Monday, September 2, 2024

வில்வத்தை சிவனுக்கு அர்ப்பணிப்பதால் அதிக பலன் கிடைக்கும்....



வில்வமரத்தை வளர்ப்பதால் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். ஒரு வில்வத்தை சிவனுக்கு அர்ப்பணிப்பதால் சகல பாவங்களும் நீங்கி நன்மைகளையும் பெறலாம்.
இந்து மதத்தில் வில்வ மரம் மிகப் புனிதமாக கருதபடுகிறது. சிவ வழிபாட்டில் வில்வ இலை கொண்டு செய்யப்படும் பூஜை விஷேஷமானது. மூன்று பகுதிகளை கொண்ட வில்வ இலை திரிசூலத்தின் குறியீடாகக் கருதபடுகிறது. இது 
இச்சா சக்தி, 
ஞானசக்தி, 
கிரியா சக்தி,
என்பதைக் குறிக்கின்றது.

ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த புண்ணியம் கிடைக்கும். கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராடிய பலன் கிடைக்கும். 108 சிவாலயங்களை தரிசித்த பலன்கள் கிடைக்கும்.

வில்வமரத்தின் காற்றை நுகர்ந்தாலோ அல்லது அதன் நிழல் நம் உடலில் பட்டாலோ அதீத சக்தி கிடைக்கும். சிவனிற்கு பிரியமான வில்வ அர்ச்சனை மூலம் சிவனின் அருட்கடாச்சத்தைப் பெறமுடியும். வில்வமரத்தை முறைப்படி விரதமிருந்து பூஜிப்பவர்க்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும். வீட்டில் துளசி மாடம் போல் வில்வமரம் வைத்து வளர்ப்பவர்களுக்கு ஒருபோதும் நரக பயமில்லை.

சிவனுக்கு.....,
☆ஒரு வில்வம் சாத்தினால் சிவலோக பதவியும், 
☆இரண்டு சாத்தினால் சிவன் அருகில் இருக்கும் பாக்கியம் கிட்டும். 
☆மூன்று சாத்தினால் அவனின் அருள் பெறலாம், 
☆நான்கு வில்வ இலைகள் சாத்தினால் அவனுடன் ஐக்கியமாகலாம்... 
என்பது ஐதீகம். 

வில்வம் பக்தியையும், முக்தியையும் அளிக்கக்கூடியதாகும்.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்... 

No comments:

Post a Comment

Followers

மார்பு நோய்களை களையும் மணப்பாறை அகத்தீஸ்வரர்

மார்பு 🥢நோய்களை களையும் மணப்பாறை அகத்தீஸ்வரர் ஆலயம் மணப்பாறை ஸ்ரீவடிவுடைநாயகி உடனாகிய ஸ்ரீஅகத்தீஸ்வரர் ஆலயம் பெண்களின் மார்பு ச...