Sunday, March 10, 2024

நாகைக்கும் சிவராத்திரிக்குமான தொடர்பு - நாகையில் அமைந்துள்ள பன்னிரு சிவாலயங்கள்

நாகைக்கும் சிவராத்திரிக்குமான தொடர்பு -  நாகையில் அமைந்துள்ள பன்னிரு சிவாலயங்கள்
நாகர்களின் தலைவன் ஆதிசேஷன் மஹா சிவராத்தியன்று, இரவு முழுவதும், நான்கு காலங்களில் சிவன் கோயில்களில் வழிபட்டு, பேறு பெற்றான் என்பது ஐதீகம். அதன்படி குடந்தை கீழ்கோட்டம் எனும், கும்பகோணம் நாகேசுவரஸ்வாமி கோயிலில், முதல் காலத்திலும், திருநாகேஸ்வரம் நாகநாதஸ்வாமி கோயிலில், இரண்டாவது காலத்திலும், திருப்பாம்புரத்தில், மூன்றாவது காலத்திலும், இறுதியாக நாகை காரோணத்தில், நான்காவது காலத்தில் ஈசனை வழிபட்டு, தரிசனம் பெற்றான். எனவே இவ்வூருக்கு நாகை என பெயர் பெற்றது.

காசிக்கு இணையாகக் கருதப்படும் சிவராஜதானி ஷேத்திரம் எனக் குறிப்பிடப்படும் நாகையில், காயாரோகணசுவாமி கோயிலை சுற்றியுள்ள 12 சிவாலயங்களை மகா சிவராத்திரி நாளில் ஒருசேர தரிசனம் செய்வது ஆன்மிகச் சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறது. அவை முறையே பின்வருமாறு.

1. நாகைக்காரோணம் , காயாரோகணசுவாமி கோயில் (நீலாயதாட்சி அம்மன் கோயில்)

2. அமரரேந்திரேஸ்வரம் , அமரநந்தீஸ்வரர் கோயில் 
(நீலா கீழ வீதி தேரடி அருகில்)

3. சுந்தரேஸ்வரம் , சொக்கநாதசுவாமி கோயில் (அக்கரைக்குளம் அருகில்)

4. ஆதிகாயாரோகணம் , சட்டையப்பர் கோயில் (எல்.ஐ.சி. கட்டடத்தின் எதிர் தெரு)

5. நாகேஷ்வரம் , நாகநாதசுவாமி கோயில் (நாகநாதர் சன்னதி - அன்சாரி ஆஸ்பத்திரி இருக்கும் தெரு)

6. அழகேசம் , அழகியநாதசுவாமி கோயில் (அழகர் சன்னதி - பெருமாள் கோவில் அருகே)

7. மத்யபுரீஸ்வரம் , நடுவதீஸ்வரர் கோயில் (தேசீய மேல்நிலைப்பள்ளி NHSS பின்புறம்)

8. விஸ்வநாதம் , வீரபத்திரசுவாமி கோயில் (நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் அருகில்)

9. அமிர்தகடேஸ்வரம் , கட்டியப்பர் கோயில் (குமரன் கோயிலுக்கு வடபுறம்)

10. கயிலாசம் , மலையீஸ்வரர் கோயில் (நீலா தெற்கு மட வளாகம்)

11. காசிவிஸ்வநாதம், 
காசி விஸ்வநாதர் கோயில் (நீலாயதாட்சி அம்மன் கோயில் தென்புறம்)

12. அகஸ்தீஸ்வரம் , அகஸ்தீஸ்வர சுவாமி கோயில் (வெளிப்பாளையம் சிவன் கோயில்)

சிவராத்திரி நன் நாளில் பன்னிரு சிவாலயங்களை தரிசித்து ஈசன் அருள் பெறுவோம். நன்றி சிவார்பணம் 
ஓம் நமசிவாய

No comments:

Post a Comment

Followers

மஹா சிவராத்திரியும் வில்வ இலை அர்ச்சனையும்..

ஏழு ஜென்ம பாவத்தையும் தீர்த்துவைக்கும் வில்வ இலை அர்ச்சனை பற்றிய பகிர்வுகள் : உலகில் உள்ள ஆன்மாக்களின் பாவங்களைப் போக்கவல்லவரான ...