Tuesday, April 30, 2024

அப்பர் (எ) திருநாவுக்கரசர் கருவறையில் கண்ணீர்மழை பொழிய வழிபட்ட திருத்தலங்கள்.

அப்பர் (எ) திருநாவுக்கரசர் கருவறையில் கண்ணீர்மழை பொழிய வழிபட்ட திருத்தலங்கள்): 
*
நாவுக்கரசு சுவாமிகளின் வரலாற்று நிகழ்வுகளை 429 பெரிய புராணத் திருப்பாடல்களில் தெய்வச் சேக்கிழார் விவரித்துப் போற்றியுள்ளார். இவற்றுள் சுவாமிகள் கருவறை தரிசன சமயத்தில் கண்ணருவி பொழிய வழிபட்டுள்ள திருத்தலங்களை இப்பதிவில் சிந்திப்போம். இத்திருப்பாடல்களின் பொருளினைக் கற்றறிகையில், சுவாமிகளுக்கு எத்தகைய அற்புத அனுபவம் இத்தலங்களில் கிட்டியுள்ளது என்பதோடு, நாம் எவ்வித மனநிலையில் உளமுருகி ஆலய வழிபாடு புரிதல் வேண்டும் என்பதும் தெள்ளென விளங்கும்,  
*
(1) - தில்லை: (திருநாவுக்கசர் புராணம் - திருப்பாடல் 167)
கையும் தலைமிசை புனை அஞ்சலியன கண்ணும் பொழிமழை ஒழியாதே
பெய்யும் தகையன கரணங்களுமுடன் உருகும் பரிவின பேறெய்தும்
மெய்யும் தரைமிசை விழுமுன்(பு) எழுதரும் மின்தாழ் சடையொடு நின்றாடும்
ஐயன் திருநடம் எதிர் கும்பிடும்அவர் ஆர்வம் பெருகுதல் அளவின்றால்
*
(2) - சீர்காழி (திருநாவுக்கசர் புராணம் - திருப்பாடல் 186) 
பண்பயில் வண்டறை சோலை சூழும் காழிப்
பரமர்திருக் கோபுரத்தைப் பணிந்துள் புக்கு
விண்பணிய ஓங்குபெரு விமானம் தன்னை
வலம்கொண்டு தொழுது விழுந்தெழுந்த எல்லைச்
சண்பைவரு பிள்ளையார் அப்பர் உங்கள்
தம்பிரானாரைநீர் பாடீர் என்னக்
கண்பயிலும் புனல்பொழிய அரசும் வாய்மைக்
கலைபயிலும் மொழிபொழியக் கசிந்து பாடி
*
(3) - திருவாரூர் (திருநாவுக்கசர் புராணம் - திருப்பாடல் 222)
கண்டு தொழுது விழுந்து கர சரணாதிஅங்கம் 
கொண்ட புளகங்களாக எழுந்தன்பு கூரக் கண்கள்
தண்டுளி மாரி பொழியத் திருமூலட்டானர் தம்மைப்
புண்டரிகக் கழல் போற்றித் திருத்தாண்டகம் புனைந்து
*
(4) - புகலூர் (திருநாவுக்கசர் புராணம் - திருப்பாடல் 238)
அத்திரு மூதூர் மேவிய நாவுக்கரசும் தம்
சித்தம் நிறைந்தே அன்பு தெவிட்டும் தெளிவெள்ளம்
மொய்த்திழி தாரைக் கண்பொழி நீர்மெய்ம் முழுதாரப்
பைத்தலை நாகப் பூண் அணிவாரைப் பணிவுற்றார்
*
(5) - திருவீழிமிழலை (திருநாவுக்கசர் புராணம் - திருப்பாடல் 253)
கைகள் குவித்துக் கழல்போற்றிக் கலந்த அன்பு கரைந்துருக
மெய்யில் வழியும் கண்ணருவி விரவப் பரவும் சொல்மாலை
செய்ய சடையார் தமைச்சேரார் தீங்கு நெறி சேர்கின்றார் என்(று)
உய்யு நெறித் தாண்டகம் மொழிந்தங்(கு) ஒழியாக் காதல் சிறந்தோங்க
*
(6) - திருவோத்தூர் (திருநாவுக்கசர் புராணம் - திருப்பாடல் 316)
செக்கர்ச் சடையார் திருவோத்தூர்த் தேவர் பிரானார் தம்கோயில்
புக்கு வலம் கொண்டெதிர் இறைஞ்சிப் போற்றிக் கண்கள் புனல்பொழிய
முக்கட் பிரானை விரும்புமொழித் திருத்தாண்டகங்கள் முதலாகத்
தக்க மொழி மாலைகள் சாத்திச் சார்ந்து பணி செய்தொழுகுவார்
*
(7) - திருக்கச்சி ஏகம்பம் (திருநாவுக்கசர் புராணம் - திருப்பாடல் 323)
வார்ந்து சொரிந்த கண்ணருவி மயிர்க்கால் தோறும் வரும்புளகம்
ஆர்ந்த மேனிப் புறம்பலைப்ப அன்பு கரைந்(து) என்புள் அலைப்பச்
சேர்ந்த நயனம் பயன்பெற்றுத் திளைப்பத் திருஏகம்பர் தமை
நேர்ந்த மனத்தில் உறவைத்து நீடும் பதிகம் பாடுவார்
*
(8 ) - திருவொற்றியூர் (திருநாவுக்கசர் புராணம் - திருப்பாடல் 335)
எழுதாத மறைஅளித்த எழுத்தறியும் பெருமானைத்
தொழு(து) ஆர்வமுற நிலத்தில் தோய்ந்தெழுந்தே அங்கமெலாம்
முழுதாய பரவசத்தின் முகிழ்த்த மயிர்க்கால் மூழ்க
விழுதாரை கண்பொழிய விதிர்ப்புற்று விம்மினார்
*
(9) - திருக்காளத்தி (திருநாவுக்கசர் புராணம் - திருப்பாடல் 346)
மலைச்சிகரச் சிகாமணியின் மருங்குற முன்னேநிற்கும்
சிலைத்தடக்கைக் கண்ணப்பர் திருப்பாதம் சேர்ந்திறைஞ்சி
அலைத்துவிழும் கண்ணருவி ஆகத்துப் பாய்ந்திழியத்
தலைக்குவித்த கையினராய்த் தாழ்ந்துபுறம் போந்தணைந்தார்
*
(10) - திருப்பூந்துருத்தி (திருநாவுக்கசர் புராணம் - திருப்பாடல் 387)
சேர்ந்து விருப்பொடும் புக்குத் திருநட மாளிகை முன்னர்ச்
சார்ந்து வலம் கொண்டிறைஞ்சித் தம்பெருமான் திருமுன்பு
நேர்ந்த பரிவொடும் தாழ்ந்து நிறைந்தொழியா அன்பு பொங்க
ஆர்ந்த கண்ணீர்மழை தூங்க அயர்வுறும் தன்மையரானார்
*
(இறுதிக் குறிப்பு)
கருவறை தரிசனம் அல்லாத பிற சமயங்களில் சுவாமிகள் திருவருளை நினைந்து கண்ணீர்மழை பொழிந்துள்ள திருத்தலங்கள் (திருவதிகை - சூலை நோய் நீங்கப் பெறுகையில், தூங்கானை மாடம் - இடப சூல முத்திரை பொறிக்கப் பெறுகையில், தில்லை - உழவாரத் தொண்டு புரிகையில், திருப்பைஞ்ஞீலி - ஆலய வாயிலில் இறைவர் திருவுருவம் மறைத்த சமயத்தில், ஐயாறு - குளத்தினின்று வெளிவருகையில் மற்றும் கயிலைக் காட்சி பெறுகையில்)

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் நெல்லிக்குப்பம்.

புத்திர பாக்கியம் அருளும் புதுக்காமூர் அருள்மிகு புத்திரகாமேட்டீஸ்வரர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள புதுக்காமூர் என்னும் ஊரில் அருள்மிகு புத்திரகாமேட்டீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.
*இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?*

புதுக்காமூர் என்னும் ஊரில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் அருள்மிகு புத்திரகாமேட்டீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.

*இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?*

 இத்தலம் குழந்தை பாக்கியம் அருளும் பிரதான வழிபாட்டு தலமாக உள்ளது.

 கோயிலுக்கு வெளியில் தசரதருக்கு தனி சன்னதி உள்ளது. இவர் மன்னர் போல் இல்லாமல்இ யாகம் நடத்திய நிலையில் இருக்கும் முனிவர் போல காட்சியளிக்கிறார். 

 இவர் கைகளில் ருத்ராட்ச மாலையும்இ கமண்டலமும் வைத்திருக்கிறார்.

 கருவறையில் குடை வடிவில் உள்ள 9 தலை நாகத்தின் கீழ் சிவபெருமான்இ லிங்க வடிவில் காட்சியளிக்கிறார்.

அம்பாள் பெரியநாயகிக்குஇ தனிக் கொடிமரத்துடன் கூடிய சன்னதி உள்ளது. 

 இத்தலத்தில் பவள மல்லி தலவிருட்சமாக உள்ளது.

*வேறென்ன சிறப்பு?*

இக்கோயிலின் எதிரே வடக்கில் இருந்து கிழக்காக கமண்டல நதி பாய்கிறது. இந்த நதிக்கரையில் வடக்கு நோக்கி விநாயகரும்இ அவருக்கு எதிரே ஆஞ்சநேயரும் உள்ளனர்.

ஆஞ்சநேயர் கையில் சங்குஇ சக்கரம் உள்ளது மற்றொரு சிறப்பு. இவ்வாறுஇ எதிரெதிரே விநாயகர்இ ஆஞ்சநேயரைக் காண்பது மிகவும் சிறப்பாகும்.

*என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?*

சிவனுக்கு பெளர்ணமி தோறும் விசேஷ பூஜை நடைபெறுகிறது.

ஒவ்வொரு வருடமும் ஆனி மாதம் பெளர்ணமியன்று யாகம் செய்யப்படுகிறது. 

 ஆடி சுவாதியில் லட்ச தீபம்இ நவராத்திரிஇ சிவராத்திரிஇ பிரதோஷ வழிபாடுஇ ஆனி திருமஞ்சனம்இ ஐப்பசி அன்னாபிஷேகம்இ கார்த்திகை சோமவாரம் போன்றவை சிறப்பாக நடைபெறுகின்றன.

*எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?*

குழந்தை வேண்டி ஆறு திங்கட்கிழமைகள் தொடர்ந்து விரதமிருந்துஇ ஏழாவது திங்கட்கிழமையன்று சிவனுக்கு செவ்வரளி பூ மற்றும் பவள மல்லி மாலை அணிவித்துஇ மிளகு சேர்ந்த வெண்பொங்கல் நைவேத்தியமாக படைத்து பிரார்த்தனை செய்கின்றனர். 

புத்திர தோஷம்இ நாக தோஷம் நீங்க கோயில் வளாகத்திலுள்ள வேம்புஇ ஆலமரத்தடியில் உள்ள நாகருக்கு தங்கள் நட்சத்திர நாளில் நாக பிரதிஷ்டை செய்தும்இ புத்திரகாமேஷ்டி யாகம் நடத்தியும் வேண்டிக்கொள்கிறார்கள்.

அனைத்து தோஷங்களும் விலகி நினைத்த காரியம் நிறைவேற இந்த மரத்தை சுற்றி 108 முறை வலம் வந்து வழிபடுகின்றனர். 

இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?

தங்களது வேண்டுதல் நிறைவேறியவுடன் பக்தர்கள் சுவாமிக்கு அபிஷேகம் செய்தும்இ வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன்களை செலுத்துகின்றனர்.


ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் நெல்லிக்குப்பம்.

Monday, April 29, 2024

நடராஜருக்கு ஆண்டில் ஆறு தினங்கள் மட்டுமே அபிஷேகம்.

சிவபெருமான் அக்னி ரூபமானவர். எனவேதான் அவரைக் குளிர்விக்க தினமும் அபிஷேகம் செய்துவழிபடுவர்.லிங்கத்தின் மீது ஜலதாரை வீழ்ந்தவண்ணம் இருக்கும். நடராஜருக்கு ஆண்டில் ஆறு தினங்கள் மட்டுமே அபிஷேகம் நடைபெறும்.

சித்திரைத் திருவோணம், ஆனி உத்திரம், ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி, மார்கழி திருவாதிரை, மாசி சதுர்த்தசி ஆகிய நாள்களில் இந்த அபிஷேகங்கள் நடைபெறும். சித்திரைத் திருவோண நாளான இந்த நாளில் சிதம்பரத்தில் நடராஜப்பெருமானுக்குக் கோலாகலமாக அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளது.

சிதம்பரம் கோயில் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது ஆனந்த நடராஜர் எப்பொழுதும் ஆனந்த நடனமிடுவது. வேண்டும் வரங்களை உடன் அருள்வது. தரிசித்தால் முக்தி தருவது. பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாச ஸ்தலமாக விளங்குவது.சித்ஸபையில் நடராஜர் உருவம், அருவம், உருவ அருவமாக காட்சி தரும் ஸ்தலம் சிதம்பரம். சிதம்பர ரகசியம்.

சிவபெருமானுக்கும் ஐந்து என்ற எண்ணுக்கும் அநேக தொடர்புகள் உள்ளன. பஞ்சாக்ஷரம் ஐந்து எழுத்து. நடராஜர் செய்யும் செயல்கள் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் அருளல் ஆகிய ஐந்து.பஞ்ச பூதங்களுக்கும் அதிபதியாக அமந்த ஸ்தலங்கள் ஐந்து. மகேஸ்வரனின் சக்தி ரூபங்கள் ஆதிசக்தி, பராசக்தி, இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி ஆகிய ஐந்து.

சிதம்பர ஸ்தலத்தின் முக்கிய பிரகாரங்கள் ஐந்து. ஈஸ்வரனின் முகங்கள் ஐந்து. பரமேஸ்வரனின் முகங்கள் ஐந்து.சித்தாந்தக் கலைகளின் ஐந்திற்கும் நாயகராக விளங்குபவர். பஞ்சாங்கம் என்பது ஐந்து அம்சங்களை உள்ளடக்கியது. 1.திதி, 2.வாரம், 3. நக்ஷத்திரம், 4. யோகம், 5. கரணம். 

அண்டத்தின் பரம்பொருள் நடராஜப் பெருமான். அடிமுடி காணமுடியாதவர்கள். அங்கிங்கெணாதபடி எங்கும் வியாபித்திருப்பவர். அவரன்றி அணுவும் அசையாது. சிவபெருமான் அண்டத்தின் பால்வெளியில் அமைந்த நவக்ரஹங்களையே மாலையாக அணிந்தவர். சிதம்பரத்தில் ஸ்ரீ நடராஜர் சன்னதியில், பஞ்சாக்ஷர படிக்குக் கீழே, தினமும் பஞ்சாங்கம் படிக்கப்படுவது ஆண்டாண்டு காலமாக திகழ்ந்து வருகிறது. நக்ஷத்திரங்களும், ராசி மண்டலங்களும் ஸ்ரீ நடராஜப் பெருமாளின் கட்டளைக்கிணங்க இயங்குகின்றன.

 தேவர்கள் வழிபடும் சிவ மூர்த்தம் நடராஜர். தினமும் ஆறுகால பூஜைகள் செய்து அவர்கள் அவரை வழிபடுகிறார்கள். நமக்கு ஓர் ஆண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாளுக்குச் சமம். அப்படியிருக்க அவர்கள் அபிஷேகம் செய்யும் ஆறு காலங்களே இந்த ஆறு தினங்கள் என்கின்றன புராணங்கள். தேவர்கள் வழிபடும் காலத்தில் நாமும் நடராஜப் பெருமானை அபிஷேகம் செய்து வழிபட வேண்டும் என்று வகுத்துள்ளனர்.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் நெல்லிக்குப்பம்.

திருப்பூர் சுக்ரீஸ்வரர், லிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார்.



திருப்பூரிலிருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் 8 கிலோமீட்டர் தொலைவில் சர்க்கார் பெரியபாளையத்தில் சுக்ரீஸ்வரர் கோவில் உள்ளது. ராமாயண காலத்தில் ஸ்ரீராமருக்கு உதவியாக இருந்த சுக்ரீவன், இங்கு ஈஸ்வரனை பிரதிஷ்டை செய்து வழிபட்டதால் மூலவருக்கு சுக்ரீஸ்வரர் என்று பெயர் வந்ததாக தல புராணம் கூறுகிறது. இதற்கு சான்றாக ஆலயத்தில் அர்த்த மண்டப சுவரில், சுக்ரீவன் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யும் புடைப்புச் சிற்பம் உள்ளது. இத்தல இறைவன் குரக்குத்தளி ஆடுடைய நாயனார் என்றும் அழைக்கப்படுகிறார்.

தற்போது இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இக்கோவில் சமயக்குரவர்களுள் ஒருவரான சுந்தரர் பாடல் பெற்ற தலமாகும். ஆகையால் இது 8–ம் நூற்றாண்டைச் சேர்ந்த கோவிலாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் கி.பி. 1220–ம் ஆண்டை சேர்ந்த ஒரு கல்வெட்டுதான் இங்கு காணப்படுகிறது.

இந்தக் கோவிலில் மூலவர் சுக்ரீஸ்வரர், லிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். வலதுபுறம் ஆவுடைநாயகியாக அம்மன் தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார். சுற்றுப் பிரகாரங்களில் கன்னி மூல விநாயகர், தட்சிணாமூர்த்தி, சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், பைரவர் சன்னிதிகளும், எந்த சிவன் கோவில்களிலும் இல்லாத சிறப்பாக கருவறைக்கு நேர் எதிரே பத்ரகாளியம்மன் சன்னிதியும் உள்ளது.

பஞ்சலிங்கங்க கோவில்:-

நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் என பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில், பஞ்சலிங்கங்கள் இந்தக் கோவிலில் அமைந்துள்ளன. மூலவராக அக்னி லிங்கம், மீதம் மூன்று லிங்கங்கள் கோவிலை சுற்றிலும் அமைந்துள்ளன. சிவனுக்கு பிடித்த வில்வமரத்தின் கீழ், ஐந்தாவதாக ஆகாச லிங்கம் அமைந்துள்ளது.

நான்கு யுகங்களை கடந்தது இக்கோவில் வரலாறு:-

2,500 ஆண்டுகளுக்கு முந்தையது என தொல்லியல் துறை கூறினாலும், 17.28 லட்சம் ஆண்டுகளை கொண்ட கிரதாயுகத்தில், காவல் தெய்வமாகவும், 12.96 லட்சம் ஆண்டுகளை கொண்ட திரேதாயுகத்தில் சுக்ரீவனாலும், 8.64 லட்சம் ஆண்டுகளை கொண்ட துவாபரயுகத்தில், இந்திரனின் வாகனமாக ஐராவதத்தாலும், வணங்கப்பட்டது எனவும், 4.32 லட்சம் ஆண்டுகளை கொண்ட, கலியுகத்தில், தேவர்களாலும், அரசர்களாலும் வணங்கப்பட்டு, நான்கு யுகங்களை கண்ட கோவில் என்ற வரலாறும், அதற்கான சான்றுகளும் கோவிலில் உள்ளன.

கோவில் மேல் கோவில்:-

1952–ம் ஆண்டு தொல்லியல் துறை இந்த கோவிலை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து ஆய்வு செய்தது. அப்போது கோவிலை மீண்டும் புனரமைக்க முடிவு செய்து, கோவில் அஸ்திவாரத்தை பலப்படுத்த நடவடிக்கை எடுத்தது. கோவில் கற்களை பிரித்து பார்த்தபோது, தற்போதுள்ள கோவிலை போலவே பூமிக்கடியிலும், இதே கட்டுமானத்தில் ஒரு கற்கோவில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கற்கோவிலுக்கு மேல் மற்றொரு கோவில் எழுப்பப்பட்டிருக்கும் இந்த அமைப்பு வித்தியாசமாக இருப்பதாக கூறப்படுகிறது.

சிதம்பரம், பேரூர் கோவிலுக்கு அடுத்து, சிறப்பான வேலைப்பாடுகளுடன், சக்தி வாய்ந்ததாக சுக்ரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. கோவிலுக்கு என 450 ஏக்கர் நஞ்சராயன்குளம், கோவிலை சுற்றிலும் தண்ணீர் தேங்கும் அகழி, தெப்பக்குளம், இப்பகுதியில் அமைந்திருந்த முகுந்த பட்டணத்தில் இருந்து, மூலவருக்கு அருகே வெளியே வரும் வகையில் அமைந்துள்ள குகை, சிறப்பான வேலைப்பாடுகளுடன் கூடிய கருவறை கோபுரம் என தெரியாத விஷயங்கள் பல உள்ளன.

அதேபோல் கோவிலுக்கு மேற்கு பகுதியில் 56 வகையான நட்சத்திர, ராசி, திசை மரங்கள் நடப்பட்டு பெண்கள் நலபயணம் மேற்கொள்ள தனியாக நடைபாதையும் போடப்பட்டுள்ளது.

பொய் ஆகவே ஆகாது!
மிளகு, பயிராக மாறியது:-

ஒரு வியாபாரி, பொதிச்சுமையாக, மாடுகள் மீது மிளகு மூடைகளை ஏற்றிக்கொண்டு அவ்வழியாக சென்றுள்ளார். அப்போது மாறுவேடத்தில் வந்த சிவன் மூட்டைகளில் என்ன என கேட்க, அந்த வியாபாரி மிளகுக்கு இருந்த விலைமதிப்பு காரணமாக, பாசிப்பயிறு என கூறியுள்ளார். பின்னர் 15 நாட்களுக்கு அந்த வியாபாரி சந்தைக்குச் சென்று பார்த்தபோது, மிளகு மூடைகள் அனைத்தும் பாசிப்பயிறு மூடைகளாக மாறியிருந்தன. அதிர்ச்சி அடைந்த விவசாயி, இறைவனிடம் கதறி அழுது வேண்டினார். இதைதொடர்ந்து இறைவன் கனவில் சென்று, உன் மாடுகள் எங்கு வந்து நிற்கிறதோ, அங்கு வந்து வணங்கு. உன் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்று கூறியுள்ளார். இதைதொடர்ந்து வியாபாரியும் மாட்டை ஓட்டி வந்து மாடு நின்ற இடத்தில் சுக்ரீஸ்வரரை வணங்கியதால் பாசிப்பயிராக இருந்த மூடைகள் மிளகு மூடைகளாக மாறின. இப்பகுதி மக்கள் மிளகு ஈஸ்வரரே என்று அழைத்துவருவது குறிப்பிடத்தக்கது. அதனால் இங்கு வந்து மிளகு பூஜை செய்தால் தீர்வு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. இத்துடன் கடந்த 14 வருடங்களாக காள பைரவர் பூஜை அஷ்டமி, தேய்பிறையில் மாதந்தோறும் விமரிசையாக நடைபெற்று வருகிறது.

இரண்டு நந்தி:-

இந்தக் கோவில் இரண்டு நந்திகள் உள்ளன. முதலில் உள்ள நந்திக்கு கொம்பு, காது இல்லை. இதற்கு ஒரு கதை கூறப்படுகிறது. கோவில் நந்தி அருகிலுள்ள விவசாய நிலத்துக்கு சென்று மேய்ந்துள்ளது. ஆத்திரமடைந்த விவசாயி இடுப்பில் இருந்த கத்தியை எடுத்து நந்தியின் காதையும், கொம்பையும் வெட்டியுள்ளார். மறுநாள் கோவிலுக்கு வந்து பார்த்தபோது, கற்சிலையான நந்தியின் காதில் இருந்து ரத்தம் வழிந்துள்ளது. அதிர்ச்சியடைந்த விவசாயி, தனது தோட்டத்துக்கு வந்தது நந்தி என அறிந்ததும், தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டு வணங்கியுள்ளார். பின்னர் தவறுக்கு பிராயச்சித்தமாக, மற்றொரு நந்தி சிலை செய்து அதனை ஆலயத்தில் பிரதிஷ்டை செய்துள்ளார். பழைய நந்தியை அகற்ற முயற்சித்து முடியாமல் போனதால், அந்தப் பணியை கைவிட்டு விட்டனர். மறுநாள் வந்து பார்த்தபோது, பழைய நந்தி முன்பும், புதிய நந்தி பின்னாலும் மாறி இருந்துள்ளது. சிவன் கனவில் வந்து, உறுப்புகள் இல்லை என்றாலும், அதுவும் உயிர்தான் எனவும், பழைய நந்தி முன்னால் இருக்க வேண்டும்; மற்றது பின்னால்தான் என கூறியுள்ளார். அதன் அடிப்படையில், இன்றும் இரண்டு நந்திகள் அமைந்துள்ளன. பிரதோஷ காலங்களில், இரண்டு சிலைக்கும் பூஜை நடத்தப்படுகிறது.

மிளகீசன்:-

சுக்ரீஸ்வரர் கோயில், ராமாயண காப்பியத்துடன் தொடர்புடையது, வானர அரசன் சுக்ரீவன் தனது அண்ணனைக் கொன்றதற்குப் பிராயச்சித்தம் செய்ய இங்குள்ள ஈசனை லிங்கம் அமைத்து வழிபட்டதால் இக்கோவில் சுக்ரீஸ்வரர் என பெயர் பெற்றது, இந்த சிற்பத்தில் சுக்ரீவன் ஈசனை பூஜை செய்வதை காணலாம். உடலில் 'மரு' உள்ளவர்கள் இப்பெருமானுக்கு மிளகைப் படைத்து, அதில் சிறிதளவு மிளகை எடுத்து வந்து 8 நாள்களுக்கு உணவில் சேர்த்துச் சாப்பிட்டால் 'மரு'க்கள் மறைந்துவிடும். இவ் ஈசனை மக்கள் 'மிளகீசன்' என்றும் அழைக்கின்றனர். கல்வெட்டில் இவ்விறைவன், 'ஆளுடைய பிள்ளை' என்று குறிக்கப்படுகிறார்.

கோயில் குறித்த சிறப்பம்சங்கள்:

1) ஆவுடைநாயகி அம்மனுக்கென தனி கோவிலும், சிவனுக்கென தனி கோயிலும் அமைந்துள்ளது. அம்மனுக்கான தனி கோவில், வலது புறம் இருப்பதால் பாண்டியர்களின் பணி என்பது தெரிகின்றது.

2) உத்தராயணமும் தட்சிணாயணமும் சந்திக்கும் - வேளையில் சூரிய ஒளி சுவாமி மீது படுகிறது.

3) கோயிலின் விமானம் சோழர்களின் பணியை காட்டுகின்றது.

4) ஒன்றின் பின் ஒன்றாக இரண்டு நந்திகள் உள்ள கோயில். இக்கோயிலில் உள்ள ஒரு நந்திக்கு இரண்டு காதுகளும் அறுபட்டுள்ளன. (இது தலவரலாறு தொடர்புடையது.)

5) ஐந்து லிங்கங்கள் உள்ள கோயில், மூன்று வெளியில், ஒன்று மூலவர், மற்றொன்று கண்ணுக்கு தெரியாதது.

6) கொங்கு பகுதியில் சிவன் கோயில்களில் இருக்கும் "தீப ஸ்தம்பம்" இந்த கோயிலில் கிடையாது.கோயில் கிழக்கே பார்த்து இருந்தாலும், உள்ளே செல்லும் படிகள் தெற்கு பார்த்து அமைந்துள்ளது.

7) கொங்கு நாட்டில் உள்ள நான்கு "சிற்ப ஸ்தலங்களில்" இந்த சுக்ரீஸ்வரர் கோயிலும் ஒன்று.

8) வியாபாரம் செய்ய கடல் வழியாக இந்தியாவின் மேற்கு பகுதிக்கு வந்த கிரேக்கர்களும், ரோமானியர்களும், கப்பலில் இருந்து இறங்கி பின் சாலை வழியாக அன்றைய சோழ நகருக்கு செல்ல பயன்படுத்திய வழி.

9) பண்டைய கொங்கு வர்தக வழியில் அமைந்திருந்த இந்த கோயிலின் (Kongu Trade Route) சிவனை "குரக்குதை நாயனார்" என்று வழிபட்டுள்ளனர்.

10) பாண்டியர்களால் கட்டப்பட்ட கோயிலாக இருப்பினும், இங்குள்ள சில சிற்பங்கள்,கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிலேயே, இந்த இடத்தில் சிவ லிங்கத்தை வைத்து அன்றைய பழங்குடி மக்கள் பூஜைகள் மேற்கொண்டு வந்துள்ளது தெரிகின்றது.

இவ்வளவு கலை அம்சத்துடனும், வரலாற்று பின்னணியுடனும் இருக்கும் இந்த கோயில் குறித்த தகவலை உங்களை நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.கோவை, திருப்பூர் செல்லும் போது கட்டாயம் சென்று காண வேண்டிய மிக அழகான கோயில்.

நான்கு வருடங்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்ட நிர்வாகமும், சுற்றாலத்துறையும் இணைத்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த கோயில் சிறப்பம்சம் அடங்கிய துண்டு பிரசுரங்களை விநியோகித்தும் எந்த பலனும் இல்லை.

சுற்றாலத்துறையின் போதுமான விளம்பர நடவடிக்கைகள் இல்லாததால், வேலைப்பாடுகள் நிறைந்த மிக அழகான கோயிலாக இருப்பினும், இந்த கலைப் பொக்கிஷம் குறித்த தகவல் உள்ளூர் பக்தர்களுக்கோ, வெளிநாட்டு கலை ஆர்வலர்களுக்கோ, இது போன்ற ஒரு கோயில் இருப்பதே சரியாக தெரியாது.

ஆகையால் நம்மால் முடிந்த அளவு விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். வால்மீகி ராமாயணத்தை எழுதி முடித்தபோது, 

அதனை படித்த நாரதர் 'நன்றாகத்தான் இருக்கிறது,

 ஆனால் அனுமன் எழுதியது தான் சிறந்தது', என்றார்.

வால்மீகிக்கு இது சற்று அதிர்ச்சியாக இருந்தது, 

யாருடைய ராமாயணம் சிறந்தது என்று யோசித்தார். 

அதனால் அனுமன் எழுதிய ராமாயணத்தை கண்டுபிடித்து, படிக்கப் புறப்பட்டார்.

அனுமனின் வாழைத்தோட்டமான கதலி-வனத்தில், 

வாழை மரத்தின் ஏழு அகன்ற இலைகளில் ராமாயணம் பொறிக்கப்பட்டிருப்பதைக் கண்டார்.

அவர் அதைப் படித்த பின்னர், அதுவே சரியானது என எண்ணினார்.. 

இலக்கணம், சொல்லகராதி, தர்க்கம் மற்றும் மெல்லிசை ஆகியவற்றின் மிக நேர்த்தியான தேர்வு.  

படித்த பின்னர், அவர் கட்டுபாடின்றி அழ ஆரம்பித்தார்.

'என் ராமாயணம் நன்றாக இருக்கிறதா ஏதேனும் பிழைகள் குறைகள் இருக்கிறதா?' 

என்று அனுமன் கேட்க, 'இல்லை, இதுவே மிகவும் சிறந்தது' என்றார் வால்மீகி.

'அப்புறம் ஏன் அழுகின்றீர்கள்?' என்று அனுமன் கேட்க,

 "ஏனென்றால், உன்னுடைய ராமாயணத்தைப் படித்த பிறகு யாரும் என் ராமாயணத்தைப் படிக்க மாட்டார்கள்", என்று வால்மீகி பதிலளித்தார்.

இதைக் கேட்ட அனுமன் ஏழு வாழை இலைகளைக் கிழித்து எறிந்தார்.

"இப்போது யாரும் என் ராமாயணத்தைப் படிக்க மாட்டார்கள்."

அனுமனின் இந்தச் செயலைக் கண்டு அதிர்ச்சியடைந்த வால்மீகி,

 "ஏன் இப்படிச் செய்தாய்" என்று கேட்க, 

அனுமன், 'எனது ராமாயணம் எனக்காக எழுதப்பட்டது, யாரும் படித்து போற்ற அல்ல, 

ஆனால் உங்களுடையது, உலகமே என் ராமனை அறிய எழுதப்பட்டது.

 அது அனைவரையும் சென்றடையும்போது, 

இதைவிட சிறந்தது என எதுவும் இருக்கக் கூடாது, 

எனவே எனக்காக மட்டும் எழுதியது தேவையில்லை என அழித்து விட்டேன்.

அப்போதுதான் வால்மீகி உணர்ந்தார், 

"ராமரை விடப் பெரியவர்.... 
ராமரின் பெயர்! 

அந்த ராமன் விரும்புவது, 
அந்த பெயரை விடவும், 
ஆழ்ந்த அனுமன் பக்தியை".

புகழ் பெற விரும்பாத அனுமன் போன்றவர்களும் இருக்கிறார்கள்.

 அவர்கள் தங்கள் வேலையைச் செய்து, தங்கள் வாழ்வின் நோக்கத்தை நிறைவேற்றுகிறார்கள்.

நம் வாழ்விலும் பாடப்படாத, பெரிதும் கவனிக்கப் படாத 

 "அனுமன்கள்" பலர் இருக்கிறார்கள், நம் மனைவி, தாய், தந்தை, நண்பர்கள்.

இந்த உலகில், ஒவ்வொருவரும் அவரவர் வேலையைச் சிறப்பித்து,

 சரிபார்ப்பைத் தேடும் இந்த உலகில், 
நாம் நமது கர்மாவைச் செய்வோம்,

 ஏனென்றால் சர்வவல்லமையுள்ள கடவுளுக்கு சொல்லாமலே தெரியும், தன் உண்மையான பக்தன் யார் என்பது...🪷 ☘️ சமணர்களால்
வஞ்சிக்கப்பட்ட அப்பர் பெருமான்

☘️சுண்ணாம்பு அறையில் பூட்டி
தீயிட்டார்கள்

☘️அப்பர் பெருமானை தொட்ட தீ.....
குளிர்ந்தது

☘️விஷம் வைத்த உணவும் அமுதம் ஆனது

☘️ யானையின் காலடியில் தள்ளிய போதும்
யானையும் அப்பர் பெருமானுக்கு தலை வணங்கியது

☘️ கருங்கல்லில் கட்டி நடுக்கடலில் வீசியெறிந்த போதும்

கருங்கல்லும் தெப்பமாய் மாறியது

அதிகை வீரட்டம்
திருவருள் இருக்கையில்

அஞ்சுவது யாதொன்றும் இல்லை

அஞ்ச வருவதுமில்லை
ஆன்றோர் வாக்கு #ஊட்டி போக போறீங்களா...? இதை படிச்சிருங்க....

"அடிக்கிற வெயிலுக்கு ஊட்டி போய் சில் பண்ணுவோம் ப்ரோ" ன்னு உங்களை யாரேனும் கூப்பிட்டால் அது உங்கள் கிட்னியை உருவுவதற்கான code word என்றறிக. அதுவும் குடும்பத்தோடு என்று சொன்னால்... அடுத்த கிட்னியும் காணாமல் போக போகிறது என்று பொருள்.

மேட்டுப்பாளையம் தாண்டி.. ஊட்டி கோத்தகிரி பிரிவுக்கு முன்னிருக்கும் பவாணி ஆற்று பாலத்தை கடக்கும் போதே... வறண்டு கிடக்கும் ஆறு அபாய சங்கை ஊதி விடுகிறது.. செத்தாதான் மேல போவாங்க... நீ மேல போனாலும் செத்த.. என அது கொடுக்கும் எச்சரிக்கையையும் மீறி மேலே ஏறுகிறோம். இல்லை... இல்லை.. ஆல்ரெடி மேலே ஏற காத்திருக்கும் வாகனங்களின் அணிவகுப்பில் நாமும் இணைந்து கொள்கிறோம். ஏதோ ஒரு பேரணி போல மெல்ல மெல்ல ஊறி... டிசம்பர் மாத பனி புகையினை தரிசித்த கண்கள்... முன்னே செல்லும் வாகனங்களின் டீசல் புகையின் வீச்சை தாங்க இயலாமல் கலங்குகின்றன. மேலே போக போக சூரியனுக்கும் நமக்கும் உள்ள இடைவெளி குறைந்து உச்சி வெயில் 
மண்டையே பிளக்க ஆரம்பிக்க.. காரில் ஏ.சி யை நான்கிற்கு திருப்புகிறோம். எதேனும் இடத்தில் ஓரம் கட்டி.. கட்டிக்கொண்டு வந்த இட்லியை பிரித்த வேகத்தில்.. குரங்கார்கள் அதன் மீது உக்கிரமாக பாய்கிறார்கள். அடேய்... இது ஊட்ல செஞ்சதுடா... ஹோட்டல்ல வாங்குனது இல்ல... அவ்வளவு ருசியா எல்லாம் இருக்காதுடா என நாம் சொல்வதற்குள்.. தட்டில் வைத்த இட்லியோடு காணாமல் போகிறார்கள். 

ஊட்டியை நெருங்கியதும், முதலில் நம்மை திணற வைப்பது ட்ராபிக். கால் வைக்கும் இடங்களில் எல்லாம் கண்ணி வெடி இருப்பது போல.. ஒன் வே...., நோ என்ட்ரி, டேக் டைவர்சன் போர்டுகள் சுற்றி சுற்றி நம்மை குழப்பி அடிக்க.. மூலவரை பார்க்கறதுக்கு முன்னாடி புள்ளையாரை மூணு சுத்து சுத்துவது போல.. ஊட்டி ரவுண்டாணாவை எதற்கு சுத்துகிறோம் என தெரியாமலேயே மூன்று சுற்றுக்கள் சுற்றுகிறோம். அப்படியும் போக வேண்டிய இடத்தை நெருங்கி விட்டாலும்... அதை விட பெரிய பிரச்சனை பார்க்கிங் கிடைப்பது. கல்யாணம் செய்யும் வயசு வந்தாலும் பொண்ணு கிடைக்காமல் அல்லாடுவது போல... ஒரு பார்க்கிங் ஸ்பேஸ் கிடைக்க கண்டபடி அல்லாடுகிறோம். மறுபடியும் ரவுண்டாணாவை ரெண்டு சுற்று. ப்ரைவேட் பார்க்கிங் ஸ்லாட்டுகளில் மணிக்கு 80ல் இருந்து 100 வரை, நம் முகத்தில் ஓடும் இளிச்சவாய களைக்கு தகுந்தபடி வசூலிக்கிறார்கள். யப்பா... ஒருவழியா பார்க்கிங் கிடைச்சது... கார்டனுக்கு எப்படி போகணும் என வழி கேட்டால்... அது ஒரு கிலோ மீட்டர் தள்ளியில்ல இருக்குது. ஒரு ஆட்டோ வச்சு போயிக்குங்க என கொலை காண்டு ஏற்றுகிறார்கள். "அடேய்... காரை வச்சுக்கிட்டு நான் ஏண்டா ஆட்டோவில போகணும்" என நமக்கு நாமே கேட்டுக்கொண்டு நடந்தே கார்டனை அடைகிறோம்.

டிக்கெட் கவுண்டரில் வரிசை நின்று... கார்டன் உள்ளே நுழைந்து, ஸ்ப்ப்ப்பா ஒரு ஓரமா உட்காரலாம் என புல்லின் மேல் அமர்ந்தால்... எங்கிருந்தோ ஒரு அக்கா விசில் அடிக்கிறார்கள். அடடே.. என ஆர்வமாய் திரும்பினால்... "ஆல்ரெடி அது கருகி கிடக்குது... எந்திரிச்சு போப்பா.." என விரட்டுகிறார்கள். உட்கார இடம் இல்லை... வெறுக்கு வெறுக்கு என கூட்டம் வியர்வையில் நனைந்தபடி அங்கிட்டும் இங்கிட்டும் அலை பாய்கிறது. புழுதி பறக்கிறது. சில அப்பாவி குடும்பஸ்தன்கள் இதுக்கு மேல தாங்காது என கிடைத்த இடத்தில் துண்டை விரித்து படுத்து விடுகிறார்கள். டீக்கடை அக்காவிடம் பேசும்போது... தண்ணீருக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுவதை புரிந்து கொள்ள முடிகிறது.

"சிவாஜி... நீ திரும்ப அமெரிக்காவுக்கே போய்டு" என்பது போல.. நாம திருப்பூர்க்கே திரும்ப போயிடுவோம் என வண்டியை கிளப்பி கீழே வந்தால்.. வெலிங்கடனில் இடை மறித்து.. இடது பக்க கண்டோன்மென்ட் சாலையில் நம்மை மடை மாற்றி விடுகிறார்கள். பொருத்தமாய்... காரின் ஆடியோ சிஸ்டத்தில் " எங்கே செல்லும் இந்த பா...........தை என ராஜாவும் அழ ஆரம்பிக்கிறார். மதிய 
உணவுக்கு... ரீல்ஸ் பார்த்து குன்னூர் ராமசந்திரா ஹோட்டலுக்கு போனால்... அங்கேயும் அதே பார்க்கிங் பிரச்சனை.. மறுபடியும் பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள பெய்ட் பார்க்கிங்கில் வண்டியை சொருகி விட்டு சாப்பிட வந்தால்... அது ஒரு தனி பதிவாய் போடும் அளவிற்கு சோகம். 

சரி... வேகமாய் கீழே இறங்கலாம் என குன்னூரில் லெப்ட் ஒடிக்கும்போதே... வந்தது வந்துடீங்க.. கோத்தகிரி வழியா போய் அதையும் சுத்தி பார்த்துட்டு போய்டுங்க என நம்மை கோத்தகிரி பாதைக்கு திருப்பி விடுகிறார்கள். 22 கிலோமீட்டர்கள் எக்ஸ்ட்ராவாய் இறங்கும்போதும்... அதே பேரணி... அதே டீசல் புகை.

அப்பாவி குடும்பஸ்தர்கள் ஊட்டிக்கு போக...ஒன்றிற்கு இரண்டு முறை யோசித்து, டயருக்கு கீழே எலுமிச்சை பழம் வைக்கவும். அதுவும் விடுமுறை தினங்களை சர்வ நிச்சயமாய் தவிர்த்து விடவும். ஏனெனில் ஊட்டி அழகாய் இருப்பது நிச்சயம் கோடை காலத்தில் அல்ல... மூன்றாம் பிறை படத்தில் வரும் அழகான ஊட்டியை காண நீங்கள் குளிர்காலம் வரை காத்திருக்க வேண்டும். ஆனால் இப்போதோ, அவசரத்தில் மேக்கப் போடாமல் எதிரே வந்த தமிழ் சினிமா ஹீரோயினை போல கருகி போய்... காய்ந்து போய் கிடக்கிறாள் மலைகளின் ராணி.

அப்ப... நான் சம்மருக்கு என்னதான் பண்றது என கேட்பவர்களுக்கு... ஊட்டி போய் வர செலவாகும் பணத்தை இனிஷியல் அமௌன்ட்டாய் போட்டு emi யில் ஒரு ஏசி எடுத்து மாட்டி விடவும். அட்லீஸ்ட்.. மிச்சமிருக்கும் மே மாச அக்னி வெயிலை எதிர்கொள்ள ஏதுவாய் இருக்கும்.சுக்ரீஸ்வரர் கோவில் முக்கிய சிறப்புகள்:-
1. பொய் ஆகவே ஆகாது!
2. கோவில் மேல் கோவில!

திருப்பூரிலிருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் 8 கிலோமீட்டர் தொலைவில் சர்க்கார் பெரியபாளையத்தில் சுக்ரீஸ்வரர் கோவில் உள்ளது. ராமாயண காலத்தில் ஸ்ரீராமருக்கு உதவியாக இருந்த சுக்ரீவன், இங்கு ஈஸ்வரனை பிரதிஷ்டை செய்து வழிபட்டதால் மூலவருக்கு சுக்ரீஸ்வரர் என்று பெயர் வந்ததாக தல புராணம் கூறுகிறது. இதற்கு சான்றாக ஆலயத்தில் அர்த்த மண்டப சுவரில், சுக்ரீவன் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யும் புடைப்புச் சிற்பம் உள்ளது. இத்தல இறைவன் குரக்குத்தளி ஆடுடைய நாயனார் என்றும் அழைக்கப்படுகிறார்.

தற்போது இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இக்கோவில் சமயக்குரவர்களுள் ஒருவரான சுந்தரர் பாடல் பெற்ற தலமாகும். ஆகையால் இது 8–ம் நூற்றாண்டைச் சேர்ந்த கோவிலாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் கி.பி. 1220–ம் ஆண்டை சேர்ந்த ஒரு கல்வெட்டுதான் இங்கு காணப்படுகிறது.

இந்தக் கோவிலில் மூலவர் சுக்ரீஸ்வரர், லிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். வலதுபுறம் ஆவுடைநாயகியாக அம்மன் தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார். சுற்றுப் பிரகாரங்களில் கன்னி மூல விநாயகர், தட்சிணாமூர்த்தி, சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், பைரவர் சன்னிதிகளும், எந்த சிவன் கோவில்களிலும் இல்லாத சிறப்பாக கருவறைக்கு நேர் எதிரே பத்ரகாளியம்மன் சன்னிதியும் உள்ளது.

பஞ்சலிங்கங்க கோவில்:-

நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் என பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில், பஞ்சலிங்கங்கள் இந்தக் கோவிலில் அமைந்துள்ளன. மூலவராக அக்னி லிங்கம், மீதம் மூன்று லிங்கங்கள் கோவிலை சுற்றிலும் அமைந்துள்ளன. சிவனுக்கு பிடித்த வில்வமரத்தின் கீழ், ஐந்தாவதாக ஆகாச லிங்கம் அமைந்துள்ளது.

நான்கு யுகங்களை கடந்தது இக்கோவில் வரலாறு:-

2,500 ஆண்டுகளுக்கு முந்தையது என தொல்லியல் துறை கூறினாலும், 17.28 லட்சம் ஆண்டுகளை கொண்ட கிரதாயுகத்தில், காவல் தெய்வமாகவும், 12.96 லட்சம் ஆண்டுகளை கொண்ட திரேதாயுகத்தில் சுக்ரீவனாலும், 8.64 லட்சம் ஆண்டுகளை கொண்ட துவாபரயுகத்தில், இந்திரனின் வாகனமாக ஐராவதத்தாலும், வணங்கப்பட்டது எனவும், 4.32 லட்சம் ஆண்டுகளை கொண்ட, கலியுகத்தில், தேவர்களாலும், அரசர்களாலும் வணங்கப்பட்டு, நான்கு யுகங்களை கண்ட கோவில் என்ற வரலாறும், அதற்கான சான்றுகளும் கோவிலில் உள்ளன.

கோவில் மேல் கோவில்:-

1952–ம் ஆண்டு தொல்லியல் துறை இந்த கோவிலை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து ஆய்வு செய்தது. அப்போது கோவிலை மீண்டும் புனரமைக்க முடிவு செய்து, கோவில் அஸ்திவாரத்தை பலப்படுத்த நடவடிக்கை எடுத்தது. கோவில் கற்களை பிரித்து பார்த்தபோது, தற்போதுள்ள கோவிலை போலவே பூமிக்கடியிலும், இதே கட்டுமானத்தில் ஒரு கற்கோவில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கற்கோவிலுக்கு மேல் மற்றொரு கோவில் எழுப்பப்பட்டிருக்கும் இந்த அமைப்பு வித்தியாசமாக இருப்பதாக கூறப்படுகிறது.

சிதம்பரம், பேரூர் கோவிலுக்கு அடுத்து, சிறப்பான வேலைப்பாடுகளுடன், சக்தி வாய்ந்ததாக சுக்ரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. கோவிலுக்கு என 450 ஏக்கர் நஞ்சராயன்குளம், கோவிலை சுற்றிலும் தண்ணீர் தேங்கும் அகழி, தெப்பக்குளம், இப்பகுதியில் அமைந்திருந்த முகுந்த பட்டணத்தில் இருந்து, மூலவருக்கு அருகே வெளியே வரும் வகையில் அமைந்துள்ள குகை, சிறப்பான வேலைப்பாடுகளுடன் கூடிய கருவறை கோபுரம் என தெரியாத விஷயங்கள் பல உள்ளன.

அதேபோல் கோவிலுக்கு மேற்கு பகுதியில் 56 வகையான நட்சத்திர, ராசி, திசை மரங்கள் நடப்பட்டு பெண்கள் நலபயணம் மேற்கொள்ள தனியாக நடைபாதையும் போடப்பட்டுள்ளது.

பொய் ஆகவே ஆகாது!
மிளகு, பயிராக மாறியது:-

ஒரு வியாபாரி, பொதிச்சுமையாக, மாடுகள் மீது மிளகு மூடைகளை ஏற்றிக்கொண்டு அவ்வழியாக சென்றுள்ளார். அப்போது மாறுவேடத்தில் வந்த சிவன் மூட்டைகளில் என்ன என கேட்க, அந்த வியாபாரி மிளகுக்கு இருந்த விலைமதிப்பு காரணமாக, பாசிப்பயிறு என கூறியுள்ளார். பின்னர் 15 நாட்களுக்கு அந்த வியாபாரி சந்தைக்குச் சென்று பார்த்தபோது, மிளகு மூடைகள் அனைத்தும் பாசிப்பயிறு மூடைகளாக மாறியிருந்தன. அதிர்ச்சி அடைந்த விவசாயி, இறைவனிடம் கதறி அழுது வேண்டினார். இதைதொடர்ந்து இறைவன் கனவில் சென்று, உன் மாடுகள் எங்கு வந்து நிற்கிறதோ, அங்கு வந்து வணங்கு. உன் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்று கூறியுள்ளார். இதைதொடர்ந்து வியாபாரியும் மாட்டை ஓட்டி வந்து மாடு நின்ற இடத்தில் சுக்ரீஸ்வரரை வணங்கியதால் பாசிப்பயிராக இருந்த மூடைகள் மிளகு மூடைகளாக மாறின. இப்பகுதி மக்கள் மிளகு ஈஸ்வரரே என்று அழைத்துவருவது குறிப்பிடத்தக்கது. அதனால் இங்கு வந்து மிளகு பூஜை செய்தால் தீர்வு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. இத்துடன் கடந்த 14 வருடங்களாக காள பைரவர் பூஜை அஷ்டமி, தேய்பிறையில் மாதந்தோறும் விமரிசையாக நடைபெற்று வருகிறது.

இரண்டு நந்தி:-

இந்தக் கோவில் இரண்டு நந்திகள் உள்ளன. முதலில் உள்ள நந்திக்கு கொம்பு, காது இல்லை. இதற்கு ஒரு கதை கூறப்படுகிறது. கோவில் நந்தி அருகிலுள்ள விவசாய நிலத்துக்கு சென்று மேய்ந்துள்ளது. ஆத்திரமடைந்த விவசாயி இடுப்பில் இருந்த கத்தியை எடுத்து நந்தியின் காதையும், கொம்பையும் வெட்டியுள்ளார். மறுநாள் கோவிலுக்கு வந்து பார்த்தபோது, கற்சிலையான நந்தியின் காதில் இருந்து ரத்தம் வழிந்துள்ளது. அதிர்ச்சியடைந்த விவசாயி, தனது தோட்டத்துக்கு வந்தது நந்தி என அறிந்ததும், தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டு வணங்கியுள்ளார். பின்னர் தவறுக்கு பிராயச்சித்தமாக, மற்றொரு நந்தி சிலை செய்து அதனை ஆலயத்தில் பிரதிஷ்டை செய்துள்ளார். பழைய நந்தியை அகற்ற முயற்சித்து முடியாமல் போனதால், அந்தப் பணியை கைவிட்டு விட்டனர். மறுநாள் வந்து பார்த்தபோது, பழைய நந்தி முன்பும், புதிய நந்தி பின்னாலும் மாறி இருந்துள்ளது. சிவன் கனவில் வந்து, உறுப்புகள் இல்லை என்றாலும், அதுவும் உயிர்தான் எனவும், பழைய நந்தி முன்னால் இருக்க வேண்டும்; மற்றது பின்னால்தான் என கூறியுள்ளார். அதன் அடிப்படையில், இன்றும் இரண்டு நந்திகள் அமைந்துள்ளன. பிரதோஷ காலங்களில், இரண்டு சிலைக்கும் பூஜை நடத்தப்படுகிறது.

மிளகீசன்:-

சுக்ரீஸ்வரர் கோயில், ராமாயண காப்பியத்துடன் தொடர்புடையது, வானர அரசன் சுக்ரீவன் தனது அண்ணனைக் கொன்றதற்குப் பிராயச்சித்தம் செய்ய இங்குள்ள ஈசனை லிங்கம் அமைத்து வழிபட்டதால் இக்கோவில் சுக்ரீஸ்வரர் என பெயர் பெற்றது, இந்த சிற்பத்தில் சுக்ரீவன் ஈசனை பூஜை செய்வதை காணலாம். உடலில் 'மரு' உள்ளவர்கள் இப்பெருமானுக்கு மிளகைப் படைத்து, அதில் சிறிதளவு மிளகை எடுத்து வந்து 8 நாள்களுக்கு உணவில் சேர்த்துச் சாப்பிட்டால் 'மரு'க்கள் மறைந்துவிடும். இவ் ஈசனை மக்கள் 'மிளகீசன்' என்றும் அழைக்கின்றனர். கல்வெட்டில் இவ்விறைவன், 'ஆளுடைய பிள்ளை' என்று குறிக்கப்படுகிறார்.

கோயில் குறித்த சிறப்பம்சங்கள்:

1) ஆவுடைநாயகி அம்மனுக்கென தனி கோவிலும், சிவனுக்கென தனி கோயிலும் அமைந்துள்ளது. அம்மனுக்கான தனி கோவில், வலது புறம் இருப்பதால் பாண்டியர்களின் பணி என்பது தெரிகின்றது.

2) உத்தராயணமும் தட்சிணாயணமும் சந்திக்கும் - வேளையில் சூரிய ஒளி சுவாமி மீது படுகிறது.

3) கோயிலின் விமானம் சோழர்களின் பணியை காட்டுகின்றது.

4) ஒன்றின் பின் ஒன்றாக இரண்டு நந்திகள் உள்ள கோயில். இக்கோயிலில் உள்ள ஒரு நந்திக்கு இரண்டு காதுகளும் அறுபட்டுள்ளன. (இது தலவரலாறு தொடர்புடையது.)

5) ஐந்து லிங்கங்கள் உள்ள கோயில், மூன்று வெளியில், ஒன்று மூலவர், மற்றொன்று கண்ணுக்கு தெரியாதது.

6) கொங்கு பகுதியில் சிவன் கோயில்களில் இருக்கும் "தீப ஸ்தம்பம்" இந்த கோயிலில் கிடையாது.கோயில் கிழக்கே பார்த்து இருந்தாலும், உள்ளே செல்லும் படிகள் தெற்கு பார்த்து அமைந்துள்ளது.

7) கொங்கு நாட்டில் உள்ள நான்கு "சிற்ப ஸ்தலங்களில்" இந்த சுக்ரீஸ்வரர் கோயிலும் ஒன்று.

8) வியாபாரம் செய்ய கடல் வழியாக இந்தியாவின் மேற்கு பகுதிக்கு வந்த கிரேக்கர்களும், ரோமானியர்களும், கப்பலில் இருந்து இறங்கி பின் சாலை வழியாக அன்றைய சோழ நகருக்கு செல்ல பயன்படுத்திய வழி.

9) பண்டைய கொங்கு வர்தக வழியில் அமைந்திருந்த இந்த கோயிலின் (Kongu Trade Route) சிவனை "குரக்குதை நாயனார்" என்று வழிபட்டுள்ளனர்.

10) பாண்டியர்களால் கட்டப்பட்ட கோயிலாக இருப்பினும், இங்குள்ள சில சிற்பங்கள்,கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிலேயே, இந்த இடத்தில் சிவ லிங்கத்தை வைத்து அன்றைய பழங்குடி மக்கள் பூஜைகள் மேற்கொண்டு வந்துள்ளது தெரிகின்றது.

இவ்வளவு கலை அம்சத்துடனும், வரலாற்று பின்னணியுடனும் இருக்கும் இந்த கோயில் குறித்த தகவலை உங்களை நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.கோவை, திருப்பூர் செல்லும் போது கட்டாயம் சென்று காண வேண்டிய மிக அழகான கோயில்.
ஓம் நமசிவாய

அட்சய திருதியை மகாலட்சுமியை வழிபடுவது ஏன் ?

அட்சய திருதியை மகாலட்சுமியை வழிபடுவது ஏன் முக்கியம்?
வெள்ளிக்கிழமையில் இந்த ஆண்டு அட்சய திரிதியை வருவதால் இது கூடுதல் சிறப்புடையதாகவும், அதிக முக்கியத்துவம் வாய்ந்த நாளாகவும் கருதப்படுகிறது.
மகாகவி காளிதாசர் அருளிய உத்திர காலாமிருதம் என்னும் ஜோதிட நூல், திதி நாள்களில் மிகவும் விசேஷமானது திருதியை என்று கூறுகிறது. அதிலும் சித்திரை மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் 3வது பிறையான அட்சயத் திருதியை மிகவும் மகிமைமிக்கது என சாஸ்திரங்கள் கூறுகின்றன.

அட்சயம் என்றால் பூரணமானது, அழியாத பலன் தரக்கூடியது என்பார்கள். ‘வளருதல்’ என்றும் அர்த்தம் உண்டு. இந்தத் திருநாளில் துவங்கும் நற்காரியங்கள், பன்மடங்கு பலனைப் பெற்றுத் தரும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்!

அதனால் தான் அன்று தங்கம் வாங்கினால் மேலும் மேலும் வளரும் என்ற நோக்கில் தங்கத்தை மக்கள் வாங்குகின்றனர்.

ஆனால் அட்சய திருதியை அன்று, உப்பு வாங்கினாலே போதும். தங்கம் வாங்குவதற்குரிய பலன்கள் கிடைக்கும். மேலும் இல்லத்தில் சுபிட்சமும் ஐஸ்வரியமும் குடிகொள்ளும் என்பது ஐதீகம்.


அட்சய திருதியை தேதி 2024

இந்த ஆண்டு அட்சய திருதி மே 10ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 4:17 மணிக்கு திரிதியை திதி தொடங்கி, மே 11ஆம் தேதி சனிக்கிழமை அன்று மதியம் 2:50 மணிக்கு முடிவடைகிறது. உதயதிதியின் அடிப்படையில் மே 10ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று அட்சய திதியை கொண்டாடப்படுகிறது

மகாலட்சுமிக்கு மங்களகரமான வெள்ளிக்கிழமையில் இந்த ஆண்டு அட்சய திரிதியை வருவதால் இது கூடுதல் சிறப்புடையதாகவும், அதிக முக்கியத்துவம் வாய்ந்த நாளாகவும் கருதப்படுகிறது.


மகாலட்சுமி வழிபாடு

அட்சய திருதியை அன்று அதிகாலையிலேயே எழுந்து நீராடிவிட்டு, கோவிலுக்கு சென்றோ அல்லது வீட்டின் பூஜை அறையிலோ விளக்கேற்றி மகாலட்சுமியையும், பெருமாளையும் வழிபட வேண்டும். அவர்களுக்குரிய மந்திரங்களை சொல்லி பூஜை செய்ய வேண்டும். பின்னர் தூப, தீப ஆராதனைகள் செய்யுங்கள். இந்த பூஜையில் பாயசம் அல்லது சர்க்கரை கலந்த பால் நிவேதிப்பது சிறப்பானது.

அன்றைய தினம் மாலையில் சிவாலயம், பெருமாள் கோயில் என்று உங்களால் இயன்ற தலத்திற்குச் சென்று தரிசியுங்கள். இதனால் வீட்டில் செல்வம் பெருகும், லட்சுமி கடாட்சம் உண்டாகும்.


அட்சய திருதியை தினத்தன்று விநாயகரையும், லட்சுமியையும் வணங்கி புது கணக்கு தொடங்குவது விஷேசம்.

இப்படி எல்லா நலன்களையும் குறைவிலாது அள்ளிக் கொடுக்கும் இந்த அட்சய திருதியை நாளில் குலதெய்வ, இஷ்ட தெய்வங்களையும் வணங்கி வழிபடுங்கள். 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் நெல்லிக்குப்பம்.

திருவேதிகுடி வேதபுரீசுவரர் கோயில் சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள
#திருவேதிகுடி
#வேதபுரீஸ்வரர் (வாழைமடுநாதர்) 
#மங்கையர்க்கரசி
திருக்கோயில் (தேவாரப் பாடல் பெற்ற தலம்) 
திருவேதிகுடி வேதபுரீசுவரர் கோயில் சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பிரமனும் வேதமும் வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 14வது சிவத்தலமாகும்.

மூலவர்:வேதபுரீஸ்வரர், வாழைமடுநாதர்
அம்மன்:மங்கையர்க்கரசி
தல விருட்சம்:வில்வம்
தீர்த்தம்:வைத தீர்த்தம், வேததீர்த்தம்
புராண பெயர்:திருவேதிகுடி
ஊர்:திருவேதிகுடி
மாவட்டம்:தஞ்சாவூர்
மாநிலம்:தமிழ்நாடு

பாடியவர்கள்:

அப்பர், சம்பந்தர்

தேவாரப்பதிகம் :

"வருத்தனை வாளரக்கன்முடி தோளொடு பத்திறுத்த பொருத்தனைப் பொய்யா அருளனைப் பூதப்படையுடைய திருத்தனைத் தேவர்பிரான் திருவேதி குடியுடைய அருத்தனை ஆரா அழுதினை நாமடைந் தாடுதுமே"

-திருநாவுக்கரசர்

பெயர்க்காரணம்:

வேதி - பிரமன். பிரமன் பூசித்த தலமாதலின் வேதிகுடி என்று பெயர் பெற்றது. வேதம் வழிபட்டதாகவும் கூறுவர். ( 'விழுதிகுடி' என்பது மருவி 'வேதிகுடி' ஆயிற்று என்பர் ஒருசாரார்.)
சுவாமி வாழைமடுவில் உற்பத்தியானதால் 'வாழைமடு நாதர் ' என்றும் அழைக்கப்படுகிறார்.

தல சிறப்பு:

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஆண்டுதோறும் பங்குனி 13,14,15 தேதிகளில் சூரியனின் ஒளி கதிர்கள் சிவ லிங்கத்தின் மீது விழுகிறது.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 77 வது தேவாரத்தலம் ஆகும். 

பொது தகவல்:

கிழக்கு நோக்கிய 3 நிலை ராஜகோபுரம். ஒரு பிரகாரம். உள்பிரகாரத்தில் செவி சாய்த்த விநாயகர், 108 லிங்கங்கள், சுப்பிரமணியர், தெட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், துர்க்கை, முருகன், மகாலட்சுமி, நடராஜர், சப்தஸ்தான லிங்கங்கள் உள்ளன. ராஜசேகரிவர்மன், கோப்பரகேசரிவர்மன் இவர்கள் காலங்களில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் உள்ளன. இதில் இறைவனின் பெயர் திருவேதிகுடி மகாதேவர் என்றும், பரகேசரி சதுர்வேதிமங்கலத்து மகாதேவர் என்றும் குறிக்கப்பட்டுள்ளது.

வாழைமடுவில் இறைவன் தோன்றிய காரணத்தினால் வாழைமடுநாதர் என்ற பெயரும் உண்டு. பல்லவ மன்னர்களும் திருப்பணி செய்துள்ளனர்.

தலபெருமை:

பொதுவாக சம்பந்தர் கோயில் இறைவனைப்பற்றி பாடுவார். ஆனால் இத்தலத்தில் திருமணத்தடை நீக்கும் பாடலை பாடியுள்ளது சிறப்பு. திருஞானசம்பந்தர் இக்கோயிலைப்பற்றி தான் பாடிய பதிகத்தின் ஏழாவது பாட்டில், “”உன்னி இருபோதும் அடிபேணும் அடியார்தம் இடர் ஒல்க அருளி துன்னிஒரு நால்வருடன் ஆல்நிழல் இருந்த துணைவன் தன் இடமாம் கன்னியரொடு ஆடவர்கள் மாமணம் விரும்பி அருமங்கலமிக மின் இயலும் நுண்இடை நன்மங்கையர் இயற்றுபதி வேதிகுடியே என்று பாடியுள்ளார். பொதுவாக அர்த்தநாரீஸ்வரர் என்றால் சிவன் வலது புறமும், அம்மன் இடது புறமும் இருப்பார்கள். ஆனால் இங்கு பெண்களுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் சிவனின் வலது புறம் அம்மன் இணைந்துள்ள அர்த்தநாரீஸ்வர கோலம் இங்கு வித்தியாசமாக உள்ளது.

விசேஷ விமானம்: 

சப்தஸ்தான தலங்களில் நான்காம் கோயில் இது. முழுவதும் கல்லால் அமைக்கப்பட்ட விமானத்தின் கீழ், வேதபுரீஸ்வரர் வீற்றிருக்கிறார். விமானத்தின் நான்கு திசைகளிலும் வேதங்களை உணர்த்தும் நந்திகள் உள்ளன. வடதிசையில் சிவனுடன் எப்போதும் இருக்கும் மனோன்மணி அம்பிகை சிலை உள்ளது. சிவன் சன்னதிக்குப் பின்புள்ள (கோஷ்டம்) அர்த்தநாரீஸ்வரர், விசேஷமானவர். வழக்கமான சிவனுக்கு இடப்புறம்தான், அம்பாள் இருக்கும்படி அர்த்தநாரீஸ்வரர் சிலை இருக்கும். இங்கு, அம்பிகை வலப்புறம் இருக்கிறாள். இத்தகைய அமைப்பைக் காண்பது மிக அபூர்வம். தற்போது இந்த சிலை சேதமடைந்த நிலையில் உள்ளது.

பிரம்மன் (வேதி) வழிபட்ட தலமாதலால் திருவேதிகுடி ஆனது. பிரம்மன் பூஜித்த தெட்சிணாமூர்த்தியை நாமும் வழிபட்டால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம். 4 வேதங்களும் இங்கு இறைவனை வழிபட்டுள்ளன. வேதம் கேட்பதில் விருப்பமுள்ள பிள்ளையார் இத்தலத்தில் தலை சாய்த்து அருள்பாலிக்கிறார். எனவே இவர் வேத பிள்ளையார் எனப்படுகிறார். நான்கு வேதங்களையும் பயின்றவர்கள் இத்தலத்தில் அதிகமாக வாழ்ந்த காரணத்தினால் சதுர்வேதிமங்கலம் என்ற பெயரும் இருந்துள்ளது.

கல்வி சிறக்க வழிபாடு: 

வாளை என்னும் மீன்கள் நிறைந்த தடாகத்தில் கரையில் அமைந்ததால் இவருக்கு “வாளைமடுநாதர்’ என்றும் பெயருண்டு. இவர் வேதங்களுக்கு அதிபதி என்பதால், பிள்ளைகளை பள்ளியில் சேர்க்கும்முன் பெற்றோர் இங்கு வந்து வேண்டிச் செல்கின்றனர். சரஸ்வதி பூஜையன்றும் சிவனுக்கு விசேஷ பூஜை செய்து வழிபடுகின்றனர். பங்குனி 13,14,15 ஆகிய தேதிகளில் சுவாமி மீது சூரிய ஒளி விழும். சிவன் சன்னதி முன் மண்டபத்தில் வேதங்களைக் கேட்டபடி செவிசாய்த்த விநாயகர் இருக்கிறார். கோயில் எதிரே வேத தீர்த்தம் உள்ளது. திருவையாறில் சப்தஸ்தான விழா நடக்கும்போது, ஐயாறப்பர், அம்பிகை, நந்திதேவர் இங்கு எழுந்தருளி, இத்தல மூர்த்தியை அழைத்துச் செல்வர்.

மங்கல அம்பிகை: 

இத்தல அம்பிகை பெண்களுக்கு அரசியாக இருந்து, அவர்களுக்கு மங்களகரமான வாழ்க்கையை அமைத்துத் தருபவதால் “மங்கையற்கரசி’ என்றே பெயர். ஆடி, தை மாத வெள்ளியன்று இவள் சந்தனக்காப்பு அலங்காரத்தில் காட்சி தருவாள். மாங்கல்ய தோஷம் உள்ள பெண்கள் நிவர்த்திக்காக, இவளுக்கு மஞ்சள் புடவை, தாலி அணிவித்து வழிபடுகிறார்கள்.

செவ்வாய் தோஷத்தால் திருமணத்தடையுள்ளவர்கள் இங்குள்ள சுப்ரமணியருக்கு அபிஷேகம் செய்து வேண்டிக் கொள்கின்றனர். இவர் அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடல் பெற்றவர். பிரகாரத்தில் லட்சுமி நாராயணர் இருக்கிறார். அருகில் ஆஞ்சநேயர் வணங்கியபடி கிரீடம் இல்லாமல் இருக்கிறார். சிவன் சன்னதியைச் சுற்றிலும் 108 லிங்கங்கள் உள்ளன.

தல வரலாறு:

பிரம்மாவிடம் இருந்த வேதங்களை, அசுரன் ஒருவன் எடுத்துச் சென்று கடலுக்கடியில் ஒளித்து வைத்தான். அதை, பெருமாள் மீட்டு வந்தார். அசுரனிடம் இருந்ததால் உண்டான தோஷம் நீங்க, வேதங்கள் சிவனை வழிபடவே, அவர் வேதங்களை புனிதப்படுத்தினார். பின், வேதங்களின் வேண்டுதலுக்காக வேதபுரீஸ்வரராக எழுந்தருளினார். தலத்திற்கும் திருவேதிகுடி என்ற பெயர் ஏற்பட்டது. பிரம்மா தனக்கு ஏற்பட்ட ஒரு சாபத்திற்கு, இங்கு சிவனை வேண்டி விமோசனம் பெற்றார். பிரம்மாவிற்கு “வேதி’ என்ற பெயர் உண்டு. இதனாலும் சிவனுக்கு இப்பெயர் ஏற்பட்டதாகச் சொல்வர்.

சோழமன்னன் ஒருவன் தன் மகளின் திருமணம் தொடர்ந்து தடைபட்டு வந்ததால் மிகவும் வருந்தினார். ஒரு முறை அவன் இக்கோயில் வந்து மங்கையர்க்கரசி அம்மனை தரிசனம் செய்து, தன் மகளின் திருமணம் விரைவில் நடக்க வரம் வேண்டினான். அம்மனின் கருணையால் அவனது மகளுக்கு விரைவில் திருமணம் நடந்தது. அன்றிலிருந்து தன் மகளுக்கு மங்கையர்க்கரசி என்று செல்லப்பெயர் சூட்டி தன் நன்றியை தெரிவித்தான். அதன்பின் கோயிலுக்கு பல திருப்பணிகளும் செய்தான்.

மகாமண்டபத்தில் உள்ள விநாயகர் (தலவிநாயகர்) வேதவிநாயகர் எனப்படுகிறார்.
இறைவன் நான்கு முகங்களாலும் அருளிச் செய்யும் நான்கு வேதங்களையும் செவிசாய்த்துக் கேட்கும் நிலையில்; இடக்காலை உயரமாக வைத்து அற்புதமாகக் காட்சித் தருகிறார்.
முதலாம் ஆதித்த சோழன் காலக்கோயிலான இக்கோயிலின் கல்வெட்டில், சுவாமி "வேதிகுடி மகாதேவர் " என்றும், "பரகேசரி சதுர்வேதி மங்கலத்து மகாதேவர் " என்றும் குறிக்கப்படுகிறார்.

திருவையாறு சப்தஸ்தானம் :

திருவையாறு சப்தஸ்தானத்தில் இத்தலமும் ஒன்று. சப்தஸ்தானங்கள் என அழைக்கப்படும் திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி மற்றும் திருநெய்த்தானம் ஆகிய ஏழு ஊர்களில் நடக்கும் ஏழூர்த் திருவிழாவில் திருவையாறுக்கே முதல் இடம். சித்திரை மாதம் பெளர்ணமிக்குப் பின் வரும் விசாக நட்சத்திரத்தன்று ஐயாறப்பர், அறம் வளர்த்த நாயகியுடன் புறப்பட்டு ஒவ்வொரு சப்தஸ்தானத்துக்கும். அங்குள்ள பெருமான் அவரை எதிர் கொண்டு அழைப்பார். இப்படி ஏழு ஊர்களுக்குச் சென்று விட்டு மறு நாள் காலை திருவையாற்றை ஏழு மூர்த்திகளும் அடைவர். அங்கு பொம்மை பூப் போடும் நிகழ்ச்சி நடைபெறும். 

திருவிழா:

திருவையாறு ஐயாரப்பர் சித்திரை மாதத்தில் எழுந்தருளும் ஏழு சிவத்தலங்களுள் இத்தலம் நான்காவதாகும். ஐப்பசியில் அன்னாபிஷேகம், கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, சிவராத்திரி

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

ஆயுள்விருத்தி தரும் அருள்மிகு ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்


.

ஆயுள்விருத்தி தரும் அருள்மிகு ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்
இமயமலை மகா அவதார புருஷர் பாபாஜி பிறந்த தலம் இதுவே. இவருக்கு இங்கு கோயில் உள்ளது. பாபாஜியின் தந்தை சுவேதநாதய்யர் இதே ஊரிலுள்ள முத்துக்குமர சுவாமி (முருகன்) கோயில் அர்ச்சகராகப் பணியாற்றினார்.

தல வரலாறு:

என்றும் பதினாறு வயதுடையவராக இருக்க மார்க்கண்டேயர் வரம் பெற்றது போல, என்றும் 12 வயதுடையவராக இருக்க சித்திரகுப்தர் வரம் பெற்ற தலம் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் கோயிலாகும்.

காஷ்யப மகரிஷி ஒருசமயம் சிவனை வேண்டி யாகம் நடத்தியபோது, வருணன் மழையைப் பொழிவித்தான். இதனால் அவரிடம் சாபம் பெற்று தன் சக்தியை இழந்தான். இழந்த சக்தி மீண்டும் கிடைக்க, சிவனை வேண்டினான். வருணனுக்கு அருள்புரிந்த சிவன், அவனது வேண்டுதலுக்காக இங்கே எழுந்தருளினார். இவருக்கு "ஆதிமூலேஸ்வரர்' என்ற பெயர் ஏற்பட்டது

தலபெருமை:

சித்திரகுப்தர்: 

சித்திரகுப்தர் சிவனருள் பெற்று, எமதர்மனின் கணக்கராக பணி பெற்ற தலம் இது. இவரது 12ம் வயதில் உயிர் பிரியும் விதி இருந்தது. அவரது தந்தை வசுதத்தன் வருந்தினார். அவரைத்தேற்றிய சித்திரகுப்தன், இத்தலத்து சிவனை வழிபட்டார். எமன் அவரை பிடிக்க வந்தபோது, சிவன் அம்பிகையை அனுப்பி எமனைத் தடுத்தார்.

அவள் எமனிடம், "சித்திரகுப்தன் சிவபக்தன். அவனை விட்டுவிடு!' என கட்டளையிட்டாள். எமனும் சித்திரகுப்தனை தண்டிக்காமல் விட்டதுடன், சிவனது கட்டளைப்படி தனது உதவியாளராகவும் ஏற்றுக்கொண்டார். சித்திரகுப்தர் என்றும் 12 வயதுடையவராக இருக்கும்படியான அருள் பெற்றார். அம்பாள் சன்னதி எதிரே சித்திரகுப்தர் சன்னதி உள்ளது.

ஆயுள்விருத்தி தலம்: 

சிவன் கோயில்களில் பைரவருக்கு அர்த்தஜாம பூஜை செய்து நடை அடைப்பது வழக்கம். இங்கு, பைரவருக்கும், சித்திரகுப்தருக்கும் பூஜை செய்து நடை அடைக்கப்படுகிறது.

அர்த்த ஜாமத்தில் சித்திரகுப்தரே சிவனுக்கு பூஜை செய்வதாக ஐதீகம். சித்ரா பவுர்ணமியன்று சித்திரகுப்தருக்கு விசேஷ அபிஷேகத்துடன், பூஜை நடக்கும். ஆயுள்விருத்தி பெற இவருக்கு தயிர் சாதம் படைத்து வணங்குகிறார்கள். மரணபயம் நீங்கவும், ஆயுள்விருத்தி பெறவும், நோய் தீரவும் இங்கு மிருத்யுஞ்ச ஹோமம் செய்து வழிபடலாம்.

அறுபது, எண்பதாம் திருமணங்களும் செய்து கொள்கிறார்கள்.ஞானம், மோட்சம் தரும் கேதுபகவானுக்கு அதிதேவதை சித்திரகுப்தர். எனவே இவையிரண்டும் கிடைக்க சித்திரகுப்தரை வணங்கலாம்.

கடல் தீர்த்தவாரி: 

மாசி மகத்தன்று சுவாமி, வங்காள விரிகுடா கடலுக்குச் சென்று வருணனுக்கு விமோசனம் கொடுக்கும் வைபவம் நடக்கும். வருணன் மழைக்குரிய தெய்வமென்பதால், சிவனுக்கு தீபாராதனை செய்தபின், ஆகாயத்தை நோக்கி தீபாராதனை காட்டுவர். தை அமாவாசை, ஐப்பசி கடைமுழுக்கு நாட்களிலும் தீர்த்தவாரி உண்டு.

சூரிய பூஜை: 

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு ஈசான்ய (வடகிழக்கு) திசையில் அமைந்த கோயில் இது. வேண்டுவோருக்கு அமுதம் போல அருளை வாரி வழங்குவதால் இத்தல அம்பிகைக்கு அமிர்தவல்லி என்று பெயர். அம்பிகை சிலையின் கீழ் ஸ்ரீசக்ரம் உள்ளது. சித்திரை மாதத்தில் முதல் ஏழு நாட்கள் சிவன், அம்பிகை மீது சூரிய ஒளி விழும். இந்நாட்களில் இங்குள்ள சூரியனுக்கு முதல் பூஜை நடக்கும்.

துர்க்கையை வலம் வரலாம்: 

வருணன் அருள் பெற்ற தலமென்பதால் குறைவின்றி மழை பெய்யவும், அதிக மழைப்பொழிவால் சேதம் உண்டாகாமல் இருக்கவும் இங்கு வேண்டிக் கொள்ளலாம். துர்க்கையை சுற்றி வந்து வழிபடும் வகையில் சன்னதி இருக்கிறது.

திருநள்ளாறு போல, கோயில் முகப்பில் சனீஸ்வரர் கிழக்கு நோக்கியிருக்கிறார். சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இவருக்கு எள் தீபமேற்றி வழிபடலாம்.

ஒரே கல்லில் செய்யப்பட்ட சுண்ணாம்புக் களஞ்சியம் என்னும் பாத்திரம் இங்கு அவசியம் காண வேண்டியதாகும். கோயிலுக்கு வெள்ளையடிக்க இந்த பாத்திரத்தில் சுண்ணாம்பு கலக்குகின்றனர்.

பிரார்த்தனை

மரண பயம் நீங்கவும், ஆயுள்விருத்தி பெறவும், நோய் தீரவும் இங்கு மிருத்யுஞ்ச ஹோமம் செய்து வழிபடலாம். ஞானம், மோட்சம் கிடைக்க இங்குள்ள சித்திரகுப்தரை வணங்கலாம்.

சிவனுக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்கின்றனர்.

இருப்பிடம் :

சிதம்பரத்தில் இருந்து 22 கி.மீ., தூரத்திலுள்ள பரங்கிப்பேட்டையில், சேவாமந்திர் பஸ்ஸ்டாப் அருகில் கோயில் உள்ளது.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

27 நட்சத்திரத்துக்குரிய பைரவ தலங்கள்.

_27 நட்சத்திரத்துக்குரிய பைரவ தலங்கள்_

1.அஸ்வினி:-ஸ்ரீஞான பைரவர்-கோவை, பேரூர், பட்டீஸ்வரர் கோவில், இங்கு பைவருக்கு நாய் வாகனம் இல்லை.

2.பரணி:-ஸ்ரீமகா பைரவர்- திருப்பத்தூர் அருகில் உள்ள பெரிச்சி கோவில்.

3.கார்த்திகை:-ஸ்ரீ சொர்ண பைரவர்-திருவண்ணாமலை. 

4.ரோகிணி:-ஸ்ரீகால பைரவர்-பிரம்ம கிரக்கண்டீஸ்வரர் கோவில்-கண்டியூர், தஞ்சாவூர்.

5.மிருகசீரிஷம்:-ஸ்ரீ சேத்திரபால பைரவர்- சேத்திரபாலபுரம் (குத்தாலம் அருகில்)

6.திருவாதிரை:-ஸ்ரீவடுக பைரவர்-ஆண்டாள் கோவில் (பாண்டிச்சேரி-விழுப்புரம் பாதையில் 18 கி.மீ.)

7.புனர்பூசம்:-ஸ்ரீவிஜய பைரவர்-பழனி சாதுசுவாமி கள் மடாலயம்.

8.பூசம்:-ஸ்ரீ ஆவின் பைரவர்-(திரு) வாஞ்சியம்- வாஞ்சி நாதர் கோவில்.

9.ஆயில்யம்:-ஸ்ரீ பாதாள பைரவர்-காளஹஸ்தி.

10.மகம்:-ஸ்ரீநர்த்தன பைரவர்-வேலூர் கோட்டை யின் ஒரு பகுதியில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவில்.

11.பூரம்:-ஸ்ரீ கோட்டை பைரவர்-பட்டீஸ்வரம்-தேனு புரீசுவரர்கோவில்.

12.உத்திரம்:-ஸ்ரீ ஜடாமண்டல பைரவர்- சேரன்மகா தேவி அம்மைநாதர் கைலாசநாதர் கோவில்.

13.அஸ்தம்:-ஸ்ரீ யோக பைரவர்-திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவில்.

14.சித்திரை:-ஸ்ரீ சக்கர பைரவர்-தர்மபுரி- மல்லி கார்ச்சுன -காமாட்சி கோவில் கோட்டை சிவன் கோவில் என்றும் தகடூர் காமாட்சி கோவில் என்றும் இக்கோவிலை அழைக்கிறார்கள்.

15.சுவாதி:ஸ்ரீ ஜடா முனி பைரவர்- புதுக்கோட்டை அருகே உள்ள பொற்பனைக் கோட்டை தற்போது திருவரங்குளம் என்று அழைக்கப்படுகிறது.

16.விசாகம்:-ஸ்ரீ கோட்டை பைரவர்-திருமயம்.

17.அனுஷம்:-ஸ்ரீ சொர்ண பைரவர்- கும்பகோணம் அருகே உள்ள ஆபத்சகாய ஈஸ்வரர் கோவில்.

18.கேட்டை:-ஸ்ரீகதாயுத பைரவர்- சூரக்குடி- சொக்கநாதர் கோவில்.

19.மூலம்:-ஸ்ரீ சட்டநாதர் பைரவர்-சீரகாழி-பிரம்ம புரீசுவர் கோவில்.

20.பூராடம்:-ஸ்ரீகால பைரவர்-அவிநாசி- அவிநாசியப்பர் கோவில்.

21.உத்திராடம்:-ஸ்ரீவடுகநாதர் பைரவர்-கரூர்- கல்யாணபசுபதி ஈஸ்வரர் கோவில்.

22.திருவோணம்:-திருப்பத்தூர் அருகே உள்ள ஸ்ரீ மார்த்தாண்ட பைரவர்-வைரவன்பட்டி-வளரொளி நாதர் கோவில்.

23.அவிட்டம்: -சீர்காழி பிரம்மபுரீசுவர் கோவிலில் அஷ்ட பைரவர் சந்நிதி.

24.சதயம்:-ஸ்ரீசர்ப்ப பைரவர்-சர்ப்பம் ஏந்திய பைரவர்-சங்கரன் கோவில் தலம்.

25.பூரட்டாதி:-கோட்டை பைரவர்- ஈரோடு அருகே கொக்கரையான் பேட்டை கிராமத்தில் உள்ள பிரம்ம லிங்கேஸ்வரர் கோவில்.

26.உத்திரட்டாதி:- ஸ்ரீ வெங்கல ஓசை பைரவர்- சேங்கனூர்-சத்தியகிரி ஈஸ்வரர் கோவில் கும்ப கோணம், பந்தநல்லூர் பாதையில் உள்ளது.

27.ரேவதி:-ஸ்ரீ சம்காரமூர்த்தி பைரவர்- தாத்தையங்கார் பேட்டை, காசி விசுவநாதர் கோவில்.

ஓம்நமசிவாய

Sunday, April 28, 2024

கும்பகோணம் கொட்டையூர் கோடீஸ்வரர் கோயில்.

 கும்பகோணம் சபஸ்தான தலங்களில் ஒன்றான, கும்பகோணத்தில் உள்ள 
#திருக்கொட்டையூர்_கோடீச்சரம் 
#கோடீஸ்வரர் (கைலாசநாதர்)
#பந்தாடு_நாயகி (கந்துக கிரீடாம்பாள்) திருக்கோயில் வரலாறு:
கொட்டையூர் கோடீஸ்வரர் கோயில் என்பது அப்பர் பாடல் பெற்ற சோழ நாட்டின் காவிரி வடகரையில் அமைந்துள்ள சிவத்தலமாகும்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் வட்டத்தில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 44வது தலம் ஆகும். ஆமணக்குக் கொட்டைச் செடியின் கீழ் லிங்கம் வெளிப்பட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).

மூலவர் : கோடீஸ்வரர், கைலாசநாதர்
அம்மன்: பந்தாடு நாயகி, கந்துக கிரீடாம்பாள்
தல விருட்சம் : வில்வம், கொட்டை (ஆமணக்கு)
தீர்த்தம் : அமுதக்கிணறு
புராண பெயர்: திருக்கொட்டையூர் கோடீச்சரம் 
ஊர்: கொட்டையூர் 
மாவட்டம்: தஞ்சாவூர் (கும்பகோணம்)
மாநிலம்: தமிழ்நாடு 

வழிபட்டோர் : ஹேரண்ட முனிவர், மார்க்கண்டேயர், பத்திரயோகி முனிவர்

பாடியவர்கள்: திருநாவுக்கரசர், அருணகிரிநாதர் 

#அப்பர் சுவாமிகள் அருளிய திருக்கொட்டையூர் தேவாரப் பாடல்:

"கருமணிபோற் கண்டத் தழகன் கண்டாய்
 கல்லால் நிழற்கீ ழிருந்தான் கண்டாய்
பருமணி மாநாகம் பூண்டான் கண்டாய்
 பவளக்குன் றன்ன பரமன் கண்டாய்
வருமணிநீர்ப் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய்
 மாதேவன் கண்டாய் வரதன் கண்டாய்
குருமணிபோல் அழகமருங் கொட்டை யூரிற்
 கோடீச் சரத்துறையுங் கோமான் றானே.  

#அருணகிரிநாதர் அருளிய திருக்கொட்டையூர் திருப்புகழ்:

"பட்டுமணிக் கச்சிருகக் கட்டியவிழ்த் துத்தரியப்
     பத்தியின்முத் துச்செறிவெற் …… பிணையாமென் 
பற்பமுகைக் குத்துமுலைத் தத்தையர்கைப் புக்குவசப்
     பட்டுருகிக் கெட்டவினைத் …… தொழிலாலே 
துட்டனெனக் கட்டனெனப் பித்தனெனப் ப்ரட்டனெனச்
     சுற்றுமறச் சித்தனெனத் …… திரிவேனைத் 
துக்கமறுத் துக்கமலப் பொற்பதம்வைத் துப்பதவிச்
     சுத்தியணைப் பத்தரில்வைத் …… தருள்வாயே 
சுட்டபொருட் கட்டியின்மெய்ச் செக்கமலப் பொற்கொடியைத்
     துக்கமுறச் சொர்க்கமுறக் …… கொடியாழார் 
சுத்தரதத் திற்கொடுபுக் குக்கடுகித் தெற்கடைசிச்
     சுற்றுவனத் திற்சிறைவைத் …… திடுதீரன் 
கொட்டமறப் புற்றரவச் செற்றமறச் சத்தமறக்
     குற்றமறச் சுற்றமறப் …… பலதோளின் 
கொற்றமறப் பத்துமுடிக் கொத்துமறுத் திட்டதிறற்
     கொற்றர்பணிக் கொட்டைநகர்ப் …… பெருமாளே.

#வரலாறு:

சோழவள நாட்டில் காவிரியின் வடகரையில் திருவருள் பாலித்திருக்கும் சிவன் தலங்களில் கொட்டையூர் அருள்மிகு கோடீஸ்வரசுவாமி கோயில் 44ஆவது தலமாகும். இக்கோயில் கும்பகோணத்திற்கு மேற்கே 4 கிமீ தொலைவில் கும்பகோணத்திற்கும் சுவாமிமலைக்கும் இடையே கொட்டையூரில் உள்ளது. மார்க்கண்டேயர் பூசித்த தலம். காவிரி வலஞ்சுழித்து, பிலத்துவாரத்தில் சென்றபோது, ஆத்ரேயமகரிஷி அத்துவாரத்தில் இறங்கி காவிரியை மேலே கொண்டுவந்த சிறப்புடையது. திருவலஞ்சுழியில் காவிரியில் இறங்கிய அவர் இங்கு வெளியே வந்ததாகக் கூறப்படுகிறது அவருடைய திருவுருவம் இக்கோயிலில் உள்ளது. ஒரு சமயம் இந்த ஊர் ஆமணக்கங்காடாக இருந்தது. இறைவன் ஆமணக்கன் கொட்டைச் செடியின்கீழ் இருந்ததால் இவ்வூர் கொட்டையூர் என்று பெயர் பெற்றது. மற்றொரு சமயம் சோழ மன்னன் ஒருவனுக்கு கோடி லிங்கமாக தரிசனம் கொடுத்ததால் இக்கோயிலுக்கு கோடிச்சுரம் என்ற பெயரும் வழங்கப்படுகிறது.

இக்கோயிலிலுள்ள இறைவன் கோடீஸ்வரர். இறைவி பந்தாடுநாயகி.
இத்தல இறைவன் திருமேனியில் பலாக்காய் முள் போன்று கோடி லிங்கங்களை தன்னகத்தே கொண்டு சுயம்புமூர்த்தியாகவும், தன் சிரசிலிருந்து கங்கை நீர் இன்றளவும் அரும்பும் நிலையில் காட்சியளிப்பது சிறப்பு அம்சமாகும்.

பத்ரயோகி முனிவர் தரிசனம் செய்ய வரும்போது இறைவி பந்தாடும் கோலத்தில் காட்சியளித்தமையால் பந்தர்டு நாயகி (கந்துகக்கிரீடாம்பிகை) எனப் பெயர் பெற்றார்.

இங்கு இறைவன் பரமசிவனின் திருபெயா் கோடிஸ்வரா் என்பதை போல மற்ற பாிவார தெய்வங்களுக்கு கோடி என்கிற பெயருடன் விநாயகர் கோடி விநாயகர் என்றும், சுப்ரமணியர் கோடி சுப்ரமணியர் என்றும், சண்டிகேஸ்வரர் கோடி சண்டிகேஸ்வரர். தட்சிணாமூா்த்தி கோடி ஞானதட்சிணாமூா்த்தி என்றும் அழைக்கப்படுகின்றனர்.

சைவ சமயக்குரவர் திருநாவுக்கரசர் தேவாரத்திலும், அருணகிரிநாதர் திருப்புகழிலும் போற்றிப்பாடியுள்ளனர்.

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 44 வது தேவாரத்தலம் ஆகும்.

இத்தலத்தில் வாகனங்களில் எழுந்தருளிய நவக்கிரகங்களை காணலாம். இதுபோன்ற நவக்கிரக சன்னதிகள் தமிழகத்தில் விரல் விட்டு எண்ணும் அளவிலேயே உள்ளன.

மார்க்கண்டேயர் வழிபட்ட தலம் .

மூலவர் மீது பாணம் முழுவதிலும் கொட்டை கொட்டையாக - காய்ந்தமாதிரி காணப்படுகிறது.

#தல வரலாறு:

ஒரு சமயம் இந்த ஊர் ஆமணக்கங்காடாக இருந்தது. இறைவன் ஆமணக்கன் கொட்டைச் செடியின்கீழ் இருந்ததால் இவ்வூர் கொட்டையூர் என்று பெயர் பெற்றது.

வட தேசத்தை ஆட்சி செய்து வந்த சத்தியரதி என்ற மன்னனின் மகன் சுருசி ஒரு சாபத்தின் காரணமாக பிசாசு வடிவம் பெற்றான். மனித உருவிற்கு மாற வேண்டும் என்று  சிவபெருமானை வணங்கினான். சிவபெருமானின் கட்டளைப் படி கொட்டையூர் திருத்தலம் வந்து இங்கு ஏரண்ட முனிவரால் உருவாக்கப்பட்ட தீர்த்தத்தில் மூழ்கி எழுந்து, ஆமணக்கு எண்ணெய்யில் தீபம் ஏற்றி வைத்து கோடீஸ்வரப் பெருமானை மனமுருக வேண்டினான். இதையடுத்து அவனது பேய் உருவம் மறைந்து அழகிய உருவத்தைப் பெற்றான். இந்த தீர்த்தம் ஏரண்ட முனிவரால் உருவாக்கப்பட்டது. இதை அமுதக்கிணறு என்கிறார்கள். இப்போதும் இந்தக்கிணறு இங்கு உள்ளது.

பத்திரயோகி முனிவருக்கு இறைவன் கோடிவிநாயகராக, கோடி அம்மையாக, கோடி முருகனாக, கோடி தம் திருவுருவாகக் காட்சி தந்ததால் இறைவன் கோடீஸ்வரர் எனப்பட்டார். சோழ மன்னன் ஒருவனுக்கு கோடி லிங்கமாக தரிசனம் கொடுத்ததால் இக்கோயிலுக்கு கோடிச்சுரம் என்ற பெயரும் வழங்கப்படுகிறது.

இங்கே அம்பாள் பந்தாடுநாயகி என அழைக்கப்படுகிறாள். அம்பாள் சிலையின் ஒரு கால் பந்தை உதைப்பது போன்ற தோற்றத்தில் உள்ளது. செய்த பாவங்களை தன் காலால் எட்டி உதைத்து அருள்செய்பவள் என்ற பொருளில் இவ்வாறு சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்தலத்திற்கு வில்வாரண்யம், ஏரண்டபுரம் என்றும் வேறு பெயர்கள் உண்டு. இத்தலத்தில் மார்க்கண்டேயர் இறைவனை வழிபட்டுள்ளார்.

""கொட்டையூரிற் செய்த பாவம் கட்டையோடே"  என்பது பழமொழி. இத்தலத்தில் பாவம் செய்தவர்கள் கால் வைத்தால் அந்தப்பாவம் கோடி அளவு பெருகிவிடும். புண்ணியம் செய்தவர்கள் கால் வைத்தால் அதே போல கோடி அளவு கூடிவிடும்.

இக்கோயிலில் அக்டோபர் 2015இல் குடமுழுக்கு நடைபெற்றது. இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் இவ்வாலயம் விளங்குகிறது. கடந்து உள்ளே செல்லும்போது கொடி மரம், பலிபீடம், நந்தியைக் காணமுடியும். கோவிலின் நுழைவாயிலில் தண்டாயுதபாணி சந்நிதி உள்ளது. முன் மண்டபத்தில் வலப்புறம் ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் உள்ளனர். பிராகாரத்தில் விநாயகர், முருகன், மகாலட்சுமி சந்நிதிகள் உள்ளன.

இறைவன் கோடீஸ்வரர் சுயம்பு லிங்க உருவில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். மூலவர் மீது பாணம் முழுவதிலும் கொட்டை கொட்டையாக - காய்ந்தமாதிரி காணப்படுகிறது. இடப்புறம் நடராஜர் மண்டபமும் நவக்கிரக சன்னதியும் உள்ளன. கருவறையின் வெளிப்புறம் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, அடிமுடி காணா அண்ணல், பிரம்மா, துர்க்கை உள்ளனர். அருகே கோடி சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது.

கோடி விநாயகர் மற்றும் கஜலட்சுமி சன்னதிகள் உள்ளன. உட்பிரகாரத்திலுள்ள முருகப் பெருமான கோடி சுப்பிரமணயர் என்ற பெயருடன் உள்ளார். இவர் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.

இத்திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஐந்து மூர்த்திகளையும் காண்போர் வேறு தலங்களில் கோடித் திருவுருவம் கண்ட பயனைடவர். இங்கு இறைவன் பரமசிவனின் திருபெயா் கோடிஸ்வரா் என்பதை போல மற்ற பரிவார தெய்வங்களுக்கு கோடி என்கிற பெயருடன் விநாயகர் கோடி விநாயகர் என்றும், சுப்ரமணியர் கோடி சுப்ரமணியர் என்றும், சண்டிகேஸ்வரர் கோடி சண்டிகேஸ்வரர். தட்சிணாமூா்த்தி கோடி ஞானதட்சிணாமூா்த்தி என்றும் அழைக்கப்படுகின்றனர்.

இங்குச் செய்த எப்புண்ணியமும் பிற தலங்களிற் செய்த புண்ணியங்களினும் கோடி மடங்கு பயன் தருமென்று தல புராணம் கூறுகிறது. இத்தலத்திலுள்ள நவக்கிரக சந்நிதி மண்டபம் சிறப்பானது.

அம்பாள் பந்தாடு நாயகியின் சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது. அம்பாள் சிலையின் ஒரு கால் பந்தை உதைப்பது போன்ற தோற்றத்தில் உள்ளது. செய்த பாவங்களை தன் காலால் எட்டி உதைத்து அருள்செய்பவள் என்ற பொருளில் இவ்வாறு சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கூறலாம். விளையாட்டில் ஆர்வம் கொண்டவர்கள் முன்னேற இந்த அம்மனை வழிபட்டுச் செல்வது வழக்கம். இங்குள்ள அமுதக்கிணறு தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொண்டால் புறத்தூய்மை மட்டுமின்றி அகத்தூய்மையும் கிடைப்பதாகவும் மேலும் கல்வி, அறிவு, ஒழுக்கம் ஆகியவற்றை இந்த தீர்த்தம் தருவதாக நம்பிக்கை.

இத்தலத்தில் வாகனங்களில் எழுந்தருளிய நவக்கிரகங்களை காணலாம். எல்லா கிரகங்களும் மிகச்சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவற்றைக்காணவே கண்கோடி வேண்டும். இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. காவிரி வலஞ்சுழித்து, பிலத்துவாரத்தில் சென்றபோது, ஏரண்ட முனிவர் அத்துவாரத்தில் இறங்கி காவிரியை மேலே கொண்டுவந்த சிறப்புடையது. திருவலஞ்சுழியில் காவிரியில் இறங்கிய அவர் இங்கு வெளியே வந்ததாகக் கூறப்படுகிறது , ஏரண்ட முனிவருக்கு கோடீஸ்வரர் கோவிலில் தனி சந்நிதி உள்ளது.

கோயில் அமைப்பு:

ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது கொடி மரம், பலிபீடம், நந்தியைக் காணமுடியும். முன் மண்டபத்தில் வலப்புறம் ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் உள்ளனர். இதே மண்டபத்தில் ஆத்ரேய மகரிஷி (ஹேரண்டர்) உள்ளார். இடப்புறம் நடராஜர் மண்டபமும் நவக்கிரக சன்னதியும் உள்ளன. கருவறையின் வெளிப்புறம் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, அடிமுடி காணா அண்ணல், பிரம்மா, துர்க்கை உள்ளனர். அருகே கோடி சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. திருசசுற்றில் கோடி விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய கோடி சுப்பிரமணியர் மற்றும் கஜலட்சுமி சன்னதிகள் உள்ளன.

சிறப்புக்கள் :

கல்வி அபிவிருத்தியை தரும் தீர்த்த ஸ்தலம் .

இங்குள்ள தீர்த்தம் ஏரண்ட முனிவரால் உருவாக்கப்பட்டது. இதை அமுதக்கிணறு என்கிறார்கள். இந்தக்கிணற்று நீரை தங்கள் தலையில் தெளித்து அழகிய வடிவம் பெறலாம் என நம்புகிறார்கள்.

விளையாட்டில் ஆர்வம் கொண்டவர்கள் பதக்கங்கள் பெறுவதற்காக இந்த அம்மனை வழிபட்டு செல்கின்றனர்.

#கும்பகோணம் சப்தஸ்தானம்:

கும்பகோணம் சப்தஸ்தானத்தில் இத்தலமும் ஒன்று. சப்தஸ்தானங்கள் என அழைக்கப்படும் கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில், திருக்கலயநல்லூர் அமிர்தகலசநாதர் கோயில், தாராசுரம் ஆத்மநாதசுவாமி கோயில், திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோயில், கொட்டையூர் கோடீஸ்வரர் கோயில், மேலக்காவேரி கைலாசநாதர் கோயில் மற்றும் சுவாமிமலை சுந்தரேஸ்வரசுவாமி கோயில் ஆகிய ஏழு ஊர்களில் நடக்கும் ஏழூர்த் திருவிழாவில் கும்பகோணம் முதலிடத்தைப் பெறுகிறது. அன்று ஏழூர்ப் பல்லக்குத் திருவிழா என்னும் விழா நடைபெற்றது.
விழா நாளில் பல்லக்கு இக்கோயிலுக்கு வந்து சென்றது.

 

திருவிழா:
பங்குனி உத்திரம், திருவாதிரை, சிவராத்திரி, புரட்டாசி மாதத்தில் அம்புபோடும் திருவிழா ஆகியவை முக்கியமானது.
தோஷ தொல்லை, அழகிய வடிவம் பெற இத்தலத்தில் பிரார்த்திக்கலாம்.

அமைவிடம் மாநிலம் :

தமிழ் நாடு
கும்பகோணம் - திருவையாறு சாலையில் கும்பகோணத்தில் இருந்து 4 கி.மி. தொலைவில் சுவாமிமலை செல்லும் வழியில் திருக்கொட்டையூர் இருக்கிறது. கும்பகோணத்தில் இருந்து சுவாமிமலை செல்லும் நகரப் பேருந்து கொட்டையூர் வழியாகச் செல்கிறது. சாலையோரத்திலேயே கோயில்.

Saturday, April 27, 2024

பல சிவன் கோவில் கட்டிய இராஜமாதாவான சோழப் பேரரசி செம்பியன் மாதேவியார்.

சிவபெருமானுக்கு பல 
கற்கோயில்களை கட்டி சைவ சமயத்திற்கு பல தொண்டாற்றிய #இராஜமாதாவான 
#சோழப்_பேரரசி 
#செம்பியன்_மாதேவியார் 
வரலாறு:
பெரிய பிராட்டி என்றும் சோழப்பேரரசி என்றும் அழைக்கப்பெறும் ’’’செம்பியன் மாதேவி’’’ (கி.பி 910 – 1001)
சித்திரை மாதம்  கேட்டை  நட்சத்திரத்தில்  மழவராயர் குடும்பத்தில் பிறந்தவர். சோழப் பேரரசர்  கண்டராத்தினாரை  மணந்தார். 
தன் மகன் மதுராந்தகன், தன் கொழுந்தனார் சுந்தர சோழரின்  மகன்களான ஆதித்த கரிகாலன், அருள்மொழிவர்மன், மற்றும் சுந்தர சோழரின் மகளானகுந்தவைப் பிராட்டியையும் பொறுப்புடன் வளர்த்தவர். சோழப் பேரரசுகளில் கண்டராத்தினார் மறைந்த பிறகும், ஆதித்த கரிகாலன் மறைந்த பிறகும் ஏற்பட்ட சங்கட சூழலில் பட்டத்திற்கு உரியவர் யாரென ஆலோசனை கூறியவர். ராஜராஜ சோழனான அருள்மொழிவர்மன் சிறந்த சிவபக்தனாக இருந்தமைக்கும், தஞ்சை பெருவுடையார் கோவிலை கட்டுவதற்கு பெரும் காரணமாக இருந்தவர் செம்பியன் மாதேவியார்.

10ஆம் நூற்றாண்டில் சோழ நாட்டின் அரசகுலத்திலே தோன்றியவர் கண்டராதித்தர். அவருடைய தந்தை, பராந்தக சோழர். கண்டராதித்தர் மிகச் சிறந்த சிவபக்தராக விளக்கினார். நற்குணங்கள் மிக்க மழபாடி நாட்டின் (மழவராயர் குடும்பத்தில் பிறந்த ) இளவரசியை மணந்தார். கண்டராதித்தரின் மனைவியாக பட்டத்து மகிஷியாக இருந்தவளே  செம்பியன் மாதேவி.
கண்டராதித்தர், நடராஜப் பெருமான் மீது பத்து பதிகங்கள் பாடினார். அவை ஒன்பதாம் திருமுறையில் உள்ளன. சிவபக்தியில் தோய்ந்த இத்தம்பதிக்குக் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து சிறிதுகாலமே ஆனபோது கண்டராதித்தர் சிவபதம் எய்தினார். செம்பியன் மாதேவி, குழந்தையை சிவபக்தி மிக்கவனாக வளர்த்து வந்தார்.

சோழ நாட்டின் அரியணையை, கண்டராதித்தரின் சகோதரர் அரிஞ்சய சோழர் அலங்கரிக்க வேண்டும் என்று செம்பியன் மாதேவி வேண்டிக் கொண்டாள். கண்டராதித்தரின் புதல்வன் உத்தமசோழன் இளம் பாலகனாக இருப்பதாலும், நாடு அரசனின்றி இயங்காது என்பதாலும் ராஜ மாதாவான செம்பியன் மாதேவியின் வேண்டுகோளை அரிஞ்சயர் ஏற்றார். நாட்டின் அரசரானார். இவ்வாறு செம்பியன் மாதேவியின் வழிகாட்டுதலால் நாட்டின் அரசுரிமைப் பிரச்னை சுமுகமாகத் தீர்ந்தது.

சிவபக்தியில் தோய்ந்த கணவரிடம் அன்பும் மதிப்பும் கொண்டிருந்த செம்பியன் மாதேவி, சோழ நாட்டுச் சிவாலயங்களைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டாள். தியாகமும் பக்தியும் அன்பும் மிகுந்த மாதேவியை அரச குடும்பத்தவரும் அந்நாட்டு மக்களும் மிகுந்த மதிப்புடன் போற்றினார்கள். செம்பியன் மாதேவி, தம் கணவர் தமக்கிட்ட சைவப் பணிகளைச் செய்ய விழைந்தார். அவர் விழைந்தவற்றுக்கு ஆகும் செலவை, அரிஞ்சய சோழர் அள்ளி வழங்கினார்.

ஓர் இயக்கமாகவே, சைவப்பணியைச் செய்து வந்த மாதேவி சிவாலயங்களுக்குச் சென்று பார்வையிட்டார். 7ஆம், 8ஆம் நூற்றாண்டுகளில் சோழவள நாட்டில் பல கோவில்கள் கட்டப்பட்டன. ஆனால் அவையெல்லாம் மண்ணாலும் செங்கல்களாலும் கட்டப்பட்டிருந்தன. அதனால் அவை காலப்போக்கினாலும் பருவ மாற்றங்களாலும் சிதிலமடைந்து கிடந்தன.

இவ்வாறு நூற்றுக்கணக்கான கோவில்கள் இருப்பதைப் பார்த்து செம்பியன் மாதேவி கண்ணீர் வடித்தாள். இறைவனின் ஆலயங்களைப் புதுப்பிக்கும் பணி இனி தம் பணி என்று உறுதி செய்து கொண்டார். அதுவே சிவபக்தராம் தம் கணவரின் உள்ளத்துக்கும் உகப்பான பணி என்று எண்ணி மகிழ்ந்தார்.

முதன் முதலில் செம்பியன் மாதேவி சீரமைத்த திருக்கோவில் நல்லம் ஆகும். சிதிலமடைந்த அக்கோவிலுக்கு கருங்கல் திருப்பணி செய்ய விழைந்தார். மலைகளோ குன்றுகளோ இல்லாதது சோழநாடு. ஆகவே கருங்கற்கள் பல நூறு மைல்கள் பயணம் செய்து ஆயிரக்கணக்கான எடை கொண்ட கற்கள் வரவழைக்கப்பட்டன. கல் தச்சர்கள் இடைவிடாமல் பணிபுரிந்து கோவிலை கருங்கல் திருப்பணியாகச் செய்தார்கள். ராஜமாதா செம்பியன் மாதேவி நாள்தோறும் இறைப்பணி செவ்வனே நடைபெறுகிறதா என்று கவனித்துக் கொண்டார்கள்.

முதன் முதலில் செம்பியன் மாதேவி சீரமைத்த திருக்கோவில் நல்லம் ஆகும். சிதிலமடைந்த அக்கோவிலுக்கு கருங்கல் திருப்பணி செய்ய விழைந்தார். மலைகளோ குன்றுகளோ இல்லாதது சோழநாடு. ஆகவே கருங்கற்கள் பல நூறு மைல்கள் பயணம் செய்து ஆயிரக்கணக்கான எடை கொண்ட கற்கள் வரவழைக்கப்பட்டன. கல் தச்சர்கள் இடைவிடாமல் பணிபுரிந்து கோவிலை கருங்கல் திருப்பணியாகச் செய்தார்கள். ராஜமாதா செம்பியன் மாதேவி நாள்தோறும் இறைப்பணி செவ்வனே நடைபெறுகிறதா என்று கவனித்துக் கொண்டார்கள்.

நல்லம் கோவில் பணி முடியும் தறுவாயில், கருவறைக்கு வெளிச் சுவரில், கண்டராதித்தர் சிவபூஜை செய்வது போன்று செதுக்கச் செய்தார். அதைக்கண்டு,மாதேவியின் கண்கள், கணவரை நேரிலே காண்பது போன்ற ஆனந்தத்தை அடைந்தன. இதுபோன்றே மேலும் பத்து கோவில்களிலும் கணவரின் சிவபூஜைக் காட்சியைச் சித்திரிக்கச் செய்தார். ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் இன்றும் அக்காட்சியை நாம் கண்டு களிக்கலாம்.

சிவத்தொண்டில் ஈடுபட்டு கோவில் பணிகளைச் செய்தது போன்றே, மாதேவி, சோழநாட்டு இளவரசர்கள், இளவரசிகளையும் பக்தியும் நற்குணங்களும் நிரம்பியவர்களாக வளர்த்து வந்தார்.

அரிஞ்சய சோழரின் மைந்தர்களும் மகள் குந்தவியும் மாதேவியிடம் வளர்ந்து நற்குண நற்செயல்களை அறிந்தார்கள். எல்லாருடைய நெஞ்சங்களிலும் இளமை முதலே சிவபக்தியை வளர்த்தார். ஆகையால் அவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆனபிறகும் சிவபக்தியுடனே வாழ்ந்து சிவப்பணிகளில் ஈடுபட்டார்கள்.

செம்பியன் மாதேவியிடம் இளம் பருவம் முதலே வளர்ந்த ராஜராஜன், அரியணை ஏறியதும் தஞ்சைத் தரணியில் வானுயர்ந்த கோபுரத்துடன் பெரிய கோவிலைக் கட்டினான். அதுமட்டுமல்ல, நியாயம், தர்மம் ஆகியவற்றை நன்கு உள்ளத்திலே பதிய வைத்தவர் பெரியன்னை செம்பியன் மாதேவியல்லவா?

அரிஞ்சயரின் ஆட்சிக் காலத்திற்குப் பிறகு, ராஜராஜன் அரியணையை ஏற்க முன்வரவில்லை. கண்டராதித்தரின் புதல்வரான உத்தம சோழர்தான் அரியணையில் அமரத் தகுந்தவர் என்று வாதாடினார். இத்தகைய தியாக புத்தியும் நேர்மை குணமும் அவருக்கு ஊட்டியவர் செம்பியன் மாதேவி தானே! தேவியின் பெயரால் கோவில்களில் பல மான்யங்கள் அளிக்கப்பட்டன. பல ஏரிகள் குளங்கள் வெட்டப்பட்டன.

செம்பியன் மாதேவி, சிவபக்தியில் தோய்ந்தவராக இருந்து, தாம் புகுந்த சோழநாட்டில் சைவம் தழைக்கச் செய்தார். அரச பரம்பரையினர் சைவப் பற்று மிகுந்தவராகச் செய்து நாட்டிற்கும் குடும்பத்தாருக்கும் நல்லன செய்து அனைவராலும் போற்றப்பட்ட மூதாட்டியாக விளங்கி, 90ஆவது அகவையில் இறைவனடி சேர்ந்தார்.

பெருமை வாய்ந்த சோழ வம்சத்தின் மருமகளான செம்பியன் மாதேவி ஏராளமான சிவன் கோயில்களைக் கட்டி திருப்பணிகள் செய்துள்ளார்கள்.  கணவர் இறந்த பிறகு சிவ வழிபாடு, ஆலயத்திருப்பணிகள், தர்ம காரியங்கள் என் வாழ் நாளை கழித்த செம்பியன் மாதேவியார் சுமார் 90 ஆண்டுகள் (கி.பி 910 - 1001) வாழ்ந்து ஆறு சோழ  மாமன்னர்களின் ஆட்சியைக் கண்டவர்.

1. மாமனாரான முதலாம் பராந்தகச் சோழன்.
2. கணவர் கண்டராதித்த சோழன்
3. கொழுந்தன் அரிஞ்சய சோழன்
4. கொழுந்தனின் மகன் சுந்தரசோழன் (இரண்டாம் பராந்தகச் சோழன்)
5. செம்பியன் மாதேவியார் மகன் உத்தம சோழன்
6. கொழுந்தனின் பேரன் ராசராச சோழன்

உலக வரலாற்றில் ஒரே குலத்தை சார்ந்த 6 மாமன்னர்களையும் வழி காட்டி அடுத்தடுத்து அரியணை ஏற்றிய பெருமை செம்பியன் மாதேவியாரையே சாரும்.

செம்பியன் மாதேவி சோழ மண்டலத்தில் செங்கற் கோயிலாக இருந்த பத்து ஆலயங்க்களை கருங்கல் கட்டமைப்பாக (கற்றளி) மாற்றிக் கட்டினார்.அவை
1. திருநல்லம் (கோனேரிராஜபுரம்)
2. திருமுதுகுன்றம் (விருத்தாச்சலம்)
3. திருவாரூர் அரநெறி ( அசலேஸ்வரர் கோயில்)
4. திருமணஞ்சேரி
5. தெங்குரங்காடுதுறை (ஆடுதுறை)
6. திருக்கோடிக்காவல்
7. ஆதாங்கூர்
8. குத்தாலம்
9. திருவக்கரை
10. திருச்சேலூர்

புதிதாகவும் ஆகம விதிக்கு உட்பட்டு கற்றளியாக இவர் கட்டிய கோயிலே செம்பியன் மாதேவியில் இருக்கும் ஸ்ரீகயிலாசநாதர் திருக்கோயிலாகும்.

கி.பி 1019ல் முதலாம் இராஜேந்திரசோழன் செம்பியன் மாதேவியாருக்கு சுமார் ஒன்றரை அடி உயரத்தில் சிலை அமைத்து இக் கோயிலில் தனிச்சந்நிதியும் அமைத்து வழிபாடுகள் குறைவின்றி நடைபெருவதற்க்கு வறுவாய் அதிகம் பெற்றுத்தரும் நில புலன்களை அளித்துள்ளான் என்று கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. செம்பியன் மாதேவி சித்திரை மாதம் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர். இந் நாட்களில் நடைபெரும் விசேட வ்ழிப்பாட்டுக்காக ஏராளமான பொன்னை அரிஞ்சய சோழனின் பட்டத்தரசியான அரிஞ்சிகை  பிராட்டியாரும், ராசராச சோழனின் தமக்கை குந்தவை பிராட்டியாரும் ஆலயத்துக்கு வழங்கியதாக ஒரு கல்வெட்டும் சொல்கிறது. உத்தமசோழனின் மனைவியர் ஏழு பேரும் தங்கள் மாமியார் செம்பியன் மாதேவிக்கு நடைபெரும் வழிபாடுகளுக்கு ஏராளமான நிலபுலன்களையும் வழங்கியுள்ளனர்.

பெரும்பான்மையோர் கோயில்களுக்கு வழிபடுவதற்காகச் சென்றாலும், வரலாற்று நோக்கில் ஆராய்வதற்காக ஆய்வாளர்களும், கோயில்களின் கட்டிடக்கலையையும் சிற்ப அழகைக் கண்டு களிக்கச் செல்வோரும் உள்ளனர். அவர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருப்பினும் அவர்களே நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற மரபுச் செல்வங்களின் விலை குறிக்க முடியாத மதிப்பையும் உணர்ந்தவர்களாகவும் இருப்பர். இக்காலத்தில் மரபுச் செல்வங்கள் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் தோன்றியதுடன் அவற்றைக் குறித்து அறியவும் பாதுகாக்கவும் ஒரு சில குழுவினர் இயங்கி வருகிறார்கள். செம்பியன் மாதேவி என்ற வரலாற்று நூலை அண்மையில் வெளியிட்டுள்ள பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மையம் என்ற அமைப்பும் இத்தகையோரில் ஒருவர்.

தொல்லியல் ஆய்வாளர்களான முனைவர் பொ. இராசேந்திரன் மற்றும் முனைவர் சொ. சாந்தலிங்கம் ஆகியோர் ‘செம்பியன் மாதேவி – வாழ்வும் பணியும்’ என்ற நூலின் ஆசிரியர்கள். பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மையம் பாண்டிய நாட்டின் வரலாறு குறித்த ஆய்வு நூல்களை இதுகாறும் வெளியிட்டு வந்தது. பாண்டிய நாட்டை சோழர்களும் இரண்டு நூற்றாண்டுகள் ஆண்டு வந்ததால் அவர்கள் குறித்த வரலாறும் பாண்டிய வரலாற்றுடன் இணைந்திருக்கும் காரணத்தினால் செம்பியன் மாதேவியின் வரலாற்றுப் பங்களிப்பு குறித்தும் தமது கவனத்தைத் திருப்பி இந்த நூலை வெளியிட்டுள்ளனர். செப்டெம்பர் 2019 வெளியீடு கண்டது இந்நூல். இதன் வெளியீட்டிற்கு உதவிய புரவலர் மேனாள் தமிழக கல்வி அமைச்சரும் இந்நாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு. தங்கம் தென்னரசு அவர்கள்.

நூலின் முன்னுரையைத் தொடர்ந்து செம்பியன் மாதேவியை அறிமுகப்படுத்திய பின்னர், அவர் அறப்பணி மற்றும் கலைப்பணி ஆகியவற்றுக்குச் சான்றுகளாகத் திகழும் 1. கோனேரிராஜபுரம், 2. திருக்கோடிக்காவல், 3. ஆடுதுறை, 4. குத்தாலம், 5. செம்பியன்மாதேவி, 6. ஆனாங்கூர், 7. திருவாரூர், 8. மயிலாடுதுறை, 9. திருவக்கரை, 10. திருமுல்லைவாயில், 11. திருமுதுகுன்றம் ஆகிய ஊர்களில் உள்ள கோயில்களையும் அவற்றின் கட்டமைப்பையும், சிலைகளையும், கல்வெட்டுகள் தரும் வரலாற்றுச் செய்திகளையும், அவற்றில் இணைந்துள்ள செம்பியன் மாதேவியின் அறப்பணிகளையும் கலைப்பணிகளையும் விரிவாக நூல் எடுத்துரைக்கிறது. இச்செய்திகள் நூலின் முதல் பாகமாக 50 பக்கங்களில் கொடுக்கப்பட்ட பிறகு, இரண்டாம் பகுதியில் செம்பியன்மாதேவியின் பிற கோயில் பணிகள், அன்னாரின் கலைப்பணி, அவர் வழங்கிய செப்புத் திருமேனிகள், சோழ அரசர்க்கும் அவர்தம் தேவியரும் குறித்து இரண்டாம் பாகத்தில் 25 பக்கங்களுக்கு விளக்கப்படுகிறது. மூன்றாம் பாகமாகச் சோழ மன்னர்களின் மெய்க்கீர்த்திகள் இணைக்கப்பட்டுள்ளது.

கோயில்களில் எந்தெந்த பகுதியில் எந்தெந்த திருவுருவங்கள் அமைக்கப்பட்டன என்ற செய்திகளைத் தரும் அட்டவணை நூலின் இரண்டாம் பகுதியில் இணைத்திருப்பது சிறப்பு. சோழர்கால கோயில் கட்டுமான கலை வளர்ச்சியையும் மாற்றத்தையும் அறிய இப்பகுதி உதவுகிறது. இப்பகுதிக்கு உதவும் வகையில் அவை பற்றியும், சிலைகள் குறித்த படங்களும் கொடுக்கப்பட்டால் கோயில் கட்டிடக்கலையின் பரிணாம வளர்ச்சியையும் அறிந்து கொள்ள உதவும். செப்புச் சிலைகள் குறித்த பட்டியல் நூலின் இரண்டாம் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளதும் ஒரு சிறந்த இணைப்பு. செம்பியன் மாதேவியின் கவின்மிகு இச்செப்புச் சிலையே இந்த நூலின் அட்டையிலும் இடம்பெற்றுள்ளது.

Siragu Sembiyan Madevi Statue and Inscription

வரலாற்று ஆர்வலர்களால் விரும்பப்படுபவர் மதிக்கப்படுபவர் செம்பியன் மாதேவி. இவர் குறித்து ஆங்கிலத்திலும் தமிழிலும் சில நூல்களும் முன்னரே வெளிவந்துள்ளன. நூலின் முன்னுரைச் செய்தியானது, இந்நூலை வெளியிட்ட பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மையம் முன்னர் அவர்கள் வெளியிட்ட வரலாற்று நூல்கள் விரைவில் விற்றுத் தீர்ந்தன என்கிறது. அவ்வாறே இந்நூலும் வரலாற்று ஆர்வலர்களால் விரும்பப்படும் வகையிலேயே அமைந்துள்ளது, அதனால் மறுபதிப்பு வெளியிடும் தேவையும் ஏற்படலாம். மேற்கொண்டு அடுத்த பதிப்புக்கு எடுத்துச் செல்கையில் நூலில் சிற்சில மாற்றங்கள் செய்யலாம். முதலாவதாக நூலில் ஆங்காங்கே தலைகாட்டும் தட்டுப்பிழைகளைச் சீர் செய்யலாம். செம்பியன்மாதேவி வரலாற்றுக்கு எவ்வகையிலும் தொடர்பு இருப்பதாகப் புரிந்துகொள்ள முடியாத வகையில் அமைந்திருக்கும், நூலின் மூன்றாம் பாகமாகக் கொடுக்கப்பட்டிருக்கும் சோழ மன்னர்களின் மெய்க்கீர்த்திகள் பகுதியை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக நூலில் இடம் பெறும் கோயில்கள், அவற்றின் சிலைகள், கல்வெட்டுகள் போன்றவற்றின் படங்களை இணைக்கலாம். அவை நூலின் செய்தியை விளக்கமாக அறிந்து கொள்ளவும் களத்திற்குப் பார்வையிடச் செல்வோருக்கு ஒரு கையேடாகவும் துணைபுரியும்.

செம்பியன் மாதேவியாவார்

 “செம்பியன் மாதேவி” (கி.பி 910 – 1001) சிவஞான கண்டராதித்தரின் பட்டத்தரசி ஆவார். இவரது சமாதி இன்று சேவூர் என அறியப்படும் செம்பியன் கிழானடி நல்லூரில் அமைந்துள்ளது. ‘மழவரையர் மகளார் கண்டராதித்தர் தேவியார் உத்தமசோழரைத் திருவயிறு வாய்த்த பராந்தகன் மாதேவடிகளார் செம்பியன் மாதேவியார்’ என்று கல்வெட்டுகளில் செம்பியன் மாதேவியார் சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறார். மழவர் நாட்டின் திருக்கோயிலூரில் மழவர் குலப்பெண்ணாகப் பிறந்து, மிக இளம் வயதில் (முதலாம் பராந்தகச் சோழனின் இரண்டாம் மகனான) கண்டராதித்த சோழரின் இரண்டாவது மனைவியானவர் செம்பியன் மாதேவியார். இவர் குறித்த முதல் கல்வெட்டு 941 ஆம் ஆண்டில் பராந்தகச் சோழனின் காலத்தைய கல்வெட்டாகத் திருச்சி உய்யக்கொண்டான் திருமலையில் கிடைத்துள்ளது. அதில் இவர் நந்தா விளக்கெரிக்க ஆடுகளைக் கொடையாக அளித்துள்ளார் என்ற செய்தி உள்ளது.

இவரை மணந்த கண்டராதித்தர் 949 ஆம் ஆண்டில் முடிசூடி எட்டு ஆண்டுகளே ஆட்சி செய்து 956 ஆம் ஆண்டில் மறைந்துவிடுகிறார். பதினைந்து ஆண்டுகளே நீடித்த இவரது திருமண வாழ்விற்குப் பிறகு சிறுவனான தமது மகன் மதுராந்தகன் என்ற உத்தமசோழனை வளர்த்து அவன் முடிசூட்டி ஆண்ட பொழுதும், அவனும் மறைந்து அவனுக்குப் பிறகு ராஜ ராஜ சோழன் முடி சூட்டி ஆளத் துவங்கிய பிறகும் என 60 ஆண்டுகள் இவர் இறைப்பணியில் ஈடுபட்டதைக் குறித்து ராஜ ராஜ சோழன் ஆட்சி காலத்தைய 1001 ஆம் ஆண்டின் கல்வெட்டும் கிடைத்துள்ளது என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள். ஆக, இவர் முதலாம் பராந்தகன், கண்டராதித்தன், அரிஞ்சயன், சுந்தர சோழன், ஆதித்த கரிகாலன், தமது மகன் மதுராந்தகன் என்னும் உத்தம சோழன், இராஜ இராஜ சோழன் எனச் சோழ அரசர்கள் பலரின் அரசாட்சிக் காலங்களைக் கண்ட சோழ அரசகுல முதுபெரும் தேவியாவார்.  செம்பியன் மாதேவி என்பது இவருடைய பட்டப் பெயராக இருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்து. பிற்காலத்தில் ‘மதுராந்தகன் மாதேவடிகள் ஆன செம்பியன் மாதேவியார்’ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளார்.

இவர் ஆற்றிய இறைப்பணிகள்;

1. செம்பியன் மாதேவியார் புதியதாகக் கட்டிய கோயில்கள், முன்னர் செங்கல் தளிகளாக (கோயில்களாக) இருந்தவற்றை அவர் கற்றளிகளாக மாற்றியவை,

2. முன்னர் இருந்த கோயில்களில் செய்த திருப்பணிகள், அவற்றில் புதியதாக இணைத்த பகுதிகள் மற்றும் சிற்பங்கள்,

3. அவர் தான் எடுப்பித்த கோயில்களுக்கும் முன்னர் இருந்த கோயில்களுக்கும் வழங்கிய பொருட்கொடைகள்

என மூன்று வகையில் பிரித்தறியப்படுகிறது.

செங்கல் தளியிலிருந்து செம்பியன் மாதேவியரால் முதலில் கற்றளியாக மாற்றப்பட்ட கோயில் கோனேரிராஜபுரம் கோயில். அவரது மகன் உத்தம சோழனின் மூன்றாம் (கிபி 972 இல்) ஆட்சி யாண்டில் அவரது தந்தை கண்டராதித்தர் நினைவாகக் கட்டப்பட்டது. இக்கோயிலில் கண்டராதித்தரும் செம்பியன் மாதேவியும் சிவலிங்கத்தை வழிபடும் புடைப்புச் சிற்பமும் அதுகுறித்த கல்வெட்டும் உள்ளது. சிற்பத்தில் கண்டராதித்தர் லிங்கம் முன் அமர்ந்து வணங்க, அவருக்குப் பின்னர் இருவர் வெண்சாமரமும், வெண் கொற்றக்குடையும் ஏந்த, லிங்கத்தின் அருகாமையில் அதற்கு மாலை சூடும் வகையில் செம்பியன் மாதேவி வணங்கியபடி நிற்பார் (பார்க்க: பக்கம் 14). தரையில் அமர்ந்து வணங்கும் கண்டராதித்தரைத் தவிரச் சிற்பத்தில் இடம் பெற்றுள்ள மற்றவர் குறித்து அடையாளம் காணுவதில் வரலாற்று ஆய்வாளர்கள் வேறுபடுகிறார்கள் என்பதை இங்கு நாம் நினைவில் கொள்ள வேண்டும். கல்வெட்டில் காணப்படும் செய்தி:

“ஸ்வஸ்தி ஸ்ரீ கண்டராதித்த தேவர் தேவியார் மாதேவடிகளார் ஸ்ரீ செம்பியன் மாதேவியார் தம்முடைய திருமகனார் ஸ்ரீ மதுராந்தக தேவரான ஸ்ரீ உத்தம சோழன் திரு ராஜ்ஜியம் செய்தருளா நிற்கத் தம்முடையார் ஸ்ரீ கண்டராதித்த தேவர் திருநாமத்தால் திருநல்லம் உடையாற்கு திருக்கற்றளி எழுந்தருளுவித்து இத் திருக்கற்றளியிலேயே திருநல்லம் உடையாரை திருவடித் தொழுகின்றாராக எழுந்தருளுவித்த கண்டராதித்த தேவர் இவர்” என்று கல்வெட்டு கூறுகின்றது. திருநல்லம் என்னும் கோனேரிராஜபுரம் கோயிலின் கருவறையின் தென்சுவரில் இச்சிற்பத் தொகுதியும் கல்வெட்டும் காணப்படுகிறது. கோனேரிராஜபுரம் கோயில் கட்டிய சிற்பிக்கு ‘இராசகேசரி மூவேந்த வேளாண்’ என்ற பட்டமும் கொடுத்து கருவறைச் சுவரிலேயே சிற்பம் அமைத்தும் பெருமை செய்துள்ளார் செம்பியன் மாதேவி. செம்பியன் மாதேவியாரின் பணிகளைப் போற்றும் வகையில் நாகபட்டினம் அருகிருக்கும் ஊர் ஒன்றுக்கு செம்பியன்மாதேவி என்ற பெயரும் சூட்டப்பட்டுள்ளது.

சோழர் கால கட்டிடக்கலை முற்காலச் சோழர், இடைக்காலச் சோழர், பிற்காலச் சோழர் என மூன்று கட்டங்களில் அறியப்படுகிறது; இடைக்காலமான செம்பியன் மாதேவி காலத்தில் கருவறை அர்த்த மண்டபங்களில் உள்ள தேவகோட்டங்களின் (மாடங்கள்) எண்ணிக்கை அதிகரிக்கும் முறை துவங்கியது. பத்தாம் நூற்றாண்டில் தமிழக கோயில் கட்டிடக்கலையில் குறிப்பிடத் தக்க மாற்றத்தை ஏற்படுத்தியவர் செம்பியன் மாதேவி. உயர்ந்த எண்ணிக்கையில், 16 தேவகோட்டங்கள் வரை விரிவாக்கப்பட்டுள்ளது. உத்தம சோழர் காலத்திற்குப் பிறகு கோயில் சிற்பங்களின் எண்ணிக்கையும் வகைகளும் அதிகரித்தாலும், அவற்றின் எழிலும் நளினமும் முந்தைய கால சிலைகளின் தோற்றத்துடன் ஒப்பிடுகையில் குறைந்து விட்டது என்பதும் சில வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து. இதற்குக் கற்களைத் தேர்வு செய்த முறையில் குறைபாடு இருந்திருக்கலாம் என்றும் ஐயுறுகிறார்கள்.

சோழர் காலம் செப்புத் திருமேனிகளின் பொற்காலமாகக் கருதப்படுகிறது. இவர் காலத்தில் செப்புத் திருமேனிகள் வடிக்கும் கலை மிதமிஞ்சிய வேகத்தில் வளர்ச்சியடைந்தது. பலவகை தெய்வங்களின் உருவங்களும் செப்பு வடிவம் பெற்றனர். கோயிலில் மூலவர் சிற்பங்கள் கருங்கற்களால் ஆன நிலையான சிற்பங்கள் என்பதால், விழாக் காலங்களில் இறைவனைப் பல்லக்கிலும், வீதியுலாவிற்காகக் கொண்டு செல்ல பஞ்சமூர்த்திகள் (ஐந்து இறைவர்கள் – சிவன், உமை, பிள்ளையார், முருகன், சண்டிகேசுவரர் என்று குடும்பமாக) தனித்தனியாகத் தேர்களிலும் எடுத்துச் செல்லும் வழக்கம் தோன்றியதால் தங்கம், வெள்ளி, செம்பு, பித்தளை, ஈயம் ஆகிய ஐம்பொன்களின் உலோகக் கலவைகளில் சிலைகள் உருவாக்கப்பட்டன. ஒவ்வொரு கோயிலும் குறைந்த அளவு இந்த ஐவர் செப்புச் சிலைகளையாவது கொண்டிருப்பது வழக்கம். நெடிய ஒடிசலான உருவத்துடன், குறைந்த அணிகலன்களும், இடையில் மட்டும் உடையணிந்து திறந்த மார்புடன், தலையில் உயர்த்தி முடியப்பட்ட கொண்டையுடன், நீண்ட துளையுள்ள காதுகளுடன் கையில் தாமரை மலர் பிடிப்பது போன்ற முத்திரையுடன் உடைய புகழ் பெற்ற செப்புச் சிலை செம்பியன் மாதேவிக்கும் உண்டு. அது அவரது மகன் உத்தமசோழனால் தனது தாய் பிறந்த சித்திரைத் திங்கள் கேட்டை நட்சத்திர நாள் விழாவில் வீதியுலா செல்ல உருவாக்கப்பட்ட சிலை எனப்படுகிறது. இச்சிலையின் அமைப்பில்தான் இறைவி பார்வதியின் சிலைகளும் வடிக்கப்படுவது வழக்கம். இறைவிக்கு இணையாக இவர் கருதப்பட்டிருப்பதை இதனால் அறிய முடிகிறது. சோழர்கால செப்புத் திருமேனிகள் என்றாலே நினைவுக்கு வருபவர் பெரியபிராட்டி செம்பியன் மாதேவியார் என்றும் கருதப்படுகிறது.

கோயில்களைப் புதிதாகக் கட்டுவதையும் புதுப்பித்துக் கட்டுவதையும் கடந்து, அக்கோயில்களில் வழிபாடுகள் தொடர்ந்து நடக்கவும், விழாக்கள் நடக்கவும், விளக்குகள் தொடர்ந்து எறியவும் என எண்ணிறைந்த கொடைகளையும், செல்வங்களையும், பொற்கழஞ்சுகளையும், வெள்ளிப் பாத்திரங்களையும், செப்புச் சிலைகளையும், அணிமணிகளையும் அள்ளி அள்ளி வழங்கியுள்ளார் செம்பியன் மாதேவி. மங்கலநாண் அல்லது தாலி அணிவது தமிழர் மரபிலிருந்ததா என்ற வினா சென்ற நூற்றாண்டில் ம.பொ.சி., மற்றும் மா. இராசமாணிக்கனார் போன்ற பெரும் தமிழறிஞர்களை இரு பிரிவுகளாக விவாதத்தில் இறக்கியது. மா. இராசமாணிக்கனார் பிரிவினர் தாலி திருமணத்தில் மரபு வழக்கானது பிற்காலமே என்ற கருத்தை முன்வைத்தனர். பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பெற்ற கோனேரிராஜபுரம் கோயிலின் துர்கை சிலையில் கழுத்தில் மங்கலநாண் அணிந்துள்ளவராகக் காட்டப்படுகிறார். அதுமட்டுமின்றி, விருத்தாசலம் என்னும் திருமுதுகுன்றத்தின் பழமலைநாதர் கோயிலின் இறைவிக்கு அரைகழஞ்சு எடையுள்ள பொற்றாலி, மூன்று குண்டுமணிகள் ஆகியவற்றைக் கூரைப்புடவையுடன் செம்பியன் மாதேவி கொடையளித்த கல்வெட்டுச் செய்தியும் கிடைக்கிறது. இதிலிருந்து நாம் உறுதியாக 10 ஆம் நூற்றாண்டில் திருமணமான பெண்கள் தாலி அணிந்தனர் எனவும் அறிய முடிகிறது.

சோழப்பேரரசுகளை வழிநடத்துதல்:

முதலாம் பராந்தகச் சோழன்.
கண்டராதித்த சோழன்
அரிஞ்சய சோழன்
சுந்தர சோழன் (இரண்டாம் பராந்தகச் சோழன்)
உத்தம சோழன்
ராசராச சோழன்
முதலிய ஆறு சோழப்பேரரசர்களின் அரசியல் வழிகாட்டியாக இருந்தவர் பெரிய பிராட்டி செம்பியன் மாதேவியார். கண்டராத்த சோழர் கி.பி 957ல் மரணமடைந்த போது அரிஞ்சய சோழனை அரசாள வைத்தவர். ஆதித்த கரிகாலன், ராஜராஜன், குந்தவை ஆகியோரை அன்போடு வளர்த்தவர். மேலும் கணவர் இறந்த பிறகு சிவ வழிபாடு, ஆலயத்திருப்பணிகள், தர்ம காரியங்கள் என் வாழ் நாளை கழித்த செம்பியன் மாதேவியார் சுமார் 90 ஆண்டுகள் (கி.பி 910 – 1001) வாழ்ந்து ஆறு சோழமாமன்னர்களின் ஆட்சியைக் கண்டவர்.

சோழர் காலத்தில் அரச மகளிரின் ஆளுமை, கொடைத்தன்மை, செல்வ நிலை ஆகியன எந்த அளவு உயர்ந்த நிலையிலிருந்தது என்பதற்குச் சான்று செம்பியன் மாதேவியின் வாழ்வு. அறப்பணி மற்றும் கலைப்பணிகளுடன், செம்பியன் மாதேவியின் சிறப்பாக நாம் என்றும் நினைவில் நிறுத்த வேண்டியது அவருடைய வரலாறு காக்கும் செயல்கள். அதன் காரணமாகவே இவர் ஒரு வரலாற்று நாயகி என அழைக்கப்பட வேண்டியவர். இவர் தாம் புதுப்பித்த செங்கற் கோயில்களின் பழைய கல்வெட்டுகளைப் படியெடுத்து அவற்றைப் புதுப்பிக்கப்பட்ட கற்றளிகளின் கட்டுமானங்களில் இடம் பெறச் செய்தார். அவ்வாறு (26 கல்வெட்டுப் படிகள்) பொறிக்கப்படுகையில் இது ‘ஒரு பழங்கல்படி’ என்ற வரியையும் அவற்றில் வெட்டுவித்தார். அவ்வாறு பழங்கல்படி எடுக்கையில் ஆடுதுறைக் கோயிலிலிருந்த வரகுணபாண்டியனின் கல்வெட்டையும், அவர் ஓர் எதிரி நாட்டு அரசனான பாண்டியனாக இருந்தாலும் கூட அவரது கல்வெட்டையும் படியெடுத்துப் பாதுகாத்து வரலாற்றை ஆவணப்படுத்துவதில் அவர் காட்டிய அக்கறைக்காகவே செம்பியன் மாதேவி போற்றப்படவேண்டிய ஒரு வரலாற்று ஆளுமை என்றால் அது மிகையல்ல.

கணவரின் மறைவுக்கு பின், சோழப் பேரரசில் முக்கியப் பொறுப்பு வகித்து வந்த செம்பியன் மகாதேவி, கோயில்களை கட்டட முறைகளில் முக்கிய மாற்றங்களை செய்து காட்டியவர். அதுநாள் வரை செங்கல் கற்களை கொண்டு கட்டப்பட்டு வந்த கோயில்களை, இவரின் வழிகாட்டுதல் பேரில் கருங்கற்களை கொண்டு கட்டப்பட்டது.

செம்பியன் மகாதேவி சிலை:

இப்படி கோயில் பணிகளில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட செம்பியன் மகாதேவியின் மறைவுக்கு பின், நாகை மாவட்டத்தில் உள்ள செம்பியன் மகாதேவி கிராமத்தில் உள்ள கைலாசநாதர் கோவிலில் செம்பியன் மகாதேவிக்கு உலோகத்தால் சிலை அமைக்கப்பட்டது.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

நவக்கிரக குரு பகவானுக்கும், குரு தட்சிணாமூர்த்திக்கும் உள்ள வேறுபாடு.

குரு பகவானுக்கும், தட்சிணாமூர்த்திக்கும் உள்ள வித்தியாசம் தெரியுமா?:
🙏🏻தட்சிணாமூர்த்தி என்பவர் வேறு, குரு பகவான் என்பவர் வேறு இருவரும் ஒருவரல்ல.

👉இந்த தெய்வங்களை எப்படி வணங்குவது, அவர்களுக்கு படைக்க வேண்டிய நைவேத்தியம், அணிவிக்க வேண்டிய வஸ்திரம் என்ன, அவர்களுக்கிடையே உள்ள தனித்துவம் என்ன என்பதை இங்கு விரிவாக பார்ப்போம் 

👉நம்மில் பெரும்பாலானோர் தட்சிணாமூர்த்தியும், குரு பகவானும் ஒன்று என நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஒருவர் ஞான குரு, மற்றொருவர் நவகிரக குரு என்பது தெரிவதில்லை.
இதன் காரணமாக கோயில்களில் வியாழக்கிழமைகளில் குரு பகவானை வணங்குவதற்காக அல்லது பரிகாரம் செய்வதற்கு என நினைத்து தட்சிணாமூர்த்தி முன் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது.

👉அதே சமயம் உண்மையான குரு முன் வழிபடச் செல்பவர்களின் எண்ணிக்கை மிக குறைவாகவே உள்ளது. இதன் காரணமாக குரு பகவானுக்கு செய்ய வேண்டிய வழிபாட்டு முறையை தட்சிணாமூர்த்தி முன் செய்து வருகின்றனர்.

🌸குருப்ரஹ்மா: குருர்விஷ்ணு: குரு தேவோ மஹேஸ்வர:

குரு சாக்ஷாத் பரப்ரஹ்ம தஸ்மைஸீ குருவே நம:🌸

என்ற ஸ்லோகத்தில் குரு என்ற வார்த்தைக்கு தட்சிணாமூர்த்தி என்று அர்த்தம். ஆனால் குரு என குறிப்பிடப்படுவதால் குரு பகவானும், தட்சிணாமூர்த்தியும் ஒன்று என பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

👉அதே சமயம் ஆலங்குடியில் குரு பகவானுக்குரிய கோயிலும், பட்டமங்கலத்தில் தட்சிணாமூர்த்தி ஸ்வாமியும் பிரபலமடைந்து இருப்பதால் இருவரும் ஒன்று என எண்ணத்தோன்றச் செய்துள்ளது.

👉நவகிரகங்கள் என்பது இறைவன் இட்ட கட்டளையை, கடமையைச் செய்யக் கூடிய ஒன்பது கோள்களாகும். அவற்றில் ஒருவர் தான் குரு பகவான் எனும் ப்ரஹஸ்பதி.

👉இரு தெய்வங்களுக்கு இடையே உள்ள வித்தியாசம் என்ன என்பதை இங்கு பார்ப்போம்.

🌺​தட்சிணாமூர்த்தி என்பவர் யார், எப்படி இருப்பார்🌺

👉சிவன் கோயிலில் தென்முகம் பார்த்து அருள்பாலிப்பவர் தட்சிணாமூர்த்தி. இவர் எப்போது தியானத்தில் ஆழ்ந்திருப்பார். தட்சிணாமூர்த்தி என்பவர் ஞான குரு. அவருக்கு விருப்பமான நிறம் வெண்மை. அதனால் அவர் வெண்ணிற ஆடையில் அருள்பாலிப்பார். (ஸ்வேதாம்பரதரம் ஸ்வேதம் என வேதத்தில் குறிப்பிடப்படுகிறது. அதாவது ஸ்வேதம் என்றால் வெண்மை என்று பொருள்.

👉இவர் சிவ பெருமானின் ரூபம். ஸ்நகாதி முனிவர்களுக்கு வேத ஆகமத்தை உபதேசிக்கும் குருவின் உருவமாக தட்சிணாமூர்த்தி கல்லால மரத்தின் அடியில் அமர்ந்திருக்கக் கூடியவர். இவரை ஞான குரு அல்லது ஆதி குரு என அழைக்கப்படுகிறார்.

👉ஞானம் வேண்டி தட்சிணாமூர்த்தி முன் நாம் தியானத்தில் அமர்ந்து வழிபடலாம். அதே சமயம் ஞானத்தை வேண்டுபவர்களுக்கு வியாழக்கிழமை தான் உகந்தது என்று இல்லை. எந்த கிழமையானாலும் அவருக்கு உகந்ததே.

👉தட்சிணாமூர்த்தி என்பவர் சிவவடிவம்,
👉இவர் சிவன்
👉தட்சிணாமூர்த்தி என்பவர் முதலாளி,
👉தட்சிணாமூர்த்தி சிவகுரு,👉தட்சிணாமூர்த்தி கல்லாலின் கீழ் அமர்ந்து நான்மறைகளோடு ஆறு அங்கங்களையும் சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் என்ற நான்கு பிரம்மரிஷிகளுக்கு போதிப்பவர்,
👉தட்சிணாமூர்த்தி 64 சிவவடிவங்களில் ஒருவர்,
👉சிவன் தோன்றுதல் மறைதல் என்ற தன்மைகள் இல்லாதவர்

🌺​குரு என்பவர் யார், எப்படி இருப்பார்🌺

👉நவகிரகங்களில் இருக்கக் கூடிய குரு பகவானோ வடக்கு திசை நோக்கி வீற்றிருப்பார். இவருக்கு உகந்த நிறம் மஞ்சள். அதே போல் அவருக்கு விருப்பமான நைவேத்தியம் கொண்டைக் கடலை.

👉இவருக்கு மஞ்சள் வஸ்திரத்தைச் சாற்றுவதும். கொண்டைக்கடலை மாலை அணிவிப்பதும் உகந்தது.

👉ஆனால் குரு என்பவர் இந்திர லோகத்தில், தேவர்களுக்கெல்லாம் குருவாக, ஆலோசனை வழங்கக் கூடியவராக அதாவது ஆசிரியர் பணியை செய்யக் கூடியவர் ப்ருஹஸ்பதி எனும் குரு பகவான். (வியாழன் கோள்).

👉குரு பகவான் என்பவர் கிரக வடிவம்,
👉பிரகஸ்பதி,
👉குரு-அதிகாரி,
👉குரு தேவகுரு.
👉குரு பகவான் நவகோள்களில் குரு என்ற வியாழனாக இருந்து உயிர்களுக்கு அவை முன்ஜென்மங்களில் செய்த நல்வினை தீவினைகளுக்கான பலாபலன்களை இடமறிந்து காலமறிந்து கொண்டு சேர்ப்பவர்.
👉குரு ஒன்பது கோள் தேவதைகளில் 5 ஆம் இடத்தில் அங்கம் வகிப்பவர்.👉குருவோ உதயம்-அஸ்தமனம் என்ற தன்மைகள் உடையவர்

👉இத்தனை தத்துவ வேற்றுமைகளைக் கொண்டுள்ள இந்த இருதேவர்களையும் குரு என்ற ஒற்றைச் சொல்லை மட்டும் வைத்துக்கொண்டு அவர்தான் இவர் இவர்தான் அவர் என்று வாதிடுவது சரியல்ல…

👉தட்சிணாமூர்த்தியை தட்சிணாமூர்த்தியாக (சிவகுருவாக) வழிபடுங்கள்.

👉சில ஆலயங்களில் தட்சிணாமூர்த்தியை குரு பகவான் என்றே மாற்றி விட்டார்கள்.

👉அதற்கே அனைத்து பரிகார பூஜைகளையும் செய்கிறார்கள். குருவுக்கு அணிவிக்கவேண்டிய மஞ்சள் துணியை தெட்சிணா மூர்த்திக்கு அணிவிக்கிறார்கள். கடலை சாதம் போன்ற குருகிரக நைவேத்திய பொருள்களை தட்சிணாமூர்த்திக்கு நைவேத்தியம் செய்கிறார்கள்.

👉இப்போதாவது ஞானத்தை வழங்கக்கூடிய குரு தட்சிணாமூர்த்தி வேறு. நவகிரகங்களில் இருக்கக் கூடிய குரு வேறு என்பதை உணருங்கள்.

ஓம் நமசிவாய

குரு பெயர்ச்சி 2024: இந்த ராசிகளுக்கு எப்படி இருக்கும்.

மேஷத்தில் இருந்து ரிஷபத்துக்கு: நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீகுரோதி வருஷம் உத்தராயணம் வஸந்த ரிது சித்திரை மாதம் 18-ம் நாள் இதற்குச் சரியான ஆங்கில தேதி 01.05.2024 அன்றைய தினம் கிருஷ்ணபக்‌ஷ அஷ்டமியும் - புதன்கிழமையும் - திருவோண நக்‌ஷத்ரமும் - சுப நாமயோகமும் - பவ கரணமும் - சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 28.22-க்கு - மாலை 05.01-க்கு துலாம் லக்னத்தில் குரு பகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு மாறுகிறார். உங்கள் நட்சத்திரங்களுக்கான குரு பெயர்ச்சி பலன்கள் இதோ.குரு பெயர்ச்சி 2024: இந்த ராசிகளுக்கு எப்படி இருக்கும். 


   
அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என அழைக்கப்படுகின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் தெரிகின்றன
   
குரு பெயர்ச்சி: அனைத்து கிரகங்களும் தங்கள் ராசிகளை மாற்றி பெயர்ச்சி அடைந்தாலும், சில கிரகங்களின் பெயர்ச்சிகள் மிகப்பெரிய ஜோதிட நிகழ்வுகளாக பார்க்கப்படுகின்றன. உதாரணமாக, சனி பெயர்ச்சிக்கும் குரு பெயர்ச்சிக்கும் மிகப்பெரிய முக்கியத்துவம் அளிக்கப்படுகி
   
குரு பெயர்ச்சி 2024: மே 1 ஆம் தேதி குரு பகவான் தனது ராசியை மாற்றி பெயர்ச்சி ஆகவுள்ளார். தற்போது மேஷ ராசியில் இருக்கும் அவர் ரிஷப ராசிக்கு பெயர்ச்சி ஆவார். இது இந்த ஆண்டின் மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படு
   
அனைத்து கிரகங்களையும் போலவே குரு பகவானின் பெயர்ச்சியின் தாக்கமும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் ஏற்படும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 
   
ரிஷபம்:  குரு பகவான் ரிஷப ராசியில்தான் பெயர்ச்சி ஆகவுள்ளார். இந்த பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான முன்னேற்றத்தையும் வெற்றியையும் தரும். தொழில்துறையில் சாதகமான முன்னேற்றங்கள் ஏற்படும். கிரக நிலைகள் பதவி உயர்வு அல்லது புதிய வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும். இந்த காலத்தில் புதிய தொழில் தொடங்குவது சாதகமாக இருக்கும். எதிர்பாராத இடங்களிலிருந்து பண வரவு இருக்கும். சட்ட சிக்கல்களில் நிவாரணம் கிடைக்கும்
   
மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியால் ஏற்படும் மாற்றம் சுபமான மாற்றமாக இருக்கும். இந்த ராசிக்காரர்கள் வாழ்வின் அனைத்து துறைகளிலும் வெற்றியை அனுபவிக்க முடியும். பொருளாதார ஆதாயங்களும், பொருள் வசதிகளும் அதிகமாகும். இந்த காலகட்டத்தில் முதலீடு செய்யலாம். திடீரென்று எதிர்பாராத லாபம் கிடைக்க வாய்ப்பு உண்டு.
   
சிம்மம்: சிம்மம் ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி லாபகரமானதாக இருக்கும். சுப பலன்கள் கிடைக்கும். அலுவலக வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். சமூகத்தில் மரியாதை கூடும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும்
   
கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி தொழிலில் வெற்றியைத் தரும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பணி இடத்தில் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்கும். வேலை தேடிக்கொண்டு இருக்கும் கன்னி ராசிக்காரர்களுக்கு இப்போது நல்ல வேலை கிடைக்கும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருபவர்கள் வெற்றி பெறுவார்கள். 
   
தனுசு: தனுசு ராசிக்காரர்கள் குரு பெயர்ச்சியால் அனுகூலமான பலன்களை பெறுவார்கள். இந்தக் காலகட்டத்தில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் அடைய அதிக வாய்ப்புகள் கிடைக்கும். திடீர் முன்னேற்றத்தல பண வரவு அதிகமாகும். பல சாதனைகளை செய்வீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
   
குரு பகவானை மகிழ்வித்து அவரது அருள் பெற, ‘குரு பிரம்மா குரு விஷ்ணு, குரு தேவோ மகேஸ்வர; குரு சாஷாத் பரப்பிரம்மா, தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ’ என்ற ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்யலாம். வியாழக்கிழமைகளில் கொண்டைக்கடலை சுண்டல் நெய்வேத்தியம் செய்து வழிபடுவதும் நல்ல பலனை அளிக்கும். 
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் நெல்லிக்குப்பம்.

Followers

மனிதனை மாமனிதனாக்குகிறது தியானம்

தூங்காமல் தூங்கி சுகம் பெறுதல் ஞான வழி என்ற தியானம் “தூங்கிக்கண்டார் சிவலோகமும் தம்உள்ளே தூங்கிக்கண்டார் சிவயோகமும் தம் உள்ளே ...