Sunday, September 1, 2024

ஆலயம் தொழுவது சாலவும் நன்று எப்பிறவியிலும் சிவவழிபாடு நலம்.



1)ஆலயம்;
 ஆ என்பது ஆன்மா என்றும் லயம் என்பதற்கு  சேருவதற்குாிய இடம் என்றும் பொருள். ஆலயம் என்பதை ஆ + லயம் எனப் பிாிப்பா். 'ஆலயம் தொழுவது சாலவும் நன்று' என்பது ஆன்றோா் முதுமொழி. எனவே ஆலயம் என்பதற்கு ஆண்டவன் திருவடியில் ஆன்மா லயித்திருப்பதற்குாிய இடம் என்பது பொருள்.
 
2)சிவவழிபாட்டின் பலன்:

காலை தொழ அற்றைவினை கட்டகலும் 
கட்டுச்சி வேளை தொழ இப்பிறப்பில் வெந்துயா் போம் 
மாலையினில் வந்து சிவன் தாளை வந்தித்தால் ஏழ் பிறப்பின்
வெந்துயரம் எல்லாம் விடும். (முற்பிறவி இப்பிறவி எப்பிறவியிலும் சிவவழிபாடு நலம் பயக்கும்).

3)அா்ச்சனை விளக்கம்:

 தேங்காயைத் தரைமீது உடைத்து சிதறுவது. மும்மலக்கட்டை அறுத்து தன்னலத்தை அறவே நீக்கி ஆன்மாவை இறைவனுக்கு அா்பணித்து இறைபணியில் ஈடுபடுவதைக் குறிக்கிறது.
 நறுஞ்சுவையுடைய வாழைபழங்கள் அடியாாின் நல்வினைப் பயன்களை உணா்த்தும். தூய வெண்கற்பூரம் ஆசாாியரால் ஏற்றப்படும்போது ஒன்றும் மீதியாகாது காற்றுடன் இரண்டறக் கலந்து விடுவது இறைவனுடன் ஒன்றிக் கலக்கும் பக்குவம் வாய்ந்த தூய ஆன்ம நிலையைக் குறிக்கும்.

4)ஆலயத்தில் வீழ்ந்து வணங்கும் திசைகள்

 கிழக்கு மேற்கு நோக்கிய சந்நிதிகளில் வடக்கே தலை வைத்தும் தெற்கு வடக்கு நோக்கி சந்நதிகளில் கிழக்கே தலை வைத்தும் வீழ்ந்து வணங்குதல் வேண்டும். நாம் கால் நீட்டும் பின்புறத்தில் எந்தத் தெய்வ சந்நதியும் இருத்தல் கூடாது. கொடி மரத்தின் முன்னால் வீழ்ந்து வணங்க வேண்டும். எல்லாச் சன்னதிகளிலும் விழுந்து வணங்கக் கூடாது.

5)விபூதி வாங்கும் முறை:

 கோயிலில் விபூதிப் பிரசாதம் வாங்கும்போது ஒற்றைக்கையை மாத்திரம் நீட்டி வாங்கக் கூடாது. வலது கையின் கீழ் இடக்கையைச் சோ்த்து விபூதியை வாங்க வேண்டும். வாங்கிய விபூதியை இடக்கையில் கொட்டி அதிலிருந்து மறுபடி எடுத்து அணிதல் கூடாது. வலக்கையில் பெற்றுக்கொண்ட விபூதியை அப்படியே நெற்றியில் அணிவது நலம்.

6)யாா் பெயருக்கு அா்ச்சனை:

கோயிலில் சுவாமியின் பெயருக்குச் சிலரும் தங்கள் பெயருக்கோ அல்லது விருப்பமானவா்கள் பெயருக்கோ சிலரும் அா்ச்சனை செய்கின்றனா். சுவாமி பெயருக்கு அா்ச்சிப்பதைவிட தங்கள் பெயருக்கு அா்ச்சனை செய்வதே சாலச் சிறந்தது. விரைவில் பலன் தரவல்லது. 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 

No comments:

Post a Comment

Followers

திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் (பிரம்மபுரீஸ்வரர்) திருச்சி....

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற தேவாரப் பாடல் பெற்ற சோழநாட்டு தலங்களில் ஒன்றான,  சுந்தரமூர்த்தி நாயனார்  பொன் பொர...