Wednesday, April 3, 2024

இந்துச் சிறப்பு நாட்கள் யாவும் விசேஷம் யாவும் இயற்கையை ஒட்டி அமைந்தவை*.

   *தமிழ்ப் புத்தாண்டு*.  *குரோதி* *கலியுகம் 5125*
*சித்திரை முதல் நாள்.* *1.1.5125*
*ஆங்கிலம் ஏப்ரல் 14.4.2024*
தமிழ்  மாதப் பிறப்பு   தமிழ் வருடப் பிறப்பு எல்லாம் அவரவர் மனம் போல் செயற்கையாக  அமைந்தவை அல்ல.  

*இந்துச்  சிறப்பு நாட்கள் யாவும்  விசேஷம் யாவும் இயற்கையை ஒட்டி அமைந்தவை*. 

சனிப் பெயர்ச்சி  குருப் பெயர்ச்சி  ராகு கேதுப் பெயர்ச்சி என்பது போல் *சூரியப் பெயர்ச்சியே தமிழ் மாதப் பிறப்பு*.  

பன்னிரண்டு  ராசிகளில் சூரியன் பெயரும் நுழையும் நாளே  பன்னிரண்டு தமிழ் மாதப் பிறப்பு.   

💥   *ஆடு  தலையாக* (நக்கீரர்,நெடுநல்வாடை)  என மேசம் (ஆடு ) முதல் ராசியாக அமைய மீனம் வரையிலான பன்னிரண்டு ராசிகளில் சூரியன் நுழையும் நாளே பன்னிரண்டு தமிழ்  மாதப் பிறப்பு. 

மேசம் முதல் ராசி யாதலால் சித்திரை மாதமே முதல் மாதம் ஆகும். 

அதாவது சித்திரை மாதப் பிறப்புதான் தமிழ்ப் புத்தாண்டு ஆகும். 

மகரம் பத்தாவது ராசி யாதலால் மகர  ராசியில்  சூரியன் நுழையும்  நாளான சூரியப் பெயர்ச்சியான  மகர  சங்கராந்தி எனப்படும் தை மாதப் பிறப்பான பொங்கல் திருநாள் பத்தாவது மாதப் பிறப்பாக மட்டுமே இருக்க முடியும்.  

மாதப் பிறப்பு என்பது என்ன  ? 
பன்னிரண்டு மாதங்களில் ஒரு மாதம் எப்படி ஏன் முதல் மாதம் ஆகிறது  அதாவது வருஷப் பிறப்பு ஆகிறது என்ற  ஆன்மீக ஞானம் இல்லாத, 

தமிழ் இலக்கியமும் தமிழர்ப் பண்பாடும் பாரம்பரியமும் தெரியாத தமிழ்விரோதிகளான நாத்திகக் கயவர்கள் தம் மனம் போனபடி யெல்லாம் மாற்றம் செய்துத் தமிழர்த் திருநாட்களையும் பண்பாட்டு மரபுகளையும் சீர் குலைக்கின்றனர். 

தை மாதப் பிறப்பு தமிழ்ப் புத்தாண்டு என்று கூறுவது  வாரத்தின் முதல்நாள் வியாழக்கிழமை என்று கூறும் பித்தர் பேச்சே. 

பொங்கல் பிற்காலப் பண்டிகை. நடராசர் திருநாளான தைப் பூசத்தையும், மார்கழித் திருவெம்பாவைத் திருவிழா நிறைவுறும் நாளாக தை மாதப் பிறப்பு இருந்ததையும் பத்துப்பாட்டு எட்டுத்தொகை தேவாரப் பாடல்கள் காட்டுகின்றன.  

பொங்கல், 
மாட்டுப் பொங்கல்,  
காணும் பொங்கல்  என்றுதான்  பொங்கல் பண்டிகைப் பெயர்கள் இருந்து வந்துள்ளன.  

திருவள்ளுவர் நாள், உழவர் நாள் என்று பெயர் சூட்டுவது எல்லாம்  தமிழர் விரோத இந்து விரோத   திராவிடப் பேய்களின்  சமீப காலத்திய பொய்க்   கற்பனையே.   

திருவள்ளுவர்  எப்போது என்றைக்குப் பிறந்தார்   என்பது யாருக்குத் தெரியும் ? 

அவர்  பிரம்மச்சாரியா  சம்சாரியா சந்நியாசியா  என்பதற்கும் எந்த  ஆதாரமும் இல்லை.  

வாசுகி  கதையெல்லாம் பிற்கால  நாடகக் கற்பனையே கட்டுக் கதையே. 

 திருவள்ளுவ மாலை மற்றும் கல்லாடம் என்ற இலக்கியம்  மூலம் திருவள்ளுவர் சிறந்த சிவனடியார்  சைவ  சித்தாந்தி  வேத ஆகமங்களை எளிய தமிழில்  பாடிய அந்தணர்,   மதுரைத் *தமிழ்ச் சங்கத்தில் சங்கத் தலைவரான  சொக்க நாதரே முதல் வாழ்த்துக் கவி பாடிச் சிறப்பித்தார்* என்ற  செய்திகளே  உள்ளன.  

திருவள்ளுவர்  எங்கு பிறந்தார் எப்போது  பிறந்தார்  என்பவை எல்லாம்  தற்கால அரசியல்வாதிகளின் கற்பனையே.  

சொக்க நாதரின் பேரருளைப்  பெற்றுத் திரு என்ற அடைமொழியுடன் போற்றப்பட்ட  சிறந்த சிவனடியாரான திருவள்ளுவரின் மேனியில் இருந்து விபூதியை அகற்றிப் பாழ் நெற்றியாகக் காட்டுவது, சமணர் என்பது ஆகியவை யெல்லாம்  சைவ விரோத   திராவிடக் கயவர்களின்  புன்மை.   

ஆணோ பெண்ணோ பாழ் நெற்றியாக இருப்பது தமிழர்ப் பண்பாடு அல்ல. 
பாரதப் பண்பாடு அல்ல. பாழ்நெற்றிக் காரர்கள் தமிழரும் அல்லர் இந்தியரும் அல்லர்.   

சிவப்பிரியா

No comments:

Post a Comment

Followers

மிக சக்தி வாய்ந்த 18ம்படி கருப்பண்ணசாமி கோவில்

மக்களுக்கும் சகல ஜீவராசிகளுக்கும் எல்லா ஊர்களுக்கும் காவல் தெய்வமாகத் திகழ்பவர் கருப்பசாமி . அவரின் தோற்றம் பற்றிக் கூறுவது இதுவ...