Thursday, March 14, 2024

காரடையான்_நோன்பும் அதன் மகிமையும்.கணவன்_ஆயுள் அதிகரிக்க மகத்தான விரதம்.

காரடையான்_நோன்பும் அதன் மகிமையும்.
⚜️🥀💃#கணவன்_ஆயுள் அதிகரிக்க மகத்தான விரதம் - சத்தியவானின் உயிரை சாவித்திரி எப்படி மீட்டார்

🙇#சத்தியவானின் உயிரை எமனிடமிருந்து மீட்ட சாவித்திரியை நினைத்து பெண்கள் மேற்கொள்ளும் மிகவும் மகத்தான விரதம் தான் காரடையான் நோன்பு. திருமணமான பெண்கள் கணவனின் ஆயுள் அதிகரிக்க வேண்டும் என்றும், திருமணம் ஆகாத இளம் பெண்கள் நல்ல கணவன் அமைய வேண்டும் என சாவித்திரியை நினைத்து விரதமிருக்கின்றனர்.
    
🔥#காரடையான் நோன்பு சத்யவானின் உயிரை எமனிடம் இருந்து மீட்ட சாவித்திரியை நினைத்து அனுஷ்டிக்கப்படும் விரதமாகும் இந்த விரதம் தன் கணவன் தீர்க்காயுளுடன் இருக்க வேண்டும் என்பதற்காக திருமணமான பெண்கள் விரதம் இருப்பது வழக்கம்.

🙇💃#சத்தியவானை மீட்ட சாவித்திரியின் கதை
மந்திரதேசத்தை ஆட்சி செய்தவர் மன்னர் அசுவபதி. இவரது மகள் சாவித்திரி மிகவும் சிறப்பாக நாட்டை ஆட்சி செய்த அஸ்வபதி தன் மகள் சாவித்திரிக்கு ஏற்ற மணமகனை தானே தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை வழங்கியிருந்தார். பருவ வயதை அடைந்த சாவித்திரி ஒருமுறை வனப்பகுதிக்குச் சென்றாள் அங்கு சத்தியவானைக் கண்டாள்.

🙇#சத்தியவானின் தந்தை சாளுவ தேசத்து மன்னன் துயமத்சேனன். இவர் மிகவும் சிறப்பாக ஆட்சி செய்தார் இருப்பினும் தன் வயது முதிர்வின் காரணமாக கண் பார்வை இழந்தார். அதைப் பயன்படுத்திக் கொண்ட எதிரிகள் அவரிடமிருந்து நாட்டை பறித்துக்கொண்டு சத்தியவான் மற்றும் அவரது பெற்றோரையும் காட்டிற்கு விரட்டிவிட்டனர்.

சத்தியவானுக்கு இழந்த நாட்டை மீட்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், பெற்றோரை விட்டு செல்ல மனம் இல்லாததால் பெற்றோருக்கு பணிவிடை செய்யும் பொருட்டு காட்டிலேயே வசித்து வந்தார்.

#சத்தியவான் குறித்து அறிந்துகொண்ட சாவித்திரி அவளை மணக்க விரும்பினார் அதுகுறித்து தந்தைய அசுவபதியிடம் தெரிவித்தார். அசுபதியும் மகள் சாவித்திரியின் விருப்பத்தை ஏற்றுக் கொண்டு சத்தியவானுக்கு திருமணம் செய்து வைத்தார்.

அரண்மனையில் பல பணிப்பெண்களை தனக்கு உதவியாக வைத்து வாழ்ந்த சாவித்திரி திருமணமான பின், பெண் கணவனுடன் சேர்ந்து வாழ்வது தானே நியாயம் என்பதால் அவள் சத்தியவானுடன் காட்டில் வசிக்க தொடங்கினார். காட்டில் பல்வேறு சிரமங்களை எதிர் கொண்டாலும் ,சத்தியவானுடன் மிகவும் மகிழ்ச்சியாகவே வாழ்ந்து வந்தாள். கணவனின் ஆயுள் காக்கும் பாக்கியத்திற்காக பல்வேறு விரதங்களைக் கடைப்பிடித்து வந்தார்

இருப்பினும் விதி யாரை விட்டது. ஒரு முறை சத்தியவான், சாவித்திரி இருவரும் காட்டிற்கு விறகுகளை சேகரித்து வர சென்றனர். நண்பகல் நேரம் என்பதால் வேலைக்கு நடுவே மிகவும் களைப்பாக இருப்பதால் சிறிது நேரம் மரத்தினடியில் அமர்ந்து ஓய்வு எடுத்தனர். 

😭#சத்தியவானின் ஜாதகப்படி ஆயுள் குறைவு என்பதால், எமதர்மன் தன் வேலையை செய்ய வந்தார். சாவித்திரியின் மடியில் தலைவைத்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்த சத்தியவானின் உயிரை எமதர்மன் வந்து பறித்து சென்றார். சாவித்திரி தனது கற்பு திறத்தால் எமதர்மன் வருவதை அறிந்து கொண்டாள். சத்தியவானின் உடலை தரையில் கிடத்திவிட்டு எமதர்மனைப் பின் தொடர்ந்தாள்.

இதைக் கண்டு அதிர்ந்த எமன், திரும்பி போய்விடு என சாவித்திரியை எச்சரித்தார். ஆனால் அவர் எதிர்பாராத வகையில் எமனின் காலில் விழுந்தாள் சாவித்திரி. ஒரு பெண் தன் காலில் விழுந்ததும் பெண் என்ற அளவில் அவளுக்கு ‘தீர்க்க சுமங்கலி பவ’ என வாழ்த்திவிட்டார். எமன் வாழ்த்திய பிறகு தான் புரிந்தது, உயிரைப் பறித்துக் கொண்டு சத்தியவானின் மனைவி என்று.

உடனே சாவித்திரி நீங்கள் வாழ்த்தியது உண்மையானால் அதன் படி வாழ எனக்கு அருள் புரியுங்கள். தான் பதிவிரதை என்பது உண்மையானால் என் கணவனின் உயிரைத் திருப்பித் தாருங்கள் என்றார். 

#சாவித்திரியின் புத்திசாலித்தனத்தை வியந்த எமதர்மன் ஒருவனின் இறப்புக்குப் பின் அவனுக்கு மீண்டும் வாழ்வு கிடையாது. அதனால் உனக்கு வேறு ஏதேனும் வரங்களைக் கேள் என்றார்.

#சமயோசிதமாக யோசித்த சாவித்திரி, “என் மாமனார், மாமியாருக்கு மீண்டும் கண் பார்வை கிடைக்க வேண்டும். அவர்கள் இழந்த நாட்டை திரும்பப் பெற வேண்டும். என் தந்தைக்கு ஆண் வாரிசு இல்லை என்பதால் அவருக்கு ஆண் பிள்ளை பிறக்க வேண்டும். எனக்கு 100 குழந்தைகள் வேண்டும்” என வேண்டினாள்.

சற்று யோசிக்காத எமன் நீ வேண்டிய வரங்களைத் தந்தோம் என்றார். 

எமனின் வரத்தை பயன்படுத்திக் கொண்ட சாவித்திரி, “எனக்கு நூறு குழந்தைகள் பிறக்க வேண்டும் என்றால் என் கணவன் உயிருடன் இருக்க வேண்டும் அல்லவா. அதனால் என் கணவரின் உயிரைத் திருப்பிக் கொடுங்கள்” என்று யாசித்தாள்.

#இதுவரை என்னை யாரும் பார்த்ததில்லை. உன் பதிவிரதை கற்பின் மகிமையால் என்னை நீ பார்த்தது மட்டுமின்றி, என்னுடன் வாதம் செய்து அதில் வெற்றியும் பெற்றுவிட்டாய். அதனால் நீ வேண்டிய வரங்கள் அனைத்தும் கிடைக்கட்டும் என்றார். 

மாசியும், பங்குனியும் சேரும் சமயத்தில் உன் கணவன் உயிர்பெறுவான் என்றார்.

இந்த உலகம் உள்ளளவும் உன்னை நினைத்து விரதமிருக்கும் பெண்களுக்கு உன்னைப் போல நீண்ட ஆயுள் கொண்ட கணவன் கிடைத்து, தம்பதியர் மனமொத்து நீடூடி வாழ்வார்கள் என்று அருள் புரிந்து அங்கிருந்து மறைந்தார்.

வரத்தைப் பெற்ற சாவித்திரி கணவனை காட்டில் விட்டுச் சென்ற இடத்திற்குத் திரும்பி வந்து தன் மடியில் கிடத்தினாள். சிறிது நேரத்தில் சத்தியவானின் உயிர் திரும்ப கிடைத்தது. தூக்கத்திலிருந்து கண் விழித்தது போல எழுந்த கணவனிடம் நடந்த விஷயத்தைக் கூறினாள்.

#காரடையான்_நோன்பு எப்போது?
தன் கணவனின் உயிரைப் பறித்துச் சென்ற எமனுடன் வாதாடி, கணவனின் உயிரை மீட்ட சாவித்திரியின் பதிவிரதத்தைப் போற்றும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் மாசி மற்றும் பங்குனி மாதம் சேரும் நன்னாளில் இந்த காரடையான் நோன்பை பெண்கள் அனுஷ்டித்து வருகின்றனர்.

#இந்தாண்டு 2024 மார்ச் 14ம் நாள் இந்த விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதால் சத்தியவானைப் போல நீடூடி வாழ்ந்து, தன் கணவன் நீண்ட மாங்கல்ய பாக்கியத்தை அருள வேண்டும் என பெண்கள் விரதத்தைக் கடைப்பிடிக்கின்றனர்.
ஓம்நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

சிவனுக்காக எட்டு விதமான விரதங்கள்....

சிவ பெருமானுக்குரிய முக்கியமான எட்டு விரதங்கள் பற்றிய பதிவுகள் :* அபிஷேகப் பிரியனான சிவனுக்காக எட்டு விதமான விரதங்கள் கடைப்பிடிக...