Sunday, July 7, 2024

நவம் (ஒன்பது ) புலியூர் சிவாலயங்கள்....

நவபுலியூர் ஸ்தலங்கள்... 
   
  ஆதிசேஷனும் வியாக்ரபாத முனிவர் எனப்படுகின்ற புலிக்கால் முனிவரும் சிவபெருமானின் கூத்தினைக் காண மிக ஆவல் கொண்டிருந்தனர். அவர்கள் இருவரையும் தைப்பூச நாளன்று வந்து தரிசிக்கும்படியாக சிவபெருமான் கூறினார். மேலும் அவர்கள் முன்பாக நடன தரிசனமும் தந்து அவர்களுக்கு அருளினார். அப்போது வியாக்ரபாதரும், பதஞ்சலி முனிவரும் மோட்சத்தை வேண்டி சிவனைத் தொழுது நின்றார்கள். அப்போது சிவபெருமான் ஒன்பது புலியூரைத் தரிசித்து, கடைசியாக திருவரங்கத்தில் அவர்களின் புனிதமான கோயில் யாத்திரையை நிறைவு செய்துகொள்ளுமாறுக் கூறினார். 

பெரும்பற்றப்புலியூர் - சிதம்பரம் நடராஜர் கோயில். 275 பாடல் பெற்ற சிவத்தலங்களில் முதல் இடம் வகிக்கும் தலம்
திருப்பாதிரிப்புலியூர் - கடலூர் பாடலீஸ்வரர் கோயில். 229 வது தேவாரத்தலம் ஆகும். 

எருக்கத்தம்புலியூர் - இராஜேந்திர பட்டினம் சுவேதாரண்யேஸ்வரர் கோயில். 

ஓமாம்புலியூர் - துயர்தீர்த்தநாதர் கோயில்
சிறுபுலியூர் - மார்க்கபந்தீஸ்வரர் கோயில், சிறுபுலியூர்

அத்திப்புலியூர் - அத்திப்புலியூர் சிதம்பரேசுவரர் கோயில்

தப்பளாம் புலியூர் - வியாக்ரபுரீஷ்வரர் கோயில்

திருப்பெரும்புலியூர் - வியாக்ரபுரீஸ்வரர் கோயில்

கானாட்டம்புலியூர் - பதஞ்சலிநாதர் கோயில்

வியாக்ரபாதரும், பதஞ்சலி முனிவரும் மேற்கண்ட ஒன்பது புலியூர்களையும் தரிசித்தனர். அதற்குப் பின்னர் அவர்கள் இருவரும் ஸ்ரீரங்கத்தில் உள்ள அரங்கநாதரைத் தரிசித்துவிட்டு, பின்னர், திருப்பட்டூர் சென்று அங்குள்ள பிரம்மபுரீஸ்வரரையும், பிரம்மாவையும் வணங்கி ஜீவ சமாதி அடைந்ததாக வரலாறு.


No comments:

Post a Comment

Followers

புராதனவனேஸ்வரர் பட்டுக்கோட்டை தஞ்சாவூர்...

அருள்மிகு புராதனவனேஸ்வரர் திருக்கோயில் பட்டுக்கோட்டை தஞ்சாவூர் மாவட்டம்.       இறைவன் :- புராதனவனேஸ்வரர் இறைவி :- பெரியநாயகி அம்...