#அப்பர்_சுவாமிகள் #திருவையாற்றில் #திருக்கைலாய_காட்சி
#ஆடி_அமாவாசை நாளான இன்று
சமயக்குரவர்கள் நால்வரில் ஒருவரான,
63 நாயன்மார்களில்
ஒருவரானவரும் #அப்பர்_சுவாமிகள்
(திருநாவுக்கரசர் நாயனார்)
#திருக்கைலாயம் சென்று மானோசரோவரில் மூழ்கி #திருவையாற்றில் உள்ள புகழ்பெற்ற #தென்_கைலாயம் என்ற
#ஐயாறப்பர் என்ற #பஞ்சநதீஸ்வரர்
#அறம்_வளர்த்த_நாயகி திருக்கோயிலில் உள்ள
#சூரிய_புஷ்கரணி தீர்த்தத்தில் எழுந்து #திருக்கைலாய_காட்சி பெற்ற பெருவிழா இன்று:
ஆரூரில் பிறந்தால் முக்தி, அண்ணா மலையை நினைத்தால் முக்தி, ஐயாறு மண்ணை மிதித்தால் முக்தி என்று சொல்லும் அளவுக்கு மிகவும் பெருமை வாய்ந்த ஊர் திருவையாறு. காவிரி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் அழகிய ஊர் பேராற்றல் மிக்க தென்கயிலாயமாகிய அருள்மிகு அறம் வளர்த்தநாயகி உடனாய ஐயாறப்பர் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள புனிதமிக்க திருவையாறு திருத்தலம்.
தெய்வ மணம் கமழும் திருநாடாக விளங்குவது சோழ நாடு. "சோழ நாடு சோறுடைத்து' என்பார்கள். வெறும் வயிற்றுக்கு மட்டும் சோறன்று; உயிருக்கு சோறாகிய திருவருள் இன்பமும் தரும் என்றும் பொருள் கொள்ளலாம். சோழ நாட்டில் அன்னை காவிரியால் எழில் பெறும் கரைகள் வெறும் மண்ணகமல்ல, விண்ணகம். அதனால்தான் திருநாவுக்கரசர் சோழநாட்டையே சுற்றிச் சுற்றி வலம் வந்தார். இறுதியில் அவருக்குக் கயிலையின் மீது நாட்டம் ஏற்பட்டது. எனவே கயிலை நோக்கிச் சென்றார். ஆனால் இறைவனோ அவரை கயிலைக்கு அழைக்காமல் தன் குடியிருப்பை தற்காலிகமாக ஐயாற்றுக்கு மாற்றினார். ஆம், திருவையாறு, அப்பருக்கு திருக்கயிலாயம் ஆனது. நம்பினோருக்கு உய்வு தரும் திருத்தலமானது. இந்நிகழ்வு நடந்தேறியது ஒரு ஆடி அமாவாசை நன்னாளில்தான்.
திருநாவுக்கரசர் யாத்திரையாகப் பல்வேறு திருத்தலங்களுக்குச் சென்றார். அப்போது தென்கயிலாயமாகிய திருக்காளத்திக்கு வந்தார். திருக்காளத்தியப்பரை வணங்கி மகிழ்ந்தார். அதன்பின் வட கயிலாயத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானின் திருக்கோலத்தை தரிசிக்க விரும்பினார். திருக்காளத்தியிலிருந்து புறப்பட்டு ஸ்ரீசைலம், மாளவம், இலாடம் (வங்காளம்), மத்திம பைதிசம் (மத்திய பிரதேசம்) முதலிய பகுதிகளைக் கடந்து கங்கைக் கரையில் உள்ள வாரணாசியை அடைந்தார். அதன்பின் மனிதர்களால் எளிதில் போக முடியாத வழிகளில் கயிலை மலையை நோக்கி நடந்து சென்றார் திருநாவுக்கரசர். வழியில் கிடைத்த இலை, சருகு, கிழங்கு, பழங்கள் மட்டுமே உண்டு, சில சமயம் அதனையும் தவிர்த்து இரவு பகலாக திருக்கயிலாயத்தை நோக்கித் தனது பயணத்தை மேற்கொண்டார் திருநாவுக்கரசர்.
ஒரு நிலையில் அவரின் பாத தசைகள் தோய்ந்து போயின. மணிக்கட்டுகள் மறுத்துப் போயின. அப்போதும் இறைவன் மீது கொண்ட பக்தியால் உறுதி தளராமல், வைராக்யத்துடன் மார்பினால் உந்தியும், உடலால் புரண்டும் சென்று கொண்டிருந்தார்.
அப்பரை சோதிக்க எண்ணிய சிவபெருமான் ஒரு முனிவர் வடிவில் அவருக்கு எதிரே தோன்றினார். "இம்மானிட வடிவில் கயிலை செல்வது கடினம். முற்றிலும் இயலாது'' என்றார். ஆனால் அப்பர் பெருமானோ, "ஆளும் நாயகன் கயிலையில் இருக்கைக் கண்டு அல்லால் மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன்'' என்று பதிலுரைத்து உறுதியுடன் தனது யாத்திரையைத் தொடர்ந்தார். அப்பரின் வைராக்யத்தை மெச்சிய முனிவர் வடிவம் கொண்ட இறைவன், "ஓங்கும் நாவினுக்கு அரசனே! எழுந்திரு! இதோ இங்குள்ள பொய்கையில் மூழ்கித் திருவையாற்றை அடைந்து நாம் கயிலையில் இருக்கும் கோலத்தைக் காண்க'' என்று அருளிச் செய்து மறைந்தார். அங்கு உடனே தடம்புனல் ஒன்று நாவரசர் முன் தோன்றிற்று. அதில் மூழ்கிய அவர் திருவையாற்றில் கோயிலுக்கு வட மேற்கே சமுத்திர தீர்த்தம் என்றும், உப்பங்கோட்டை பிள்ளை கோயில் குளம் என்றும் வழங்கும் அப்பர்குட்டை திருக்குளத்தின் மீது உலகெல்லாம் வியக்குமாறு எழுந்தார். திருக்கயிலையில் சிவபெருமான் வீற்றிருக்கும் காட்சியைக் கண்டு நெகிழ்ந்தார். உமாதேவியுடன் வீற்றிருந்த சிவபெருமானைக் கண்ணாரக் கண்ட நாவரசர் தேனொழுகும் திருப்பதிகங்களும், தாண்டகங்களும் பாடலானார். காணப்படுவன யாவும் சிவமும், சக்தியுமாய் காட்சி தருவதை வியந்தவர்,
“மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர்சுமந் தேத்திப் புகுவா ரவர்பின் புகுவேன்”
என்று பாடி சிவானந்தப் பேரின்பத்தில் திளைத்து இன்புற்றார். "கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்' என்று தான் கண்ட காட்சிகளை நமக்கும் தனது பதிகம் மூலம் காண்பிக்கிறார். அப்பர் பெருமானின் உழவாரத் திருத்தொண்டிற்கும் உள்ளத்தின் உறுதிப்பாட்டிற்கும் அடிமைத் திறத்திற்கும் உவந்து திருக்கயிலையே திருவையாற்றுக்கு வந்தது.
தென்கயிலாயம் என்று போற்றப்படும் தஞ்சை மாவட்டம் திருவையாறு அருள்மிகு அறம் வளர்த்தநாயகி உடனுறை ஐயாறப்பர் கோவிலில் ஆடி அமாவாசையில் அப்பர் கயிலாயக் காட்சி திருவிழா பல ஆண்டுகளாக பெருஞ்சிறப்புடன் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்த ஆண்டு இன்று அப்பர் திருக்கயிலாயக் காட்சி திருவிழா மிக விமரிசையாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அன்று முழுவதும் இடையறாது திருமுறை இன்னிசை நிகழ்ச்சி நடக்கும். காலை 7 மணி அளவில் சிவபூஜையும், பகல் 12 மணி அளவில் காவிரியில் பஞ்சமூர்த்திகள் தீர்த்தவாரியும், அபீஷ்ட வரத மகாகணபதி சந்நிதிக்கு எதிரில் இருக்கும் திருக்குளத்தில் (உப்பங்கோட்டை) அப்பர் எழுந்தருளி தீர்த்தவாரியும், இரவு 9 மணி அளவில் ஐயாறு ஆலயத்தில் அப்பர் பெருமானுக்கு திருக்கயிலாயக் காட்சி கொடுத்தருளுதலும் நடைபெறும். அதற்கு முன் சந்நிதியின் மண்டபத்தில் 200-க்கும் மேற்பட்ட ஓதுவார்கள் கூடி அப்பரின் பதிகங்களான கூற்றாயினவாறு, சொற்றுணைவேதியன், தலையே நீ வணங்காய், வேற்றாகி விண்ணாகி, மாதர்ப்பிறைக்கண்ணி யானை ஆகிய ஐந்து பதிகங்களை பக்கவாத்தியத்துடன் இசைத்து ஆராதனை செய்வார்கள்.
திருவையாற்றுக்கு உரிய சிறப்பு ஆடி அமாவாசை அப்பர் கயிலாயக் காட்சி திருவிழா, "யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்ற போது'' என்ற அப்பரின் திருவாக்கின்படி நாமும் இந்நாளில் திருவையாறில் திருக்கயிலைக் காட்சியைக் காண்போம்.
ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி ஸ்ரீ ஐயாறப்பருடன் அப்பர் பெருமானுக்கு திருக்கயிலாயக் காட்சி கொடுத்தருளும் அந்த பக்திப்பரவசமான காட்சியை காணக் கண்கோடி வேண்டும். திருவையாற்றில் கயிலைக் காட்சி கண்டால் கயிலாயம் தரிசித்த புண்ணியம் பெறலாம். மேலும் திருக்கயிலைக்கு யாத்திரை மேற்கொண்டவர்கள் திருவையாற்றுக்கு வந்து தரிசித்தால் கயிலையை தரிசித்ததன் புண்ணியம் முழுமையாக கிடைக்கும்.
#அப்பர் சுவாமிகள்
தல யாத்திரை:
பெரிய புராணத்தின்படி திருநாவுக்கரசர் சென்ற பாதையை ஆராய்ந்து, இன்று அந்த ஊர்களுக்கு என்ன பெயர் என்று அறிந்து, ஒவ்வொரு ஊருக்கும் அடுத்த ஊருக்கும் உள்ள தூரத்தை கணக்கிட்டு பதிந்துள்ளேன். சுமாராக 60 அல்லது 65 வயதில் தொடங்கி 80 வயது வரை அவர் நடந்து கடந்த தூரம் 14422 கிலோமீட்டர் ! ஒரே நாளில் கடக்கவில்லை. சில நாட்கள் ஒரு இடத்தில் தங்க வேண்டிய நிலைமை. பல நாட்கள் உணவின்றி, நீரின்றி நடை. காலுக்கு செருப்பு கிடையாது. ஓய்வு கிடையாது. மிக சில நாட்கள் விருந்து. பல நாட்கள் பட்டினி, தாகம், வெயில், மழை, குளிர். எல்லா இடங்களுக்கும் நடைதான். இறைவன் ஆசியால் பல்லக்கு பெற்ற ஞானசம்பந்தர் அளவுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கவில்லை. உழைத்தார். உனக்குக் என்னென்னவோ செய்தேனே, இப்படி என்னை கைவிட்டுட்டியே பகவானே என்று புலம்புகிறோம் . இவரது தவம் என்னவென்று பாருங்கள். அதில் ஒரு 10% வேண்டாம் ஐயா. அவரது கால் தூசு அளவுக்காவது வரவேண்டாமா? அட ஒரு முயற்சியாவது செய்து தோற்கவேண்டாமா? நமது தவம் என்ன? நமது தவம் எங்கே? தவம் செய்கிறோமா?
இந்த ஊர் முதல் அந்த ஊர் வரை தூரம்
திருவாமூர் – பாடலிபுத்திரம் 35
பாடலிபுத்திரம் – திருவதிகை 25
திருவதிகை – திருப்பாதிரிப்புலியூர் 22
திருப்பாதிரிப்புலியூர் – திருவதிகை 22
திருவதிகை – திருமாணிக்குழி 15
திருமாணிக்குழி – திருதினைநகர் 23
திருதினைநகர் (தீர்த்தனகிரி) – திருமாணிக்குழி 23
திருமாணிக்குழி – திருவீரட்டானம் 16
திருவீரட்டானம் – திருவெண்ணைநல்லூர் 125
திருவெண்ணைநல்லூர் – திருவாமாத்தூர் 22
திருவாமாத்தூர் – திருக்கோவலூர் 37
திருக்கோவலூர் – திருபெண்ணாடகம் 86
திருபெண்ணாடகம் – திருத்தூங்கானை 0.5
திருநாரையூர் – சீர்காழி 67
திருவரத்துறை – திருமுதுகுன்றம்(விருத்தாச்சலம்) 58
திருமுதுகுன்றம் – சிதம்பரம் 44
சிதம்பரம் – திருப்பாப்புலியூர் 42
திருப்பாப்புலியூர் – சிதம்பரம் 42
சிதம்பரம் – திருவேட்களம் 5
திருவேட்களம் – திருக்கழிப்பாலை 4
திருக்கழிப்பாலை – திருநாரையூர் 84
திருநாரையூர் – சீர்காழி 62
சீர்காழி – திருக்கோலக்கா 166
திருக்கோலக்கா – திருக்கறுப்பறியலூர் 95
திருக்கறுப்பறியலூர் – திருப்புன்கூர் 98
திருப்புன்கூர் – திருநீடூர் (நீடூர்) 18
திருநீடூர் (நீடூர் – குறுக்கைவீரட்டம்(திருநன்றியூர்) 10
திருநன்றியூர் – திருநனிப்பள்ளி 14
திருநனிப்பள்ளி (பொன்செய்) – திருச்செம்பொன்பள்ளி (செம்பனார் கோவில்) நாகப்பட்டினம் 52
(செம்பனார்கோவில்) நாகப்பட்டினம் – மயிலாடுதுறை 55
மயிலாடுதுறை – திருத்துருத்தி 15
திருத்துருத்தி – திருவேள்விக்குடி 3
திருவேள்விக்குடி – எதிர்கொள்பாடி (திருஎதிர்கொள்பாடி) 4
எதிர்கொள்பாடி – திருக்கோடிக்காவல் (திருக்கோடிக்கா) 9
திருக்கோடிக்கா – திருவாவடுதுறை, 3
திருவாவடுதுறை – திருவிடைமருதூர், 10
திருவிடைமருதூர் – திருநாகேஸ்வரம் 5
திருநாகேஸ்வரம் – பழையாறை 14
பழையாறை – திருச்சத்திமுற்றம் (பட்டீஸ்வரம்) 1
திருச்சத்திமுற்றம் (பட்டீஸ்வரம் – திருநல்லூர், 14
திருநல்லூர் – திருக்கருகாவூர், 26
திருக்கருகாவூர் – திருவாவூர் திருவாவூர் – புதிய பெயரை கண்டுபிடிக்க முடியவில்லை.
திருவாவூர் – திருப்பாலைத்துறை 7.4 அதனால் திருக்கருகாவூர் முதல் திருப்பலாய்த்துறை தொலைவு கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது
திருப்பாலைத்துறை – திருப்பழனம் 19
திருப்பழனம் – திங்களூர் 2
திங்களூர் – திருச்சோற்றுத்துறை 10
திருச்சோற்றுத்துறை – திருநல்லூர் 35
திருநல்லூர் – திருவாரூர் 49
திருவாரூர் – திருவலஞ்சுழி 47
திருவலஞ்சுழி – திருகுடமுக்கு 13
திருகுடமுக்கு – திருநாவலூர் 108
திருநாவலூர் – திருச்சேறை 122
திருச்சேறை – திருகுடவாயில் (குடவாசல்) 5
திருகுடவாயில் – திருநறையூர் 11
திருநறையூர் – திருவாஞ்சியம் 18
திருவாஞ்சியம் – திருப்பெருவேளூர் 42
திருப்பெருவேளூர் – திருவாரூர் 49
திருவாரூர் – திருவலிவலம் 21
திருவலிவலம் – திருக்கீழ்வேளூர் 16
திருக்கீழ்வேளூர் – திருக்கன்றாப்பூர் 16
திருக்கன்றாப்பூர் – திருவாரூர் 16
திருவாரூர் – திருப்புகலூர் 21
திருப்புகலூர் – திருச்செங்காட்டங்குடி 4
திருச்செங்காட்டங்குடி – திருநள்ளாறு 15
திருநள்ளாறு – திருச்சாத்தமங்கை (சீயாத்தமங்கை, நாகப்பட்டினம்) 26
திருச்சாத்தமங்கை (சீயாத்தமங்கை, நாகப்பட்டினம்) – திருப்புகலூர் (புகலூர்), 268
திருப்புகலூர் – பூம்புகலூர் (திருப்புகலூர் வேறு பூம்புகலூர் வேறு. இரண்டும் நாகையில் உள்ளதால் அங்குள்ள பிரபலமான மூன்று கோவில்களில் ஒன்றின் பழைய ஊர் பெயராக இருக்கலாம். அதனால் குறைந்த தொலைவு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.)
பூம்புகலூர் – திருக்கடவூர் 296
திருக்கடவூர் – திருஆக்கூர் ( தான்தோன்ரீஸ்வரர் கோவில்) 24
திருஆக்கூர் ( தான்தோன்ரீஸ்வரர் கோவில் ) – திருவீழிமிழலை 33
திருவீழிமிழலை – திருவாஞ்சியம் 9
திருவாஞ்சியம் – திருமறைக்காடு (திருத்தலையங்காடு, திருப்பெருவேளூர்) 90
திருமறைக்காடு – திருவாய்மூர் 37
திருவாய்மூர் – திருமறைக்காடு 37
திருமறைக்காடு – திருவீழிமிழலை 93
திருவீழிமிழலை – திருநாகைக்காரோணம் ( நாகப்பட்டினம்) 47
திருநாகைக்காரோணம் – திருவாவடுதுறை 62
திருவாவடுதுறை – பழையாறை 25
பழையாறை – திருவானைக்கா 87
திருவானைக்கா – திருவாலம்பொழில் 44
திருவாலம்பொழில் – திருக்கானுர் 184
திருக்கானுர் – திருஅன்பிலாலந்துறை (மான்துறை)176
திருஅன்பிலாலந்துறை (மான்துறை) – திருக்கண்டியூர் 41
திருக்கண்டியூர் – மேலைத்திருக்காட்டுப்பள்ளி 21
மேலைத்திருக்காட்டுப்பள்ளி – திருவானைக்கா 32
திருவானைக்கா – திருவெறும்பியூர் 15
திருவெறும்பியூர் – திருச்சி 11
திருச்சி – திருப்பராய்த்துறை 16
திருப்பராய்த்துறை – திருப்பாதிரிப்புலியூர் 192
திருப்பாதிரிப்புலியூர் – திருப்பைங்ங்கீலி, 178
திருப்பைங்ங்கீலி – அண்ணாமலை 232
அண்ணாமலை – திருவோத்தூர் 484
திருவோத்தூர் – காஞ்சி 30
காஞ்சி – திருமால்பேறு 22
திருமால்பேறு – காஞ்சி 22
காஞ்சி – திருக்கழுக்குன்றம் 52
திருக்கழுக்குன்றம் – திருவான்மியூர் 52
திருவான்மியூர் – மயிலாப்பூர் 8
மயிலாப்பூர் – திருவொற்றியூர் 17
திருவொற்றியூர் – திருப்பாச்சூர் 56
திருப்பாச்சூர் – பழையனூர் 15
பழையனூர் – திருவாலங்காடு 2
திருவாலங்காடு – திருக்காரிக்கரை (ராமகிரி) 370
திருகாரிக்கரை (ராமகிரி ) – திருக்காளாத்தி 338
திருக்காளாத்தி – திருப்பருப்பதம் ( ஸ்ரீசைலம்), 396
திருப்பருப்பதம் கயிலை (செல்ல முடியாமல் திருவையாறு. லிபு லெக் பாஸ் என்ற இடத்தோடு திரும்பியதாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. காரணம் அது ஓரளவுக்கு மேடு. அதன் பின் சிவபெருமான் TELEPORTING எனும் முறையில் அங்கு மறைய வைத்து திருப்பி அனுப்பியுள்ளார்) 843
திருவையாறு – திருநெய்த்தானம் 2
திருநெய்த்தானம் – திருமழபாடி 17
திருமழபாடி – திருப்பூந்துருத்தி 21
திருப்பூந்துருத்தி – சீர்காழி 94
சீர்காழி – திருப்புத்தூர் 210
திருப்புத்தூர் – மதுரை 65
மதுரை – திருப்பூவணம் 20
திருப்பூவணம் – ராமேஸ்வரம் 180
ராமேஸ்வரம் – திருநெல்வேலி 215
திருநெல்வேலி – திருக்கானப்பேர் (காளையார் கோவில்), 221
திருக்கானப்பேர் – பூம்புகலூர் 191
பூம்புகலூர் – திருப்புகலூர் 2
———–
மொத்த தூரம் 14,380
வெறுமனே நாம் எங்கே இருக்கிறோம், இவர்கள் எங்கே இருக்கிறார்கள், எவ்வளவு உழைத்தார்கள் என்று மட்டும் சிந்தித்து குறைந்தது இன்று முதல் தினசரி அருகில் உள்ள கோவிலுக்கு தவறாமல் செல்வது என்ற சங்கல்பம் மட்டுமாவது எடுத்துக்கொண்டால் இந்த பதிவை இட நான் பட்ட பாட்டிற்கு பலன் கண்டதாக எடுத்துக்கொள்வேன்.
#அப்பர் சுவாமிகள் பாடிய
#திருவையாறு_திருப்பதிகம்:
"மாதர்ப் பிறைக்கண்ணி யானை
மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர்சுமந் தேத்திப்
புகுவா ரவர்பின் புகுவேன்
யாதுஞ் சுவடு படாமல்
ஐயா றடைகின்ற போது
காதன் மடப்பிடி யோடுங்
களிறு வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங்
கண்டறி யாதன கண்டேன். போழிளங் கண்ணியி னானைப்
பூந்துகி லாளொடும் பாடி
வாழியம் போற்றியென் றேத்தி
வட்டமிட் டாடா வருவேன்
ஆழி வலவனின் றேத்தும்
ஐயா றடைகின்ற போது
கோழி பெடையொடுங் கூடிக்
குளிர்ந்து வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங்
கண்டறி யாதன கண்டேன். எரிப்பிறைக் கண்ணியி னானை
யேந்திழை யாளொடும் பாடி
முரித்த இலயங்க ளிட்டு
முகமலர்ந் தாடா வருவேன்
அரித்தொழு கும்வெள் ளருவி
ஐயா றடைகின்ற போது
வரிக்குயில் பேடையொ டாடி
வைகி வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங்
கண்டறி யாதன கண்டேன். பிறையிளங் கண்ணியி னானைப்
பெய்வளை யாளொடும் பாடித்
துறையிளம் பன்மலர் தூவித்
தோளைக் குளிரத் தொழுவேன்
அறையிளம் பூங்குயி லாலும்
ஐயா றடைகின்ற போது
சிறையிளம் பேடையொ டாடிச்
சேவல் வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங்
கண்டறி யாதன கண்டேன்
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்...
No comments:
Post a Comment