தர்மபுரீஸ்வரர் (இவர் வடதளி - மாடக் கோயில் இறைவன்), சோமேசர் (இவர் பழையாறை இறைவன்) .
இறைவியார் திருப்பெயர்:
விமலநாயகி (இவர் வடதளி - மாடக் கோயில் இறைவியார்), சோமகலாம்பிகை (இவர் பழையாறை இறைவியார்).
தல மரம்:
நெல்லி , வில்வம்
தீர்த்தம் :
சோம தீர்த்தம். விசுவ தீர்த்தம்
வழிபட்டோர்:
அப்பர், நம்பியாண்டார் நம்பி , சேக்கிழார், கருடன், ஆதிசேஷன் முதலியோர்.
இவ்வூரின் தெற்கிலும் வடக்கிலும் முடிகொண்டான் ஆறும், திருமலைராயன் ஆறும் ஓடுகின்றன. முடிகொண்டான் ஆறு முற்காலத்தில் பழையாறு எனப்பட்டதால் அதன் கரையிலுள்ள ஊர் பழையாறை எனப்பட்டது; அதன் வடகரையில் உள்ள ஊர் பழையாறை வடதளி எனப்பட்டது.
தேவாரப் பாடல்கள் :
பதிகங்கள் : அப்பர் - 1. தலையெ லாம்பறிக் குஞ்சமண் (5.58);
பாடல்கள் : அப்பர் - தில்லைச் சிற்றம்பலமுஞ் (6.70.1);
நம்பியாண்டார் நம்பி - மிண்டும் பொழில்பழை யாறை (11.34.8);
சேக்கிழார் - சீரில் நீடிய செம்பியர் (12.07.1) அமர் நீதி நாயனார் புராணம்,
நல்லூரில் நம்பர் அருள் (12.21.215,294 & 300) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்,
சண்பை வரும் பிள்ளையார் (12.28.389 & 399) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.
தல மரம் : நெல்லி
சோழமன்னர்களின் தலைநகர்களுள் ஒன்றாக விளங்கியத் தலம்.
பல்லவ மன்னவர்க்கு அடங்கிச் சோழர்கள் சிற்றரசாக இருந்த காலத்தில் அவர்கள் வாழ்ந்த இடம் பழையாறை. பிற்காலச் சோழர் ஆட்சியில் இவ்வூர் இரண்டாவது தலைநகரமாயிற்று. சோழர் அரண்மனை இருந்த இடம் "சோழமாளிகை" என்னும் தனி ஊராக உள்ளது.
தேவார காலத்தில் 1. முழையூர், 2. பட்டீச்சரம், 3. சத்திமுற்றம், 4. சோழமாளிகை ஆகிய நான்கு ஊர்களும் சோழர்களின் நாற்படைகளாக விளங்கியுள்ளன.
இவ்வூர் கி. பி. 7-ஆம் நூற்றாண்டில் - பழையாறை நகர் என்றும், 8-ஆம் நூற்றாண்டில் - நந்திபுரம் என்றும், 9, 10-ஆம் நூற்றாண்டில் - முடிகொண்ட சோழபுரம் என்றும், 12-ஆம் நூற்றாண்டில் இராசபுரம் என்றும் வழங்கப்பெற்றுள்ளது.
பழையாறை நான்கு சிறு பிரிவுகளாகும் - 1. வடதளி:- (தாராசுரத்திலிருந்து 5 கி. மீ. தொலைவு, அப்பர் பெருமான் உண்ணாவிரதமிருந்த இடம். தற்போது அதிக வீடுகளில்லை.) 2. மேற்றளி, 3. கீழ்த்தளி (பழையாறை), 4. தென்தளி என்பன அந்நான்காகும்.
சம்பந்தப்பெருமான் "அப்பரே" என்று திருவாய் மொழிந்த திருநாவுக்கரசரின் தேவாரப்பாடல் பெற்றத் திருத்தலம்.
சமணர்களால் மறைக்கப்பட்டு அப்பரால் உண்ணா நோன்பிருந்து வெளிப்படுத்தப்பட்ட பெருமான் வீற்றிருக்கும் (வடதளி) தலம்.
மங்கையர்க்கரசி நாயனார் அவதரித்த திருத்தலம்.
மங்கையர்க்கரசி நாயனாரின் திருவுருவச் சிலை இத்திருக்கோயில் உள்பிரகாரத்தில் தெற்கு நோக்கி உள்ளது.
மங்கையர்க்கரசியாரின்
அவதாரத் தலம் : பழையாறி (கீழப் பழையாறை).
வழிபாடு : குரு வழிபாடு.
முத்தித் தலம் : மதுரை
குருபூசை நாள் : சித்திரை - ரோகிணி.
மங்கையர்க்கரசியார் - இவர் மணிமுடிச் சோழனின் மகள் என்பர். இவன் பழையாறையைத் தலைநகராகக் கொண்டவன். இவனே அப்பர் பொருட்டுச் சிவலிங்கத்தை வெளிப்படுத்தியவனாக இருக்க வேண்டும். திருப்பனந்தாளில் சாய்ந்த சிவலிங்கத்தை நிமிர்த்த முயன்றவனும் இவனேயாகும் (திரு. K.M. வேங்கடராமையா அவர்களின் ஆய்வுக் குறிப்பு - பெரிய புராணம் - பட்டுசாமி ஓதுவார் பதிப்பு.)
அமர்நீதி நாயனார் அவதரித்த திருப்பதி.
அமர்நீதியாரின்
அவதாரத் தலம் : பழையாறி (கீழப் பழையாறை).
வழிபாடு : சங்கம வழிபாடு.
முத்தித் தலம் : நல்லூர்.
குருபூசை நாள் : ஆனி - பூரம்.
இங்குள்ள (சோம தீர்த்தம்) தீர்த்தக் குளத்துநீர் சித்தபிரமை முதலியவைகளைப் போக்கவல்லது என்று நம்பப்படுகிறது.
இராசராச சோழனால் திருப்பணி செய்யப்பட்ட இக்கோயில் அவனுடைய இயற்பெயரால் அருண்மொழித் தேவேச்சரம் என்றழைக்கப்படுகிறது.
குந்தவைப் பிராட்டி இவ்வூரில்தான் இராசேந்திரனை வளர்த்தாள்.
இத்தலத்தைச் சூழ்ந்துள்ள 1. நல்லூர், 2. வலஞ்சுழி, 3. சத்திமுற்றம், 4. பட்டீச்சரம், 5. ஆவூர் என்னும் ஐந்து தலங்களையும் ஒரே நாளில் தக்ஷுணாயன புண்ணிய நாளில் - வழிபடுவது சிறப்புடையதென்று மக்கள் வழக்கில் சொல்லப்படுகிறது.
அமைவிடம் அ/மி. சோமேசுவரர் திருக்கோயில், பழையாறை வடதளி, பட்டீசுவரம் (அஞ்சல்), கும்பகோணம் (வட்டம்) - 612 703. தொலைபேசி : +91-99948 47404 / +91-93444 36299 / 0435-3919971.
மாநிலம் : தமிழ் நாடு கும்பகோணம் - ஆவூர் பாதையில் முழையூர் சென்று அவ்வழியாக இத்தலத்தை அடையலாம்.
No comments:
Post a Comment