Sunday, August 4, 2024

ஐந்தெழுத்து மந்திரத்தை எப்படி சொல்லவேண்டும்?

_ஐந்தெழுத்து மந்திரத்தை எப்படி சொல்லவேண்டும்?_


“நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க – மாணிக்கவாசகப் பெருமான் திருப்பெருந்துறையில் அருளிச் செய்த சிவபுராணத்தில் இந்த மந்திரம் முதலாவது அடியாக வருகின்றது. 

பாடுவோர் உள்ளத்தைத் தூய்மைப்படுத்தும் மந்திரம், கேட்போர் மனதை உருகச் செய்யும் மந்திரம். இந்த மந்திரத்தை மனத்திற்குள் தியானிக்கலாம். பிறர் காதிள் கேளாதபடி மெல்ல மெல்ல உச்சரித்துச் சொல்லலாம். வெளிப்படையாகவும் சொல்லலாம். 

இறைவனுடைய திருநாமம் ஓதினாலே நன்னெறியைத் தரும் சிறப்புடையதாகும். மந்திரம் இறைவனுடைய சொரூபமாகும். எனவே, மந்திரச் சொற்கள் அருட்தன்மை பெற்றவை. இறைவனை அடைவதற்கு இறைவனால் அருளிச் செய்யப்பட்ட சொற்களே மந்திரங்களாகும். 

அவற்றை இறைவனுடைய அடியார்கள், இறையுணர்வாளர்கள் ஆகியோர்கள் வாயிலாகப் பெறுகின்றோம். இவர்கள் நிறை மொழி மாந்தர் எனப்படுவார்கள். அவர்களுடைய ஆணையில் கிளர்ந்தவை மந்திரங்கள். 

மந்திரங்களைத் தொல்காப்பியர் மறைமொழி என்பார். மந்திரங்கள் இம்மைக்கும் மறுமைக்கும் நாம் விரும்பும் பயனைக் கொடுக்க வல்லவை என்பது மட்டுமன்று. ...

சிந்தையிலே இறைவனுடைய நாமமாகிய மந்திரத்தை நிலையாக நிறுத்தி வைக்கப் பழகிக் கொண்டோமானால் இறப்பு, பிறப்பு நிலைகளிலிருந்து விடுபட்டு, இறைவனடியைப் பற்றி என்றும் மாறாத இன்பத்தில் திளைத்து நிற்கலாம் என்பது அருள் அனுபவம்... 
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம்... 

No comments:

Post a Comment

Followers

சிவனின் ஈசான்ய முகத்திலிருந்து தோன்றியவர் அகோர மூர்த்தி திருவெண்காடு..

அகோர மூர்த்தி : திருவெண்காடு தலத்தை தவிர்த்து வேறு எங்கும் கண்டு விட முடியாது. ஆலயத்தின் தனிச்சிறப்புக்கு உரியவர் அகோர மூர்த்தி....