ரதசப்தமி !
சௌரம் என்பது சூரியனை வழிபடும் சமயமாகும். அந்த சௌரத்தில் மிகவும் முக்கியமான விரதம், ரத சப்தமி ! தை அமாவாசையை அடுத்த ஏழாவது நாள் இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.
உலகிற்கு ஒளி தரும் சூரியனோ அம்மையின் வலக்கண். அம்மையை வணங்கிய தினமும் ஒளி பெறுகிறான் ஆதவன். மார்த்தாண்ட பைரவ ஆராத்யா என்ற நாமம் சூரியன் அம்பாளை ஆராதிப்பதாக சொல்கிறது.
அம்பிகை ஆயிரம் கோடி சூர்ய ப்ரகாசத்துடன் ஜொலிப்பவள். எனவே, " *உத்யத்பானு ஸஹஸ்ராபா* " என்று அழைப்படுகிறாள். உதய சூரியன் உலகின் இருளை ஒட்டுவதுபோல அம்பிகை அஞ்ஞான இருளை ஒட்டுகிறாள். எனவே, *உதிக்கின்ற செங்கதிர்* என்று பட்டர் பாடினார். சூரியன் உதயமானவுடன் நடுக்கத்தைத் தரும் பனி அகன்று போகிறது; அதுபோல அம்பிகையின் காட்சியினால் நடுக்கத்தைத் தரும் தாபத்திரயங்கள் ஒழிகின்றன.
ஸமுத்யத்ஸ ஹஸ்ரார்க பிம்பாய வக்த்ராம்
ஸ்வபாஸைவ ஸிந்தூரி தாஜாண்டகோடிம் I
தனுர்பாண பாசாங்குசான் தாரயந்தீம்
ஸ்மரந்த:ஸ்மரம் வாயி ஸம்மோஹயேயு: II
*பொருள் :*
உதித்து வரும் ஆயிரமாயிரம் சூர்ய பிம்பம் போன்று ஒளிரும் முகமுடையவளும், தனது ஒளியினால் சிவக்கச்செய்யப்பட்ட பிரம்மான்ட கோடியையுடையவளும், வில், பாணம், பாசம், அங்குசம் இவற்றையும் தரிப்பவளுமான உன்னை தியானிப்பவர் மன்மதனையும் மோஹிக்கச்செய்வர்.
ரதசப்தமி நாளில் செய்யப்படும் தர்மத்திற்கு பலமடங்கு புண்ணியம் உண்டு. இந்த நாளில் தொடங்கும் தொழில் பெருகும். பெண்கள் உயர்நிலையை அடைவர். கணவனை இழந்தவர்கள் இந்த விரதம் அனுஷ்டித்தால் அடுத்து வரும் பிறவிகளில் இந்த நிலை ஏற்படாது என்கின்றன புராணங்கள். இந்த நாள் தியானம், யோகா செய்ய சிறந்தது. சூரிய உதயத்தின் போது குளித்து விரதம் அனுஷ்டித்தால் செல்வந்தர் ஆக உயர்வார்கள் என்கின்றது புராணம்.
சூரிய நமஸ்காரம்
1. ஓம் மித்ராய நம :
2. ஓம் ரவயே நம :
3. ஓம் சூர்யாய நம :
4. ஓம் பானவே நம :
5. ஓம் ககாய நம :
6. ஓம் பூஷ்ணே நம :
7. ஓம் ஹிரண்ய கர்ப்பாய நம :
8. ஓம் மரீசயே நம :
9. ஓம் ஆதித்யாய நம :
10. ஓம் சவித்ரே நம :
11. ஓம் அர்க்காய நம :
12. ஓம் பாஸ்கராய நம :
ஓம் ஆதித்யாதி நவக்ரஹ தேவதாப்யோ நம :
காலையில் சூரியன் இருக்கும் கிழக்கு திசையினை நோக்கி இந்த 12 மந்திரங்களையும் கூறி நமஸ்காரம் செய்ய வேண்டும்.
சூரியபகவானுக்கு சர்க்கரைப் பொங்கலும் வடையும் படைத்து வழிபட வேண்டும். இந்த வழிபாட்டால் ஆரோக்கியமும், மாங்கல்ய பாக்கியமும் நிலைத்திருக்கும் என்பது ஐதீகம்.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்
No comments:
Post a Comment