திருமணத் தடைநீக்கும், தீராத நோயையும் தீர்க்கும்
திருநெடுங்களம் சிவன் கோயில்---!
ஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பாடப்பட்ட அற்புதமான தலம். அகத்திய முனிவர் வழிபட்ட திருத்தலம்.
சிவபெருமான் உமையவளுக்கு தனது திருமேனியின் இடப்பாகத்தில் இடம் கொடுத்ததால், இத்தலத்தின் கருவறையில் ஈசன் சிவலிங்க வடிவமாக இருந்தாலும், அரூப வடிவில் அன்னை உமையவளும் உடன் இருப்பதாக ஐதீகம்.
இதனால்கருவறையின் மேல் இரண்டு விமானங்கள் உள்ளன.
இவ்வாலய கருவறை இரட்டை விமான அமைப்பு, அப்படியே காசி விஸ்வநாதர் கோவில் இரட்டை விமான அமைப்பை ஒத்துள்ளது.
உள்பிரகாரத்தின் தெற்கே சப்த கன்னியரும், ஐயனாரும், ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாளும் அருள் பாலிக்கிறார்கள்.
இத்தல ஐயனாரை பங்குனி உத்திர நாளில் நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வீடு கட்டும் யோகம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
இங்கு உள்ள யோக தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி தொடர்ந்து 5 வாரம் வழிபட்டு வந்தால் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த திருக்கோவிலின் வெளிப்புற மதிலை தாண்டினால் கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜ கோபுரத்தை தரிசனம் செய்யலாம்.
அடுத்தாற் போல் கொடிமரம், பலி பீடம் ஆகியவை உள்ளது. இதனை வழிபட்டு வெளிப்பிரகாரத்தை வலம் வரவேண்டும்.
அப்போது வடகிழக்கு மூலையில் திருக்கல்யாண மண்டபமும், அம்பாள் சன்னிதியும் உள்ளது. வெளிப்பிரகாரத்தின் வடக்கில் அகத்தியர் சன்னிதியும், எதிரே என்றும் வற்றாத அகத்தியர் தீர்த்தமும் இருக்கிறது.
அடுத்து மூன்று நிலை ராஜகோபுரம் கடந்து உள்சென்றால் கருவறையில் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு பார்த்த வண்ணம் திருநெடுங்களநாதர் அருள் பாலிக்கிறார்.
அகத்தியர் வழிபட்டு பேறு பெற்ற தலம் இதுவாகும். வந்திய சோழ மன்னனுக்கு ஈசன் பேரழகுடன் காட்சி கொடுத்த காரணத்தால், இத்தல இறைவன் “நித்திய சுந்தரேஸ்வரர்” என்றும் அழைக்கப்படுகிறார்.
இத்தல ஈசனை தொடர்ந்து 6 வெள்ளிக்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் முகப்பொலிவு கூடும். சகல ஜனவசியம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
இங்கே உள்ள முருகப்பெருமானை, அருணகிரிநாதர் திருப்புகழ் பாடி வணங்கிப் போற்றியிருக்கிறார்.
திருமணத் தடை நீக்கும் தலம். தீராத நோயையும் தீர்க்கும் தலமும் கூட!
இங்கே, சப்தகன்னியரில் ஒருவரான ஸ்ரீவாராஹி அம்மனுக்கு வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமையில், ராகுகாலவேளையில் சிறப்பு வழிபாடு உண்டு. விரலி மஞ்சள் எடுத்து வந்து, இங்கே உள்ள உரலில் இடித்து, அரைத்து, அபிஷேகம் செய்தால், தடைப்பட்ட திருமணம் நடந்தேறும். தோஷங்கள் அனைத்தும் விலகும்.
சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமை, மேலும் பௌர்ணமி தினம். இதையொட்டி சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறும்.
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமிக்கு மாதுளைச் சாறு அபிஷேகப் பிரார்த்தனையை நிறைவேற்றுகிறார்கள்.
முகவரி : அருள்மிகு திருநெடுங்களநாதர்,
நித்தியசுந்தரேஸ்வரர் திருக்கோவில்,
திருநெடுங்களம்-620015
திருச்சி மாவட்டம்.
Ph: 0431-252 0126.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து 18 கி.மீ. தொலைவில், துவாக்குடிக்கு அருகில் உள்ளது திருநெடுங்களம்.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்..
No comments:
Post a Comment