Tuesday, May 7, 2024

பல்லியை கண்டால் சகல ஐஸ்வர்யங்களும் பெருகுமாம்!

அட்சய திருதியை சிறப்பு பரிவுகள்   
பல்லியை கண்டால் சகல ஐஸ்வர்யங்களும் பெருகுமாம்!

:அட்சய திருதியை
 புது நகை வாங்க எந்த சாஸ்திரமும் சொல்லவில்லை.  
அட்சய திருதியை என்பது ஒருசிறப்பு வாய்ந்த நாள் இந்த நாளில் பொன்நகைகள் வாங்கினால் சுபிட்சம் பெருகும் என்று இந்து தர்ம சாஸ்திரம் எதுவும் கூறவில்லை,  வீட்டில் உள்ள பழைய நகையை சுத்தம் செய்து லட்சுமி, குபேரர் முன்பை வைத்து பூஜை செய்தாலே இந்நாள் விஷேஷமானதாக இருக்கும், அன்றைய தினம் கனகதாரா ஸ்தோத்திரத்தை லட்சுமி தேவியின் முன்பு பாராயணம் செய்தால் சகல ஐஸ்வர்யம் குடும்பத்திற்கு கிடைக்கும்.

அட்சய திருதியை நாளின் சிறப்புக்கள்..!

 1.பகவான் பரசுராமர் அவதரித்த நாள்..!

 2.கங்கை நதி பூமியை தொட்ட நாள்..!

3.திரேதா யுகம் ஆரம்பமான நாள் ..!

4.குசேலர் கிருஷ்ண பகவானை சந்தித்த நாள்..!

5.வியாசர் மகாபாரதம் எழுத ஆரம்பித்த நாள்...!

 6.பாண்டவர்கள் சூரியனிடமிருந்து அட்சய பாத்திரம் பெற்ற நாள்..!

7.ஆதிசங்கரர் கனகதாரா ஸ்தோத்திரம் இயற்றிய நாள்..!

8.குபேரன் இழந்த செல்வங்களை மீட்ட நாள்..!

 9.அன்னபூரணி தேவி அவதரித்த நாள்.

10.இந்நாளில் தான,தர்மங்களை அளவின்றி குறையில்லாமல் செய்ய வேண்டும். மேலும் செவிவழிச் செய்தியாக ,

இந்த நாளில் வீட்டிலுள்ள பல்லிகள் யார் கண்ணிலும் தென்படாமல் மறைந்து விட வேண்டும் என்பது வாஸ்து பகவான் கட்டளையிட்ட நாளாகவும் கூறுவார்கள்..

ஒருசிலர் பல்லியை வழிபடவும் செய்வார்கள். இந்த அட்சய திருதியை நாளன்று பல்லியை கண்டு விட்டால் எல்லாபீடைகளும் நீங்கி, திரிஜென்ம பாபமும் நீக்கப்பெற்று அனைத்து செல்வங்களும் பெற்று லட்சுமி கடாக்ஷத்துடன் வாழ்வர். என்று நம்பப் படுகிறது.


No comments:

Post a Comment

Followers

மண்ணுக்குள் இருந்து வெளிப்பட்ட ஈசன்.

*மண்ணுக்குள் இருந்து வெளிப்பட்ட ஈசன்* சுந்தரர் 10 சிவாலயங்களைக் கட்டுவதற்காக மணல் எடுத்த இடம், ‘இடமணல்’ எனப் பெயர் பெற்றதாகவும்,...