Wednesday, March 6, 2024

இந்த சிவராத்திரியில் இந்த 21 வில்வத்தைமனதால் மனதால் நினைத்து அர்ப்பணித்து மகிழ்வோம்...

இந்த சிவராத்திரியில் இந்த 21 வில்வத்தை
மனதால் தந்தை ஜோதியான விஸ்வநாதருக்கு அர்ப்பணித்து மகிழ்வோம்...
1) ஆத்மாவின் மனம் புத்தி சுபாவம் இந்த மூன்றையும் தந்தை சிவனுக்கு வாழும் வரை அர்ப்பணித்து விட வேண்டும்.

2) பிரம்மா விஷ்ணு சங்கரன் இம்மூவரையும் படைத்த மேலான பரம தந்தை சிவன் என்பதை எப்பொழுதும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

3) தான் ஒரு உடலற்ற ஆத்மா என்ற மெய் உணர்வையும் எனக்குள் எந்த ஒரு தீய குணங்கள் இல்லாத புனிதன் என்பதையும் நான் அகங்காரம் அற்றவன் என்பதையும் ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு தனது நடத்தை இருக்க வேண்டும்.

4) எண்ணம் சொல் செயல் அனைத்திலும் தூய்மையும் நேர்மையும் இருக்க வேண்டும்.

5) உடல் மனம் பொருள் இவை யாவும் இறைவன் கொடுத்தது இறைவனுடைய சேவைக்கே அர்ப்பணம் என்று புரிந்து வாழ கற்றுக் கொள்ள வேண்டும்.

6) கடந்தது முடிந்தது நடப்பது மூன்றிலும் எனக்கு நன்மையே என்பதை உறுதியாக எண்ண வேண்டும்.

7) தனது பேச்சு எண்ணம் செயல் தனக்கும் இறைவனுக்கும் மற்றவருக்கும் மகிழ்ச்சி ஒன்றையே தர வேண்டும்.

8) சுயநலம் இச்சை பொய் மூன்றும் 
இல்லாது இருக்க வேண்டும்.

9) ஆரோக்கியம் செல்வம் மகிழ்ச்சி மூன்றும் நிரம்பிய வாழ்க்கையை வரமாக பெற்றிருக்க வேண்டும்.

10) அன்பு அறிவு ஆற்றல் இம்மூன்றும் நிறைந்த பொக்கிஷத்தை உலக நன்மைக்கான காரியத்தில் ஈடுபடுத்த வேண்டும்.

11) நட்பு உறவு தொடர்பு 
இம் மூன்றிலும் பாதுகாப்பு மற்றும் கவனமாக இருக்க வேண்டும்.

12) எந்த சூழ்நிலையிலும் கவலை பயம் குழப்பம் இம்மூன்றையும் பெருமானாருக்கு அர்ப்பணித்து விட வேண்டும்.

13) இறைதொண்டு 
இறைவனின் புகழ் பாடுதல்
இறை சிந்தையிலேயே நிலைத்திருத்தல்
இம்மூன்றையும் வாழும் வரை கடைபிடித்தல் வேண்டும்.

14) உள்நோக்கம் சமநிலையற்ற உபசரிப்பு பேதம் பார்ப்பது இம்மூன்றும் யாரிடத்திலும் கூடாது என்பதாக நினைத்து தந்தை ஈசனுக்கு வில்வத்தை அர்ப்பணிக்க வேண்டும்.

15) எதுவும் எடுத்துச் செல்லப் போவதில்லை. 
இந்த உடல் புண்ணிய காரியம் செய்வதற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இதில் வாழும் வரை ஆத்மாவாகிய நான் தந்தை ஈசனின் புகழை பாடிக்கொண்டே இருப்பேன்இம்மூன்றையும் நினைவில் வைத்து தந்தை ஈசனுக்கு வில்வத்தை அர்ப்பணிக்க...

16) மாயை ஆசையின் மூலமாகத்தான் உட்புகுகின்றது. பற்றின் மூலமாகத்தான் உலக பந்தத்தை உருவாக்குகின்றது. ஈர்ப்பு மூலமாகத்தான் கர்மா உருவாகின்றது. எனவே அந்த ஆசை பற்று ஈர்ப்பு இம்மூன்றும் தந்தை ஈசனைத் தவிர வேறு எதன் மீதும் ஈடுபடாதிருக்க வேண்டும் என வில்வத்தை மனதால் தந்தை ஈசனுக்கு அர்ப்பணிக்க...

17) சிவ சிந்தையை ஆக்கல் 
சிவ சிந்தையை காத்தல் 
சிவ சிந்தைக்கு புறம்பானதை அழித்தல்
இந்த ருத்ராட்சத்தை எப்பொழுதும் மனதில் அணிந்திருப்பேன் என வில்வத்தை தந்தை ஈசனுக்கு அர்ப்பணிப்பீராக...

18) அன்பு சமாதானம் ஆனந்தம் இந்த மூன்று நிலையில் நிலைத்திருந்து தந்தை ஈசனுடன் இணைந்து இருப்பேன் என்று வில்வத்தை அர்ப்பணிப்பீராக...

19) உலகம் ஒரு குடும்பம் அதில் அனைவரும் ஆத்மாக்கள். அந்த குடும்பத்திற்கு தகப்பன் தந்தை ஈசன் அவர் பரமாத்மா. இந்த உலகம் ஒரு நாடக மேடை இதில் அனைவரும் நடித்துக் கொண்டிருக்கின்றார்கள். இம்மூன்றையும் நினைவில் எப்பொழுதும் வைத்திருப்பேன் என்று வில்வத்தை அர்ப்பணிப்பீராக...

20) தர்மம் தானம் நிதானம் மூன்றும் ஒவ்வொரு பிறவியிலும் ஒவ்வொரு காரியத்திலும் தந்தை ஈசனின் துணையுடன் எப்பொழுதும் இணைந்திருக்க வேண்டும் என்று வில்வத்தை மனதால் தினமும் தந்தை ஈசனுக்கு அர்ப்பணித்து மகிழ்வீராக...

21) எப்பொழுதும் துணை நிற்பவர் தந்தை ஈசன் எப்பொழுதும் ஆபத்தில் பாதுகாப்பவர் தந்தை ஈசன்
எப்பொழுதும் துன்பத்தின் துயரத்தை துடைப்பவர் அந்த பரமாத்மாவான மேலான தந்தை ஈசன் என்பதை சதாகாலம் நினைவில் வைத்து மனதார வில்வத்தை தந்தை ஈசனுக்கு அர்ப்பணித்து மகிழ்வோமாக...

நாம் வாழும் வரை நம் ஒவ்வொருவருக்கும் இரு புருவ மத்தியில் ஜோதியாகிய ஆத்மா என்ற கண் விழித்திருக்கும் வரை தந்தை பரமாத்மா சிவன் நமக்கு முன்பாக சத்தியத்தின் ஜோதி வடிவமாக தென்பட்டு கொண்டே இருப்பார். அவரை நினைக்கும் நேரம் எல்லாமே நாம் சிவராத்திரியில் தான் இருக்கின்றோம். அவ்வாறு நாம் அவரை நினைத்து நமது பாவங்கள் அனைத்தும் அழிவதற்கு இந்த 21 வில்வங்களை சதா சர்வ காலங்களிலும் மனதால் அவருக்கு அர்ப்பணிப்போம்.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

96 வகையான ஷண்ணவதி ஹோமங்களின் ரகசியம்...

96 வகையான ஷண்ணவதி ஹோமங்களின் ரகசியம் (1)சமித்துவகைகள் _13  (2)ஹோமதிரவியம் _45 (3) ரஸவர்க்கம்.           _8 (4) பழவர்க்கம்.      ...