✾ ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு தனிசிறப்பு உள்ளது. அதுபோல தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சிவன் கோவிலில் காணப்படும் அதிசயம் என்ன..? அப்படி என்ன அதிசயம் இருக்கு இந்த கோவிலில்!
✾ அருள்மிகு திருநீலக்குடியில் உள்ள நீலகண்டேஸ்வரர் கோவிலில் இறைவன் மனோக்யாநாதர் என்று அழைக்கப்படுகிறார்.
✾ பொதுவாக இறைவனுக்கு பால், நீர், தயிர், இளநீர், சந்தனம், விபூதி, மஞ்சள் பொடி என பலவற்றை கொண்டு அபிஷேகம் செய்யப்படும்.
✾ இத்தல மூலவருக்கு எண்ணெயால் அபிஷேகம் செய்யும்போது, பாத்திரம் பாத்திரமாக நிறைய எண்ணெய்யை லிங்கத்தின் மீது ஊற்றி அபிஷேகம் செய்வார்கள்.
✾ எவ்வளவு எண்ணெய் ஊற்றி அபிஷேகம் செய்தாலும், அத்தனையும் சிவலிங்கத்திற்கு உள்ளேயே உறிஞ்சப்பட்டு விடுவது அதிசயமாக உள்ளது.
✾ இதில் ஆச்சர்யம் என்னவெனில் அபிஷேகம் செய்த அடுத்த நாள் லிங்கத்தின் திருமேனியைப் பார்த்தால், சுமார் ஒரு வருடமாக எண்ணெயே தடவாதது போல் உலர்ந்து காய்ந்து காணப்படும்.
✾ அவ்வளவு எண்ணெயும் எங்கு மாயமாகிறது என இன்னும் தெரியவில்லை. ஈசன் தொண்டையில் இருக்கும் விஷத்தன்மையை குறைக்கவே இந்த அபிஷேகம் செய்யப்படுகிறது.
✾ இத்தலத்தின் உள்ளே ஒரு பலாமரம் உள்ளது. அதை முழுபழமாக எடுத்துச் செல்லக்கூடாதாம். இறைவனைக்கு படைத்த பிறகே எடுத்து செல்ல வேண்டும். இல்லையெனில் இறைவன் தண்டித்து விடுவார் என்பது ஐதீகம்.
✾ இத்தலத்தின் தலவிருட்சம் வில்வமரம் ஆகும். இந்த மரம் பஞ்ச வில்வ மரம் என அழைக்கப்படுகிறது. ஒரே காம்பில் ஐந்து இதழ்களுடைய இலைகள் இருப்பது அதிசயமாகும்.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்...
No comments:
Post a Comment