Wednesday, June 5, 2024

ஸ்ரீ உருத்திர கோடீஸ்வரர் திருக்கோயில், கடம்பை இளங்கோயில்,கீழ கடம்பூர்



திருக்கடம்பூரதிருக்கடம்பூ
ஆதித்த கரிகாலன் இவர் ராஜராஜசோழனின் அண்ணன்

இவர் கடம்பூர மாளிகையில்

வஞ்சகமாக மாளிகையை இருட்டாக்கி

கொல்லப்படுகிறார்.

அவரை கொலை செய்தவர் யார் என்பது 

மில்லியன் டாலர் கேள்வி??

கொலை செய்யப்பட்ட அந்த 

மாளிகை அழிக்கப்பட்டது.

அங்கே இருந்த பெரிய கோவிலும் முகலாய படையெடுப்பால் அழிக்கப்பட்டது.

ஸ்ரீ உருத்திர கோடீஸ்வரர் திருக்கோயில், 

கடம்பை இளங்கோயில்,

கீழ கடம்பூர்

திருக்கடம்பூர் எனும் கடம்பூர்

இப்போது மேலக்கடம்பூர் எனவும் கீழகடம்பூர் எனவும் 

பிரிக்கப்பட்டுள்ளது.

கடம்பூர்  என்றதும் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் 

அனைவருக்கும் ஞாபகம் வரும்.  

அதில்  கடம்பூர் சம்புவரையர், அவர் மகன் கந்தமாறன், மகள் மணிமேகலை நம் மனக் கண் முன் வருவார்கள்.  

ஒருநாள்  இரவு அந்த கடம்பூர் மாளிகையில் வல்லவரையன் வந்தியத்தேவன் நள்ளிரவில் திருட்டுத் தனமாக பார்த்த  தேவராளன் தேவராட்டி வெறி நடனம், குரவைக் கூத்து ,  மதுராந்தகன் பங்கேற்பு,  ரகசிய  மந்திராலோசனை கூட்டம்,  அந்த  இருளில் சுவற்றின் மேல் மங்கிய நிலவொளியில் தோன்றி மறைந்த முன் குடுமி  வைணவன் ஆழ்வார்க்கடியான் தலை 

இது நினைவில் வரும் போது,

ராஜராஜ சோழனின் அண்ணன்

ஆதித்த கரிகாலன் கொலை செய்யப் பட்ட மாளிகை இருந்த ஊரும் இதுவே.

தேவார பதிகம் பாடியவர்

அப்பர். 

இது ஒர் வைப்பு  தலம் ஆகும்.

ஆறாம் திருமுறையில், எழுபதாவது பதிகத்தில், ஐந்தாவது பாடலில் இத்தலத்தைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.

உத்திராபதி கோயில் என்று இப்பகுதி மக்கள் இவ்வாலயத்தை குறிப்பிட்டு வருகின்றனர்.

இக் கோவில் இளங்கோயில் அமைப்பை சேர்ந்தது.

தமிழகத்தில்

கரக்கோயில், இளங்கோயில், கொகுடிக் கோயில், மணிக்கோயில், ஞாழற்கோயில், ஆலக் கோயில், திருக்கோயில் என ஏழு வகையான ஆலயங்கள் உள்ளன.

கடம்பூர் பண்டைய வரலாற்று சிறப்பு மிக்க தளம். 

கீழக்கடம்பூர் ராஜ ராஜ சோழன் வலம் வந்த பண்டைய பூமி. 

மிகப் பெரிய  மாளிகை ஒன்று  இருந்தது

மாளிகையை ஒட்டி பெரும் கோவிலும் இருந்தது.

கோவில் மட்டும்

தொல்லியல்  துறை வசம் இருக்கிறது.

2010ம் ஆண்டு தொல்லியல்  துறை  சிறிது  வேலை ஆரம்பித்து வேலை முடியாமல்

அப்படியே கிடக்கிறது.

ராஜராஜ  சோழன்  ஆயிரம் முறை யோசனைகள் பல செய்த இடத்தில் 

கோவிலை கோவிலாக மாற்ற

ஊரில் ஒருவருக்கு கூட யோசனை வராதது அதிசயம்.

ருத்ரகோடிஸ்வரராக சிவன் மட்டுமே இருக்கிறார்.

இவரை வணங்கினால் கோடி சிவனை வணங்கிய பலன் நமக்கு கிடைக்கும்.

கோவில் பிரகாரத்தின்  வெளியில் சுவாமி சிலைகள் வரிசையாக தென்னமர நிழலில் இருக்கிறார்கள்..

அம்மனுக்கு  சன்னதி இல்லை

கோவிலில் அம்மனே இல்லை. 

ராஜராஜ சோழன் ஆட்சியில் அழகாய் பரினமித்த கோவில் இப்போது இடிந்து போய் பாதியில் கட்டப்பட்ட  நிலையில் இருக்கிறது.

மொகலாய படையெடுப்பின் போது இடித்து தள்ளப்பட்ட கோவில்.

இருந்த சுவடு தெரியாமல்

இடித்து தள்ளப்பட்ட மாளிகை இருந்த ஊர்.

.

கோவில்

இடிந்து கிடப்பதை தமிழக தொல்லியல்  துறை கவனிக்க மறுக்கிறது.

இக் கோவிலில் ஓர் சுரங்க  பாதை இருக்கிறது.

ஊர் மக்கள்

ராஜ ராஜசோழன் அண்ணன் வீரத்திருமகன் ஆதித்த கரிகாலன் கொலை செய்யப் பட்ட மாளிகை இருந்த  இடம் என தோப்பை  காண்பிக்கிறார்கள்.

பொன்னியின்  செல்வனில்

''வந்தியத்தேவன் அந்த மாளிகையில்தான் தங்கிவிட்டுப் போனதாக கல்கி எழுதியிருப்பார்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம்... 

No comments:

Post a Comment

Followers

1008 ஆயிரத்து எட்டு லிங்கங்களின் பட்டியல்...

ஆயிரத்து எட்டு லிங்கங்களை கேட்டிருக்கோமே தவிர, அந்த 1,008 லிங்கங்கள் என்னென்ன என்று பலருக்கும் தெரியாது.  இதோ அந்த 1008 லிங்கங்களின் பட்டியல...