Monday, April 8, 2024

காசியில் ஏன் கருடனும் பல்லியும் இல்லை தெரியுமா?

காசியில் ஏன் கருடனும் பல்லியும் இல்லை தெரியுமா?
ஏழு ஜென்மத்துக்கும் செய்த பாவங்களைப் போக்குகின்ற புண்ணிய தலமாக காசி கருதப்படுகிறது. அதன் புனிதம் பற்றியும் கங்கையின் புனிதம் பற்றியும் நிறைய நிறைய கேட்டிருப்போம்
ஏழு ஜென்மத்துக்கும் செய்த பாவங்களைப் போக்குகின்ற புண்ணிய தலமாக காசி கருதப்படுகிறது. அதன் புனிதம் பற்றியும் கங்கையின் புனிதம் பற்றியும் நிறைய நிறைய கேட்டிருப்போம். 

வாராணசியைச் சுற்றிப் பார்த்தீர்கள் என்றால், எங்கும் கருடன் சுற்றுவதைப் பார்க்கவே முடியாது. அதேபோல் காசியில் எங்குமே பல்லியை உங்களால் பார்க்கவே முடியாது. ஏன் தெரியுமா?

நம்முடைய வீடுகளில் கூட சாதாரணமாக திரிகின்ற பல்லி மோட்ச ஸ்தலமான வாரணாசியில் மட்டும் ஏன் இல்லை என்று யோசிக்க வேண்டியது மிக அவசியம்.
ராவண வதம் நடந்தது பல யுகங்களுக்கு முன்பு ஸ்ரீராமர் ராவணனை வதம் செய்த பின், ஹனுமனிடம் ராமேஷ்வரத்தில் ஒரு சுயம்பு லிங்கத் நிறுவ வேண்டும். அதற்காக காசியில் இருந்து ஒரு சுயம்பு லிங்கத்தைக் கொண்டு வரும்படி கட்டளையிடுகிறார். அப்படி அனுப்புகிற பொழுது, காசிய நோக்கி ஹனுமான் பயணம் செய்கிறார். 

அப்படி காசியை நோக்கி ஹனுமான் வரும்பொழுது, அவருடைய கண்களில் அங்கிருக்கும் பல ஆயிரக்கணக்கான லிங்கங்களும் அங்கு தென்படுகின்றன. அதைப் பார்த்ததும் ஹனுமான் குழம்பிப் போகிறார். அங்கிருக்கும் லிங்கங்களில் எது சுயம்பு லிங்கம் என்பது அவருக்குத் தெரியவில்லை. சுய லிங்கத்தைக் கொண்டு சென்றால் அதற்குரிய பலன் என்பது மிகமிக அதிகம். அதற்குரிய சக்தியும் அதிகம். அதனுடைய சக்திப் பிரவாகம் அதிகமாக இருக்கும் என்பதால் அந்த சுயம்பு லிங்கத்தை காசி முழுவதும் தேடி அலைந்து கொண்டிருக்கிறார் ஹனுமன். ஆனால் கிடைக்கவில்லை. 

அப்பொழுது கருடன் அவருக்கு உதவி செய்ய முன்வருகிறார். இதுதான் நீங்கள் தேடுகின்ற சுயம்பு லிங்கம் என்று ஹனுமனுக்குப் புரிய வைப்பதற்கான ஒரு சுயம்பு லிங்கத்துக்கும் மேலாக மேல்நோக்கி, வட்டமடித்து சுத்திக் கொண்டே வலம் வந்து கொண்டிருந்தது கருடன். அதை ஹனுமன் கண்டுபிடித்துவிட்டார்.

அதேபோல் பல்லியும் அந்த சுயம்பு லிங்கம் இருக்கின்ற திசையைப் பார்த்து, கத்தி காட்டிக் கொடுத்தது. இவ்வாறு கருடனும் பல்லியும் சுயம்பு லிங்கம் இருப்பதை ஹனுமன் கண்டுபிடிப்பதற்காக உதவி செய்தது. 

இதன்பின்பு, கருடன், பல்லி இருவருக்கும் நன்றி தெரிவித்துவிட்டு, அந்த சுயம்பு லிங்கத்தை எடுத்துக் கொண்டு புறப்பட ஆரம்பித்தார். அப்படி கிளம்புகிற பொழுதுதான் அங்கே ஒரு பெரிய பிரச்னை வெடித்தது. 

காசியில் காவல் தெய்வமாக இருப்பவர் யார் தெரியுமா? காசிக்கு காவல் தெய்வமாக இருப்பவர் கால பைரவர். அந்த கால பைரவரைத் தாண்டி, யாரும் காசியை விட்டு எதுவும் வெளியில் எடுத்துக் கொண்டு செல்ல முடியாது. ஆனால் ஹனுமனோ தன்னுடைய எஜமானர் ஸ்ரீ ராமருடைய கட்டளைப்படி சுயம்பு லிங்கத்தை எப்படியாவது கொண்டு சென்று விட வேண்டும் என்று எடுத்துச் செல்கிறார். அப்போது கால பைரவர் ஹனுமனை தடுத்து நிறுத்துகிறார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்ற ஆரம்பித்து, சண்டை வலுக்க ஆரம்பிக்கிறது. இருவருக்குமே கோபமும் ரௌத்திரமும் கட்டுக்கடங்காமல் போய்விட்டது. 

இதைப் பார்த்த தேவலோகத்தினர் இப்படியே தொடர்ந்தால், இந்த மண்ணுலகில் பிரளயமே வெடிக்குமே என்று பயந்து கொண்டிருக்கிறார்கள். இருவருமே அதிக பலசாலிகளாக இருப்பதால் இருவருக்கும் இடையே இருக்கின்ற சண்டையை எப்படியாவது பெரிதாகாமல் தடுத்து நிறுத்த வேண்டும் என்று யோசித்து கால பைரவரிடம் வேண்டிக் கேட்டுக் கொண்டனர். சுயம்பு லிங்கத்தை எடுத்துச் செல்லவும் வழிவகுக்க வேண்டும் என்று கூறினார். 

ஹனுமானின் விசுவாசத்தைப் புரிந்து கொண்ட அவர், லிங்கத்தை எடுத்துச் செல்வதற்கான அனுமதியைக் கொடுத்தார். தன்னுடைய அனுமதியின்றி எடுத்துச் சென்றதற்காக மட்டுமே தான் சண்டையிட்டதாகத் தெரிவித்தார். அதோடு சுயலிங்கத்தை ராமேஸ்வரத்தில் பிரதிஷ்டை செய்வதற்காகவும் ஹனுமனை அனுப்பி வைத்தார். 

ஆனால் அதேசமயம் ஹனுமனுக்கு தன்னுடைய அனுமதியின்றி லிங்கத்தைக் காட்டிக் கொடுத்ததற்காக கருடனுக்கும் பல்லிக்கும் சாபத்தை வழங்கினார் கால பைரவர். இந்த வாராணசியில் (காசியில்) எங்கும் நீங்கள் இருவரும் இருக்கக்கூடாது என்று சாபம் கொடுத்தார். எப்போதும் காசிக்கு வரக்கூடாது என்றும் சொல்லியிருக்கிறார்.

அதனால் தான் வாரணாசியில் எப்போதும் கருடனும் பல்லியும் இருப்பதில்லை.

No comments:

Post a Comment

Followers

ஐயப்பனுக்கு திருமணம் நடைபெறும் ஒரே கோவில் இது தான்.

கடவுளின் தேசமான இயற்கை எழில் கொஞ்சும்  கேரள மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஐயப்பனின் அறுபடை வீடுகளில் ஒன்றான , ஐயப்பன் திருமண...