Wednesday, June 5, 2024

தலைமுறை புண்ணியம் செய்தவர்களுக்கு மட்டுமே காளியின் சித்தி கிடைக்கும்.



காளி தேவி பற்றிய ரகசியம்,சகல சித்தி அளிக்க கூடிய பத்ர காளி மந்திரம் மற்றும் வழிபாடு,கேட்ட வரம் தரும் காளிகா தேவி ஸ்லோகம்,மற்றும் சக்தி வாய்ந்த மந்திரங்கள்:

சோதிட ரகசியம் ..

1. 3 காளி தேவியரை ஒரே நாளில் வழிபட 108 சிவ கோவில்கள் வழிபட்ட பலன் உண்டாம்.

2. 9 காளி தேவியரை ஒரே நாளில் வழிபட 1008 சிவ கோவில்கள் வழிபட்ட பலன் உண்டாம்.

3.ராகு பகவானின் கடுமையான தோசத்திற்க்கு உட்பட்டவர்கள்
1.பெண் குழந்தைகளை  பெற்றவர்கள் ......
2.தீய பழக்கம் உடையவர்கள் .....
3.பல நோய்களுக்கு பாதிக்க பட்டவர்கள் .....
இவர்கள் எல்லாம் கால பைரவனின் தாயான
காளி தேவியை வழிபட ராகுவின் தோஷத்தில் இருந்து விடுபடுவர் ......


தலைமுறை புண்ணியம் செய்தவர்களுக்கு மட்டுமே கிடைக்க கூடிய சகல சித்திகளையும் அருளும் 
பத்ரகாளி  மந்திரம்

"ஓம் ஸ்ரீ மஹாகாளி மஹாலக்ஷ்மி 
மஹா கன்யா ஸரஸ்வதீ தேவ்யை நமோ நமஹ"
இந்தக் கலியுகத்தில் மேற்கண்ட காளி மந்திரத்தை இடைவிடாமல் இடையூறின்றி மனம் ஒன்றி ஜபித்தால் உடன் பலிதமாகும்.
 இதனை காளி எப்போதும் எதிர்நோக்கியுள்ளாள்,

உபாசகனின்/தூய பக்தனின் கூக்குரலுக்கு உகந்த மிகவும் சக்தி மிக்க மந்திரம் ,இந்த காளி மந்திரம் என்று மந்திர சாஸ்திரங்கள் கூறுகின்றன.

இதை உபாஸிக்க, இந்த மந்திரம் ஏழு தலைமுறை புண்ணியம் செய்தவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். 

இதை தினமும் 1008 முறை ஜபம் செய்தால் சாதகனுக்கு உலகில் கிடைக்காத செல்வங்களே இல்லை என்று கூறுகிறது காளிகா புராணம்.

செந்நிற ஆடை அணிந்து செந்நிறப்பூக்களால் அர்ச்சித்து, சிவப்பு நிற புஷ்ப மாலை அணிவித்து, சிவப்பு நிற மாலை அணிந்து, சிவப்பு நிற மணி மாலையால் (1008) ஜபம் செய்தால், பக்தனுக்கு எல்லா செல்வங்களையும் காளித்தாய் வழங்குவாள் என்று காளி புராணம் தெரிவிக்கிறது.

நல்ல காரியங்களுக்கு மட்டுமே அன்னை காளி செவி சாய்ப்பாள். எனவே தூய மனதுடன், பக்தியுடன் நல்லவை நடக்க மட்டுமே இந்த மந்திரத்தை பாராயணம் செய்ய வேண்டும்.

நிவேதனமாக பால் பாயசமும், தூய பசு நெய்யும் அன்னைக்கு படைக்க வேண்டும். காளிக்கு உகந்த நேரம் இரவு. இதை உபாசனை செய்தால் எதிரி அழிவான். வாக்கு பலிதம் உண்டாகும். அன்னையை உபாசிக்கும் பக்தன் புலமையும் செல்வமும் பெற்று பெரும் புகழ் அடைவான்.


கேட்ட வரம் தரும் காளிகா தேவி ஸ்லோகம்

"ஓம் காளிகாயை ச வித்மஹே  ஸ்மசான வாசின்யை தீமஹி 
தன்னோ கோரா ப்ரசோதயாத்"

இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் கேட்ட வரத்தை அளிப்பாள் காளிகா தேவி.

காளிகா தேவி வழிபாட்டின் பலன்கள்-அமோக தைரியம், வாக் வன்மை, முன் கூட்டியறியும் தன்மை , நிகரற்ற செல்வம் , நோயற்ற நீண்ட வாழ்வு, ஞானம் பெறுதல்.


காளிகா தேவியின் முக்கிய தலங்கள் :

1. திருவெண்காடு - சுவேத காளி.
2. அம்பகரத்தூர். (காரைக்கால் அருகில்).
3. திருவக்கரை வக்கிர காளி, பாண்டிச்சேரி அருகில்.
4. திருவாச்சூர் மதுர காளி.
5. வெக்காளி அம்மன் - திருச்சி உறையூர்.
6. மடப்புரம் காளி - திருபுவனம்.
7. கல்கத்தா காளி, சென்னை மேற்கு மாம்பலம்.
8. ஸ்ரீ காளிகாம்பாள், சென்னை.
9. வெட்டுடையார் காளியம்மன் கொல்லங்குடி.


காளிகா தேவியின் மூல மந்திரம் :

"ஓம் க்ரீம் க்ரீம் க்ரீம் ஹும் ஹும் ஹ்ரீம் ஹ்ரீம்
தக்ஷிணே காளிகே
க்ரீம் க்ரீம் க்ரீம் ஹும் ஹும்" ஹ்ரீம் ஹ்ரீம் ஸ்வாஹா


காளிகா தேவியின் காயத்ரீ மந்திரம் :

"ஓம் மஹாகாள்யை வித்மஹே 
ச்மசான வாஸின்யை தீமஹி
தந்நோ கோர ப்ரசோதயாத்"


காளிகா தேவியின் மிகவும் சக்திவாய்ந்த மந்திரங்கள்!

ஓம் காளி நமஹ; ஓம் மாகாளி நமஹ;
ஓம் ஜெய காளி நமஹ; ஓம் உக்கிர காளி நமஹ;
ஓம் உத்தண்ட காளி நமஹ; ஓம் ஓங்கார காளி நமஹ;
ஓம் ஆஙகார காளி நமஹ; ஓம் ருத்ர காளி நமஹ;
ஓம் நீலி நமஹ; ஓம் சூலி நமஹ;

ஓம் திரிசூலி நமஹ; ஓம் முப்புரத்து நீலி நமஹ;
ஓம் சங்கரி நமஹ; ஓம் பயங்கரி நமஹ;
ஓம் பூரணி நமஹ; ஓம் காரணி நமஹ;
ஓம் மோஹினி நமஹ; ஓம் யோகினி நமஹ;
ஓம் வர்த்தினி நமஹ; ஓம் மஹிஷாசுர மர்த்தினி நமஹ;
ஓம் ஆனந்த ரூபிணி நமஹ; ஓம் ராஜ சிம்மாஸினி நமஹ;
ஓம் பவானி நமஹ; ஓம் பைரவி நமஹ;
ஓம் ஈஸ்வரி நமஹ; ஓம் அகிலாண்டேசுவரி நமஹ;
ஓம் மந்தி தாரணி நமஹ; ஓம் ராஜ ராஜேசுவரி நமஹ;
ஓம் காளிநமஹ.... 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்... 

No comments:

Post a Comment

Followers

சென்னையின் நவக்கிரகத் ஒன்பது தலங்கள்:

 சென்னையின் நவக்கிரகத் தலங்கள்:  சென்னையைச் சுற்றியுள்ள இந்தப் புனிதமான ஒன்பது ஆலயங்கள் ஒரே நாளில் நவக்கிரகங்களின் அருளைப் பெற ...