Sunday, May 26, 2024

முத்துப் பல்லக்கு திருவிழா தஞ்சை

முத்துப் பல்லக்கு திருவிழா தஞ்சை மாநகரில் ஒவ்வொரு ஆண்டும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 
முத்துப் பல்லக்கு திருவிழா தஞ்சைமுத்துப் பல்லக்கு திருவிழா தஞ்சை
நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் -  வைகாசி மாதத்தில் ,

ஞானசம்பந்தப் பெருமானின் குருபூஜையின் போது  குறிச்சித் தெரு முருகன் கோவிலில் இருந்து முதன் முதலாக முத்துப் பல்லக்கு  புறப்பட்டதாக கூறப்படுகின்றது. 


தற்போது - தஞ்சை மாநகரில் உள்ள பெரும்பாலான கோயில்களில் இருந்தும் பல்லக்கு புறப்படுவதற்கு, அந்தந்த பகுதிகளில் உள்ள நல்ல மனம் கொண்ட இறையன்பர்கள்  இயன்றவரை பணி செய்து வருகின்றனர்.

இந்த ஆண்டு முத்துப்பல்லக்கு விழாவினை முன்னிட்டு தஞ்சை மாநகரின்-

கீழவாசல், ஆட்டுமந்தைத் தெரு, குறிச்சித் தெரு,  அரிசிகாரத் தெரு,
வார்காரத் தெரு, பட்டு நூல்காரத் தெரு, கிருஷ்ணன் கோயில் தெரு, புல்லுகாரத் தெரு, வண்டிகாரத் தெரு, மகர்நோன்புச் சாவடி,
கீழ ராஜவீதி, தெற்கு ராஜவீதி, மேலராஜவீதி,  
- என பல்வேறு பகுதிகளிலிருக்கும் விநாயகர், முருகன் திருக்கோயில்களில் இருந்து நாதஸ்வர இசை முழங்க முத்துப் பல்லக்குகள் புறப்பட்டு கீழ ராஜவீதி மாமாசாகேப் மூலைக்கு வந்து சேர்ந்தன.

(கீழராஜ வீதியும் தெற்கு ராஜவீதியும் சந்திக்கும் இடம். பழைய பேருந்து நிலையத்திற்கு சற்று அருகில்)

பல்லக்குகளில் விநாயகர், முருகன் உற்சவ திருமேனிகள் மற்றும் திருஞான சம்பந்தரின் திருஉருவப்படங்கள் ஆபரணங்களாலும் மலர் மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. 

பல்லக்குகள் பூக்களாலும் பலவண்ண காகிதங்களாலும் மணிச்சரங்களாலும் வண்ண மயமான குஞ்சங்களாலும்  மின் விளக்குகளாலும் தஞ்சைக்கே உரிய கலை நயத்துடன் எழிலாக வடிவமைக்கப்பட்டிருந்தன.  

பழைமையான கோயில்களான -   
கரந்தை - கருணாசாமி கோயில்
கீழவாசல் - வெள்ளைப் பிள்ளையார் கோயில்
பாம்பாட்டித்தெரு - சிந்தாமணி பிள்ளையார் கோயில் 
கொள்ளுபேட்டைத் தெரு - பிள்ளையார் கோயில்
குறிச்சித் தெரு - சுப்ரமணியசாமி கோயில்
ஆட்டுமந்தைத் தெரு - தண்டாயுதபாணி சுவாமி கோயில்
சின்ன அரிசிக்காரத் தெரு - சுப்ரமணிய சுவாமி கோயில்
பூக்காரத்தெரு - சுப்ரமணியசுவாமி கோயில்.
ரயிலடி - பிள்ளையார் கோயில்
மாமா சாகேப் மூலை - பிள்ளையார் கோயில் 

- இன்னும் சில திருக்கோயில்கள் என -  திருவிழாவில் பதினைந்திற்கும் மேற்பட்ட பல்லக்குகள் தஞ்சையின் நான்கு ராஜ வீதிகளிலும் வலம் வந்தன. 

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

No comments:

Post a Comment

Followers

மாங்கல்ய தோஷம் களத்திரதோஷம் போக்கும் சோம வார விரதம்..

சோம வார விரதம் பற்றிய பதிவுகள் : சிவனுக்கு உரிய நாள் திங்கட்கிழமையாகும். எனவே ஒரு திங்கள் கிழமையில் அல்லது சிவராத்திரி அல்லது பி...