Monday, July 8, 2024

திருப்பாலைவனம் திருப்பாலீஸ்வரர் திருவள்ளூர்...

தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு அருகில் உள்ள,
மிகப் பழமையான 
புராதன தலமான, முதலாம் இராஜேந்திர சோழன் காலத்தில் கட்டப்பட்ட,
புராண காலத்தில் 
ஈசன் 
பாலை மரத்தில் தோன்றிய இடமான, மூலவர் வெள்ளை நிறத்தில் காட்சி அளிக்கும் அபூர்வ தலமான
#திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 
பொன்னேரிக்கு அருகில் உள்ள 
#திருப்பாலைவனம் 
#திருப்பாலீஸ்வரர் (#அமிர்தேஸ்வரர்)
#லோகாம்பிகை_அம்மன் திருக்கோயில் வரலாறு:
திருவள்ளூர் மாவட்டத்தில் பழமையான கோயில்களில் ஒன்று திருப்பாலைவனம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு திருப்பாலீஸ்வரர் சுவாமி திருக்கோயிலாகும். முதலாம் ராஜேந்திர சோழன் காலத்தில் இந்த திருக்கோயில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

மூலவர்: திருப்பாலீஸ்வரர்
அம்மன்: லோகாம்பிகை
தல விருட்சம்: பாலை மரம் 
தீர்த்தம்:குளம் 
ஊர்: திருப்பாலைவனம் 
மாவட்டம்: திருவள்ளூர் 

#திருப்பாலைவனம்:

அமிர்தத்திற்காக மந்தாரமலையை மத்தாகவும், வாசுகி என்னும் பாம்பை கயிராகவும் கொண்டு பாற்கடலை கடைந்தபோது அதிலிருந்து உண்டான ஆலகால விஷத்தை இறைவன் உண்டு நீலகண்டனாக மாறியதும், அமிர்தத்தை தேவர்கள், அசுரர்களை ஏமாற்றி பங்கிட்டு கொண்ட இடமே இந்த திருப்பாலைவனம் ஆகும்.

ஆலகால விஷமுண்ட இறைவனுக்கு அமிர்தத்தின் ஒரு பகுதியை சமர்ப்பிக்கின்றனர். அமிர்தத்தையே சிவலிங்கமாக அமிர்தேசுவரர் என்று பெயரிட்டு வழிபட்டு வந்தனர்.

தேவர்கள் அமிர்தத்தை பகிர்ந்து கொண்ட செய்தி அசுரர்களுக்கு தெரிந்ததும், அமிர்தம் உண்ட கையை இத்திருக்குளத்தின் நீரில் தேவர்கள் கழுவியதும் அந்நீரை உண்டால் சாகாவரம் பெறலாம் என்று நினைத்து அசுரர்கள் தவளை வடிவம் கொண்டு நீரில் இருக்க திட்டமிட்ட செய்தி தேவர்களுக்கு தெரியவர இக்குளத்தில் தவளைகளே இருக்கக்கூடாது என்ற வரம் பெற்றது இத்திருக்குளம்.

இலிங்கத்தினை சூழ்ந்து பாலைமரம் வளர்ந்தது, தேவர்கள் தேனீக்களாக நித்தமும் பூஜை செய்தனர். வாசுகி எனும் பாம்பரசன் மரத்திலுள்ள அமிர்தலிங்கத்தினை வழிபட்டு இறைவன் அருள் பெற்றார்.

வடபுலம் வென்ற முதலாம் இராஜேந்திர சோழனின் படைகள்,  அடர்ந்த பாலை மரங்கள் நிறைந்த கடற்கரையை ஒட்டி இருந்த காட்டின் வழியே  சென்று கொண்டிருந்தன. படைகளை ஓய்வெடுக்க கட்டளையிட்ட அரசன் தன் பட்டத்து யானையை அருகில் இருந்த பாலை மரத்தில் கட்டச் சொல்ல அந்த மிகப் பெரிய அழகிய பட்டத்து யானை மூர்ச்சையாகி கீழே விழுந்தது. அம்மரத்தில் ஏதோ மர்மம் இருப்பதாக மன்னனுக்கு தோன்றவே,அவன்  அவன் மரத்தை வெட்ட பணித்தான். மரத்தை கோடரியால் வெட்ட வெட்டுப்பட்ட இடத்தில் இருந்து இரத்தம் பீறிட்டு வரவே அதிர்ச்சியும் பயமும் கொண்டு அந்த இடத்தை ஆராய்ந்தபோது தலையில் வெட்டுப்பட்ட நிலையில் சிவலிங்கம் தென்படவே மனம் நொந்த அரசன் தன்னுடைய செயலுக்கு வருந்தி இறைவர்க்கு மிகப்பெரிய அழகான கோயிலை கட்டுவித்தான்.

 #தல வரலாறு:

வடபுலம் சென்று வெற்றிக்கொடி நாட்டிய பின்னர் தனது பெரும்படையுடன் முதலாம் ராஜேந்திர சோழன் பாலை மரங்கள் நிறைந்த இப்பகுதியில் தங்கி ஓய்வெடுத்ததாகவும், அப்போது ஒரு பாலைவனத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகித்து கோடரியால் வெட்ட முற்பட்டு உள்ளார். உடனே அம்மரத்தில் இருந்து குருதி வெளிப்பட அதிர்ச்சியுற்ற அந்த மன்னன் லிங்க வடிவில் இறைவன் இருப்பதை கண்டு மனம் உருகி ஆராதித்ததுடன் அங்கு கோயில் எழுப்பி வழிபட்டதாக தல வரலாறுகள் தெரிவிக்கின்றன.

திருப்பாற்கடலை கடைந்த போது கிடைத்த அமுதத்தை அசுரர்களுக்கு தராமல் உண்ணுவது மறைவான இடம் தேடி தேவர்கள் வந்த இடம் இன்றைய திருப்பாலைவனம் பகுதி ஆகும் என்றும் கூறப்படும். மூலவர் மற்றும் உற்சவர் திருப்பாலீஸ்வர சுவாமி காட்சி தருகிறார். தல விருட்சமாக பாலை மரமாக உள்ளது.

ஆனைக் கோயில்: (கஜபிரஸ்தா)

கோயில் கட்டட அமைப்புகளில் ஏழுவிதமான விமானங்கள் சொல்லப்படுகின்றன. அந்த விமான அமைப்புகள் சிலவற்றை அப்பர் சுவாமிகளும் தமது தேவாரத்தில் கூறுகிறார். அவ்விதமான அமைப்புக்களில் ஆலக் கோயில் அல்லது யானைக் கோயில் என்பதும் ஒன்று.

ஆலக் கோயில் என்றால் ஆனைக் கோயில். ஆனைக் கோயில் கட்டடங்களைக் கஜபிருஷ்ட விமானம் என்று சிற்பசாஸ்திரங்களில் பெயர் கூறப்படுகிறது. கஜபிருஷ்ட (கஜபிரஸ்தா) விமானக் கோயில்களாகிய ஆனைக் கோயில் கட்டங்கள் தொண்டைநாட்டில் (தொண்டை மண்டலத்தில்) தான் அதிகமாக இருக்கின்றன. சோழ நாட்டில் சில யானைக் கோயில்கள் மட்டும் இருக்கின்றன. பாண்டிய நாட்டிலும் சேர நாட்டிலும் கஜபிருஷ்ட விமானக் கோயில்கள் இருப்பதாகத் தெரியவில்லை. தென் கன்னட மாவட்டத்தில் சில கோயில்கள் கஜபிருஷ்ட அமைப்பாக அமைந்திருக்கின்றன.
திருப்பாலை வனத்து ஆனைக் கோயிலின் அமைப்பு தனிப்பட்ட அமைப்புடன் அழகும் உடையது. மற்ற ஆனைக் கோயில்களின் அமைப்பைப்பார்த்துவிட்டு இந்தக் கோவிலின் அமைப்பைப் பார்த்தால் தான் இதனுடைய புதுமையான சிறப்பு நன்றாகத் தெரியும். மற்ற ஆனைக்கோவில்களின் அமைப்பைப் பாராதவர்கள் இந்தக் கோவில் கட்டட அமைப்பை மட்டும் பார்ப்பார்களானால் இதனுடைய அருமையும் பெருமையும் நன்கு அறியமாட்டார்கள்.

இந்தத் திருப்பாலைவனத்து யானைக் கோயில்போல அமைந்திருக்கிற இன்னொரு கோயில் காஞ்சிபுரத்துக்குத் தெற்கே மாகறல் என்னும் ஊரில் இருக்கிற சிவன் கோயில் கட்டடம் ஆகும். ஆனால், மாகறல் ஆனைக் கோயிலை விட திருப்பாலை வனத்து யானைக் கோயிலில் அழகான சிறப்புகள் இருக்கின்றன. இந்தக் கோவில், பிற்காலச் சோழர் ஆட்சியில் ஏறக்குறைய கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

முருகர், பைரவர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, பைரவர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட தெய்வங்களின் சிலைகளும் இந்த கோயிலில் உள்ளன. சுற்று பிரகாரத்தில் சுரங்கப்பாதை வழி ஒன்றும் உள்ளது. கோயிலில் அமிர்த புஷ்கரணி தவளைகள் வாழாத திருக்குலம் உள்ளது. பிரதோஷம், பௌர்ணமி, மகா சிவராத்திரி, பங்குனி உத்தரம் போன்ற விசேஷ காலங்களில் சிறப்பு பூஜைகளும் தேரோட்டமும் நடக்கிறது.

இத்திருத்தலத்தில் பிரதோஷ வழிபாட்டை மேற்கொண்டால் எல்லா நன்மைகளும் கைகூடும் என நம்பப்படுகிறது. திருமண தடை, செவ்வாய் தோஷம், நரம்பு சம்பந்தமான நோயின் தீரும் என்பது உங்களின் நம்பிக்கை. 

இத்திருத்தலத்தில்  ஆவுடையார் கல்லிலும், இலிங்கம் மரத்திலும் இருப்பது தனிச் சிறப்பு. (குறிப்பு: இலிங்கத்தில் கோடாரிப்பட்டத் தழும்பு இன்றும் காணப்படுகிறது.)

இவ்வகை சிறப்புகளை கொண்ட இக்கோயிலில் இறைவர் பாலீஸ்வரநாதர் என்று அழைக்கப்பெறுகிறார். சுயம்பு மூர்த்தியான வெண்மை நிறத்தோடு காட்சி தரும் லிங்க வடிவை காணும் போது உண்மை அன்பர்களுக்கு உடல் சிலிர்க்கும் உள்ளம் உருகும். இங்கு வீற்றிருக்கும் அம்பாள், என்றும் பிரியாத நாச்சியார் லோகாம்பிகை என்ற திருப்பெயரோடு கிழக்கு நோக்கிய சன்னதியில் அமர்ந்து அருள்பாலிக்கின்றார்.

5 அடுக்கு இராஜக்கோபுரம்.

இராஜக்கோபுரதிற்கு முன்னே 16 கல் தூண் மண்டபம்.

மண்டபதிற்கு முன்னே அழகிய தெப்பக்குளம்.

தெப்பக்குளத்தில் ஒரு தவளைக்கூட இல்லாததன் பின்னே ஒரு சரித்திர காலக் கதை.

(அமிர்தம் குடித்துவிட்டு தேவர்கள் தங்கள் கைகளை குளத்தில் கழுவ முற்படுகையில், அசுரர்கள் தவளை வடிவத்தை எடுத்துக் கொண்டு அமிர்தம் பருக முயன்றுள்ளார்கள். அவர்கள் அமிர்தம் பருகுவதைத் தடுக்க கோவில் தெப்பக்குளத்தில் தவளை இருக்கா வண்ணம் தேவர்கள் சபித்தனர், அது இன்றளவும், இக்குளத்தில் தவளைகள் இல்லாமல்!)

#வரலாறு & கல்வெட்டுகள்: 

கருவறைச் சுவர்களில் 71 கல்வெட்டுகள் உள்ளன, அவற்றில் 65 தமிழ், 3 தெலுங்கு, 2 சமஸ்கிருதம் மற்றும் 1 கன்னடத்தில் உள்ளது. 

முதலாம் குலோத்துங்கனின் 24வது ஆட்சி ஆண்டு ( கி.பி. 1064 ) கல்வெட்டு திருமுனைப்பாடி நாட்டுப் பனையூர் நாட்டுச் சாத்தனூருடைய இந்தம்பேடு கிழான், திருப்பாலைவனம் உடையார் கோயிலுக்கு ஆலால சுந்தரன் என்ற பெயரில் நந்தவனம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது, இதன் பராமரிப்புக்காக 5 புஜபல மாடையை வழங்கியது, கோயில் தானத்தார் வாங்கிய இத்தொகை 10 வரிகளை நீக்கி நந்தவனத்திற்கு வழங்கினர் என்று பதிவு செய்கின்றது. தெலுங்குச் சோழர் வெளியிட்ட காசு புஜபல மாடையாகும். முதலாம் குலோத்துங்க சோழனின் 24 வது  ஆட்சியாண்டு (கி.பி. 1094) பொன்னேரி தாலுக்காவில் உள்ள திருப்பாலைவனத்தில் உள்ள திருப்பாலேசுவரர் கோயிலில் உள்ள அர்த்த மண்டபத்தின் வடக்குச் சுவரில் உள்ள கல்வெட்டு, சாத்தந்தூரில் உள்ள இண்டம்பேடுவைச் சேர்ந்த கிழன் (தலைவர்) வாங்கியதன் மூலம் கிராமத்தில் நிலம் வழங்கியதைப் பதிவு செய்கிறது. ஜெயங்கொண்ட சோழமண்டலத்தின் ஒரு மண்டலமான பையூர் கோட்டத்தில் உள்ள திருப்பாலைவனம் உடையார் கோவிலுக்கு ஆலாசுந்தரன் என்ற பெயரில் மலர்த்தோட்டம் அமைப்பதற்காக நடுவில்நாடு என்கிற ராஜாராஜன்-வளநாடு உட்பிரிவு பனையூர் நாட்டில் உள்ள ஒரு கிராமம் . இந்த கல்வெட்டில் புஜபால மடை (தங்க நாணயத்தின் பெயர்) குறிப்பிடப்பட்டுள்ளது.

பாலீஸ்வரர் கோயில் அர்த்தமண்டப வடபுறச் சுவரில் உள்ள சுந்தரபாண்டியனுடயை 11 வது ஆட்சி ஆண்டு கல்வெட்டு திருப்பாலைவனம் பெருந்தெருவில் வாழ்ந்த சூரிய தேவனின் மனைவி சிவனம்மை, கோயிலில் ஒரு விளக்கு வழங்கி தொடர்ந்து, எரியவேண்டி 40 காசுகளை அளித்துள்ளார். ஸ்ரீ மற்றும் சீ இரண்டும் கல்வெட்டில் உள்ளது. அகமுடையாள் - மனைவி. சுந்தர பாண்டியரின் 11 வது   ஆட்சி ஆண்டு (கி.பி. 1263) அர்த்த மண்டபத்தின் வடக்குச் சுவரில் உள்ள கல்வெட்டு, திருப்பாலைவனம் பெரிய தெருவில் வசிக்கும் சூரியதேவரின் மனைவி கோயிலில் வற்றாத தீபம் ஏற்றியதற்காக 40 பணமும் ஒரு குத்துவிளக்கையும் பரிசாக அளித்ததாக பதிவு செய்கிறது. கொடையாளர் பெயர் சிவனம்மை. அன்றாது நற்பணம் என்றால் தற்போதைய பணம்
பாலீஸ்வரர் கோயில் மகாமண்டப வடபுறச் சுவரில் உள்ள திருக்காளத்தியாண்ட அல்லுந்தேவ கண்டகோபாலனின் 3 ஆம் ஆண்டு ஆட்சி ஆண்டு கல்வெட்டு திருப்பாலைவனம் உடையார் மார்கழி திருவாதிரையன்று திருமஞ்சனம் ஆடி.அமுது செய்யின்றது. மகாமண்டப வடக்குச் சுவரின் வடக்குச் சுவரில் உள்ள கந்தகோபாலனின் 3 ஆம்  ஆட்சியாண்டுக் கல்வெட்டு, திருப்பாலைவனமுடைய நாயனார் கோயிலுக்கு, ஆருத்ரா திருநாளன்று புனித நீராடுவதற்கும், பிரசாதம் வழங்குவதற்கும், திருவிழாவுக்காகவும் ஆறு கந்தகோபாலன் மடையை திருப்பாலைவனம் வியாபாரி வழங்கியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மார்கழி மாதம். பரணியன் என்ற கொடையாளர் திருப்பாலைவத்தில் பெரிய தெருவில் வசித்து வந்தார் . அல்லுண்டி தேவ கந்தகோபாலன். தெலுங்கு சோழன் இந்த வட்டாரத்தின் தலைவன்.

பாலீஸ்வரர் கோயில் கருவறை வடபுறச் சுவரில் உள்ள மூன்றாம் குலோத்துங்கனுடைய கல்வெட்டு, அவரின் சிற்றரசன் பொத்தப்பிச் சோழனுடைய மனைவி சித்தரை சீதேவியார் நுங்கமாதேவியார் திருப்பாலைவனமுடையார் கோயிலில் விளக்கு ஒன்று வைக்க 10 மாடை பொன்னை முதலீடாக அளித்துள்ளார். சித்ரா என்பதே சித்தரை போலும். ஆந்திர மாநிலம் நந்தலூர் கல்வெட்டு (இதுவும் மூன்றாம் குலோத்துங்கனுடைய சாசனம் 601/1907) இப்பெண்ணின் பெயராக நுங்க மாதேவி என்று கூறுகிறது. சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம் இப்பெண்ணின் பெயரில் ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சங்கம் எழுகிறது. குலோத்துங்க சோழன் - III இன் 18 வது  ஆட்சி ஆண்டு (கி.பி. 1096) மத்திய சன்னதியின் வடக்குச் சுவரில் உள்ள கல்வெட்டு, கோவிலில் தீபம் ஏற்றியதற்காக மதுராந்தக பொட்டாபி சாள-சித்தரைசரின் மனைவி நுங்கமாதேவியார் கோயிலின் சிவபிராமணர்களுக்குப் பணம் வழங்கியதைப் பதிவு செய்கிறது. சென்னை நுங்கம்பாக்கம் பெயர் நுங்கமாதேவியாருடன் தொடர்புடையதா?

பாலீஸ்வரர் கோயில் கருவறை வடக்கு முப்பட்டைக் குமுதத்தில் உள்ள இரண்டாம் இராஜாதிராஜனுடைய 11 ஆம் ஆண்டு ஆட்சியாண்டு (CE 1174 ) கல்வெட்டு பையூர்க் கோளூர் நிலை உடையார் என்பவர் கோயிலில் சந்தி விளக்கு வைக்க திருமடை விளாகத்தில் தீபகத் தீவகோ வசம் முதலீடு செய்துள்ளார். திருப்பாலைவனமே கோளூர் ஆகும். ராஜாதிராஜன்-II இன் 11 வது  ஆட்சி ஆண்டு 1174 CE கருவறையில் உள்ள ஆதிஸ்தானம் குமுதம் கல்வெட்டு முழுமையடையாமல் உள்ளது. பையூர்கோவில் கோளூரில் உள்ள திருப்பாலைவனமு ஐயர் கோவிலுக்கு தீபம் வழங்குவதாகத் தெரிகிறது.

மூலவர் தலையில் வடுவுடன் சுயம்புவாக இருக்கிறார். இதன் பின்னணியில் உள்ள கதை என்னவென்றால், முதலாம் இராஜேந்திர சோழன், போருக்குப் பிறகு தனது வீரர்களுடன் இந்த பாளை வனத்தில் தங்கியிருந்தார். பாலை மரத்தில் கட்டியிருந்த யானை மயங்கி விழுந்தது. இதைப் பார்த்த ராஜேந்திரன் மரத்தை வெட்ட உத்தரவிட்டார். கோடாரி அடித்த இடத்தில் இருந்து ரத்தம் கசிந்தது. எனவே மரத்தை வெட்டுவதை நிறுத்திவிட்டு அந்த இடத்தை தோண்டியபோது சிவலிங்கம் தலையில் தழும்புடன் இருந்தது. அதனால் இந்தக் கோயிலைக் கட்டினார்.

தண்ணீர் நிரம்பிய கோயில் கொஞ்சம் பெரியது (தொட்டியில் தவளைகள் இல்லை, இதற்குப் பின்னால் ஒரு கதை உள்ளது. அமிர்தம் அருந்திய பிறகு தேவர்கள் தொட்டிகளில் கைகளைக் கழுவினர், அசுரர்கள் தவளை வடிவம் எடுத்து அமிர்தத்தைக் குடித்தனர்/ அமிர்தம் தண்ணீரில் கலந்தது இதைப் பார்த்த தேவர்கள், கோவில் தொட்டியில் தவளை வளரக்கூடாது என்று சபித்தார்கள்.  

சென்னையில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் பழவேற்காடு செல்லும் சாலை மார்க்கத்தில் அமைந்துள்ளது அருள்மிகு திருப்பாலீஸ்வரர் சுவாமி திருக்கோயில்.

திருக்கோவில் நடை திறந்திருக்கும் நேரம்:

காலை: 7.00 முதல் - 12.00 மணி வரையும்
மாலை: 4.30 முதல் - 8.30 மணி வரையும்.

செல்லும் வழி:

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியிலிருந்து 10 km தொலைவிலும், பழவேற்காட்டிலிருந்து 8 km தொலைவிலும், மீஞ்சூரிலிருந்து 16 km தொலைவிலும் இத்திருத்தலம் உள்ளது. 
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்... 

No comments:

Post a Comment

Followers

சங்கர நாராயணன் மேலராஜவீதி தஞ்சாவூர்..

அருள்மிகு சங்கர நாராயண சுவாமி திருக்கோயில் மேலராஜவீதி தஞ்சாவூர் மாவட்டம் இறைவன் :- சங்கர நாராயணர் இறைவி :- பாலாம்பிகா தாயார்   த...