Saturday, May 11, 2024

திருவாரூர் அருள்மிகு நர்த்தனபுரீஸ்வரர் திருக்கோயில், தலையாலங்காடு....

அருள்மிகு நர்த்தனபுரீஸ்வரர் திருக்கோயில், தலையாலங்காடு
-612 603, 
சிமிழி போஸ்ட், செம்பங்குடி வழி, குடவாசல் தாலுகா, திருவாரூர் மாவட்டம். 
*மூலவர்:
நர்த்தனபுரீஸ்வரர்,  ஆடல்வல்லநாதர்

*தாயார்:
உமாதேவி,  பாலாம்பிகை

*தல விருட்சம்:
பலா

*தீர்த்தம்:
சங்கு தீர்த்தம்

*பாடல் பெற்ற  தலம்:
தேவாரம் பாடியவர்:
திருநாவுக்கரசர்.  

*வழிபட்டோர்: அப்பர், கபிலதேவ நாயனார்,  சேக்கிழார்.     

*சங்க காலத்தில் இவ்வூர் தலையாலங்கானம் என்னும் பெயரில் விளங்கியது. (தலையாலங்கானப் போரும், தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் பெயரும் அனைவரும் அறிந்ததே.)
*தமது தவ வலிமையினால் அகந்தை கொண்ட தாருகாவன முனிவர்கள் பெரும் வேள்வி செய்து,  ஏவிவிட்ட முயலகனை இத்தலத்தில் அடக்கிய சிவபெருமான், அம்முயலகன் மீது நடனமும் ஆடினார்.  எனவேதான், சுவாமிக்கு நர்த்தன புரீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது.
 
*கிருத யுகத்தில் கபில முனிவர் பூஜித்து, தை அமாவாசை தினத்தில் பெருமானிடமிருந்து  சிந்தாமணியைப் பெற்றுக்கொண்ட தலம் இது. 

*சரஸ்வதி தேவிக்கு இறைவர் சோதிர்லிங்கமாகக் காட்சி வழங்கி அருள்பாளித்த பெருமையுடைய தலம் இத்திருத்தலம். 

*இத்தலத்து சங்கு தீர்த்தம் சகல நோய்களையும் தீர்க்கும் சிறப்புடையது.

*கோயிலின் முன்புள்ள இத்தீர்த்தத்தில் நீராடி இறைவனுக்கு தீபமிட்டு வழிபட்டால் அனைத்து  சரும நோய்களும் நீங்கப்பெறும்.  

*இக்கோயிலில் சிறப்பு வழிபாடு செய்வதால் முடக்குவாதம் நீங்கும். 

*காஞ்சி மஹா பெரியவர் இத்தலத்தில் தங்கி இருந்து இறைவனை பூஜித்ததாக கூறப்படுகிறது.
*சனிபகவான் இத்தலத்தில் கிழக்கு  நோக்கிய தனி சந்நிதியில் மங்களம் அருள்வது சிறப்பான ஒன்றாகும். 

*ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் கடைசி இரு நாட்களும், தொடரும் சித்திரை மாதத்து முதல் இரு நாட்களும் விடியற்காலை சூரியோதயத்தின் போது, சூரியனின் ஒளிக்கதிர்கள் சுவாமியின் மீது விழும்போது சூரியபூஜை நடத்தப்படுகிறது.

*இங்குள்ள பைரவர் மிகவும் சக்தி வாய்ந்த மூர்த்தி. தீராத பகைகளையும் பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பவர். எனவே, தேய்பிறை அஷ்டமியின்போது மக்கள் இவருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து, நலம் யாவும் பெறுகின்றனர்.                      

*தை அமாவாசையை முன்னிட்டு இரு தினங்கள் சுவாமி புறப்பாடாகி, சங்கு தீர்த்தத்தில் தீர்த்தவாரி நடைபெறுகிறது.  

*கல்வெட்டுக்கள்: ராஜராஜனின்  ஆறாவது ஆட்சி ஆண்டில் அளிக்கப்பட தேவ தானங்களும், அருமை உடையார் குமாரன் செண்டானாதர் உடையார் மகாமண்டபம் கட்டித்தந்த செய்தியும், அம்பர் அருவந்தை அரயன் சிவதவனப் பெருமானான காளிங்க ராஜன் என்பவர்  இக் கற்றளியைத் திருப்பணி செய்த தகவலும் கல்வெட்டுக்கள் மூலம் அறிய முடிகிறது.
           ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

திருவதிகை கோயிலின் நிழல் தரையில் விழாதபடி கணித சாஸ்திரபடி கட்டப்பட்டுள்ளது.

அருள்மிகு வீரட்டானேசுவரர் திருக்கோயில், திருவதிகை, பண்ருட்டி போஸ்ட், கடலூர் மாவட்டம். காலை 6மணி முதல் 12 மணி வரை மாலை 5 மணி முதல...