Saturday, March 23, 2024

பங்குனி உத்திரம் தோன்றிய வரலாறு..

பங்குனி உத்திரம் தோன்றிய வரலாறு..
பங்குனி மாதம் உத்திர நட்சத்திரம் வரும் நாளே, பங்குனி உத்திரமாக கொண்டாடப் படுகிறது. இந்த மாதத்தில் தான் அசுரர்க ளின் கொட்டத்தை அடக்க முருகப்பெருமா ன், தன் தாய், தந்தையரை வணங்கி பயணத்தை ஆரம்பித்தார்.
குதிரைகள் பூட்டிய தேரில் முருகப்பெருமா னுக்கு வாயு பகவான் சாரதியாக இருக்க, முருகனின் படைகள் அணிவகுத்து சென் றன. அப்போது, வழியில் ஒரு சிறிய மலை முருகனின் படைகளை வழி மறிக்கும் வித மாக பெரிதாக வளர ஆரம்பித்தது. அதைப் பார்த்ததும் காரணம் அறியாது அனைவ ரும் திகைத்து நின்றனர். அப்போது அங்கிருந்த நாரதர் அம்மலையை பற்றி முருகனிடம் கூறினார்.
இந்த மலை கிரவுஞ்சன் என்னும் அசுரனா க இருந்து, எல்லோருக்கும் தீமைகளை புரிந்த தீய சக்தி ஆகும். அகத்திய முனிவ ரின் சாபத்தால், அசையாமல் மலையாகி நின்றாலும், இருந்த இடத்தில் இருந்து கொண்டே தன்னை கடந்து செல்பவர்க ளை ஏமாற்றி தொல்லை தந்து கொண்டி ருக்கிறது என்று கூறினார்.
மேலும் இந்த மலைக்கு அருகில் உள்ள மாயாபுரிப்பட்டினம் என்னும் நகரில், சூரப த்மனின் தம்பியும், யானை முகம் கொண் டவனுமான தாரகாசுரன் ஆட்சி செய்து கொண்டு, தேவர்களை மிகுந்த துன்பங்க ளுக்கு உள்ளாக்கி வருகின்றான் என்ற தகவலையும் சொன்னார்.
அதை கேட்ட முருகப்பெருமான், தன் தளபதி வீரபாகுவிடம் படையில் பாதியை அழைத்துக் கொண்டு சென்று, தாரகாசுர னை அழித்து விட்டு வரும்படி கட்டளையி ட்டார். முருகனின் கட்டளைப்படி வீரபாகுவின் தலைமையில் முருகனின் படைகள் மாயாபுரிபட்டினத்திற்குள் நுழைந்தன.
🚩கடும் போர் நடைபெறுதல் :
********************************
இதை அறிந்த தாரகாசுரனும் பெரும்படை யுடன் எதிர்த்து வந்தான். அவர்கள் இருவ ருக்கும் கடும் போர் நடந்தது. இருபக்கத்தி லும் வீரர்கள் இறந்து வீழ்ந்தனர். போர்க்க ளத்தில் நின்று யுத்தம் செய்த தாரகாசுரன் முருகப்படையின் வீரரான, வீரகேசரியை தன் கதாயுதத்தால் மார்பில் அடித்து சாய்த்தான்.
இதைக்கண்ட வீரபாகு வெகுண்டெழுந்து, தாரகாசுரனை கடுமையாக தாக்கினான். இதனால் கோபம் கொண்ட தாரகாசுரன் திரிசூலத்தால் வீரபாகுவின் மார்பில் குத் lதிச் சாய்த்தான். மூர்ச்சையாகி விழுந்த வீரபாகுவை தாரகாசுரன் எள்ளி நகையா டினான். உடனே அங்கிருந்த முருகனின் படைகள் நாலாபுறமும் சிதறி ஓடின. மயக் கம் கலைந்து எழுந்த வீரபாகு, மீண்டும் மூர்க்கத்தனமாக தாக்கினான்.
எதிர் தாக்குதல் நடத்த முடியாமல் தாரகாசுரன் தன் மாய வேலைகள் மூலம் எலியாக மாறி கிரவுஞ்ச மலைக்குள் புகுந்துக் கொண்டான். வீரபாகுவும் அவனை தொடர்ந்த மற்ற வீரர்களும் விடாது மலைக்குள் நுழைய, மலை தன் வேலையை காட்ட ஆரம்பித்தது. தாரகாசுரனின் அசுரப்படை கள் முருகப்பெருமானின் படைகளை பெரிய அளவில் தாக்கி அழித்தன.
🚩பங்குனி உத்திரம் :
**********************
இதை நாரதர் மூலம் அறிந்த முருகப்பெரு மான், நேரடியாக போர்க்களத்திற்கு வந்தார். வந்தவரின் வலிமை அறியாத தாரகாசுரன், சிறுவன் என முருகனை கிண்டல் செய்தான். கோபம் கொண்ட முருகப்பெருமான் அவனை கடுமையாக தாக்க ஆரம்பித்தார்.
தாக்குதலை சமாளிக்க முடியாமல் மீண்டு ம் எலியாக மாறி மலைக்குள் நுழைந்து மாய வேலைகளை காட்ட ஆரம்பித்தான். முருகப் பெருமான், தன் வேலாயுதத்தை கையில் எடுத்து வீசி எறிந்தார். துள்ளி வந்த வேல், மலையை பல கூறுகளாக்கி உடைத்தெறிந்து, தாரகாசுரனை கொன்ற து. அதன் பிறகு முருகப்பெருமான், தெய்வானையை மணந் தார். அந்த நாளே பங்குனி உத்திரமாகும்.பங்குனி உத்திரம் சிறப்பு தகவல்கள்.
🌷பங்குனி உத்திர நல்ல நாளில் கூடுதலாக தவறாது வர மளிக்கும் ஆற்றல் சிவசக்தி க்கு உண்டு என்று பாரணங்கள் சொல்கி ன்றன. பங்குனி உத்திரம் பற்றிய சிறப்பா ன 35 தகவல்களை விரிவாக பார்க்கலாம்.
🌷ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு நட்ச த்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத் து விழாக்கள் நடத்துவது வழக்கம். அதில் பங்குனி உத்திர நட்சத்திரத்துக்கு அதிக மகத்துவம் உண்டு. இந்தத் திருநாளில் தான் அதிகமான தெய்வத்திருமணங்கள் நடைபெற்றுள்ளதாகப் புராணங்கள் கூறுகின்றன. 
🌷12-வது மாதமான பங்குனியும், 12-வது நட்சத்திரமான உத்திரமும் இணையும் புனித நாள் பங்குனி உத்திரம்
🌷இந்த விரதத்தை கல்யாண விரதம், திருமண விரதம் என்றும் கூறுவார்கள். 
🌷சிவபெருமான் அன்னை பார்வதியோடு மணக்கோலத்தில் சுந்தரமூர்த்தி நாயனா ருக்கு மதுரையில் காட்சி தந்தருளிய திரு நாள் இதுதான். அன்னை மீனாட்சியைத் திருமணம் செய்து மீனாட்சி சுந்தரேஸ்வர ராகக் காட்சி தந்ததும் இந்நாளில்தான். ஆண்டு தோறும் மதுரையில் இத்திருமண விழாவை பங்குனி உத்திரத்தன்று சிறப்பாக நடத்துகின்றனர்.
🌷சிவனின் தவத்தைக் கலைத்தால் இறை வனின் நெற்றிக் கண்ணால் மன்மதன் எரிக்கப்பட்டான். ரதியின் வேண்டுதலால் மீண்டும் மன்மதன் உயிர் பெற்ற நாளும் இதுதான். 
🌷முருகன் தெய்வானையை இந்த நாளில் தான் திருமணம் புரிந்து கொண்டார். அத்துடன் வள்ளியின் அவதார தினமும் இதுதான்
🌷பர்வத ராஜன் தவத்தால் பத்மத்தில் அவதரித்த பார்வதியை சிவபெருமான் கரம் பிடித்த நாளும் இதுவே.
🌷ஸ்ரீரங்க மன்னார்- ஆண்டாள் திருக்கல் யாண வைபவம் நடந்த நாளும் இதுதான். மகாலட்சுமி பங்குனி உத்திர விரதத்தை அனுசரித்துதான் ஸ்ரீமகா விஷ்ணுவின் மார்பில் உறையும் பாக்கியம் பெற்றாள்.
🌷மகாலட்சுமியின் அவதார நாளும் பங்குனி உத்திர நாள்தான்.
🌷இந்நாளில் வைணவ ஆலயங்களில் மணக்கோலத்தில் தாயாரும் திருமாலும் காட்சி தருவார்கள். அன்று காஞ்சி வரதரா ஜர் ஆலயத்தில் ஸ்ரீபெருந்தேவித் தாயார் சந்நிதியில் ஸ்ரீதேவி பூதேவி, மலையாள நாச்சியார் ஆண்டாள் மற்றும் பெருந்தேவி த் தாயார் சகிதமாக ஸ்ரீவரதராஜர் காட்சி தருவார்.
🌷பங்குனி உத்திர நல்ல நாளில் கூடுத லாக தவறாது வர மளிக்கும் ஆற்றல் சிவசக்திக்கு உண்டு என்று பாரணங்கள் சொல்கின்றன.
🌷சுந்தரமூர்த்தி நாயனாருக்கு ஸ்ரீபரமே ஸ்வரர் மணக்கோலத்தில் திருக்காட்சி தந்த தினமும் பங்குனி உத்திரத்தன்று தான்.
🌷கொள்ளிடத்தில் அமைந்துள்ள ஸ்ரீ புலீஸ்வரி அம்மன் ஆலயத்திலுள்ள தல விருட்ச மலர்கள் பங்குனி உத்திரத்தன்று தான் பூக்கும்.
🌷திருவையாறு அருகிலுள்ள திங்களூர் சிவாலயத்தில், பங்குனி உத்திரத் திருநா ளில் மட்டும், லிங்கத் திருமேனியை சந்திரன் தனது கிரணங்களால் தழுவி வழிபடுவதைக் காணலாம்.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

1008 ஆயிரத்து எட்டு லிங்கங்களின் பட்டியல்...

ஆயிரத்து எட்டு லிங்கங்களை கேட்டிருக்கோமே தவிர, அந்த 1,008 லிங்கங்கள் என்னென்ன என்று பலருக்கும் தெரியாது.  இதோ அந்த 1008 லிங்கங்களின் பட்டியல...