Wednesday, March 6, 2024

நள்ளிரவில் சிவன் ஆடும் நடனம்…



41.நள்ளிரவில் சிவன் ஆடும் நடனம்…

சங்கார தாண்டவம்
42.இடக்காலில் முயலகனை ஊன்றிய கோலத்தை எங்கு காணலாம்?

வெள்ளியம்பலம்(மதுரை)

43.மாலைவேளையில் இறைவன் 
மகிழ்ந்தாடும் திருநடனம்…

பிரதோஷநடனம் (புஜங்கலளிதம்)

44.நடராஜருக்குரிய விரத நாட்கள்….

திருவாதிரை, கார்த்திகை சோமவாரம்

45.நடராஜருக்குரிய திருவாதிரை பிரசாதம்….

களி.

46.திருச்சிராப்பள்ளியில் வீற்றிருக்கும் இறைவன்…

தாயுமானசுவாமி

47.பஞ்சபூத தலங்களில் வாயுத்தலம்….

காளஹஸ்தி

48.வண்டுவடிவில் இறைவனை பூஜித்த முனிவர்…

பிருங்கி

49.திருமூலர் எழுதிய திருமந்திரம் ….

திருமுறையாகும்

பத்தாம் திருமுறை

50.திருஞானசம்பந்தர் பொன் தாளம் பெற்ற தலம்…

திருக்கோலக்கா(தாளமுடையார் கோவில்) சீர்காழிக்கு அருகில் உள்ளது

51.விபூதி என்பதன் நேரடியான பொருள்…

மேலான செல்வம்

52.சுக்கிரதோஷ நிவர்த்திக்குரிய சிவத்தலம்…

கஞ்சனூர்

53.ஜோதிர்லிங்கத்தலங்கள் மொத்தம் எத்தனை?

12

54.மதுரையில் உள்ள சித்தரின் பெயர்….

சுந்தரானந்தர்

55.திருஞானசம்பந்தருக்கு திருமணம் நிகழ்ந்த தலம்…

ஆச்சாள்புரம்(திருப்பெருமணநல்லூர்)

56.. நாவுக்கரசரின்உடன்பிறந்த சகோதரி….

திலகவதி

57.. சுந்தரருடன் கைலாயம் சென்ற நாயனார்…

சேரமான் பெருமாள் நாயனார்

58.. “அப்பா! நான்வேண்டுவன கேட்டருள்புரியவேண்டும்’ என்ற அருளாளர்…

வள்ளலார்

59.மதுரையில் சைவசமயத்தை நிலைநாட்டிய சிவபக்தை……

மங்கையர்க்கரசியார்

60.மாணிக்கவாசகர் யாருடைய அவையில் அமைச்சராக இருந்தார்?

அரிமர்த்தனபாண்டியன்

61.திருநாவுக்கரசரால் சிவபக்தனாக மாறிய பல்லவமன்னன்

மகேந்திரபல்லவன்

62.சிவபெருமானின் ஐந்து முகங்களில் காக்கும் முகம் …

தத்புருஷ முகம்(கிழக்கு நோக்கிய முகம்)

63.சிவன் வீரச்செயல் நிகழ்த்திய தலங்கள் எத்தனை?

எட்டு

64.மகாசிவராத்திரி எந்நாளில் கொண்டாடப்படுகிறது?

மாசி தேய்பிறை சதுர்த்தசி

65.மகாசிவராத்திரியில் கோயிலில் எத்தனை கால
அபிஷேகம் நடக்கும்?

4 கால அபிஷேகம்

66.வாழ்விற்கு வேண்டிய நல்வினை பெற ஐந்தெழுத்தை
ஓதும்விதம்…..

நமசிவாய

67.முக்தி பெற்று சிவபதம் பெற நமசிவாயத்தை எப்படி
ஓத வேண்டும்?

சிவாயநம

68.சிவசின்னங்களாக போற்றப்படுபவை…

திருநீறு, ருத்ராட்சம், ஐந்தெழுந்து மந்திரம்
(நமசிவாய அல்லது சிவாயநம)

69.சிவனுக்குரிய உருவ, அருவ. அருவுருவ வழிபாட்டில்
லிங்கம் எவ்வகை?

அருவுருவம்

70.பன்னிரு ஜோதிலிங்கத் தலங்களில் தமிழகத்தில்
உள்ள தலம்….

ராமேஸ்வரம்

71.சிவவடிவங்களில் ஞானம் அருளும் சாந்தரூபம்…

தட்சிணாமூர்த்தி

72.கும்பாபிஷேகத்தை எத்தனை ஆண்டுக்கு ஒருமுறை
நடத்துவர்?

12

73.. குறும்பலா மரத்தை தலவிருட்சமாகக் கொண்ட
கோயில்…

குற்றாலம் குற்றாலநாதர் கோயில்

74.ஸ்ரீவிருட்சம் என்று சிறப்பிக்கப்படும் மரம்…

வில்வமரம்

75.அம்பிகையின் அம்சமாக இமயமலையில்
அமைந்திருக்கும் ஏரி…

மானசரோவர்

76.திருநாவுக்கரசர் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்?

81

77.பதிகம் என்பதன் பொருள்…

பத்து அல்லது 11 பாடல்கள் சேர்ந்த தொகுப்பு

78.சைவ சித்தாந்தத்தை விளக்கும் முழுமையான
சாத்திர நூல்…

சிவஞானபோதம்

79.உலகைப் படைக்கும் போது ஈசன் ஒலிக்கும் உடுக்கை….

டமருகம் அல்லது துடி

80.அனுபூதி என்பதன் பொருள்….

இறைவனுடன் இரண்டறக் கலத்தல்
ஓம் நமசிவாய... 

No comments:

Post a Comment

Followers

ஐயப்பனுக்கு திருமணம் நடைபெறும் ஒரே கோவில் இது தான்.

கடவுளின் தேசமான இயற்கை எழில் கொஞ்சும்  கேரள மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஐயப்பனின் அறுபடை வீடுகளில் ஒன்றான , ஐயப்பன் திருமண...