Monday, April 1, 2024

திருவடுகூர் என்பது திருக்கண்டீஸ்வரம் மட்டும்தான் இங்குதான் பைரவர் வழிபாடு நடைபெறுகிறது.

திருவடுகூர் என்பது திருக்கண்டீஸ்வரம் மட்டும்தான் இங்குதான் பைரவர் வழிபாடு செய்யபட்டார் 
         இந்த பைரவர் தமிழ்நாட்டில் வேறு எங்கும் காணமுடியாத ஒன்று ஆறு கரங்கள் கொண்டு ஈசான்ய மூலையில் வீற்றிருக்கும் அருள்மிகு ஆனந்த கால பைரவர் சுவாமி
          திருக்கண்டீஸ்வரம் வாருங்கள் வாழ்வில் நலம் பெறுங்கள்
 திருக்கண்டீஸ்வரம் 
இறைவன் பெயர் : அருள்மிகு நடனபாதேஸ்வரர்

இறைவி பெயர் : அருள்மிகு ஹஸ்ததாளாம்பிகை

ஆகமம் : காமிகம்

தீர்த்தம் : சூரிய தீர்த்தம், விருச்சிக தீர்த்தம்

புராண பெயர் : திருவடுகூர்,திருக்கணிச்சுரம்
தற்போதைய ஊர் பெயர் : திருக்கண்டீஸ்வரம்

தேவாரம் : திருஞானசம்பந்தர்

தேவாரம் பாடல் : 
சுடுகூரெரி மாலையணிவர் சுடர்வேலர்
கொடுகூர் மழுவாளொன்றுடையார்
விடையூர்வர்
கடுகூர் பசிகாமங் கவலை பிணியில்லார்
வடுகூர் புனல் சூழ்ந்துவடு கூரடிகளே


திருஞானசம்பந்தர் சுவாமிகள்                 நரசிம்மர் போற்றிய பாடல் :
       
திருமாலடி வீழ்திசை நான்முகனாய
பெருமாணுனார் கில்லாப் பெருமானொடு முடிசேர்
செருமால் விடையூருஞ் செம்மான்றிசைவில்லா
வருமாவடு கூரிலாடுமாடிகளே 

ஸ்தலம் புராணம் : 

இத்திருக்கோவிலில் குடிகொண்டுள்ள சுந்தரர் மூர்த்தி சுவாமிகள் பாட சுவாமி ஈசன் நடனம் ஆட அம்பிகை கைத்தாளம் போட நந்தி தேவர் மத்தளம் இசைக்க முடிவில் ஈசன் ஆடியதர்க்கு சுந்தரரிடம் கூலி கேட்க சுந்தரர் நான் பாடியதர்க்கு ஈசனிடம் கூலி கேட்க ஐதீகம் நிலவியது ஈசன் நான் ஆடியதர்க்கும் நீ பாடியதர்க்கும் ஒற்றுமை ஏற்படுத்திய ஸ்தலம்
       
இத்திருக்கோவிலில் குடிகொண்டுள்ள ஈசன் மேற்கு நோக்கிய திசையில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாளிக்கிறார் 
     
இறைவி அம்பாள் கிழக்கு நோக்கிய திசையில் தீர்த்தம் குளம் எதிரில் அருள்பாளிக்கிறார் 
      
இங்கு நரசிம்மர் வழிபட்ட ஸ்தலம் சான்று சுவாமி விமானத்தில் மேற்கு நோக்கிய திசையில் யோக நரசிம்மர் அமர்ந்த நிலையில் காட்சியளிக்கிறார் பிறகு தூணில் இருந்து வீர நரசிம்மர் காட்சியளிக்கிறார்
      
யோக நரசிம்மர் அமர்ந்த நிலையில் காட்சியளிக்கிறார் இந்த தலத்தில் யோக நரசிம்மர் வழிபட்ட ஸ்தலமாக கருதப்படுகிறது

இந்திரன் பூஜிக்கப்பட்ட ஸ்தலம்அருள்தரும் ஹஸ்ததாளாம்பிகை சமேத அருள்மிகு நடனபாதேஸ்வரர் திருக்கோயிலில் ஈசான்ய மூலையில் வீற்றிருக்கும் அருள்மிகு ஆனந்த கால பைரவர் சுவாமி மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று ஆறு கரங்கள் கொண்டு ஈசான்ய மூலையில் வீற்றிருக்கும் ஆனந்த கால பைரவர் தமிழ்நாட்டில் வேறு எங்கும் காணமுடியாத ஒன்று
          பைரவர் சுவாமிக்கு தனி கோவிலாக கொண்டு வீற்றிருக்குடிய ஒரு திருக்கோயில் பைரவர் சுவாமிக்கு பிரம்மன் தலையை துண்டிக்கப்பட்டதால் இவருக்கு ஏற்பட்ட பிரம்ம தோஷம் நீங்க இறைவனை நடனபாதேஸ்வரர் சுவாமியை வழிபட்ட ஸ்தலம்

No comments:

Post a Comment

Followers

மாங்கல்ய தோஷம் களத்திரதோஷம் போக்கும் சோம வார விரதம்..

சோம வார விரதம் பற்றிய பதிவுகள் : சிவனுக்கு உரிய நாள் திங்கட்கிழமையாகும். எனவே ஒரு திங்கள் கிழமையில் அல்லது சிவராத்திரி அல்லது பி...