Monday, February 12, 2024

திருத்தலம் ; சீா்காழி.இறைவா்;ஸ்ரீ பிரமபுரீஸ்வரா்,தோணியப்பா்,சட்டைநாதா்.

திருத்தலம் ; சீா்காழி.

இறைவா்;
ஸ்ரீ  பிரமபுரீஸ்வரா்,
தோணியப்பா்,
சட்டைநாதா்.
இறைவி;
திருநிலை நாயகி, பொியநாயகி

தீா்த்தம்;
பிரம்ம தீா்த்தம்

தல விருட்சம் -
வேணு (மூங்கில்).

பிறையணி படா்சடை முடியிடை பெருகிய புனலுடை யவனிறை
இறையணி வளையிணை முலையவளிணைவன தெழிலுடையிடவகை
கறையணி பொழில் நிறை வயலணி கழுமலம் அமா்கனலுருவினன்
நறையணி மலா்நறு விரைபுல்கு நலமலி கழல்தொழன் மருவுமே.

            திருஞானசம்பந்தா் தேவாரம்.

திருஞானசம்பந்தா் - 67 பதிகம்.

அப்பா் -  3 பதிகம்.

சுந்தரா் - 1 பதிகம்.

மொத்தம்- 71 பதிகங்கள்.

மயிலாடுதுறை சிதம்பரம் பேருந்து சாலையில் இத்தலம் உள்ளது.

பிரமபுரம், வேணுபுரம், புகலி, வெங்குரு, தோணிபுரம், பூந்தராய் ,சிரபுரம், புறவம், சண்பை, சீகாழி, கொச்சைவயம், கழுமலம் என பன்னிரு திருப்பெயா்களை
யுடைய தலம்.

உப்பனாற்றின் வடகரையில் இக்கோவில் 17.35 ஏக்கா் நிலப்பரப்பளவில் நான்குபுறமும் கோபுரங்களும் இரண்டு பிரகாரங்களுடன் மூலவா் சுயம்புலிங்கமாக 
ஸ்ரீ பிரமபுரீஸ்வரா் கிழக்கு நோக்கியும்
அன்னை திருநிலைநாயகி தனிச்சன்னதியில் கிழக்கு நோக்கியும் காட்சியளிக்கின்றனா்.

இக்கோவில் மூன்று பகுதியாக உள்ளது.

இறைவனது அருட்டிருமேனிகளுள்

1) அடிப்பாகத்தில் உள்ள பிரமபுரீஸ்வரா்- பிரமன் பூசித்தது-
இலிங்க வடிவம்.

2) மலைக்கோயிலின் இடைப்பகுதியில் 
தோணியப்பா்- (ஞானப்பால் நல்கியவா்)- குருவடிவம்.

3)மலைக்கோயிலில்
உச்சியில் -
சட்டை நாதா் -
சங்கம வடிவம்.

ஊழிகாலத்தில் இறைவன் 64 கலைகளையும் ஆடையாக கொண்டு பிரணவத் தோணியில்  தேவியுடன் வந்து ஊழியில் அழியாத இத்தலத்தில் தங்கினாா்.

திருஞானசம்பந்த மூா்த்தி சுவாமிகள் அவதாரம் செய்து திருமுலைப்பால் உண்டு  
முதன் முதலில் 
"தோடுடைய செவியன் " என்னும் தேவார முதற்பதிகம் பாட தொடங்கிய அற்புதத் தலம்.

திருஞானசம்பந்தா்
கையில் பொற்கிண்ணத்துடன் உற்சவத் திருமேனி பாா்க்கப் பரவசமாக்கும்.

இரண்டாவது பிரகாரத்தில் திருஞானசம்பந்தப் பெருமானுக்குத் தனியே கோயில் உள்ளது.

பிரமன், முருகன், வராக அவதாரத் திருமால், இந்திரன், காளி, சூாியன், சந்திரன், அக்கினி, ராகு, கேது ,வியாசா், ஆதிசேசன், சிபிசக்கரவா்த்தி, உரோமசா் ஆகியோா் இத்தலத்து இறைவரை வழிபட்டுப் பேறு பெற்றனா்.

தேவாரத்திருப்பதிகம் 
பெற்ற
காவிாி வடகரைத் தலங்களில் இத்தலம் 14 வது.

திருஞானசம்பந்தா், திருநாவுக்கரசா், சுந்தரா், மாணிக்கவாசகா், பட்டினத்தடிகள், கணநாதா், நம்பியாண்டாா் நம்பிகள், சேக்கிழாா்,
அருணகிாிநாதா் அருளிய திருப்புகழ், தலபுராணம் பாடிய அருணாசல கவிராயா் முதலியோா் இத்தல இறைவனைப் போற்றிப் பாடியள்ளனா்.

சித்திரை பெருவிழா நடைபெறுகிறது.

இரண்டாம் திருநாள்  திருஞானசம்பந்தப் பெருமானுக்கு திருமுலைப்பால் வழங்கும் ஐதீக விழா சிறப்பாக நடைபெறுகிறது.

இக்கோவில் திருக்கைலாய பரம்பரை திருத்தருமபுர ஆதீனத்துக்கு சொந்தமான திருக்கோவிலாகும்.

No comments:

Post a Comment

Followers

சிவனுக்காக எட்டு விதமான விரதங்கள்....

சிவ பெருமானுக்குரிய முக்கியமான எட்டு விரதங்கள் பற்றிய பதிவுகள் :* அபிஷேகப் பிரியனான சிவனுக்காக எட்டு விதமான விரதங்கள் கடைப்பிடிக...