Saturday, August 3, 2024

திருப்புன்கூர் சிவலோகநாதர் கோயில்...! நந்தனாருக்கு நந்தி வழி விட்ட தலம்....

திருப்புன்கூர் சிவலோகநாதர் கோயில்...! நந்தனார் வணங்குவதற்காக இறைவன் நந்தியை விலகியிருக்குமாறு செய்த தலம்._

சோழ நாட்டிலே ஆதனூர் என்ற ஒரு சிறிய ஊர். (இன்று மேல ஆதனூர் என்று வழங்குகிறது. திருப்புன் கூருக்கும் மேற்கே இரண்டு மைல் தொலைவில் இருக்கிறது) 



அங்கு ஒரு புலைப்பாடியில் பிறந்த நந்தன் ஓர் அந்தணரிடம் பண்ணையாளாக வேலை பார்க்கிறான். 
ஒரு சமயம் பக்கத்திலிருக்கும் திருப்புன்கூரில் உள்ள சிவலோக நாதனைத் தரிசிக்கப் புறப்பட்டு வருகிறான். 

கோயிலுக்குள் நுழைய முடியாத நந்தன் தேரடியில் நின்று இருந்தே இறைவனை தரிசிக்க முற்படுகிறான்

திருப்புன்கூருக்கு வந்து சிவலோக நாதரைத் தரிசிக்க முயன்ற திருநாளைப்போவார் (நந்தனார்), தன் குலநிலையை எண்ணி வெளியிலிருந்து பார்க்க, நந்தி மறைத்திருப்பது கண்டு வருந்தினார்.

இறைவன் இவருடைய உள்ளப் பக்தியைக் கண்டு மகிழ்ந்து நந்தியைச் சற்று விலகியிருக்குமாறு பணித்தார். 

இன்றும் நந்தி இத்தலத்தில் விலகியிருப்பதைக் காணலாம். 
நந்தி விலகத் தரிசித்த போவார் கோயிலின் மேற்புறமுள்ள ரிஷபதீர்த்தத்தை வெட்டிச் சீர்ப்படுத்த எண்ணித் தனக்குத் துணை யாருமில்லாததால் இறைவனை வேண்ட, இறைவன் அவருக்குத் துணையாகுமாறு கணபதியை அனுப்பினார்.

அவர் துணையால் அத்தீர்த்தத்தை வெட்டிச் சீர்ப்படுத்தினார். அதுவே கணபதிதீர்த்தம் என்றும் பெயர் பெற்றது. எனவே இங்குள்ள விநாயகர் 'குளம் வெட்டிய விநாயகர் ' என்றழைக்கப்படுகிறார்.

அமைவிடம்

வைத்தீஸ்வரன் கோயில் - திருப்பனந்தாள் சாலையில் 3 கி.மீ. சென்றால் ஒருபுறம் திப்புன்கூர் கைகாட்டியும், மறுபுறம் திருப்புன்கூர் சிவலோக நாதசுவாமி கோயில் என்ற வளைவும் உள்ளது; 

அதனுள் - அச்சாலையில் 1 கி. மீ. சென்றால் கோயிலை அடையலாம்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்... 

No comments:

Post a Comment

Followers

1008 ஆயிரத்து எட்டு லிங்கங்களின் பட்டியல்...

ஆயிரத்து எட்டு லிங்கங்களை கேட்டிருக்கோமே தவிர, அந்த 1,008 லிங்கங்கள் என்னென்ன என்று பலருக்கும் தெரியாது.  இதோ அந்த 1008 லிங்கங்களின் பட்டியல...