தர்மலிங்கமலை தர்மலிங்கேசுவரர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மதுக்கரை புறநகர்ப் பகுதியில் தர்மலிங்கமலை மீது அமையப் பெற்றுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். தர்மர் சிவபெருமானை வழிபட்ட தலமாக இக்கோயில் கருதப்படுகிறது. கோயம்புத்தூரின் திருவண்ணாமலை என்றும் இத்தலம் போற்றப்படுகிறது.
கோவை மாவட்டம், மதுக்கரை வட்டம், மதுக்கரை மலைமேல் சுயம்பு மூர்த்தியாக தர்மலிங்கேஸ்வரர் உள்ளார். பழைய இராசகேசரிப் பெருவழி, இன்றைய தேசிய நெடுஞ்சாலை எண்.47 ஆகிய இரண்டிற்கும் இடையில் இயற்கைச் சூழலில் அமைந்த மலை தருமலிங்க மலையாகும். இவ்வாறு பழைய பெருவழிக்கும் புதிய பெருவழிக்கும் இடையில் அமைந்த இறைவன் வீற்றிருக்கும் மலை வேறு எங்கும் இல்லை. கயிலை மலை அமைப்பில் மலையின் மேல்பகுதி அமைந்துள்ளது. பேரூர்க்கு வந்து வழிபட்ட காமதேனு தருமலிங்கரை வழிப்பட்டுள்ளது. பரசுராமன் தருமலிங்க மலைக்கு வந்து வழிபட்டுச் சென்றுள்ளான். சித்தர் பலர் இங்கு வாழ்ந்துள்ளனர்,
இக்கோயிலில் மூலவர் தர்மலிங்கேசுவரர் ஆவார். இக்கோயிலின் தலவிருட்சம் வில்வமரம் ஆகும். தர்மலிங்கேசுவரர், விநாயகர், முருகன், நந்தி மற்றும் நவக்கிரகங்கள் ஆகியோர் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர்
, மதுக்கரை மலைமேல் சுயம்பு மூர்த்தியாக தர்மலிங்கேஸ்வரர் உள்ளார். பழைய இராசகேசரிப் பெருவழி, இன்றைய தேசிய நெடுஞ்சாலை எண்.47 ஆகிய இரண்டிற்கும் இடையில் இயற்கைச் சூழலில் அமைந்த மலை தருமலிங்க மலையாகும். இவ்வாறு பழைய பெருவழிக்கும் புதிய பெருவழிக்கும் இடையில் அமைந்த இறைவன் வீற்றிருக்கும் மலை வேறு எங்கும் இல்லை. கயிலை மலை அமைப்பில் மலையின் மேல்பகுதி அமைந்துள்ளது. பேரூர்க்கு வந்து வழிபட்ட காமதேனு தருமலிங்கரை வழிப்பட்டுள்ளது. பரசுராமன் தருமலிங்க மலைக்கு வந்து வழிபட்டுச் சென்றுள்ளான். சித்தர் பலர் இங்கு வாழ்ந்துள்ளனர்,
300 ஆண்டுகளுக்கு முன்பு அந்த கிராமத்தை சேர்ந்த ஒருவர் தனது பசுமாட்டை காணவில்லை என்று தேடிக் கொண்டிருந்த போது அந்த பசுமாடு தர்மலிங்கேசுவரர் சுவாமிக்கு பால் தானாகவே சுரந்து கொண்டு இருந்தது இந்த அதிசயத்தக்க நிகழ்வை அனைவரும் பார்த்து பரவசம் அடைந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மகா சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிசேகம், சித்ரா பௌர்ணமி, தைப்பூசம், மார்கழி திருவாதிரை, திருக்கார்த்திகை, வைகாசி விசாகம், நவராத்திரி மற்றும் பங்குனி உத்திரம் ஆகியவை சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment