Wednesday, July 10, 2024

திருக்கருவிலி கொட்டிட்டை (கருவேலி): குண நாதேஸ்வரர்

மறுபிறப்பைத்திருக்கருவிலி கொட்டிட்டை (கருவேலி) , குண நாதேஸ்வரர் ஆலயம்
குண நாதேஸ்வரர் தேவாரம்
சிவஸ்தலம் பெயர் : திருக்கருவிலி கொட்டிட்டை (கருவேலி)
இறைவன் பெயர் : குண நாதேஸ்வரர்
இறைவி பெயர் : சர்வாங்க சுந்தரி
எப்படிப் போவது : கும்பகோணத்தில் இருந்து சுமார் 25 கி.மி. தொலைவில் இத்தலம் உள்ளது. திருவீழிமிழிலை என்ற தலத்திற்கு மேற்கில் 6 கி.மி. தொலைவில் அரசலாற்றின் வடகரையில் அமைந்துள்ளது. திருவன்னியூர் அருகில் உள்ள மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலம்.நாச்சியார் கோயில் என்ற திவ்யதேசம் தலத்த
சிவஸ்தலம் பெயர் : திருக்கருவிலி கொட்டிட்டை (கருவேலி)
ஆலயம் பற்றி :
...திருசிற்றம்பலம்... தடுக்கும் திருக்கருவிலித் தலம்
கும்பகோணத்தில் இருந்து சுமார் 25 கி.மி. தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருக்கருவிலி. இறைவன் திருநாமம் ‘சற்குணேஸ்வரர்’.

திருக்கருவிலித் தலத்து இறைவனைக் காண்போருக்கு மறுபிறவி இல்லை. அதாவது, அவர்கள் மீண்டும் ஒரு தாயின் கருவில் உதிக்கமாட்டார்கள். இதனால் தான் இவ்வூர் ‘கரு இல்லை’ என்ற பொருளில் ‘கருவிலி’ எனப்பட்டது. காலப்போக்கில் கருவேலி என மருவியது. கருவுக்கு வேலி என்றும் இதன் பொருளை எடுத்துக் கொள்ளலாம்.
இந்த தலத்தின் முக்கிய பெருமை, நல்ல குணங்கள் உள்ளவருக்கு அந்த குணங்கள் என்றும் நிலைத்து நிற்கும் என்பதும், தீய குணங்கள் இருந்தால் அது மறைந்துவிடும் என்பதும் ஆகும். எனவே இவ்வூர் இறைவன் ‘சற்குணேஸ்வரர்’ எனப்படுகிறார். அம்பாள் ‘சர்வாங்க சுந்தரி’ எனப்படுகிறாள்.அம்பாள் சர்வாங்க சுந்தரி சிலை ஐந்தரை அடி உயரத்தில், நான்கு திருக்கரங்களுடன் பேரழகு கொண்டதாக உள்ளது. 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 

No comments:

Post a Comment

Followers

புல்லாங்குழல் இசையால் "நமசிவாய" என்னும் மந்திரத்தை இசைத்த ஆனாய நாயனார்...

தனது புல்லாங்குழல் இசையால் "நமசிவாய" என்னும் திருவைந்தெழுத்து (பஞ்சாட்சர மந்திரம்) மந்திரத்தை இசைத்து, சிவபெருமானால் ...