Friday, March 22, 2024

தஞ்சாவூர் மாவட்டம் தமிழ்நாடு திருப்பந்துறை அருள்மிகு சிவானந்தேஸ்வரர் ஆலயம்.



*தஞ்சாவூர் மாவட்டம் தமிழ்நாடு திருப்பந்துறை அருள்மிகு சிவானந்தேஸ்வரர் ஆலயம்.*
*கோபுர தரிசனம் - கோடி புண்ணியம்*

*கோபுர தரிசனம் - பாவ விமோசனம்*

*மூலவர் : சிவானந்தேஸ்வரர், பிரணவேஸ்வரர்*

*உற்சவர் : பிரணவேஸ்வரர்*

*அம்மன்/தாயார் : மங்களாம்பிகை*

*தல விருட்சம் : வன்னி*

*தீர்த்தம் : மங்கள தீர்த்தம்*

*பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்*

*புராண பெயர் : திருப்பேணு பெருந்துறை*

*ஊர் : திருப்பந்துறை*

*மாவட்டம் : தஞ்சாவூர்*

*மாநிலம் : தமிழ்நாடு*

*பாடியவர்கள் : சம்பந்தர்*

*தேவாரப்பதிகம்*

*நிலனொடுவானும் நீரொடுதீயும் வாயுவும் ஆகியோர் ஐந்து புவனொடுவென்று பொய்ம்மைகள் தீர்ந்த புண்ணியர் வெண்பொடிப்பூசி நலனொடு தீங்கும் தானலதின்றி நன்கெழு சிந்தையராகி மலனொடுமாக மில்லவர்வாழும் மல்கு பெருந்துறையாரே.*

*திருஞானசம்பந்தர்*

*தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 64வது தலம்.*

*திருவிழா:*

*முருகனுக்குரிய தைப்பூசம், வைகாசி விசாகம், கந்தசஷ்டி, திருக்கார்த்திகை போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.*

*தல சிறப்பு:*

*இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கரிகாலசோழன் கால கற்றளி (கல்வெட்டு) திருப்பெருந்துறை ஆவுடையார் கோ யில் வேறு. கொங்குநாட்டில் ஈரோடு பக்கத்தில் பெருந் துறை வேறு.*

*சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 127 வது தேவாரத்தலம் ஆகும்.*

*திறக்கும் நேரம்:*

*காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.*

*முகவரி:*

*அருள்மிகு சிவானந்தேஸ்வரர் திருக்கோயில்,திருப்பந்துறை,-612 602.நாச்சியார் கோவில் போஸ்ட்,கும்பகோணம் தாலுகாதஞ்சாவூர் மாவட்டம்.*

*போன்:*

*+91- 435-244 8138, 94436 50826.*

*பொது தகவல்:*

*பிரமன், உமாதேவி, முருகன் ஆகியேகார் வழிபட்ட சிறப்புடையது. கிழக்கு நோக்கிய சிறிய ராஜகோபுரம். கொடிமரம் நந்தி பலிபீடம் உள்ளன. பிராகாரத்தில் விநாயகர், நால்வர், சோழ மன்னன் மனைவி ஆகியோர் உள்ளனர். உள்சுற்றில் விநாயகர், மருகன், கஜலட்சுமி, நவக்கிரக சன்னதிகள், சுவாமி சன்னதியில் பழைமையான முருகப் பெருமான் உருவமுள்ளது.*

*பிரார்த்தனை:*

*வாய்பேசமுடியாதவர்கள், திக்கு வாய் உள்ளவர்கள் கோயில் எதிரே உள்ள மங்கள தீர்த்தத்தில் நீராடி, முருகனுக்கு 45 நாட்கள் தேனபிஷேகம் செய்து, சிவனுக்கு அர்ச்சனை செய்தால் விரைவில் பேச்சு வரும் என்பது நம்பிக்கை.*

*நேர்த்திக்கடன்:*

*சுவாமி, அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்தும், கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.*

*தலபெருமை:*

*இங்கு முருகன் தான் சிறப்புக்குரியவர். சுவாமி சன்னதியின் முன்பு தண்டாயுதபாணி சிலை அமைக்கப்பட்டுள்ளது. இவர் சின்முத்திரையுடன் கண்மூடி நின்ற நிலையில் தியான கோலத்தில், தலையில் குடுமியுடன் நிற்கிறார். காது நீளமாக வளர்ந்துள்ளது. சுவாமி கோபுர விமானத்தில் அர்த்தநாரீஸ்வர தெட்சிணாமூர்த்தியும், வீணா தெட்சிணாமூர்த்தியும் உள்ளனர்.*

*இரட்டை விநாயகர்:*

*கோயிலின் வாசலில் குக விநாயகரும், சாட்சி விநாயகரும் ஒரே சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். முருகன் சுவாமிமலையிலிருந்து இத்தலத்திற்கு தவமிருக்க வந்தபோது, பாதுகாப்பிற்காக விநாயகர் இரட்டை வடிவெடுத்து வந்ததாகவும், பின் இங்கேயே தங்கிவிட்டதாகவும் கூறுவர்.*

*தல வரலாறு:*

*ஒரு முறை முருகப்பெருமான், படைப்பின் நாயகனான பிரம்மனிடம் ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் பொருள் கேட்டார். பிரம்மா அதன் பதில் தெரியாமல் விழித்தார். அர்த்தம் தெரிந்த முருகன், பிரம்மனை திட்டியதோடு சிறையிலும் அடைத்து விட்டார். படைப்புத்தொழில் பாதித்தது. சிவன் இதை கண்டித்தார். அதற்கு முருகன், ஓம் எனும் அர்த்தம் தெரிந்து கொண்டு பின் பிரம்மா படைப்புத்தொழிலை ஆரம்பிக்கட்டும் என்றார். முதலில் எனக்கு அர்த்தம் கூறு என்றார் சிவன். சிவன் மண்டியிட்டு, வாய் பொத்தி நிற்க, அவரது காதில் பிரணவ மந்திரத்தின் பொருளை கூறினார் முருகன். தந்தைக்கே உபதேசம் செய்த இந்த நிகழ்ச்சி சுவாமி மலையில் நடந்தது.*

*பிரம்மனை சிறையிலடைத்ததும், சிவனுக்கு உபதேசம் செய்துவிட்டதும் முருகனுக்கு அகங்காரத்தை ஏற்படுத்தியது. இதனால் கோபம் கொண்ட சிவன் முருகனை ஊமையாக்கிவிட்டார். வருந்திய முருகன், தனக்கு பேச்சு கிடைப்பதற்காக திருப்பந்துறையில் சிவலிங்கம் அமைத்து, பூஜை செய்து தவத்தில் ஈடுபட்டார். முருகனது தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் பேசும் திறனை கொடுத்தருளினார். இதனால் இத்தல இறைவன் பிரணவேஸ்வரர் ஆனார்.*

*சிறப்பம்சம்:*

*அதிசயத்தின் அடிப்படையில்:*

*இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.*

*அமைவிடம்:*

*கும்பகோணத்திலிருந்து (12 கி.மீ) எரவாஞ்சேரி வழியாக மயிலாடுதுறை செல்லும் வழியில் திருப்பந்துறை உள்ளது.*
ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

96 வகையான ஷண்ணவதி ஹோமங்களின் ரகசியம்...

96 வகையான ஷண்ணவதி ஹோமங்களின் ரகசியம் (1)சமித்துவகைகள் _13  (2)ஹோமதிரவியம் _45 (3) ரஸவர்க்கம்.           _8 (4) பழவர்க்கம்.      ...