் பேரொளி தவத்திரு வீரப்ப சுவாமிகளுக்கு மடல் வழி வேண்டுகோள் விடுத்து, அதற்கேற்க அன்னார் வரைந்தனுப்பிய வரைபடப்படியே தண்ணீர்மலைத் தண்டாயுதபாணி ஆலயம் அன்று அழகாகக் கட்டப்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டுக்கோட்டை நகரத்தார் பினாங்கு தண்டாயுதபாணி கோவிலை தமிழகம் காரைக்குடியிலிருந்து வந்த கட்டிடக் கலைஞர்கள் சிற்பிகளைக் கொண்டு, செட்டிநாட்டு நகரத்தார் கட்டிடக் கலைச்சாயலில் கட்டினார்கள். இக்கோயில் அமைப்பு முறை சொக்கட்டான் காய் ஆட்டக் கட்டம்போல (நீண்ட நேர் கோடு குறுக்கு நேர் கோடு) கூட்டல் குறி அமைப்பில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
கருவறை கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அதனுள் பழநி மலையில் இருப்பதைப்போல பார்வதி பாலன், பத்தருக்குற்றவன், பாலதண்டாயுதன், தண்ணருட் சீலன், தண்ணீர்மலையாண்டவன் நின்ற கோலத்தில் தங்கி இருக்கிறான். அவனது நின்ற அழகுக் கோலம் நம் அகத்தைக் கவரவல்லது. இந்தக் கோவில் கருவறை அர்த்த மண்டபம் உட்பிரகாரம், வெளிப்பிரகாரம் நந்தவனம், பின்புறம் தென்னந்தோப்பு ஆகிய அமைப்பில், பினாங்கில் மிகப்பெரிய இந்துக் கோவிலாகத் திகழ்கின்றது.
தண்ணீர்மலைக் கோயிலின் மேற்புறம் உள்ளகுன்றும் பூங்காவும் குறிஞ்சிநிலக் குமரனைக் காட்டும். இயற்கையின் எழில் கொழிக்கும் இடத்தில் கோயில் கொண்டுள்ள தண்ணீர்மலை அடிவாரக் கோயிலும் மலைக் கோயிலும் பழநியை நினைவுபடுத்துகின்றன.
தண்ணீர்மலைத் தண்டாயுதபாணியின் வலது தொடையின் மேல் அழகான மச்சம் ஒன்றுள்ளது. மரகதம் பதித்தாற்போலத் திகழும் இந்த மச்சத்தை தண்ணீர்மலையானின் அளவற்ற அருட்சக்தியின் அடையாளமாகக் கருதுவர். நின்ற திருக்கோலத்தில் உள்ள திருமுருகப் பெருமானின் இத்திருவுருவம் காண்பார் கண்ணையும் கருத்தையும் ஒருங்கே கவர வல்லதாகும்.
இக்கோவிலின் சிறப்பு அம்சம், மண்டபங்கள் முழுவதும் பர்மாவிலிருந்து தருவிக்கப்பெற்ற தேக்கு மரத்தால் ஆனது. மண்டப மேல் பகுதியில் தேக்கு மரப்பலகையின் மீது பாரத தேசத்து வரலாற்றுச் சித்திரங்கள், இயற்கை வர்ணத்தில் வடித்து இருக்கிறார்கள், அடுத்த கீழ் வரிசையில் கீழ் உலகப் புகழ்பெற்ற இந்தியச் சித்திரக் கலைஞர் இரவி வர்மாவின் அழகிய சித்திரங்கள் கோவில் முழுதும் வைக்கப்பட்டுள்ளன.
செட்டி மகனே, தங்கக்கட்டி மணியே என்று நம் முன்னோர்கள் புகழ்ந்து பாடிய முருகப்பெருமானை ஏன் துறவுக் கோலத்தில் அமைத்து வழிபட்டார்கள் என்பதற்கு நல்ல கருத்துக்களும் நம்மிடையே உண்டு.
"திரை கடல் ஓடியும் திரவியம் தேடு" என்று ஔவையாரின் முதுமொழிக்கொப்ப நம் நகரத்தார்கள் தொலைதூரப் பயணம் மேற்கொள்ளும்பொழுது தங்கள் குடும்பத்தினை விட்டு தனியாகவே சென்று வரும் வழக்கமிருந்ததாலும், தொழில்துறை நடத்தி வாழும் பொழுது மனம் சலனமடையாமல் இருப்பதற்காகவும் தங்களைப்போல தாய் தந்தையாரை விட்டு தனியாக வந்து பழனி மலையில் தனிக் கோயில் கொண்டுள்ள தவக்கோலத் தண்டாயுதபாணியை தங்கள் எண்ணத்தில் வைத்து, எடுத்து வந்து, ஆலயம் கட்டி ஆராதித்து வந்தனர். அவனது அருளையே துணையாகக் கருதும் தாங்கள் அயல் நாட்டிலிருந்து தாய்நாட்டுக்கு எழுதும் கடிதங்களில், கடைசியாகத் தங்கள் கையெழுத்தைப் போடாமல், ஸ்ரீ தண்டாயுதபாணி துணை என்றே முடிப்பார்கள். இன்றும் இப்பழக்கம் நகரத்தார் கடிதங்களில் கையாளப்படுகிறது.
தண்டம் என்றால் கோல் அல்லது தடி என்பதாகும். பாணி என்றால் கை என்று பொருள். தண்டத்தை கையிலே ஆயுதமாக கொண்டிருப்பதால் தண்டாயுதபாணி என்று முருகப் பெருமானுக்கு பெயர் விளங்குகின்றது.
முருகக்கடவுள் வழிபாடு தமிழகத்தில் தொன்மையானது. பழனி மலை, மருத மலை, சென்னி மலை, வள்ளி மலை, விராலி மலை, சுவாமி மலை, கழுகு மலை திருத்தலங்களில் மூல மூர்த்தியாகப் பலகோலங்களில் தண்டாயுதபாணியே அமர்ந்திருக்கிறார். அதுபோல, இம்மலேசிய மண்ணில் முருகப் பெருமான் தண்ணீர்மலையிலே தண்டாயுதபாணியாக நின்ற கோலத்தில் அனைவருக்கும் அருட்பிரசாதம் தந்து காத்து வருகின்றார். தென் கிழக்கு ஆசியாவில் பினாங்கில்தான் முதல் தண்டாயுதபாணி கோவில் அமைந்ததாக சிறப்பித்துச் சொல்லப்படுகிறது. முருகப்பன், முத்தப்பன், குமரப்பன், தேனப்பன், பழனியப்பன், வேலாயுதம், சுப்பையா, சுப்பிரமணியன், சுவாமிநாதன், சிங்காரம், தண்ணீர்மலை என்று நகரத்தார்கள் தம் குழந்தைகளுக்கு திருமுருகன் நினைவாகவே பெயர் சூட்டி வந்திருக்கின்றார்கள்.
எல்லாம் வல்ல முருகன் எழுந்தருளியிருக்கின்ற ஆலயங்களில் எல்லாம் தைப்பூசம் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தைப்பூசம் பூச நட்சத்திரம் வரும் பௌர்ணமி நன்னாளாகும்.
இந்த நாளில் முருக பக்தர்கள் அனைவரும் முருகனுக்கு வேண்டிப் பிரார்த்தனை செய்வார்கள்.
தைப்பூசத்தின் சிறப்பை திருஞானசம்பந்தர்:
மைப்பூசும் ஒண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பூசு நீற்றான் கபாலிச்சரம் அமர்ந்தான்
நெய்ப்பூசும் ஒண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடும்
தைப்பூசம் காணாதே போதியோ பூம்பாவாய்.
... என்று பாடினார்.
தைப்பூசம் சிவபெருமானுக்கு உரிய விழாவாக இருப்பினும் குன்று தோறாடும் குமரனுக்கு கந்தக் கடம்பனுக்கே உரிய விழாவாக இன்று கொண்டாடப்படுகிறது. பக்தர்களின் குறைகளைக் களைந்து அருள்பாலிக்கின்ற புண்ணிய நாளாகவும் அன்புடன் காணிக்கையாகக் கொடுக்கின்ற பொருட்களையும், நேர்த்தி கடன்களையும் ஏற்று மனித குலத்தை உய்விக்க வந்த நன்னாளாகவும் தைப்பூசம் விளங்குகிறது.
தைப்பூசத் திருவிழா என்றால் நிச்சயம் காவடிகள் இடம்பெறும். காவடிகள் என்றால் கண்ணைக் கவரும் வண்ணக் காவடிகள், பால் காவடி, பன்னீர் காவடி, இளநீர் காவடி, கரும்புக் காவடி இப்படி இன்னும் எத்தனையோ வகைவகையான காவடிகள் திருவிழாவில் காணிக்கையாக எடுத்துவரப்படுகின்றன.
தைப்பூசத் திருவிழாவைக் காணவரும் இலட்சக்கணக்கான மக்களில் பல இனத்தவரும் கலந்து கொள்வது சிறப்பாகும். இனமத வேறுபாடு இன்றி இங்கே ஒன்று கூடுகிறார்கள். அவர்களின் நோக்கம் வேவ்வேறாக இருந்தாலும், தைப்பூசத்தன்று தண்ணீர்மலையான் சந்நிதியைத் தெரிந்தோ, தெரியாமலோ மிதிப்பவர்கள் புனிதம் அடைவார்கள் என்பது திண்ணம். மலேசிய அரசாங்கமும் தைப்பூச நாளைப் பொது விடுமுறையாகப் பிரகடனம் படுத்தியுள்ளார்கள்.
தன வணிகர்கள் என்ற சிறப்புப் பெயர் படைத்த நாட்டுக்கோட்டை செட்டியார்கள், தாம் கொண்டாடி கும்பிட்டு மகிழும் அருள்மிகு தண்டாயுதபாணிக்கு பினாங்கில் சிறப்பான விழாவாக தைப்பூசத் திருநாளை கொண்டாடி மகிழ்ந்து வருகின்றார்கள்.
பினாங்கில் தண்ணீர்மலையில் நடைபெறும் மூன்று நாள் தைப்பூசத் திருநாள் பழம் புகழ் மிக்கதும், வெளிநாட்டவர்கள் அதிகம் கலந்துகொள்ளும் தனிச்சிறப்பு வாய்ந்ததுமாகும். காரணம் நூறாண்டுகள் பழமைமிக்க வெள்ளி இரதத்தில் தண்ணீர் மலையான் வண்ணக் கோலத்தில் நகர் வலமாய் வந்து, பினாங்கு நகரின் முக்கிய சாலைகள் முழுவதும் நின்று, பக்தர்களின் காணிக்கை ஏற்று, அருள் பாலித்து, இலட்சக்கணக்கான சிதறு தேங்காய்கள் உடைபெற்று அதன் இளநீர்கழுவிய தெருப்பாதைகளின் வழியே சென்று தண்ணீர்மலை கோவிலை அடையும் காட்சி, மலையகத்தில் தனிச்சிறப்புமிக்க, இந்துப் பெருவிழாக்களில் ஒன்றாகப் போற்றப்படுகின்றது.
ஏற்கனவே சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு அருள்மிகு தண்டாயுதபாணிக்கு 5 நாட்கள் வரை தைப்பூசத் திருவிழா பெருங் கோலாகலமாக நடைபெற்றதாம். பிறகு அது 3 நாட்களாகக் குறைக்கப் பெற்றுத் தற்போதைய முறைப்படி சிறப்பாக நடைபெற்று வருகிறது. அந்தக் காலத்தில் தைப்பூச விழாவில் வழங்கும் அன்னதானத்துக்குத் தேவையான அரிசி, பருப்பு, நெய் வகையராக்களும் பரங்கிக்காய், பூசணிக்காய்களும் மெசுரா நிறுவனக் கப்பல் மூலம் சுமை கட்டணமின்றி தமிழகமிருந்து இலவசமாக வரவழைக்கப்பெற்றதாம்.
இறைவனுக்கு விழாக்கள் நடத்துவதும் அவனடியார்களுக்கு அன்னமிடுவதுமே இந்த உலகில் பிறந்தவர்கள் பெறும் பயன் என்பதை ஏற்பவர்கள் சைவ சித்தாந்திகள். அவர்களை சார்ந்தவர்கள் நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள். ஆகவே அவர்கள் கொண்டாடும் விழாக்களிலும் ஏழைகளுக்கு அன்னமிடுகிறார்கள்.
"செட்டி பூசம்" என்று சிறப்பாக சொல்லப்பெறும் தைப்பூச விழாவின் மூன்றாம் நாள் மாலை மின் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி இரதம் இரவு முழுவதும் பினாங்கு நகரை வலம் வரும் காட்சி பெருஞ் சிறப்பு வாய்ந்ததாகும்.
பினாங்கு வெள்ளி இரதம் வலம் வரும் விழாவுக்கு சென்ற 1994-ஆம் ஆண்டு நூற்றாண்டாகும். கடந்த நூறு ஆண்டுகளாக பவனி வரும் இந்த வெள்ளி இரதத்தின் வரலாறு சரித்திரப் பெருமை வாய்ந்தது. கடந்த 1894-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழ் நாட்டில், செட்டி நாட்டுப் பகுதியான காரைக்குடி நகரிலிருந்து இந்த வெள்ளி இரதம் செய்யப்பட்டு "எஸ். எஸ். ரோனா" என்ற கப்பலில் அனுப்பி வைக்கப்பட்டு பினாங்கு நகர் வந்து இரதம் பூட்டப்பெற்று இன்று வரை எந்தப் பழுதுமில்லாமல் சிறப்பாக வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்த இரதத்தோடு உபரிப் பாகங்களாக வந்தது, 4 சக்கரங்களும், மூக்கணைப் பகுதியும் தான். சென்ற ஆண்டுதான் (1994ல்) புதுச் சக்கரங்களை மாற்றினார்கள். பழைய சக்கரங்கள் 99 ஆண்டுகள் உபயோகப் படுத்தப்பட்டுள்ளன.
இந்த இரதத்தின் உயரம் 25 அடி, அகலம், அதாவது சுவாமி பீடமுள்ள பகுதி 10 1/2 அடி. சக்கரம் தவிர இரதத்தின் முழுப் பகுதியும் கனமான வெள்ளிக் கவசத்தால் (தகடுகளால்) பூட்டப்பெற்றது. நூறாண்டுகளாக எந்தவிதப் பெரிய பழுதுபார்ப்பும் செய்யப்படவில்லை. அது அவ்வளவு உறுதியானதாகும். ஒவ்வொரு வருடமும் இந்த இரதம் மெருகு மட்டும் போட்டு துடைத்து ஒளி பெறுகின்றது.
இத்தகைய பெருமை வாய்ந்த அருள்தரும் தண்ணீர்மலையானின் வெள்ளி இரத பவனியில் நடந்த சில சம்பவங்களில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், 1941-ஆம் வருட ஆரம்பத்தில் பினாங்கு டத்தோ கிராமட் சாலை சிவன் கோயிலுக்கு அருகில் வெள்ளி இரதம் வரும் சமயம் வீதியிலுள்ள மின்சாரக் கம்பி தாக்கி இரத கலசம் கீழே விழுந்து விட்டதாகவும், அதன் அறிகுறியாக அதே ஆண்டு ஜப்பானியர் 2வது உலக மகாயுத்தம் வந்து பினாங்கு பாதிப்புற்றதாகவும், பினாங்கு ஸ்திரீட்டில், சுவாமிகள் இருந்த பகுதி தவிர பல இடங்கள் சேதமுற்றதாகவும், இதுபோல ஊர்வலத்தில் சில தடைகள் ஏற்பட்ட காலங்களில் சில அசம்பாவிதங்கள் பினாங்கில் நடைபெற்றிருக்கின்றன என்றும் பினாங்கில் தற்சமயம் இருந்து வரும் பெரியவர்கள் தங்கள் அனுபவத்தை கூறுகின்றார்கள்.
நம் முன்னோர்கள் நமக்கு வழங்கிச் சென்ற சமய விழாக்களையும் சமய போதனைகளையும் நாம் முறையோடு பின்பற்றி வருவதால் அமைதியுடன் கூடிய வாழ்வியல் முன்னேற்றம் பெருகி வருவதை நாம் ஒவ்வொருவரும் நன்கு உணரலாம்.
தொன்மைமிக்க நம் சமய விழாக்கள் மக்கள் மனதில் தெய்வீக இன்ப உணர்வுகளையும், வாழ்வின் நம்பிக்கைகளையும், பெருக்க வழி வகுப்பது, மனிதனின் முன்னேற்றத்துக்கு உறுதுணையானது. கடந்த பல வருடங்களாக வெள்ளி இரதத்தை பின் தொடர்ந்து பல ஆயிரக்கணக்கான மக்கள் நடந்து வருவதற்கும், பல இலட்சக்கணக்கில் தேங்காய்கள் உடைப்பதற்கும் இதுவே காரணம் என்பதை நம்மில் அனைவராலும் நன்கு உணர முடிகின்றது.
பினாங்கு நகரில் தைப்பூச திருநாளுக்கு அடுத்தப்படியாக சிறப்பாக நடைபெறும் கந்தர் சஷ்டி திருநாள், தண்ணீர்மலையானின் தனிப்பெறும் விழாக்களிலே சிறப்பு வாய்ந்தது.
இந்த கந்தர் சஷ்டி விழாவின் ஏழு நாட்கள் இரவிலும் அருள்மிகு தண்ணீர்மலையான் முறையே பால சுப்பிரமணியன், சுவாமிநாதன், வேலன், வேடன், விருத்தன், தெய்வானை திருமணம், வள்ளியம்மை திருமணம் ஆகிய ஏழு திருவேடங்களில் காட்சி தந்து மக்களுக்கு அருள்புரிகின்றார். திருக்கல்யாண விழாவுடன் கூடிய இந்த ஏழு நாட்களில் அவர் வழங்கும் அருள்காட்சிகள் நம் மனதை விட்டு அகலாத தெய்வீகத் திருக்காட்சிகளாகும். எம்பெருமான் முருகனை எண்ணி எண்ணி ஏங்கி வணங்கி வருவோர்க்கும் வாழ்க்கையில் வளம் பெறக் காத்துக்கிடப்போருக்கும் அருட்காட்சி தந்து ஆசீர்வதிக்கும் நல்விழா கந்தர் சஷ்டித் திருநாளாகும்.
ஒவ்வொரு தமிழ் ஆண்டுப் பிறப்பான சித்திரை முதல் நாளில் சித்திரைப் பூசை விழா அதை அடுத்து சித்திர பௌர்ணமி பூசை விழாவும் (மகேஸ்வர பூசை) சிறப்பாக நடைபெற்று எல்லோருக்கும் அன்னதானம் வழங்கப்பெறுகிறது. அடுத்து ஆடி அமாவாசையிலும் மகேஸ்வர பூசை செய்யப்பெற்று அன்னதானம் வழங்கப்பெறுகிறது.
கார்த்திகை மாதத்தில் வரும் பெரிய கார்த்திகை அன்று மகேஸ்வர பூசை நடத்தி பெருமைமிக்க தண்டாயுதபாணியின் கார்த்திகைப் பூசை விழா கோவில் முழுவதும் எண்ணெய் விளக்குகளால் தீப அலங்காரம் செய்யப்பட்டு தீபத் திருவிழாவாக சிறப்புப் பூசை, அன்னதானம் முதலியவற்றுடன் சொக்கப்பனும் கொழுத்தப்பெற்று திருவண்ணாமலை திருவிழாவை நினைவூட்டும் வண்ணம் தண்ணீர்மலையில் நிகழ்கிற திருநாளாகும். கார்த்திகை மாதத்தில் வரும் சோமவாரங்களில் சங்கு நீராட்டும் சண்முக அர்ச்சனையும் நடைபெறும்.
காலையில் காலசந்தி பூசையும், மதியம் உச்சிக்கால பூசையும், மாலையில் சாயரட்டை பூசையும், இரவு அர்த்தசாம பூசைகளும் நாள் வழிபாடுகளாக நடைபெறுகின்றன.
இந்தக் கோயிலைக் கொண்டு நடத்தல் கோயில் சொத்துக்களைப் பராமரித்தல் போன்ற செயல்களை ஏற்று நடத்த 10-10-60ல் பதிவு செய்யப்பெற்ற பினாங்கு நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் கோயில்களின் அறங்காவலர்கள் நியமிக்கப்பெற்றனர். தைப்பூச விழாவுக்கு முன்பாக மேற்படி கோயிலைச் சேர்ந்த உறுப்பினர்கள், தைப்பூச விழாவுக்காக பினாங்குத் தெரு, 138-ஆம் எண் கோயில் வீட்டில் ஒன்று கூடி அவரவர்கள் தொழில் செய்யும் கடை அல்லது நிறுவனத்துக்குள்ள கடை முதல் இருப்பு இலாபம் மேம்பணம் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து ரிங்கிட் ஆயிரத்துக்கு ரிங்கிட் ஒன்று வீதம் மகமை (அறக்கொடை) எழுத்துவார்கள். அந்த மகமைப் பணத்தை பின்னொரு நல்ல நாளில் கோயில் நடப்பு அறங்காவலரிடம் கொடுத்துவிடுவார்கள்.
#தலவரலாறு:
கி.பி. 1810 -இல் நகரத்தார் நிதி நிறுவனங்கள் நடத்தி வந்தனர். இவர்கள் தங்களுக்கென தனி பாலதண்டாயுதபாணி ஆலயத்தை எளிமையாகத் தொடங்கி கி.பி. 1854- இல் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் தற்போதைய தண்ணீர்மலை அடிவாரத்தில் தனி ஆலயத்தை எழுப்பினர். இது தவிர, இவர்கள் காலத்தில் தண்ணீர்மலை அடிவாரத்தில் வழிபட்டு வந்த வேல், தண்ணீர்மலையின் உச்சியில் அமைந்து, ஆன்மிகப் புகழைப் பரவச் செய்து வருகிறது.
தொடக்க காலத்தில் அமைச்சர்களுக்கு இணையாகப் புகழ்பெற்று வந்த செல்வந்தரான ஆறுமுகம் பிள்ளை, தண்ணீர் மலை முருகன் ஆலயத்திற்குத் திருப்பணி செய்துள்ளார். இதே போல, பினாங்கு மலையுச்சியின் கொடிமலை முருகன் ஆலயமும் இவரால் அமைக்கப்பட்டது.
என்றாலும், தண்ணீர்மலை முருகன், கி.பி. 1991 -ஆம் ஆண்டிற்குப் பிறகே வெளியுலகிற்குப் பெரிய அளவில் தெரியவந்தது. அதற்கு முன்பு, பாலதண்டாயுதபாணி இளைஞர் குழுவின் மூலம் நில அளவையாளர் குவனராஜீ, டத்தோ இராஜ சிங்கம் மூலமாக குடமுழுக்கு செய்யும் பணி தொடங்கியது. இதற்கு இந்து அறப்பணி வாரியமும், புதிய கோயில் எழுப்ப முன்வந்தது. இதற்கு இம்மாநில துணை முதல்வர் டாக்டர். இராமசாமியும் உதவிபுரிந்தார்.
மலையின் இடைப்பகுதியில் இருந்த முருகன் ஆலயம், புதிய முயற்சியின் பயனால், மலையுச்சி தேர்வு செய்யப்பட்டது. சமன்படுத்தப்பட்ட அங்கே 513 படிகளைக் கொண்ட பிரம்மாண்ட ஆலயம், சுமார் 400 அடி உயரத்தில் ஏழுநிலை ராஜகோபுரமும் கொண்டு அமைக்கப்பட்டது. இம்மலையின் இடைப்பகுதியில் ஐயப்பன் ஆலயமும் அண்மைக் காலத்தில் அமைக்கப்பட்டது.
எளிதாக மலையேற சிறுசிறு படிகள் அமைந்துள்ளன. இடையிடையே தண்ணீர் ஊற்றுகள் ஓடிக் கொண்டிருக்கின்றது. மலையடிவாரத்தில் கணேசர் ஆலயம் நம்மை வரவேற்கிறது. பினாங்கில் வாழும் தமிழர்களின் காவல் தெய்வமாகவும் , தமிழர்களின் இஷ்டதெய்வமாகவும் விளங்குவது இந்த முருகனின் சிறப்பை உணர்த்துகிறது.
தண்ணீர்மலை
பினாங்கு நகரின் உயரமான மலையே தண்ணீர் மலையாகும். தண்ணீர் ஊற்றுகள் நிறைத்துள்ளதால் இம்மலைக்கு இப்பெயர் உண்டானது. உச்சியில் உள்ள முருகப்பெருமான் நின்ற கோலத்தில் எழிலான வடிவில் திருச்செந்தூர் முருகனை நினைவுபடுத்தும் விதமாக அமைந்துள்ளார்.
மலேசியாவில் தைப்பூசத்தன்று இக்கோயிலுக்கு கோலாலம்பூர் கூட்டரசு, சிலாங்கூர், பேராக், பினாங்கு, ஜொகூர் ஆகிய மாநிலத்தற்கு அரசு பொது விடுமுறை அளித்துள்ளது. இசுலாமிய நாட்டில் அமைந்துள்ள அரசுகள், இந்து சமயத்திற்குத் தரும் மரியாதையாக இது போற்றப்படுகிறது. தைப்பூசத்தன்று பல்லாயிரக்கணக்கான மக்கள், ஜாதி மத பேதமின்றி கூடி வழிபடுவது, கண்கொள்ளாக் காட்சியாகும்.
அமைவிடம்:
மலேசிய நாட்டின் தலைநகரான கோலாலம்பூர் நகரில் இருந்து வடமேற்கே 295 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. நல்ல சாலை வசதி உள்ளது. பன்னாட்டு வானூர்தி நிலையமும் உள்ளது.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment