_திருவாசகம் எனும் தேன்
எந்த செல்வமும் இறுதியில் கூட வாராது
சிவம் என்ற செல்வத்தை தவிர
இந்த உடலில் உயிர் வந்ததும் மாயையே...
அந்த உடலை விட்டு உயிர் போவதும் மாயையே.....
உடலால் ஏற்பட்ட சொந்தங்களால் புடை சூழ வாழ்வதும் மாயையே...
மனித உருக்கொண்டு பூமியில் ஜனித்த பொழுது வெறும் கையுடன் வந்தோம்... போகும் போது வெறும் கையுடன் தான் போவோம் என்பது வழக்கத்தில் உள்ள கூற்று…..
ஆனால் ஆன்மா “நிரம்பி வழிய வழிய” பெரும் செல்வம் ஒன்றைக் கொண்டு தான் செல்கின்றார்கள் புண்ணிய ஆத்மாக்கள் . அது என்ன செல்வம் அது?
ஆதியும் அந்தமும் இல்லா.. என்றும் நிலையான செல்வமாம் அந்த “பேரானந்த சிவம்” என்னும் பெருஞ்ச்செல்வத்தை நிச்சயம் கொண்டு தான் செல்கிறார்கள்.. அது “சிவத்திற்க்கும்” அந்த “புண்ணிய ஆத்மாவுக்கும்” மட்டுமே உள்ள பேரானந்தபந்தம்.. அது புறக்கண்களுக்கு புலப்படாதது...
யாரெல்லாம் சிவ பெருங்கருணையை உணரப் பெற்றவர்களோ!!!
யாரெல்லாம் வாழும் காலத்தில் சிவத்தையே உயிர் என நினைத்து வாழ்கின்றார்களோ!!
யாரெல்லாம் ஒவ்வொரு செயலிலும் சிவத்தை உணர முற்ப்பட்டு சித்தமெல்லாம் சிவமென வாழ்கின்றார்களோ!! இவர்கள் யாவரும் நிச்சயம் இந்த பூவுலகப் பணியை முடித்து விட்டு வெறும் கையுடன் செல்வதில்லை என்பது சிவத்திண்ணம்…
மனித உடல் கொடுக்கப்பட்டத்தின் நோக்கம் அந்த இறைவனை நினைத்து… உணர்ந்து … இறைவனோடு ஒன்றாக கலக்கவே என்று ஒவ்வொரு ஆன்மாவிற்க்கு இறைவன் தக்க தருணத்தில் உணர்த்துவார் …. அந்த உணர்த்தலை புரிந்து கொண்டு தண்ணீருக்குள் மலர்ந்து வாழ்ந்தாலும் தண்ணீரில் ஒட்டாத தன்மையுடையது தாமரை மலர்…. அதனைப் போலவே செல்வக்குவியல் பெற்று வாழ்வோருக்கும், தேவையான செல்வத்துடன் வாழ்வோருக்கும், நடுத்தரவர்கமாக வாழ்வோருக்கும், வறுமையில் வாழ்வோருக்கும் இலக்கு ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் … அது சிவமாக மட்டுமே இருத்தல் வேண்டும் ...
தங்கள்ளுக்குள் சிவத்தை தேடிக் கொண்டிருக்கும் அத்துனை ஆத்மாக்களுக்கும் இது விளங்கும் ...
மற்றபடி சிவத்தை நினைக்கவோ…..உணரவோ.. ஆதாரம் கேட்போரிடமும்.. மற்றும் சிவத்திடம் நிலையில்லா செல்வதை மட்டுமே வேண்டுவோருக்கும் சிவம் என்றும் “மறைபொருளாகவே” இருந்து விடுகின்றது.. பாசாங் இல்லாத பக்தியினால் மட்டுமே பரமனை உணரமுடியும்..
சிவப் பெருக்கருணையை உணர்ந்து வாழ்வோம்… நிலையான சிவத்தை (சிவத்தாயை) மட்டும் வேண்டும் என்று கேட்போம்… சிவப் பெருவாழ்வு வாழ்வோம் என்றும் !!!
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
அண்ணாமலை எம் அண்ணா போற்றி!
கண்ணாரமுதக் கடலே போற்றி !
சீரார்ப்பெருந்துறை நம் தேவனடி போற்றி !
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி !
பராய்த்துறை மேவிய பரனே போற்றி !
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி !
ஆரூர் அமர்ந்த அரசே போற்றி !
சீரார் திருவையாறா போற்றி !
ஏகம்பத்துறை எந்தாய் போற்றி !
பாகம் பெணுரு ஆனாய் போற்றி !
தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி !
இன்றெனக்கு ஆரமுதானாய் போற்றி !
குவளைக் கண்ணி கூறன் காண்க அவளுந் தானும் உடனே காண்க
காவாய் கனகத் திரளே போற்றி !
கயிலை மலையானே போற்றி போற்றி !!
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment